மௌலானா அஹ்மது நூரானி

மௌலானா அஹ்மது நூரானி

By Sufi Manzil 0 Comment July 2, 2011

Print Friendly, PDF & Email

மௌலானா அஹ்மது நூரானி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்

இவர்கள் செய்யிதினா அபூபக்கர் சித்தீகி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசா வழியில் ஸெய்யிதினா மௌலானா அப்துல் அலீம் சித்தீகி (இமாம் அஃலா ஹஜ்ரத் அவர்களின் கலீபா மீரட் மௌலானா என்று அழைக்கப்படும் இவர்கள் -அஷ்ரப் அலி தானவியை காபிர் என்று 'பர்ரத் மின் கஸ்வரா' பத்வாவை வெளியிட்டவர்கள். இதை நமது ஷெய்கனா அவர்கள் புலியைக் கண்டு ஓட்டம் என்று தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள்) அவர்களின் மகனாக மீரட் மாநகரில் 1926 ம் வசரும் பிறந்தார்கள். தங்களது எட்டாம் வயதிலேயே குர்ஆனை மனனம் செய்து விட்டார்கள். நேசனல் அரபிக் கல்லூரியில் அரபியில் இளங்கலை பட்டம் பெற்றார்கள். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் பாஸில் அரபியும், தர்ஸே நிஜாமி எனும் கல்வியை தாருல் உலூம் அராபிய்யா, மீரட்டில் ஓதி முடித்தார்கள்.

இவர்கள் அதன்பிறகு உலகமெங்கும் சுற்றி இஸ்லாமிய தக்வா பணியாற்றினார்கள்.  உலக முஸ்லிம் உலமா சபையின் பொதுக் காரியதரிசியாக 12 வருடங்கள் பணியாற்றினார்கள்.  மக்காவில் உலகி இஸ்லாமிய சேவை அமைப்பை 1972ல் துவங்கினார்கள்.

இவர்களை அஹ்லெ சுன்னாவின் தலைவர் என்றும் அழைத்தார்கள். வஹ்ஹாபிகள், தேவ்பந்திகள், காதியானிகளுடன் கொள்கைப் போர் புரிந்திருக்கிறார்கள்.

இவர்கள் டிசம்பர் 11 2003 (16 ஷஃபான் 1424 ஹிஜ்ரி) ஆண்டு மறைந்து பாகிஸ்தான் கராச்சியில் தங்களது தாயார் அருகில் அடக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பு: (ஷெய்குனா அவர்கள் ஹஜ் சென்றிருந்த சமயம் ஹஜ் சென்றிருந்தார்கள். இருவரும் சந்தித்துக் கொண்டனர். சவூதி வஹ்ஹாபி இமாம்களின் பின் நின்று தொழாமல் ஒரு சமயம் இவர்கள் இமாமத் செய்ய ஷெய்குனா அவர்கள் பின் நின்று தொழுதார்கள். சில சமயம் ஷெய்குனா அவர்கள் இமாமத் செய்ய இவர்கள் பின்னின்று தொழுதார்கள்.)