வழிகெட்ட போலி தரீகாக்கள்

வழிகெட்ட போலி தரீகாக்கள்

By Sufi Manzil 0 Comment July 30, 2011

Print Friendly, PDF & Email

அஸ்ஸலாமு அலைக்கும்,

மௌலானா மௌலவி அல்ஹாஜ் M.அப்துர் ரஸ்ஸாக் காதிரி, ஸூபி (பேராசிரியர், தாருல் உலூம் கௌஸிய்யா அரபிக் கல்லூரி, தஞ்சை) அவர்களால் எழுதப்பட்ட புனித தரீக்காக்களில் வஹ்ஹாபிய விஷக்கிருமிகள் என்ற புத்தகத்தை நான் படித்தேன். வாசிக்க மிகவும் அருமையாகவும் இருந்தது. எனது சில கருத்துக்களை உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கின்றேன்.

புனித தரீகாக்களின் பெயரிலே வழிகெட்ட தப்லீக் வாதிகள் நுழைந்து மக்களை வழி கெடுப்பது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இந்த புத்தகம் முழுக்க முழுக்க போலி தரீகவான நூரிஷாஹ் தரீகாவை பற்றியே வெளிவந்திருக்கின்றது. இன்றைய காலகட்டத்தில் தப்லீக்காரர்கள் தரீகா என்ற போர்வையில் மக்களை வழி கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

அன்பர்களே! எந்த ஒரு உண்மையான தரீகாவும் இன்னொரு தரீகாவை எதிர்க்காது. எந்த ஒரு ஷைகும் தன்னை போன்ற ஒரு ஷைகை எதிர்க்கவும் மாட்டார்கள் குறை சொல்லவும் மாட்டார்கள். ஆரம்பம் முதல் இன்றைக்கு வரை தரீகத் வாதிகள் ஒற்றுமையாகவே இருக்கின்றார்கள். அந்த தரீகதின் வழியிலே வருகின்ற எல்லா ஒலிமார்களும் மற்றும் ஷைகுமார்களும் தங்களுடைய காலத்திலே வாழுகின்ற தங்களை போன்ற ஒலிமார்களை நேசித்தும், சந்தித்தும் வந்திருக்கின்றார்கள். இன்றும் அப்படியே நடக்கின்றது. ஒரு இறை நேசருக்கும் இன்னொரு இறை நேசருக்கும் மத்தியில் எந்த ஒரு பிரச்னையும் இருக்காது. இவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் ஒற்றுமையாக இருப்பார்கள். இன்றும் ஒற்றுமையாகவே இருக்கின்றார்கள். ஏனென்றால் ஒரு உண்மையான இறை நேசர் தன்னை போன்ற இறை நேசரை அறிவார் என்பது உண்மை. அப்படியிருக்க அவர் எப்படி அந்த தன்னை போன்ற ஒரு இறை நேசருடைய தரீகாவை எதிர்ப்பார்? முன்பு வாழ்ந்த இறை நேசர்களின் வரலாற்றை புரட்டிப்பாருங்கள். மேலும் அந்த தரீகாக்களின் தலைவர்களாகிய ஷைகுனா முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு, அஜ்மீர் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு மற்றும் அவர்களை போன்ற ஒலிமார்களின் வரலாற்றையும், அந்த ஒலிமார்களின் காலம் முதல் இன்றைய காலம் வரையில் வாழ்கின்ற ஒலிமார்களின் வரலாறுகளை படித்து பாருங்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலே அவர்களை போன்ற ஷைகுமார்களுக்கு எந்த அளவுக்கும் கண்ணியமும், மரியாதையும் அளித்தார்கள் என்பதை ஒலிமார்களின் வரலாற்று சுவடுகளின் வழியாக நாம் அறியலாம்.
ஆனால் இன்றைய காலத்திலே உள்ள இந்த நூரிஷாஹ் தரீகா மட்டும் மற்ற தரீகாவிர்க்கு முற்றிலும் மாற்றமாக இருக்கின்றது.

