Abu Yajeed Bisthami-அபூ யஜீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு

Abu Yajeed Bisthami-அபூ யஜீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு

By Sufi Manzil 0 Comment February 11, 2010

 

Short Histroy-Hazrath Bayazid Bistami

 

6th Sheikh in NAQSHABANDI OOLA and NAQSHABANDI MUJJADIDI THAREEKS.

 

Kuniat Abu-Yazid and name is Taef-oo-r , Laqab Sultan-ul-Arifeen

 

His grand father was fire prayer , then his grand father embraced Islam.

 

Hazrath Junaid Bahdadi said that,

 

             "The Final Maqam of Saliheen in Salook

is the First Maqam of Bayazid"

 

He  was at the age of 73 passed away to Rafiq-e-Aala in Bistam in 15 Shabaan 261 Hijri.

Bayazid Bastami Lifehistory.

 Bayazid Bastami, also known as Abu Yazid Bistami, (777-874CE) was a Sufi born in Bostam (alternate spelling: Bastam), Iran. The name Bastami means "from the city of Bastam". Bayazid Bastami had great influence on Sufi mysticism and is considered to be one of the important early teachers of Sufi Islam.

Bastmi's predecessor Dhu al-Nun (d. CE 859) had formulated the doctrine of ma'rifa (gnosis), presenting a system which helped the murid (initiate) and the shaykh (guide) to communicate. Bayazid Bastami took this another step and emphasized the importance of ecstasy, referred to in his words as drunkenness, a means of union with God. Before him, Sufism was mainly based on piety and obedience and he played a major role in placing the concept of divine love at the core of Sufism.

Bistami was the first to speak openly of "annihilation of the self in God" (fana fi 'Allah') and "subsistence through God" (baqa' bi 'Allah). His paradoxical sayings gained a wide circulation and soon exerted a captivating influence over the minds of students who aspired to understand the meaning of the Unity of Being.

He died in 874CE and is buried either in the city of Bistam in north central Iran, or in Semnan, Iran. Interestingly enough, there is a shrine in Chittagong, Bangladesh that local people believe to be Bastami's tomb as well. This is unlikely to be true, as Bastami was never known to have visited Bangladesh. However, Sufi teachers were greatly influential in the spread of Islam in Bengal and this might explain the belief. The Islamic scholars of Bangladesh usually regard the tomb at Chittagong attributed to him as a jawab, or imitation.

Bayazid Bastami – Sayings

Some of his words quoted from Tazkeratol-owlya by Attar:

  • I never saw any lamp shining more brilliantly than the lamp of silence.
  • I went to a wilderness, love had rained and had covered earth, as feet penetrate snow, I found my feet covered with love. 

 

 

அபூ யஜீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு


 நக்ஷபந்தியா ஊலா மற்றும் நக்ஷபந்தியா முஜத்திதி தரீகாக்களின் ஆறாவது குருமகானாக இவர்கள் வருகிறார்கள்.


இவர்களின் பாட்டனர் ஷாருபானோ நெருப்பை வணங்குபவராகயிருந்தார். ஆனால் இவர்களோ மாபெரும் இறைநேசராக விளங்கினார்கள். இவர்களின் உடன்பிறந்த ஆதம், அலி ஆகியோரும் மிகச் சிறந்த ஸூபிகளாக விளங்கினார்கள். இவர்களின் தந்தை ஈஸா அவர்கள் பிஸ்தாமில் பிரபலமானவராக விளங்கினார்கள்.


இவர்கள் கருவுற்றிருக்கும் நிலையில் இவரின் தாயார் சந்தேகத்திற்கிடமான உணவுகளை உண்ண வாயில் வைப்பின், அன்னை வயிற்றில் முட்டி அதனை வெளியே துப்புகின்றவரை இவர் ஓய்வு கொள்வதில்லை. ஒருமுறை இரவில் இவரின் அன்னை குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு இவர்களை கேட்டார்கள். வீட்டில் தண்ணீர் இல்லாததால் தண்ணீருக்காக அலைந்து ஒருவாறு தண்ணீர் கொண்டு வந்தபோது அவரின் அன்னை தூங்கிவிட்டார்கள். தண்ணீருடன் இரவு முழுவதும் அன்னையின் அருகிலேயே விழிக்கும்வரை காத்திருந்த இவர்கள் அன்னை விழித்ததும் தண்ணீரை அன்னையிடம் கொடுத்தனர். அன்னைக்கு அப்போதுதான் தான் இரவில் இவர்களி;டம் தண்ணீர் கேட்டது நினைவுக்கு வந்தது. உடனே முகம் மலர்ந்து, 'இறைவனே! நான் என் மகனிடம் நிறைவு கொண்டது போல் அவ்வாறே நீயும் அவன் மீது மன நிறைவு கொள்வாயாக! என்று துஆ செய்தனர். இந்த துஆவின் பொருட்டு, அன்னாரின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது.


