நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா!

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா!

By Sufi Manzil 0 Comment July 16, 2010

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு படுத்தியவர்கள் பற்றி கொடுத்த பத்வா:

கேள்வி: இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் உலக மக்களும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கொள்கையை ஆமோதிக்கும் ஆலிம்களும் கீழே விபரித்தப்படி தெரிவிப்பது என்னவெனில் அநேக காலமாக எங்கள் முஹல்லாவைச் சார்ந்த ஜாமிஆ மஸ்ஜிதில் தப்லீக் பிரச்சார கூட்டம் கூடுவதும் முஹல்லா வாசி முஸ்லிம்களை மஸ்ஜிதுக்கு அழைப்பதும் ஒவ்வொரு கூட்டத்திலும் மௌலவி இல்யாஸ் சாஹிப் அவர்கள் எழுதியுள்ள ஹதீஸ்களைப் படிப்பதுமாக இருந்து வருகிறது. இந்த கூட்டம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் தரூத் மற்றும் சலாம் கூட சொல்வதில்லை. கடந்த புதன்கிழமை 20-05-1970 அன்று இஷா தொழுகைக்குப் பின் இந்த பிரச்சாரக் கூட்டத்தைச் சார்ந்த ஒருவர் மிகவும் துணிவாக வாயை விட்டுச் சொன்ன வார்த்தைகளாவன: மனிதன் அசிங்கத்திலிருந்து பிறந்தான். அசிங்கத்திலேயே வளர்ந்தான். மற்றும் இந்த அசிங்கம் உள்ள மனிதன் அந்த அசிங்கத்தைக் கொண்டே மேலுலகம் (அர்ஷே ஆஜம்) போனான். (நவூஸூபில்லாஹ்)

தற்போது கேள்வி என்னவென்றால், 1) அது எந்த மனிதன் மேலுலகம் (அர்ஷே ஆஜம்) போனது. 2) இந்தக் கேள்வியானது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை சுட்டிக் காட்டுவது என்றால் இம்மாதிரி வார்த்தையாடியவர் பற்றியும் அந்தப் பிரச்சாரக் கூட்டத்தைப் பற்றியும் இஸ்லாமியக் கோட்பாட்டின் படி தீர்ப்பு என்ன என்பது. 3) இம்மாதிரியான கூட்டத்துடன் தொடர்பு வைப்பதும் அல்லது அவர்கள் நடைமுறையை பின்பற்றி நடப்பது உகந்ததா, இல்லையா? என்பது திருக்குர்ஆனைக் கொண்டும், ஹதீஸின் அடிப்படையைக் கொண்டும் விடை கூறவும்.

ஹாமித் அலி ஷாக்கிர், ஷாக்கிர் அச்சகம், திருவல்லிக்கேணி, மதராஸ்-5.

விடை:

ஹமிதல்லாஹு தஆலா, வ முஸல்லியன், வ முஸவ்விமன் அலா ரஸூலுல்லாஹி வ ஸஹ்பிஹி… எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மானிட ஜென்ம வரலாற்றில் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் அபிப்பிராயம் எம்பெருமானார் அவர்கள் மானிடர்தான் அவர்களுடைய தன்மைக்கும் சாதாரண மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள வித்தியாசமாகும்.

1. எம் பெருமானார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மானிடர்தான். ஆனால் சாதாரண மனிதப்பிறவி அல்ல. வைடூரியம் கல்தான் – ஆனால் சாதாரண கல் அல்ல.

2. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வால் பிறப்பிக்கப்பட்ட ஒளி (நூர்)யைப் பெற்று பிறந்தவர். அந்த ஒளியின் காரணமாகத்தான் மற்ற படைப்புகள் உண்டாயின. ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிகள் நாயகத்திடம் கேட்டதாவது என்பதாய் தந்தையை தங்கள் பேரில் அர்ப்பணிக்கிறேன். எனக்கு விஷயம் சொல்லுங்கள். அல்லாஹ்வால் பிறப்பிக்கப்பட்ட வஸ்துக்களில் முதன் முதலாக அல்லாஹ் எதை பிறப்பித்தான் என்பது.

ஓ…ஜாபிரே! எல்லா வஸ்துக்களுக்கும் முன்பு அல்லாஹ் தஆலா உம்முடைய நபியின் ஒளி (நூர்)யைப் படைத்தான் என்று கூறினார்கள்.

இந்த செய்தியை ராவி அப்துர் ரஜ்ஜாக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களால் வரையப்பட்டுள்ளது. அந்த (நூர்) ஒளியாகப்பட்டது அல்லாஹ்வின் கட்டளைப்படி ஒளி வீசிக் கொண்டிருந்த சமயம் சுவர்க்கமும், நரகமும், அமரர்களும், ஜின்களும், மனிதனும், வானமும், பூமியும், சூரியனும், சந்திரனும், அர்ஷ{ம், குர்ஸியும், லௌஹும், கலமும் எதுவும் அல்லாஹ்வால் படைக்கப்படவில்லை.

சஹீஹான நூரைக் கொண்டுதான் மேலே குறிப்பிட்ட அனைத்தையும் அல்லாஹ் உண்டாக்கி வைத்தான்.