இவர்கள் நாங்களும் தரீகாவை சார்ந்தவர்கள்தான் என்று சொல்லிக்கொண்டு மற்ற எல்லா தரீகாவினரையும் அதன் வழி வந்த ஷைகுமார்களையும் மற்றும் ஒலிமார்களையும் எதிர்த்து கொண்டும், வசை பாடிகொன்றும் இருக்கின்றார்கள்.

நூரிஷாஹ் தரீகாவினர் சொல்லுகிறார்கள்:

1 . இப்போது உள்ள தரீகாக்களில் நூற்றுக்கு தொண்ணுற்று ஒன்பது தரீகாக்களும் வழி கேடானவை. நாங்கள் மட்டும் தான் உண்மையான தரீகவினர் சொல்லுகின்றார்கள்.

2 . எங்களது ஷைகுமார்கள் மட்டும் தான் சரியானவர்கள் மற்ற தரீகாக்களின் ஷைகுமார்கள் வழிகெட்டவர்கள்.

எங்களது ஷைகுமார்கள் மட்டும் தான் சரியானவர்கள் மற்ற தரீகாக்களின் ஷைகுமார்கள் வழிகெட்டவர்கள் என்று இந்த நூரிஷாஹ் தரீகாவினர் கூறுகின்றனர். நாம் கேட்கிறோம் ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களை தரம் தாழ்த்தி எழுதிய தப்லீக் ஜமாஅத் தலைவர்களான மௌலவி அஷ்ரப் அலி தானவி, மௌலவி ரஷீத் அஹ்மத் கன்கோஹி , கலீல் அஹ்மத் அம்பேட்டி, இஸ்மாயில் தெஹ்லவி போன்றாவர்களை வலி என்றும், குதுப் என்றும் அவர்களின் பெயர்களின் பின்னே ரஹ்மதுல்லாஹி அலைஹி போடுகிறீர்களே மற்றும் நபியவர்களை தரம் தாழ்த்தி எழுதி விமர்சித்த இந்த வழிகெட்ட தப்லீக் தலைவர்கள் அவ்லியாக்கள் என்றும் அவர்கள் சத்தியத்திலே இருக்கின்றார்கள் என்று கூறுகிறீர்களே இப்படியெல்லாம் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருகின்றது? நபியவர்களை தரம் தாழ்த்தி எழுதிய இவர்களை எதிர்க்கின்ற, இவர்களின் உண்மையான முகத்தை கிழித்து மக்களுக்கு முன் காட்டுகின்ற சுன்னத் வல் ஜமாத்தின் உலமாக்களையும், தரீகதுடைய ஒலிமார்களையும் மற்றும் ஷைகுமார்களையும் வழிகெட்டவர்கள் என்று சொல்கிறீர்களே இதுதான் உங்களது தரீகதின் நிலையா ? அவ்லியாக்களையும் அவர்களுடைய தரீகாக்களையும் எதிர்க்கின்ற வஹ்ஹாபிகளுக்கும், தப்லீக் ஜமாஅதினருக்கும் மற்றும் உங்களது நூரிஷாஹ் தரீகாவினருக்கும் என்ன வித்தியாசம்? அன்பான மக்களே நன்றாக நாம் சிந்திக்க வேண்டும். இப்படி பட்டவர்களை நாம் ஒதுக்கி தள்ள வேண்டும்.

நாளை கியாம நாள் வரை என்னுடைய தரீகாவின் கொடி பறக்கும் என்றார்களே குதுப் நாயகம் அஷ்ஷைகு முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களின் வாக்கை நீங்கள் பொய்ப்படுதுகிரீர்களா? காதிரிய்யா, ஜிஷ்திய்யா , நக்க்ஷபந்திய்யா , சுஹ்ரவதிய்யா, ரிபாயிய்யா இன்னும் மிகப்பெரிய ஒலிமார்களின் தரீகாக்களும் ஆரம்பதொட்டு இன்றுவரை இந்த தரீகாக்களின் சில்சிலாவிலே பல காமில் ஷைகுமார்கள் வந்து கொண்டே இருக்கின்றார்கள். இந்த தரீகாக்களின் தலைவர்கள் மிகப்பெரிய ஒலிமார்கள் என்றும் நீங்கள் நன்றாக அறிவீர்கள் அப்படியிருக்க இப்போது உள்ள குதுப் நாயகம். செய்யிது அஹ்மத் கபீர் ரிபாஈ நாயகம், நக்ஷபந்தி நாயகம், அஜ்மீர் காஜா நாயகம் அவர்களின் தரீகாக்கள் எல்லாம் வழி கேடானவை என்று நீங்கள் எப்படி சொல்லலாம்?
இன்னும் நாளை கியாம நாள் வரை இந்த தரீகாக்களில் பல ஷைகுமார்களும், ஒலிமார்களும் தோன்றுவார்களே அவர்களை பற்றியும் நீங்கள் என்ன சொல்வீர்கள்?

