Ali Ibnu Abi Thalib-அலி ரலியல்லாஹு அன்ஹு

Ali Ibnu Abi Thalib-அலி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment February 10, 2010

Print Friendly, PDF & Email

HAZRAT ALI MURTADHA (Radi Allahu Anhu)

 
EARLY LIFE

Sayyiduna Ali (radi Allahu anhu) was the son of Abu Taalib, an uncle of Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam). Sayyiduna Ali (radi Allahu anhu) was married to Sayyadah Bibi Fathima (radi Allahu anha), the daughter of Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam). They had 3 sons, Sayyiduna Hassan, Sayyiduna Hussain and Sayyiduna Mohsin (radi Allahu anhumul ajma'in).

Sayyiduna Ali (radi Allahu anhu) took part in the battle of Badr, Khandaq and Khaibar. At Khaibar, it was Sayyiduna Ali (radi Allahu anhu) who subdued the Jews with his furious assault. He also held many important positions during the time of Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam) and the first 3 Caliphs before him.

He had a love for learning and was a great and learned person himself. He had been given the title of "Baabul I'lm"or "Gate of Learning" by Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam). He was also called "Asaadullah" or "Lion of Allah."
OPPOSITION

The situation in Madinatul Munawwarah after the murder (Shahaadah) of Sayyiduna 'Uthman (radi Allahu anhu) was serious. Sayyiduna Ali (radi Allahu anhu's) first task was to rid Madinatul Munawwarah of the rebels and to return the situation to normal.

Sayyiduna Ali (radi Allahu anhu) was able to force the rebels to withdraw from Madinatul Munawwarah and to establish peace and order in the city. The powerful governor of Syria, Sayyiduna Mu'awiyah (radi Allahu anhu), challenged Sayyiduna Ali (radi Allahu anhu) and refused to pay homage to him. Sayyiduna Mu'awiyah (radi Allahu anhu) insisted that Sayyiduna Ali (radi Allahu anhu) arrest the murderers of Sayyiduna 'Uthman (radi Allahu anhu) and hand them over to him.

Sayyiduna Ali (radi Allahu anhu) was a man with a deep sense of justice and did not want to accuse the wrong people. He needed a peaceful period to trace the culprits. But, Sayyiduna Mu'awiyah (radi Allahu anhu) began accusing him of protecting the murderers, and in this way the old enmity between the two families were revived.
SAYYIDUNA MU'AWIYAH (RADI ALLAHU ANHU)

Unlike most of Sayyiduna 'Uthman (radi Allahu anhu's) governors, Sayyiduna Muaawiyah (radi Allahu anhu) displayed great administrative ability and was very popular. He was a God-fearing man and especially known for his mercy. Sayyiduna Ali (radi Allahu anhu) was very strict in piety and straight forward. Sayyiduna Muaawiyah (radi Allahu anhu) declared his disobedience to him, because he felt that he was better qualified to lead the Muslim world.

 During the period of the first three Caliphs, Madinatul Munawwarah continued to be the capital of the Muslim world, but Sayyiduna Ali (radi Allahu anhu) transferred the Islamic capital to Kufah in Iraq.
BATTLE OF THE CAMEL

Another serious development took place. Sayyadah Aishah (radi Allahu anha) and two leading Sahaba, Sayyiduna Talha and Sayyiduna Zubair (radi Allahu anhuma) declared their opposition to the Khilaafat of Sayyiduna Ali (radi Allahu anhu). They left Madinatul Munawwarah for Makkatul Mukarramah and from there travelled to Basrah where they rallied men and new supporters.