சஹீஹான ஹதீஸ்களில் எழுதப்பட்டுள்ளது என்னவெனில் அல்லாஹ் ஜல்ல ஷhனஹூ எல்லா வஸ்துக்களையும் உற்பத்தி  செய்தபின் எழுதும் கருவியாகிய பேனாவை (கலம்) லா இலாஹா இல்லல்லாஹு என்பதை அர்ஷpன் மேல், சுவர்க்க வாசல் மேல் எழுதச் சொல்லி கட்டளையிட்டான். அதை எழுதி முடித்து கியாம நாள் வரை ஏற்படும் சம்பவங்கள் அனைத்தும் எழுதப்பட்டது. அநேக உலமாக்கள் தப்லீக் ஜமாஅத்தின் முக்கியஸ்தர்களும் அந்த ஜமாஅத்து செய்யும் அடுக்காத காரியங்களும் ஆதாரமற்ற செயல்களையும் கண்டு அநேக உலமாக்கள் இதை வெறுத்து அதை விநோதமான ஜமாஅத் என்று பிரசுரித்தார்கள்.

உதாரணமாக தப்லீக் பிரசங்கக் கூட்டத்தின் முறையற்ற சுன்னத் ஜமாஅத்தின் சட்டத்திற்கு முரணாக நடப்பதை கண்ணுற்ற ஹஜ்ரத் அல்லாமா மௌலானா அல்ஹாஜ் பீர்ஜாதா சையத் ஷாஹ் மஜ்ஹர் ரப்பானி சாஹெப் காதிரி சிஷ;தி தான் எழுதிய தப்லீகி பிரச்சாரக் கூட்டம் என்ன என்பது நான்கு பாகங்களாக – நான்கு புத்தகங்களாக வெளியிட்டுள்ளார்கள். அவற்றைப் பார்க்க விரும்புகிறவர்கள் ஆஸ்தானயே ரப்பானி அலிகன்ஞ் பாந்தா உ.பி.யிலிருந்து வரவழைத்துக் கொள்ளலாம். எந்தக் கூட்டத்தில் சுன்னத் வல் ஜமாஅத்திற்கு விநோதமாக பிரச்சாரம் செய்யப்படுகிறதோ அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு அந்த பயானைக் கேட்பதும் தகாது. ஏனெனில் அவர்களுடைய பயான் மனக் கலக்கமும், கலவரமும், உண்டுபண்ணி பொது ஜனங்களின் ஈமானினைப் பறிக்கக் கூடிய கெடுதியை உண்டாக்கும். இஸ்லாத்தின் கொள்கைக்கு விரோதமான கொள்கையை வைத்திருப்பவனின் பயானை காது கொடுத்து கேட்பதும், அதில் கலந்து கொள்வதும் இஸ்லாத்தின் (ஷரீஅத்) சட்டப்படி வெறுக்கத்தக்கதாகும். சட்டப்படி வெறுக்கத்தக்கதாகும். அதனால் நரகத்தை விலைக்கு வாங்க வேண்டாம்.

30-05-1970                                                                                      ஒப்பம் உருதுவில்:

                                          முஹம்மத் ஹபீபுல்லாஹ் கானல்லாஹ் காஜி, மதராஸ்.

இந்த பத்வாவை தன் கவனத்தில் வைத்து முஸ்லிம் பொதுமக்கள் இம்மாதிரி முறையற்ற கூட்டங்களில் பங்கு கொள்வதை அறவே ஒழித்து தன் ஈமானை ஸ்திரப்படுத்திக் கொள்ளுமாறு எல்லா சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் ஏகோபித்த அபிப்பிராயமாகும். இந்த தப்லீக் ஜமாஅத்தின் நடைமுறையை நன்கு ஆராய்ந்த பின் ஆற்காடு வாலாஜா நவாப் அவர்களின் ஏஜெண்ட் 02-06-1970 ஆம் தேதி ஒரு உத்திரவு பிறப்பித்தார். அதில் வாலாஜா மஸ்ஜிதுக்குள் எந்தவிதமான பயானோ புத்தகங்கள் விற்பனை செய்வதோ அல்லது மற்ற ஜல்சாக்கள் கொண்டாடுவதோ கூடாது என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அன்னவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை செலுத்துகிறோம்.

திருவல்லிக் கேணியில் வாலாஜா மஸ்ஜிதில் தொழும் கனவான்கள் விடுத்துள்ள விளம்பரம்  கீழ்கண்டபடி…

'எல்லா சுன்னத் வல் ஜமாஅத் மஸ்ஜித் முத்தவல்லிமார்களுக்கும் கேட்டுக் கொள்வது என்னவெனில் தங்கள் தங்கள் மஸ்ஜிதுகளில் இம்மாதிரியான ஷரீஅத்துக்கு முரணான செயல்கள் செய்யும் கூட்டத்துடன் கலக்காமல் அவர்களை வெறுத்து எம்பிரான் நபிகள் நாயகம் அவர்களின் நடைமுறையை பின்பற்றிச் செல்லுமாறு வேண்டுகிறோம்.'

வாலாஜா மஸ்ஜித் தொழுகையாளிகள்.

திருவல்லிக்கேணி, மதராஸ்-5

02-06-1970.

சரியாக விடைகொடுத்தவர்:
சையத் ஷாஹ் முஹம்மத் அஃபி அன்ஹு,
பிரசுரிப்பவரின் உதவியாளர், மதராஸ்-14.

நன்றி: தர்கா இதழ், ஜூலை 2010.