அப்தால்கள் என்றால் இறைநேசர்களில் ஒரு பிரிவினராகும் . அவர்கள் மூலமே இவ்வுலகை அல்லாஹ் நிலை நிறுத்தாட்டிருக்கிறான். அவர்கள் மொத்தம் எழுபது நபர்களாகும். நாற்பது பேர் சிரியாவிலும், மீதி முப்பது பேர் ஏனைய பகுதிகளிலும் இருப்பார்கள் (மிஷ்காத்- 10 -76 )
இந்த ஹதீசுக்கு நீங்கள் என்ன சொல்லுகின்றீர்கள் அனைத்து தரீகாகளும் வழிகெட்டது எங்களுடைய நூரிஷாஹ் தரீக்கை தவிர என்று சொல்லுகின்ற நீங்கள் இந்த ஹதீஸில் சொல்லப்பட்ட எழுபது அப்தால்களை பற்றி என்ன சொல்கின்றீர்கள்? உங்களது கூற்றுப்படி இவர்களும் வழிகெட்டவர்களா? அல்லாஹ் நம்மை காப்பற்றட்டும்.

அலா இன்ன அவ்லியா அல்லாஹி லா ஹவ்புன் அலைஹிம் வலாஹும் யஹ்சனூன் ( குர்ஆன்)
அறிந்து கொள்ளுங்கள்! என்னுடைய இறை நேசர்களுக்கு பயமுமில்லை, அவர்கள் கவலை படவுமாட்டார்கள். இது அல்லாஹ் உடைய வார்த்தை இதனை நீங்கள் பொய்படுதாதீர்கள். உலக முடிவு நாள் வருகிற வரைக்கும் தரீகாக்கள் இருக்கும் அதன் வழியாக ஒலிமார்களும் ஷைகுமார்களும் வந்து கொண்டே இருப்பார்கள். குறிப்பாக நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் உள்ள தரீகதுடைய ஷைகுமார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாற்போல் நமது நாயகம் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை கண்ணியம் தாழ்த்தி, அவர்களை தரம் தாழ்த்தி பேசி, எழுதிய தப்லீக் வாதிகளை அவர்கள் சரி இல்லை என்றும், தப்லீக்காரர்கள் வழிகெட்டவர்கள் என்றும் அவர்களை ஆதரித்து பேசுபவரும் வழிகெட்டவர் என்று பத்வா கொடுத்துள்ளார்கள். அப்படியிருக்க நானும் தரீகதுடைய ஷைகு தான் என்று கூறிக்கொண்டு இந்த வழிகெட்ட தப்லீக் ஆலிம்களை புகழ்ந்து பேசிய நூரிஷாஹ் வை நமது ஷைகுமார்கள் எப்படி ஏற்றுகொள்வார்கள்? இதனாலே தான் கேரளாவிலே நூரிஷாஹ் நுழைந்த போது அவருடைய பேச்சுக்கள் அனைத்தும் சுன்னத் வல் ஜமாஅத்க்கு எதிராகவும், தேவ்பந்தி வஹ்ஹாபிகளான தப்லீக்காரர்களுக்கும் ஆதரவாக பேசியதால் கேரளத்திலே அப்போது இருந்த ஜம்யிய்யத்து அஹ்லுசுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் சபையினர் நூரிஷாஹ் தரீகாவின் கொள்கைகளையும், அவருடைய ஞான சில்சிலாவையும் ஆராய்ந்தபோது, நூரிஷாஹ் தரீகாவின் கொள்கைகள் அனைத்தும் வழிகெட்ட கொள்கைகளாக இருந்த படியாலும், சில்சிலாவில் பல குளறுபடிகளும் இருந்தபடியால் நூரிஷாஹ் தரீகா உண்மையான தரீகா இல்லை என்றும். உலமாக்களும் பொது மக்களும் நூரிஷாஹ் தரீகாவில் எடுக்கின்ற பைஅத்தும், கிலாபத்தும் செல்லாது என்றும் வழிகெட்ட நூரிஷாஹ் தரீக்கை விட்டு மக்கள் ஒதுங்கி இருக்குமாறு கேரளாவில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் சபையினர் பத்வா கொடுத்துள்ளார்கள்.

