Abul Hasan Ali Kharqani -அபுல்ஹஸன் ஹர்கானி ரலியல்லாஹு அன்ஹு.
By Sufi Manzil
Short Histroy-Hazrath Abul Hasan Ali Kharqani
seventh sheikh of NAKSHABANDI OOLA and NAKSHABANDI MUJJADIDI THAREEKS.
Name is Ali bin Jafar , kuniat Abul Hasan
He was master in Sulook and Marfat
Hazrath Abul Abbas Qassab has said that,
"When I passed away from this world ,
my family will be supported by Kharqani ".
One day Hazrath Abul Qasim Qasheeri entered in to the town of Kahrqan , he reported that ,
"Due to the Nisbaat of Kharqani my knowledge has no power and I think that perhaps I lost it."
Hazrath Kharqani said that,
" We should do work exactly the same way that Hazrat Mohammad Mustafa saww had done, this is what called Wirasat "
He passed away to Rafiq-e-Aala in Kharqan , a town near to Bustam , Iran on 15 th Ramazan 425 Hijri.
அபுல்ஹஸன் ஹர்கானி ரலியல்லாஹு அன்ஹு.
அபுல் ஹஸன் ஹர்கானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் பாயஸீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவருக்கொருவர் மகிவும் மரியாதை செலுத்தி வந்தனர். இவர்களிருவருக்கும் இடையில் முப்பத்தொன்பது வயது வித்தியாசம் இருந்தது.
பாயஸீத் பிஸ்தாமி ஹர்கான் என்ற ஊர் வழியே செல்லும்போது, தங்களின் மூச்சை நன்றாக இழுத்துவிட்டுக் கொள்வர். அதற்கான காரணம் கேட்டபோது, 'திருடர்கள் நிரம்பிய இலவ்வூரில் ஒரே ஒரு மனிதரின் வாடையை நுகர்கிறேன். அவரின் பெயர் அலி என்பதாகும். அவர் என்னை விட மூன்று படித்தரங்கள் உயர்ந்தவா'; என்றனர்.
ஆனால் பாயஸீத் பிஸ்தாமி அவர்களின் அடக்கவிடத்தை தரிசித்துவிட்டு வரும் அபுல்ஹஸன் ஹர்கானி அவர்கள் வரும்போது, பின்னங்காலில் நடந்தே வெளியே வருவார்கள். வாயிலை அடைந்ததும், 'இறைவனே பாயஸீதுக்கு நீ வழங்கிய அந்த ஆற்றலில் ஒரு பகுதியை அபுல்ஹஸனுக்கும் வழங்குவாயாக! என்று இறைஞ்சிவிட்டே அவ்விடத்தைவிட்டு நகர்வார்கள். அப்பொழுது அவர்கள், 'இவ்வுலகில் ஒரு மனிதர் உயிரோடு இருக்கிறார் என்றால் அவர் பாயஸீத் பிஸ்தாமி அவர்கள்தாம்' என்று கூறுவர். இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகாலம் அவர்கள் செய்து வந்தார்கள்.
அவர்கள் சுமார் பன்னிரண்டு ஆண்டுகாலம் இஷாத் தொழுகையை இமாம் ஜமாத்துடனும், நாற்பதாண்டுகளாக இரவுத் தொழுகைக்கு செய்த ;உளு'வுடன் சுபுஹுத் தொழுகையையும் தொழுது வந்தார்கள்.
கடந்த நாற்பது ஆண்டுகளாக என் உள்ளம் குளர்ந்த நீர் அருந்த விரும்பிக் கொண்டுள்ளது. நான் அதனை மறுத்துக் கொண்டுள்ளேன் என்று ஒருதடவை கூறினார்கள். நாற்பதாண்டுகளாக அவர்கள் தலையணை வைத்து படுத்துறங்கியது இல்லை. திடீரென அவர்கள் தம் மாணவரை நோக்கி தலையணை ஒன்று பொண்டுவருமாறு சொன்னார்கள். அப்போது அவர் வியப்பு மேலிட்டவராக 'என்ன செய்தி' என்று வினவிhர். அதற்கு அவர்கள், 'இன்றிரவு நான் அல்லாஹ்வுடைய தரிசனத்தைப் பெறும் பேறு பெற்றேன். நாற்பதாண்டுகளாக என் உள்ளத்தில் அல்லாஹ்வுடைய நினைவன்றி வேறொன்றும் இருந்ததில்லை' என்று கூறினார்கள்.