Sayyiduna Ali (radi Allahu anhu) had to crush all opposition. A bloody battle took place near Basrah on the 9th of December 656 A.C. This battle was sparked off by a third force who were the real troublemakers. Just before the battle, both parties had already reached an agreement to settle the dispute. But this third force, the real assassinators of Sayyiduna 'Uthman (radi Allahu anhu), launched an overnight attack on both camps simultaneously. Each side were under the impression that the other had attacked. The battle began. Several thousand men were lost including the two Sahaba. Sayyadah Aishah (radi Allahu anha) was safe. She was riding a camel during the battle-hence the name "Battle of the Camel." Sayyiduna Ali (radi Allahu anhu) treated her in a most noble and dignified manner and respectfully sent her back to Madinatul Munawwarah. She praised him and deeply regretted opposing Sayyiduna Ali (radi Allahu anhu). Kufa was now made the capital of the Islamic world.
BATTLE OF SIFFIN

Sayyiduna Muaawiyah (radi Allahu anhu) rallied an army to face Sayyiduna Ali (radi Allahu anhu). A battle took place at Siffin on the Syrian border in the July of 567 A.C. Sayyiduna Muaawiyah (radi Allahu anhu) was no match for Sayyiduna Ali (radi Allahu anhu) and began to retreat. By the clever proposal of Sayyiduna Amr bin Al As (radi Allahu anhu), the retreating army raised pieces of the Holy Koran on their spears demanding judgement between the two parties. Many pious Muslims on the side of Sayyiduna Ali (radi Allahu anhu) refused to fight seeing the Holy Koran displayed in the air.
JUDGEMENT

Two men, one from each side, were appointed to settle the dispute. Sayyiduna Abu Musa (radi Allahu anhu), a pious Sahaba from Sayyiduna Ali (radi Allahu anhu's) side, and the skilled Sayyiduna Amr (radi Allahu anhu) from Sayyiduna Muaawiyah (radi Allahu anhu's) side. Sayyiduna Musa (radi Allahu anhu) declared in front of the Muslims that it was decided to recommend the removal of both Sayyiduna Ali and Sayyiduna Muaawiyah (radi Allahu anhuma) and that the Muslims should select another man for the Khilaafat. Sayyiduna Amr (radi Allahu anhu) replied that: "He has declared the removal of his leader, while I would conform Muaawiyah as the Caliph." Chaos followed.
KHAARIJEES

Sayyiduna Ali (radi Allahu anhu) prepared to meet Sayyiduna Muaawiyah (radi Allahu anhu) again in battle, but he was moved from his task by a serious conflict that occurred among his men. Some narrow-minded people accused Sayyiduna Ali (radi Allahu anhu) of accepting a man-made judgement. Their slogan was: "There is no judgment but with Allah." They declared that Sayyiduna Ali, Sayyiduna Muaawiyah and Sayyiduna 'Uthman (radi Allahu anhumul ajma'in) were unbelievers and that Jihad should be declared against them. Ever since this event, they have been known as the "Khaarijees", which means, "those who left the fold." They maintained that the Khilaafat should be given to the most eligible Muslim, regardless of his origin. The Kharijees are not regarded as Muslims.
ASSASSINATION

On the 17th of July 659 A.C., Sayyiduna Ali (radi Allahu anhu) overcame the Khaarijees in a battle near Nahrawan, in which, it is said, that 40 000 lives were lost.

In the early morning of the 24th of January 661 A.C., Abdul Rahman bin Muljim, a Khaariji fanatic lay in ambush in the Masjid of Kufah and stabbed Sayyiduna Ali (radi Allahu anhu) when he entered the masjid. He passed away from the wound. He was 63 years old.
PERSONAL LIFE

Sayyiduna Ali (radi allahu anhu) lived a simple life. He refused any luxury food and wore simple clothes thinking of the poor. He should sleep on the ground and even sit on the floor. He repaired his own clothes and shoes and even did manual labour. He spent nights in Salaah and should fast for three days in a row. Honesty, piety, justice and love of truth were the main marks of his character.

After the death of Hadrat Fatima Radiallah ta’ala anha, Hadrat Ali Radiallah ta’ala anhu married 8 wives, totally 9 wives. the number of wives at a time however didn’t exceed four. He had a few slave girls of whom Humia and umm Shuhaib bore 12 daughters Nafisa, Zainab, Rukaiyah,Ummul Karaam,Humaira,Umm Salma,Shugara,katheeja,Ummu Hani,Ummu Kuldum Jamana and Maimuna. He had 15 sons and 18 daughters, totally 33 childerns.