சுன்னத் வல் ஜாமத்தின் உலமாக்களையும் மற்றும் ஒலிமார்களையும் குறை சொல்வது.

பல ஊர்களுக்குள்ளே இந்த நூரிஷாஹ் தரீகதினர் நுழைந்து அந்த ஊரில் உள்ள கண்ணியமான சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களையும், சமீபத்தில் மறைந்த ஒலிமார்களையும் குறைத்து மதிப்பிட்டு பேசி நாங்கள்தான் சரியானவர்கள் என்று வாதிடுகின்றார்கள். அந்த ஆலிமுக்கு இந்த ஞானம் இல்லை. இந்த ஆலிமுக்கு தரீகா உடைய ஞானம் இல்லை. பிக்ஹு உடைய ஞானம் இல்லை மற்றும் மக்ரிபா உடைய ஞானம் இல்லை என்றெல்லாம் சொல்லுகின்றார்கள். இப்படியே உலமாக்களையும், ஒலிமார்களையும் குறை கண்டுகிட்டே போனால் இவர்களின் நிலைமை என்ன ஆகும்? நீங்களே சிந்தியுங்கள். மேலும் தங்களுடைய தரீகாவை ஆதரிக்கின்ற உலமாக்களை நல்ல ஆலிம் என்றும், அவர்களுடைய தரீகாவின் வழிகெட்ட கொள்கையே எதிர்க்கின்ற உலமாக்களை கெட்ட ஆலிம்கள் என்றும் கூறுகிறார்கள். அன்பர்களே கருணை நபியவர்களை குறை காண்கின்ற, குறை கண்டு எழுதி வைத்து சென்றவர்களை மற்றும் இப்படி நபியவர்களை இழிவு படுத்தி எழுதிய உலமாக்களை ஆதரிக்கின்ற உலமாக்களை நல்ல உலமா என்றும் இவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ் தா ஆலா நம்மனைவர்களையும் இப்படிப்பட்ட கூட்டத்தினரின் தொடர்பை விட்டும் காப்பாற்றுவானாக ஆமீன்.

மறைந்த அவ்லியாக்களை குறைத்து பேசுவது

தற்போது நூரிஷாஹ் தரீகாவை பற்றி வெளிவந்த புனித தரீகாக்களில் வஹ்ஹாபிய விஷ கிருமிகள் என்ற புத்தகத்தில் அந்த புத்தகத்தின் ஆசிரியர் அவர்கள் இந்த நூரிஷாஹ் தரீகதினர் சொன்னதாக குறிப்பிட்டுள்ள ஒரு விஷயம் “நாங்கள் சொல்லும் ஞானமே சரியானது . மற்றவைகள் தவறானது மட்டுமில்லாமல் மற்ற வஹ்ததுல் உஜூது கொள்கையே போதிக்கும் ஷைகுமார்கள் தவறிழைத்துவிட்டார்கள் . காயல் பட்டினம் தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் சருகிவிட்டார்கள் . ஹைதராபாத் சூபி ஹழ்ரத் நாயகம் அவர்கள் கைரிய்யத்து, ஐனிய்யத்து தெரியாமல் இருக்கிறார்கள் இவ்வாறு நூரிஷாஹ் தரீகதினர் சொல்வதாக குறிப்பிட பட்டுள்ளது.