ஹதீதுகளை தம் மாணவர் ஒருவருக்கு போதித்துக் கொண்டிருக்கும்போது, ஒருநாள் ஒரு ஹதீது போதிக்கும்போது அது தவறானது என்றனர். அவர் மாணவர் அது எப்படி கூறுகிறீர்கள்? என்று வினவினர். அப்போது அவர்கள், ' நான் ஹதீது போதிக்கும்போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள்அதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள. தவறான ஹதீது வெந்த போது அவர்களின் முகத்தில் அதிருப்தியை நான் காண நேர்ந்தது. அதனால் அது தவறானது என்று முடிவுக்கு வந்தேன்' என்றார்கள்.
உலகமெல்லாம் அந்த இறைநேசரை மதித்து நடந்த போதினும் அவர் மனைவி மட்டும் அவருடைய பெருமையை தெரியாமல் இருந்தாள். ஒருநாள் தம் சீடர்களை நோக்கி இன்றிரவு இந்தப் பாலைவனத்தில் இத்தனை பேர்கள் கொள்ளைக் கூட்டத்தினரால் கொல்லப்பட்டனர் என்று கூறினர். பின்னர் விசாரித்ததில் அது உண்மை என்று தெரியவந்தது. அன்றிரவு அவர்களுடைய ஒரே மகன் அஹ்மது கொல்லப்பட்டு, அவரின் தலை அவர்களின் வீட்டு வாயலில் வைக்கப்பட்டது. சுபுஹுத் தொழுகைக்கு சென்ற அவர்கள் அத்தலை மீது இடறி விழுந்துவிட்டார்கள். பின்னர்தான் அது தம் மகனின் தலை என்று தெரியவந்தது. அப்போது அவரின் மனைவி வெகு தொலைவில் நடந்ததைக் கூறும் இவருக்கு இவர் மகன் இறந்தது தெரியாமல் போய்விட்டது என்று ஏளனமாக பேசினாள்.
இது அவர்களுக்குத் தெரியவந்ததும், ஆம்! பாலைவனத்தில் படுகொலை நிகழ்ந்தபோது எனக்குத் திரை சற்று விலகியது. நான் அதனைப் பார்த்தேன். ஆனால் என் மகன'; கொல்லப்பட்ட போது திரை மீண்டும் விழுந்துவிட்டது. என்னால் அதனை எவ்வாறு பார்க்க இயலும்? என்று தன் ஆற்றாமையையும், இறைவனின் வல்லமையையும் எடுத்துரைத்தனர்.
மாபெரும் அறிவியல் விற்பன்னர் அபு அலீ சீனா அவர்கள் ஹர்கானி அவர்களின் மாண்பினைக் கேள்விபட்டு, அவர்களை சந்திக்க அவர்கள் வீட்டு வாயிலைத் தட்டியபோது, அவர்களின் மனைவி அவர்களை ஏளனமாக பேசி அவர் விறகு பொறுக்க கானகம் சென்றுவிட்டர். இனி அவரைத் தேடி இங்கு வரவேண்டாம் என்று சுறி கதவை படாரென அசாத்தி உள்ளே சென்றுவிட்டாள்.
அதன்பின் அவர்களை தேடி கானகம் சென்ற அபு அலீ சீனா அவர்கள், ஹர்கானி அவர்கள் தாம் Nசுகரித்த விறகுகளை ஒரு சிங்கத்தின் முதுகில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார்கள். இதனைக் கண்டதும் அபுஅலீ சீனாவிற்கு வியப்பு ஏற்பட்டது. பின்னர் அபுஅலீ சீனா அவர்கள் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு, இரவில் அவர்கள் வீட்டுக்ச் சென்றதையும் அவர் மனைவி நடந்தவிதத்தையும் சொன்னார். அதுகேட்ட ஹர்கானி அவர்கள் சிரித்துக் கொண்டு, அந்தப் போக்கிரி ஆட்டுடன் நான் பொறுமையாக வாழ்க்கை நடத்தாவிட்டால், இந்த பொல்லாத சிங்கம் நான் இட்ட கட்டளைக்கு கீழ்படிந்து நடக்காது என்றனர்.