The name of wives are:

1. Ummul Bnian Radiallahu anha(do Hazam b.Khalid)-from her, he had five sons namely: Abdullah, Jaffer, Abbas, Uduman and Umar. All were martyred in the battle of Karbala except Abbas.

2.Khaula Radiallahu anha(d/o Jaffer Hanfiya)

3.Asma Radiallahu anha(d/o Umais) she had 2 sons  namely Yahya, Muhammed Asghar.

4.Ummu Habib(d/o Rabiah)Radiallahu anha

5..Laila Radiallahu anha(Masud)-she had two sons namely: Ubaidullah and Abu Baker.

6.Umama(d/o Abi Al Aa’s ) her son name Muhammed Awsat.

7.Umm Saeed Radiallahu anha(do Urwa)-two daughter namely: Ummul Hassanand Rumia.

8.Muhyat Radiallahu anha(d/Imra-ul-qais)

 

 

அலி ரலியல்லாஹு அன்ஹு

 
  அபூதாலிப்- ஃபாத்திமா ஆகியோருக்கு 4வது மகனாக கி.பி. 600ல் மக்காவில் பிறந்தார்கள். இவர்களின் அன்னை இவர்களுக்கு சூட்டிய பெயர் அஸத். தந்தையார் அலீ என்று பெயரிட்டனர்.இவர்களின் அன்னை இவர்களைக் கருவுற்றிருக்கும் போது, அவர்களுக்கு கஃபாவின் அண்மையில் வைத்து பிரவச வேதனை ஏற்பட்டது என்றும், அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கஃபாவிற்கு செல்லுமாறு கூறினர். அங்கேயே இவர்கள் பிறந்தனர். அவர்களை அண்ணலார் ஜம்ஜம் நீர் கொண்டு கழுகினர்.
    
  மக்காவில் பஞ்சநிலை ஏற்பட்டபோது மிகவும் கஷ்ட நிலையிலிருந்த அபூதாலிப் அவர்களிடமிருந்து அலீ அவர்களை வளர்க்கும் பொறுப்பை அண்ணல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றனர். அலீ அவர்களும் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தனர். இளைஞர்களில் முதன்முதல் இஸ்லாத்தை ஏற்றவர்கள் இவர்களே! அச்சமயம் இவர்களுக்கு 13-14 வயதிருக்கலாம்.
      
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத் சென்ற சமயம் அவர்களின் படுக்கையில் அலி நாயகம் அவர்கள் போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்த இவர்களின் தியாகம் ஈடு இணையற்றதாகும்.
     
பத்ரு போரில் இவர்கள் காட்டிய வீரத்திற்குப் பரிசாகவே அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹாவை திருமணம் முடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமக்கு மருமகன் ஆன பின்பும் அலீ நாயகத்தை தம்பி என்றே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்து வந்தனர். உஹத் போரிலும் இவர்கள் வீரப் போர் செய்துள்ளனர்.
    
  அகழ்ப்போரின் போது 1000 வீரர்களுக்கு நிகரான மாமல்லன் என்று கருதப்பட்ட அம்ரு இப்னு அப்தூத் என்பவனுடன் துல்பிகார் எனும் வாளேந்தி போர் புரிந்து அவனை வெட்டி வீழ்த்தினர்கள். அப்போது, 'லாஃபத்தா இல்லா அலீ, லா ஸைஃப இல்லா துல்ஃபிகார்'( அலீ போன்ற இளைஞருமில்லை. துல்ஃபிகார் போன்ற வாளுமில்லை) என்று மகிழ்ச்சி பொங்க கூறினார்கள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
     