மேலும் நூரிஷாஹ் தரீகதில் உள்ள ஒரு ஷைகு சொன்னதாக என்னுடைய நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார் அவர் சில வருடங்கள் அந்த தரீகதில் இருந்து விட்டு அவர்களின் வழிகெட்ட கொள்கைகளை பார்த்து விட்டு அதனை அவர் நீங்கினார். அவருடைய அந்த தரீகாவின் ஷைகு ஒரு முறை கீழக்கரைக்கு வந்தபோது அங்கே அடங்கி இருக்கும் ஷைகுனா மகானந்த பாபா முஹம்மது அப்துல் காதிர் வலியுல்லாஹ் அவர்களின் ஜியாரத்திற்கு அந்த ஷைகுடன் சென்ற போது, அந்த ஷைகு ஜியாரத்தின் போது சொன்னாராம் “நான் இந்த தர்ஹாவில் குப்ருடைய வாடையே நுகர்கின்றேன். எனவே என்னுடைய முரீதுகள் யாரும் இனிமேல் இந்த தர்ஹாவிக்கு ஜியாரத் செய்ய வரக்கூடாது என்று அவர் சொன்னாராம். மேலும் அவர் சொன்னாராம் மஜ்தூப்களின் ஜியாரத்திர்க்கும் செல்லகூடாது என்று சொன்னாராம். இதனை கேட்டதும் அவரிடமுள்ள தொடர்பை விட்டு அவர் நீங்கினார்.

அன்பர்களே! இப்படி ஒரு வித்தியாசமான போலி ஷைகுமார்களின் கூட்டத்தில் சேராமல் காமிலான நபிகள் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் மேல் பாசம் வைத்த உண்மையே சொல்லுகின்ற, தன்னை போன்ற ஷைகுமார்களை மதிக்கின்ற ஒரு காமில் ஷைகை பிடித்து கரை சேருங்கள்.
விலாயத் பறிக்கபடுதல்

ஒரு வலியுல்லாஹ் அவர்கள் ஒழு செய்யும்போது கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் ஒரு சுன்னத்தை மறந்து விட்டதால் ஷைகுனா முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அந்த வலியுல்லாஹ்வின் விலாயத்தை பறித்துவிட்டார்கள் அப்படியிருக்க தன்னுடைய பாட்டனாராகிய அருமை நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை குறைத்து பேசியவர்களையும். எழுதியவர்களையும் எப்படி குதுப் நாயகம் அவர்கள் பொருந்திகொள்வார்கள்? “ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை தொழுகையில் நினைப்பது மாடு, கழுதை எண்ணத்தில் மூழ்குவதை விட கெட்டதாகும். தப்லீக் ஜமாஅத் பற்றி தவறான குற்றச்சாட்டுகளும் தக்க பதில்களும் என்ற நூலில் குறிப்படப்பட்டுள்ளது. மேலும் அதே புத்தகத்தில் மாடு கழுதையே பற்றிய எண்ணம் நமக்கு தரக்குறைவாக வரும் அதனால் இறை வணக்கத்தில் இறைவனை மறக்கடிக்காது. அதனால் தொழுகையில் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களையும் மற்ற நல்லடியார்களையும் நினைக்கும்போது அவர்களுடைய எண்ணம் கண்ணியத்தோடு வருவதால் அல்லாஹ்வை மறந்த நிலை ஏற்படும் என்று தன்னுடைய கிதாபிலே கூறுகிறார். இவர்களின் கூற்றுப்படி தொழுகையில் பாகமாகிய அத்தஹிய்யாத்தில் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுக்கு சலாம் சொல்வதை கண்ணியத்தோடு சொல்ல வேண்டுமா? அல்லது கண்ணியமில்லாமல் சொல்ல வேண்டுமா? கண்ணியமில்லாமல் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நினைப்பது குப்ராகும் என்று பெருமக்களாகிய இமாம்கள் நமக்கு சொல்லியிருக்கிறார்கள். இதுவெல்லாம் விளங்காமல் தான் ஷைகுல் ஹதீஸ் என்றும், ஆலிம்கள் என்றும் பெயர் வாங்கினார்களா? அன்பர்களே இப்படி நாயகத்தை இழிவு படுத்தி எழுதினவர்களை தான் இந்த நூரிஷா வும் அவருடைய கலீபாக்களும் அவ்லியா என்றும், ஷைகு என்றும் அந்த வழிகெட்டவர்களின் பெயர்களை போடும்போது ரஹ்மதுல்லாஹி அலைஹி என்றும் போடுகின்றார்கள். நாயகத்தின் சுன்னத்தை விட்ட ஒரு வலியின் விலாயத்தையே குதுப் நாயகம் பறித்துவிட்டார்கள் என்றால் ரசூலை இழிவு படுத்தி பேசியவனையும், எழுதினவன்களையும் அவர்களை ஆதரிக்கின்ற இந்த நூரிஷாஹ் தரீகதினரை எப்படி தன்னுடைய தரீகா என்னும் விலாயத் வட்டத்தினுள் குதுப் நாயகமவர்கள் சேர்ப்பார்கள்? இதனால்தான் இன்றைய காலகட்டத்தில் வாழ்கின்ற காதிரிய்யா, ஜிஷ்திய்யா , நக்ஷபந்திய்யா , ரிபாயிய்யா போன்ற மற்ற எல்லா தரீகாக்களின் ஷைகுமார்களிடதிலும், ஒலிமார்களிடதிலும் நீங்கள் சென்று கேட்டுபாருங்கள் நூரிஷாஹ் தரீகா எப்படி? அந்த தரீகா உண்மையானதுதானா? என்று கேட்டுபாருங்கள் அவர்களிடமிருந்து வரும் பதில் “நூரிஷாஹ் தரீகா சரி இல்லை. அவர்கள் வழி தவறி விட்டார்கள் என்றுதான் பதில் வரும்.
ஏன் அவர்களில் இருந்து இந்த பதில் வருகின்றது என்றால் இவர்களுடைய தரீகாக்கள் எல்லாம் நாயகத்தை இழிவு படுத்தி எழுதிய தப்லீக் இயக்கத்தையும், தப்லீக் உலமாக்களையும் ஆதரிப்பது இல்லை .