அவர்களின் மாண்பினைப் பற்றி கேள்விபட்ட சுல்தான் மஹ்மூது கஜ்னவி அவர்கள், அவர்களை சந்திக்க விரும்பி தம் தலைநகர் கஜ்னிக்கு வருமாறு பலதடவை வேண்டினார். எனினும் அவர்கள் இணங்கவில்லை. எனவே அவர்களை சந்திப்பதற்காக ஹர்கானுக்கு சுல்hன் அவர்கள் புறப்பட்டுச் சென்று, அவ்வூர் எல்லையை அடைந்ததும், அவர்களை தாம் காண வந்திருப்பதை அறிவித்து அவர்களை தம்முன் அழைத்து வருமாறும், அவர்கள் மறுத்தால் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மேநும் அக்காலத்திலுள்ளஅரசருக்கும் சீழ்படிந்து நடக்குமாறு உள்;ள குர்ஆன் வசனத்தை ஓதிக்காட்டுமாறும் சொல்லி ஒரு தூதுக் குழுவை அனுப்பி வைத்தார். அவர்கள் ஹர்கானி அவர்களிடம் சென்று மன்னர் அழைத்து வர வேண்டியதை சொன்னNபுhது அவர்கள் மறுத்தார்கள். உடனே தூதுக்குழுவினர் மேற்காணும் இறைவசனத்தை ஓதிக் காட்டினர்.
அதற்கு ஹர்கானி அவர்கள், 'நான் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதே இன்றும் முடியவில்லை. இனிமேல் அவனுடைய தூதருக்கும் வழிப்படவேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் ஆற்றிமுடித்தபின் அதற்குமேல் அரசருக்கு வழிப்படுவது என் வாணாளில் முடியுமோ முடியாதோ? என்று எனக்கு ஐயமாக உள்ளது. அல்லாஹ்விற்கு வழிப்படவே எனக்கு நேரம் போதாதபோது நான் அரசருக்கு எவ்வாறு வழிப்படுவது? என்று கூறினர். இது அரசரின் செவிபட்டதும், நமக்கு பதில் கூற இயலாமல் செய்துவிட்டார்கள்.எனவே நாம் அங்கு செல்வோம் என்று கூறினார் அரசர்.
அதன்பின் அவர்களை சந்திக்க சென்ற அரசர் தமது அடிமை ஆயாஸுக்கு அரச உடை அணிவித்து, தாம் ஆயாஸின் உடையணிந்து கொண்டும் சில அடிமைப் பெண்களுக்கு ஆண்கள் உடை அணிவித்துக் கொண்டு மகான் அவர்களை சோதித்தறிவதற்காக அரசரைக் காணச் சென்றார். மகான் அவர்கள் இடத்திற்குச் சென்றதும், மகான் அவர்களின் கண்கள் மாற்று உடை தரித்திருந்த அரசரையே நோக்கின. பின், இந்தப் பெண்களை வெளியே போகச் சொல்லுங்கள் என்று ஆண் உடை தரித்திருந்தவர்களைப் பார்த்து கூறினார். அரசருக்கு ஏற்பட்ட வியப்பிற்கு அளவில்லை. பின்னர் அவர்களுக்கு தீட்சையும் வழங்கி கிர்காவும் வழங்கினார்கள்.
அதன்பின் அவர்களிருவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது அபூயஸீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி பேச்சு வந்தது. 'அபூயஸீத் பிஸ்தாமி அவர்களை ஒருமுறைக் கண்ணால் கண்டவர் நேர்வழி பெற்றுவிடுவார் என்று ஹர்க்கானி அவர்கள் சொன்னார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கூட கண்ணால் கண்ட அபூஜஹ்ல் நேர்வழி பெறவில்லையே! என்று இடைமறித்துக் கூறினார் அரசர். அதற்கு ஹர்கானி அவர்கள் அரசரை நோக்கி, அபூ ஜஹ்ல் முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்வை தம் கண்ணால் காணவில்லை. கண்டால் நேர்வழி பெற்றிருப்பான். அவன் முஹம்மது இப்னு அப்துல்லாஹ்வைத்தான் கண்டான். அதனால் அவன் நேர்வழி பெறவில்லை' என்று கூறினர்.