அன்னையிடம் அனுமதிபெற்று பக்தாது சென்று உயர்கல்வி பெற்றார். ஆன்மீகக் கல்வியை இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உட்பட முன்னூற்று அறுபதுக்கும் மேற்பட்ட ஆசான்களிடம் சென்று பயின்றார். அபூ அலீ சித்தீ அவர்களுக்கு ஹனபி மத்ஹப் சட்டதிட்டங்களைப் போதித்து அவர்களிடமிருந்து தஸவ்வுஃபை கற்றுக் கொண்டார்கள்.


ஆன்மீக ஒளி எய்தப் பெற்ற அவர்கள் நாடு நாடாக சென்று மக்களின் உள்ளத்தில் அறிவொளியை, ஆன்மீக ஒளியை ஏற்றினார். பங்களாதேஷின் சிட்டகாங் வரை வந்து இஸ்லாத்தை பரவச் செய்தார். அதன்காரணமாகவே அது ஒளிநாடு என்ற பொருள்படும் சட்டகான் என்று பெயர் பெற்றது. பின்னர் அஃதவே மருவி சிட்டகாங் ஆயிற்று.


சுமார் முப்பது ஆண்டுகளை இவ்வாறு கழித்தபின் இமாம் ஜஃபர் ஸாதிக் அவர்களை அணுகி, ஆன்மீகக் கல்வியை மீண்டும் அவர்களிடம் பயின்றனர். ஒருநாள் இமாம் அவர்கள் இவர்களை நோக்கி, அபூ யஸீத்! அந்தச்' சன்னலிலிருந்து புத்தகத்தை எடுத்து வாரும்!' என்று கூறினார்கள். 'சன்னலா? எங்கே உள்ளது?' என்று வினவினார்கள். என்ன இவ்வாறு கூறுகிறீர்?. இத்தனை நாட்களாக வந்து போகிறீர். சன்னலைப் பார்க்கவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு இவர்கள் நான் தங்கள் முன் வந்ததும் மற்றெதையும் கவனிப்பதில்லை. அதற்காகவும் நான் வரவில்லை' என்று கூறினார்கள். அதுகேட்டு வியப்பு மேலிட்ட இமாம் அவர்கள், அபூயஸீத்! நீர் வந்த வேலை முடிந்து விட்டது. இனி உம் ஊருக்குச் சென்று உம் அன்னையை கவனித்துக் கொள்ளும்' என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.


 இமாம் ஸஃபர் ஸாதிக் அவர்களிடம் பயின்றதால் இவர்களின் புகழ் பரவி மக்கள் அவர்களைக் காண சாரிசாரியாக வந்தவண்ணம் இருந்தனர். ஒரு ரமலான் மாதத்தில் அவர்களின் வரவைக் கேள்வியுற்ற மக்கள் அவர்களைக் காண விரைந்தோடி வந்தார்கள். மக்களிடமிருந்து தனித்து ஒதுங்க விரும்பிய அவர்கள் ஒரு ரொட்டித் துண்டை எடுத்து உண்ணத் துவங்கினர். மக்கள் இதைக் கண்டு ரமலான் மாதத்தில் இவ்வாறு செய்வதைக் கண்டு திகைத்து, அவர்களை  விரண்டோடினர். ஆனால் பயணம் செய்யும் நபர் நோன்பு நோற்கத் தேவையில்லை. பின்பு களாச் செய்தால் போதும் என்று மார்க்கத்தில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதை மக்கள் அறியவில்லை
 
அதன்பின் பொழுதடையும் வரை ஓரிடத்தில் தனியாக வீற்றிருந்துவிட்டு, இரவில் வீட்டை சென்றடைந்தார்கள். அங்கு அன்னையார் அவர்கள் தம் மகனுக்காக இறைவனிடம் இறைஞ்சிக் கொண்டிருந்தனர். இத்தனை ஆண்டுகளாகியும் தம்மை மறவாது தமக்காக தம் அன்னை இறைஞ்சிக் கொண்டிருப்பதைக் கண்ட அவர்களின் உடல் சிலிர்த்தது. இதன்பின் அன்னையுடன் இருந்து அவர்களுக்கான பணிவிடைகள் செய்து வந்தனர்.
 
 இறைவனின் ஆலயமாகிய கஃபாவிற்கு முதன்முதலாக சென்றபோது ஒவ்வொரு அடிக்கும் இரண்டு ரக்அத் தொழுதவண்ணம் சென்றார்கள். இதன்காரணமாக ஈரான் நாட்டிலுள்ள பிஸ்தாம் நகிலிருந்து மக்கா சென்றடைய 12 ஆண்டுகள் ஆயிற்று. அதன்பின் ஹஜ் செய்துவிட்டு ஊர் திரும்பினார்கள். இறைவனின் ஆலயத்தை தரிசிக்க வந்த நான் அத்துடன் மதீனா செல்வது முறையல்ல. அதற்கென்று இஹ்ராம் அணிந்து சென்று மாநபியை தரிசிப்பதுதான் முறை என்று கூறி,  அதன்படி தரிசித்தார்கள்.
         