கைபர் போரின்போது எவராலும் வெற்றி கொள்ள இயலாதிருந்த காமூஸ் கோட்டையை, கண் வலியால் அவதிபட்டிருந்த நிலைமையிலும் இவர்களே வெற்றி பொண்டனர். அப்போது காமூஸ் போட்டையின் கதவை கையில் கேடயமாக பிடித்துக் கொண்டு போர் புரிந்ததும், மஹ்ரப் என்ற வீராதி வீரனை வெட்டி வீழ்த்தியதும் இவர்களின் வீரம், போர்திறனுக்கு எடுத்துக்காட்டாகும். இவர்களின் வெற்றியைக் கண்டு, 'நான் மட்டுமல்ல, அல்லாஹ்வும், ஜிப்ரீலும், மீகாயிலும் உம்மைப் பற்றி மகிழ்ச்சியுறுகின்றனர்' என்றார்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
     
மக்கா வெற்றியின் போது இவர்கள் தோள் மீது ஏறி நின்றுதான் ஹுபல் என்ற உருவச் சிலையை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடைக்க முயன்றனர். ஆனால் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இவர்களால் தூக்க இயலவில்லை. எனவே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தோள் மீது ஏறி நின்றே அலி அவர்கள் அதனை உடைத்தெறிந்தனர்.
காலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பனூ ஜதீமா கூட்டத்தினருக்கு செய்த கொடுமைக்கு இழப்புத் தொகை தருவதற்கும், பனூதாய் கூட்டத்தை எதிர்த்து அனுப்பப்பட்ட படையெடுப்புக்கும், ஸூரா கராத்' இறைவனிடமிருந்து வந்ததும் அதை அவ்வாண்டு ஹஜ் செய்ய சென்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு அனுப்பப்பட்டவர்களும் இவர்களே!
     
இறுதிச் ஹஜ்ஜின் போது, அண்ணலாருடன் இருந்த இவர்கள், அண்ணலார் கொண்டு வந்த 100 ஒட்டகங்களில் 63 ஒட்டகங்களை அறுத்துப் பலியிட மீதியை இவர்களே அறுத்தனர். அண்ணலார் ஆற்றிய இறுதிப் பேருரையையும் இவர்களே உரத்தக் குரலில் திருப்பிக் கூறினர்.
     
இவர்களைப் பற்றி 'நான் அறிவெனும் பட்டணம். அலீ அதன் தலைவாயில்' என்றும், 'ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்க்க விரும்பின் அலீயைப் பாருங்கள்' என்றும், 'நானும், அலீயும் இந்த உம்மத்தின் தந்தையராவோம்' என்றும் அண்ணல் நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
    
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கிலாஃபத்தை ஏற்றபோது அவர்களிடம் சிலகாலம் கழித்தே பைஅத் செய்தார்கள். உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆட்சியில் இவர்களின் ஆலோசனைப்படியே ஹிஜ்ரி ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டபின் 5 நாட்களுக்கு பின் ஹிஜ்ரி 35 துல்ஹஜ் பிறை 25 வெள்ளியன்று இவர்கள் கலீபா பதவியை ஏற்றுக் கொண்டனர்.
     
இவர்களின் காலத்தில் குழப்பம் அதிகரித்தது. அபூபக்கர்,உமர் ஆகியோரின் காலத்தில் இவ்விதம் குழப்பம் இல்லையே! உதுமானுடையவும் , உங்களுடைய காலத்திலும்தான் குழப்பமாக உள்ளது? என்று ஒருவர் இவர்களிடம் கேட்க, 'நாங்கள் அவ்விருவருக்கும் உதவியாக நின்றோம். இப்போது எனக்கு தாங்களும், தங்களைப் போன்றவர்களும் உதவியாக இருப்பதே அதற்கு காரணம்' என்று பதிலுரைத்தார்கள்.
    