மனிதனின் அடையாளம் அடிமைத் தனமாகும். அந்த அடிமைத்தனத்தை இறைவன் மனிதர்களிடமிருந்து எதிர்பார்க்கிறான். ஆனால், என்னிடமிருந்தோ எஜமான் தனத்தை எதிர்பார்த்தான். நான் அர்ஷின் மீது சென்றேன். வானவர்கள் என்னை அணிஅணியாக வந்து என்னை அழைத்துச் சென்றனர். அவாக்ள் அனைவரும் என்னைக் கண்டு வெட்கி தலை குனிந்தனர்' என்றும், மேலும் நான் அன்றாடம் நன்மை,தீமை ஆகியவற்றின் கணக்குகளை பாராதவரையில் அரவில் தூங்குவதில்லை.சில பொழுது விண்ணை இழுத்து மண்ணில் வைத்து விடவும், மண்ணை துளைத்துக் கொண்டு பாதாளம் வரை சென்றுவிடுவதற்கான ஆற்றல் என்னிடம் உள்ளது. இறைவனிடத்தில் எனக்குள்ள தகுதியை மக்களிடம் எடுத்துரைப்பின், மக்கள் அதனை விளங்கிக் கொள்ளமாட்டார்களே என்றுதான் எனக்கு அச்சமாக உள்ளது.' என்றும் கூறினர்.
'எல்லாப் பொருட்களிலும் இறைவனைக் காண்கிறேன். இரவு பகலாக அவ்வேலையிலேயே ஈடுபட்டுள்ளேன். இறைவனுடைய மகத்துவத்தை நான் வெளிப்படுத்துவேனாயின் மக்கள் என்னைப் பைத்தியக்காரன் என்று கூறுவார்கள். நான் 73 ஆண்டுகாலமாக மார்க்கத்திற்கு விரோதமாக அணுவத்தனை செயலையும் செய்யவில்லை. என்னுடைய நஃப்ஸிற்கு மகிழ்ச்சி வழங்கும் எச்செயலையும் ஆற்றவில்லை' என்று கூறினர்.
'மனிதனை இறைவன்பால் அழைத்துச் செல்லும் வழிகள் பல உள்ளன. உலகில் எத்தனை மனிதர்கள் உள்ளார்களோ அத்தனை வழிகள் உள்ளன. ஒவ்வொருவுரும் தங்கள் திறமைக்கு ஏற்ப தமக்கேற்ற வழியைத் தேர்ந்தெடுத்து, அதில் அடியெடுத்து வைத்து நடந்து செல்கிறார்கள். நான் அவ்வழிகளில் ஒவ்வொன்றிலும் நுழைந்து பார்த்தேன். ஒவ்வொன்றிலும் எவரோ ஒருவர் சென்று கொண்டிருந்தனர். எதுவும் காலியாக இல்லை. அப்பொழுது நான் இறைவனை நோக்கி,' 'இறைவனே! எவருமே நுழையத் துணியாத, என்னையும் உன்னையும் தவிர வேறெவரும் இருக்காத ஒரு வழியை காட்டியருள்வாயாக! என்று இறைஞ்சினேன். அவன் தன் தனிப் பெரும் கருணையினால், எனக்கு ஆன்மீக ஏக்கத்தின் வழியைக் காட்டியருளினான், என்று கூறினர்.
அவர்கள் தம் மாணவர்களை நோக்கி, நான் மறைந்துவிட்டால், என்னை முப்பது அடி ஆழமாகத் தோண்டி அடக்கம் செய்யுங்கள். ஏனெனில் இவ்வூர் பிஸ்தாம் என்ற ஊருக்கு உயரமாக மேட்டில் உள்ளது. எனவே என்னை மேலேயே அடக்கம் செய்துவிட்டால் பாயஸீத் விஸ்தாமி அவர்களுக்கு மரியாதைக் குறைவு செய்ததாகிவிடும் என்று கூறினர். அவர்கள் மறைந்ததும் அவர்கள் விருப்பப்படியே அடக்கம் செய்யப்பட்டார்கள்.