அன்மீகத்துறையில் இவர்கள் அடைந்த பதவி மிக உச்சமானதாகும். ஷரீஅத்தை அணுவத்தனையும் பிசகாத பின்பற்றுவதே அதற்குரிய வழி என்று கருதினார்கள். தூய்மையற்ற வாயால் இறைநாமம் மொழிவது கண்ணியக் குறைவு என்று கருதிய இவர்கள், இறைவனின் பெயரை ஜெபிக்கும்முன் மூன்று முறை வாயைத் தண்ணீரால் அலசி தூய்மை செய்து சொள்வார்கள். இவர்கள் எப்போதும் இறை போதையில் மூழ்கி தம்மை மறந்திருப்பர்.


ஒரு நாள் ஷகீக் பல்கி மற்றும் அபு துராப் பக்ஷியா ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் இவர்களைக் காண வந்த போது அவர்களளுக்கு இவர்கள் விருநு;து வைத்தார்கள். அப்போது அருகிலிருந்த ஒருவரையும் கலந்து கொள்ள அழைத்தனர்.ஆனால் அவர் நான் நில் நோன்பு வைத்துள்ளேன் என்று கூறி மறுத்துரைத்தார். விருந்தாளிகள் அவரை நோக்கி நீர் நபில் நோன்பை முறித்து கலந்து கொள்வதால் அதன் பயனை விரைவில் எய்தப் பெறுவீர் என்றனர். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதற்கு பாயஸீத்  அவர்கள், 'அவரை விட்டுவிடும். அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று கூறினர். சில நாட்களில் அந்த நபர், திருடத் துவங்கி கைகள் வெட்டப்பட்டார்.


அபூதுராப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு நாள் தம் மாணவரை நோக்கி, 'நீ அபூ யஸீத் பிஸ்தாமி அவர்களை தரிசித்து வருவது நல்லது' என்று கூறினர். அவர் தமக்கு அதைவிட பெரிய அலுவல்கள் இருப்பதாகக் கூறினார். பலமுறை சொல்லியும் அவர் கேட்டாரில்லை.ஒரு நாள் அவர்கள் கூறிபோது, 'நான் அபூ யஸீதின் இறைவனையே பார்த்துக் கொண்டிருக்கும்போது, அவரைப் பார்த்து என்ன பயனடைபயப் போகிறேன்' என்று கூறினார். அதற்கு அபூ துராப் அவர்கள், 'நீ இறைவனை 7 முறை பார்ப்பதைவிட அபூ யஸீத் அவர்களை ஒரு முறை பார்ப்பது மேல்' என்று கூறினர். அது கேட்டு திடுக்குற்ற அவர், ';அது எவ்வாறு? என்று கேட்டனர். அதற்கு அவர்கள், ' நீ இறைவனை காணும்போது, அவன் உம் தகுதிக்குத் தக்கவண்ணம் தோற்றம் வழங்குவான். ஆனால், நீர், அபூ யஸீத் அவர்களை காணும்போது, இறைவனின் பெருமைக்குத் தக்கவண்ணம் அவனைக் காண்பீர். இறைவனைக் காண்பதிலும் பல படித்தரங்கள் இருக்கிறதல்லவா?' என்று பதிலுரைத்தனர்.

 


இதன்பின் அவர்களிருவரும் பாயஸீத் அவர்களை காண்பதற்காக அவர்கள் தவம் செய்து கொண்டிருந்து காடு நோக்கி சென்றார்கள். அங்குள்ள குகையிலிருந்து அவர்கள் நரித்தோலைப் போர்த்திக் கnhண்டு வெளியே வந்தார்கள். அவர்களைக் கண்டதும், அபூதுராப் அவர்களின் மாணவர் பெரும சப்தமிட்டு அலறியவராக கீழே வீழ்ந்து உயிர் நீத்தார்.


 அதுபற்றி கேட்ட போது, 'அவர் உண்மையாளராகயிருந்தார். அவரிடம் மறைந்திருந்த ரகசியம் என்னைக் கணடதும் வெளியானது. எனினும் அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே உயிர் நீத்தார். யூசுப் அலைஹிஸ்ஸலர் அவர்களைப் பார்த்த எகிப்துப் பெண்மணிகள், அவர்களின் அழகில் மயங்கித் தம்மையே மறந்த நிலையில் தங்களின் கைவிரல்களை நறுக்கிக் கொள்ளவில்லையா? என்று விளக்கம் சொன்னார்கள்.
 
இறைக் காதலில் மூழ்கி திளைத்த இவர்கள் ஹிஜ்ரி 261 ல் மறைந்தார்கள். அவர்களின் அடக்கவிடம் பிஸ்தாமில் உள்ளது. அவர்களின் அடக்கவிடத்தின் மீது மங்கோலிய அரசர் உல்ஜைத்து முஹம்மது குதாபந்தா என்பவர் ஹிஜ்ரி 713 ல் மணிமண்டபம் கட்டினார்.