அதிகமான கலீபாக்களை நியமித்தல்

நூரிஷாஹ் தரீகாவில் நிறைய கலீபாக்கள் உள்ளனர். ஒரு ஷைகிற்கு பல கலீபாக்கள் இருக்கின்றார்கள். அது மட்டுமில்லாமல் சிறுவர்களுக்கும் கிலாபத் கொடுக்கப்படுகின்றது. 23 மற்றும் 25 வயதுள்ள இளைனர்களுக்கு ஜிஸ்திய்யா காதிரிய்யா தரீகா கலீபாவாக நியமிக்கின்றார்கள். அன்பர்களே நம்முடைய தரீகாக்களின் ஒலிமார்களெல்லாம் தங்களுடைய முரீதுகளை நன்றாக ஆன்மீக பயிற்சி கொடுத்து அவர்களுக்கு பல சோதனைகளை கொடுத்து அதில் அவர்கள் வெற்றி கண்ட பின்புதான் தன்னுடைய பிரதிநிதியாக நியமிப்பார்கள். ஆனால் நூரிஷாஹ் தரீகாவிலோ பெரியவங்களுக்கும் சரி, சிறியவர்களுக்கும் சரி எல்லாத்துக்கும் கிலாபத் கொடுப்பார்கள். ஆகவே நாம் இது போன்ற போலி தரீகாக்களின் கொள்கைகளையும், அவர்களின் இந்த மாதிரியான போலி செயல்களையும் தெரிந்து ஒதுங்கி கொள்ள வேண்டும்.

