Abul Wahhab Sahrani-அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரலியல்லாஹு அன்ஹு.

Abul Wahhab Sahrani-அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment March 8, 2010

Print Friendly, PDF & Email

 அப்துல் வஹ்ஹாப் ஷஃரானி ரலியல்லாஹு அன்ஹு.

இவர்கள் இயற்பெயர் அப்துல் வஹ்ஹாப். தந்தை பெயர் அஹ்மது. கி.பி.879 ல் பிறந்து கெய்ரோவில் வாழந்தனர். செநவுத் தொழில் செய்து வந்தனர். இவர்கள் பல நூல்களை எழுதியுள்ளார்கள். 

ஓர் ஆன்மீக குருவைத் தேடி பல நாடுகுளிலும் சுற்றித் திரிந்து இறுதியாய் எகிப்து சென்ற போது, அங்கு ஒரு பள்ளியில் ஒருவர் தவறாக உளுச் செய்து கொண்டிருப்பதாகக் கண்டு, அவர்களபை; பற்றி ஏளனமாய் எண்ணினர். அப்போது அந்த மனிதர் 'உமக்குத் தேடி வந்த குரு கிடைக்கமாட்டார்.' என்று கூறினர். அதன்பின் இவர்கள் அவர்களின் மாண்பினை உணர்ந்து, தம் பிழை பொறுத்து தீட்சை தருமாறு வேண்டினார்கள். அதற்கு அவர் 'நீர் ஊர் சென்று நீ எழுதிய நூற்களையெல்லாம் அடக்கவிலைக்கு விற்று வாரும்' என்று கூறினர். இவர்கள் அவ்விதம் செய்து விட்டு வர, 'நீர் அவற்றிலுள்ள அனைத்துச் செய்திகளையும் மறந்துவிட்டு வாரும்' என்று கூறினர். அவ்விதமே செய்துவிட்டு மனத்தில் யாதொன்றும் இல்லாதநிலையில் இவர்கள் அவரை அடைய, அவர் இவர்களுக்கு இறைஙான ரகசியங்களைப் போதித்தார். அவர்தான் கல்வியறிவில்லாத ஞான மேதை அலீ அல் கவ்வாஸ் ஆவார்கள். 10 ஆண்டுகள் அவர்களிடம் அமர்ந்து ஆன்மீகக் கல்வி கற்றார்கள். தாம் கல்வி கற்ற மற்ற ஷெய்குமார்களைப் பற்றியும் தமது 'தபகாத்'தில் கூறுகிறார்கள்.

'அல் தபகாத்துல் குப்ரா, வலாயா அல் ஆரிஃபீன்' என்ற நூல்களை எழுதியுள்ளார்கள். தம் வரலாற்றை 'மனாக்கிப் நஃப்ஸிஹி' என்ற பெயரில் எழுதியுள்ளார்கள். அதில் இறைவன் தமக்கு நல்கிய திறமைகளையும் இறைவனுடனும், வானவர்களுடனும், நபிமார்களுடனும் தாம் கொண்ட தொடர்புகளையும் இவர்கள் கூறுகிறார்கள்.

 'என் பெயருள்ளவனை நான் நரகம் புகவிடமாட்டேன்' என்றும் கூறுகிறார்கள். ஆன்மீகத் துறையில் இவர்கள் இப்னு அரபியையே பின்பற்றினார்கள். தஸவ்வுபையும், பிக்ஹுவையும் ஒன்றிணைத்து தங்கள் நூல்களில் எழுதியுள்ளார்கள்.

 கி.பி. 973 ல் கெய்ரோவில் காலமாகி அங்குள்ள பள்ளியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். அதிலிருந்து அப்பள்ளி வாயில் அவர்கள் பெயராலேயே அழைக்கப்பட்டு வருகிறது.