ஒரு முறை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவர்களை நோக்கி, 'அலீ! நீர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்றுள்ளீர். அவர்களை அளவுக்கதிகமாக விரும்பக்கூடிய கிறித்துவர்களும், அளவுக்கதிகமாக வெறுக்கக் கூடிய யூதர்களும் வழி தவறிவிட்டார்கள். அது போன்றே உம்மை அளவுக்கதிகமாக விரும்புபவர்களும், வெறுப்பவர்களும் வழி தவறி விடுவார்கள்' என்று கூறினார்கள்.
ஒட்டகைச் சண்டையின்போது இவர்களை எதிர்த்து நின்றஆயிஷா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களை 40 பெண்களுடன் மரியாதையாக மதீனாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தார்கள். பின்னர் கூஃபா சென்ற இவர்கள் தம்முடைய அதிகாரத்தை எதிர்த்த முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் ஸிப்ஃயீன் எனுமிடத்தில் போரிட்டனர். போரில் 500 திருக்குர்ஆன் பிரதிகளை ஈட்டியில் ஏந்தி முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சமாதானம் கோரியபோதுஇ இவர்கள் அதை ஏற்று போரை நிறுத்தினார்கள். அமைதியை விரும்பி சமாதானத்தில் தமக்குப் பாதகமான முடிவு ஏற்பட்டபோதும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் அதன்காரணமாக இவர்களின் கட்சியில் சிலர் அப்துல்லாஹ் பின் வஹ்ப் அல் ராஸிபி என்பவரின் தலைமையில் ஒன்று கூடி, இவர்களை எதிர்த்தனர். இவர்களுக்கு 'காரிஜிகள்' என்று பெயர் ஏற்பட்டது. அவர்களை 'வஹதுல் நஹ்ர்' எனுமிடத்தில் நடந்த போரில் இவர்கள் தோற்கடித்தனர். இதன்பின் கூஃபா திரும்பிய இவர்கள் ஹிஜ்ரி 40, ரமலான் பிறை 17 வெள்ளியன்று அப்துர் ரஹ்மான் பின் முல்ஜம் ஸாமிரி என்னும் காரிஜியினால் ஒரு வழியே சென்று சொண்டிருக்கும்போது( மற்றொரு ரிவாயத்தின்படி சஜ்தாவிலிருக்கும்போது) நஞ்சூட்டப்பட்ட வாளினால் நெற்றியில் தாக்கப்பட்டனர். 3 நாட்கள் கழித்து தம் 63வது வயதில் மறைந்தார்கள்.
      
ஒரு முறை இவர்களை நோக்கி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'அலீ! மனிதர்களில் இருவர் மிகவும் இழிந்தவராவார். அவர்களில் ஒருவர் ஸாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஒட்டகையைக் கொன்றவன். மற்றவர் உம்மைக் கொல்பவர்' என்று கூறியதற்கேற்ப இழிஞன் இப்னு முல்ஜமினால் கொல்லப்பட்டார்கள்.
     
இவர்களைத் தாக்கிய இடத்திலேயே தாக்கியவன் கிழத்தெறியப்பட்டான் என்றும், அவ்விடம் இன்றும் கறுப்பாக இருக்கிறது என்றும் அதில் புற்பூண்டுகள் கூட முளைப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
     
இவர்களை இவர்களின் இரு மக்களான ஹஸன்,ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் இரவில் நல்லடக்கம் செய்துவிட்டனர். பிற்காலத்தில் கலீபா ஹாரூன் அல் ரஷீத் வேட்டையாட சென்றபோது கூஃபாவின் அண்மையில் நஜப் என்னும் இடத்திலிருந்த அடக்கவிடத்தில் அலி என்ற பெயர் பொறிக்கப்பட்டிருப்பதைக் கண்டு, அதுவே அலி அவர்களின் அடக்கவிடம் எனக் கருதி அங்கு ஒரு கட்டடம் எழுப்பினார். அதுவே இப்போது அவர்களின் அடக்கவிடம் என்று கருதப்பட்டு வருகிறது. இது அல் முகைரா இப்னு ஷுபா அத்தகஃபி என்ற நபித் தோழரின் அடக்கவிடம் என்றும் சிலர் கூறுகின்றனர்.