சில்சிலாவின் குறைபாடு

தரீகா என்றால் ஞான நாதாக்களின் சில்சிலா வழிதொடர் அவசியம். அந்த சில்சிலாவில் வருகின்றவர்கள் கண்ணியமிக்கவர்கலாகவும், சுன்னத் வல் ஜமாத்தினர்களை சார்ந்தவர்களாகவும் உள்ளவர்களை கொண்டதாக இருப்பது அவசியத்திலும் அவசியம் ஆகும். கனவில் பெற்றதாக இருக்க கூடாது. அந்த சில்சிலா வழிதொடர் உண்மையானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் தொடர்பு தம் ஷைகிலிருந்து முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் வரை அல்லாஹ்வை சென்றடைய முடியும். ஷைகுனா அஷ்ஷைகு முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களுடைய காதிரிய்யா தரீகாவில் ஒருவருக்கு முரீது கொடுத்தபின்பு அவர்களுக்கு நபிகள் சல்லல்லாஹு அவர்களிடமிருந்து அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வழியாக வரக்கூடிய சில்சிலாவை குதுப் நாயகம் அவர்கள் தன்னுடைய முரீதுக்கு கொடுப்பார்கள், குதுப் நாயகம் அவர்களை போன்ற தரீகதுடைய எல்லா ஷைகுமார்களும் மற்றும் ஒலிமார்களும் இன்றுவரை தாங்கள் முரீது கொடுக்கும்போது சில்சிலா வை கொடுப்பார்கள் . ஆனால் நூரிஷாஹ் தரீகாவில் பைஅத் எடுப்போருக்கு அவர்களின் ஷைகுமார்கள் அவர்களுடைய ஞான வழி சில்சிலாவை கொடுப்பதில்லை. ஏன் அவர்கள் அவர்களுடைய சில்சிலாவை கொடுப்பதில்லை என்றால் அவர்களுடைய ஞான வழிதொடர் சில்சிலாவிலே பல குளறுபடிகள் இருக்கின்றது. நூரிஷாஹ்வின் தொடரை பார்ப்போமானால், அவர் எட்டு தரீகாவிர்க்கு கிலாபத் பெற்றவராகவும், தன்னை ஷைகு என்றும் கூறி வெளியிட்டுள்ளார். இவருடைய சுஹ்ரவர்த்திய்யா , நக்ஷபந்திய்யா தரீகாக்களின் தொடர்களில் செய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடுத்து அவர்களின் மகனார் செய்யிதினா இமாம் ஹசன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அடுத்து (அவர்களின் மகனார்) செய்யிதினா இமாம் ஹுசைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

உலகிலுள்ள எந்த சில்சிலாவிலும் இந்த வழிமுறை இல்லை. மற்றும் வரலாற்று குறிப்புகளோ ஆதாரங்களோ காணக்கிடைக்கவில்லை. “தபகாதிய்யா சில்சிலாவில் ஏழு, எட்டு வது தொடருக்கு பின் நீண்டதொரு ஷைகுமார்கள் இடைவெளி உள்ளது. அடுத்து, சில்சிலாயே அக்பரிய்யா உவைசிய்யாவில் நூரிஷாஹ் 5 -வது ஷைகாக வருகின்றார். சுமார் 1430 வருடங்களுக்கு இந்த தரீகாவில் 5 ஷைகுமார்கள்தானா? ஆக தங்களுக்கு தகுந்தவாறு சில்சிலா தொடர்களை தயாரித்துள்ளார் என்பதும், இந்த நூரிஷாஹ் தரீகாவின் சில்சிலா போலியானவை என்பதும் தெரியவருகின்றது. அப்படியிருக்க இந்த தொடர்பில் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் தொடர்பு எவ்வாறு கிடைக்கும்? ஆகவே அன்புள்ளம் கொண்டவர்களே இந்த மாதிரி போலி சில்சிலாக்களை கொண்டுள்ள தரீகாக்களில் பைஅத் எடுத்தாலும் அல்லது கிலாபத் எடுத்தாலும் சரி இவைகள் இரண்டும் செல்லாது. எனவே காமிலான ஷைகுமார்களின் உண்மையான சில்சிலாக்களில் வரக்கூடிய ஷைகுமார்களிடத்தில் எடுக்கின்ற பைஅத் மற்றும் கிலாபத் மட்டும்தான் அங்கீகரிக்கப்படும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அன்பர்களே கருணை நபியவர்களை இழிவாக பேசிய தப்லீக் மௌலவிகளுக்கு வக்காலத்து வாங்கும் இவர்கள் உண்மையிலேயே இவர்கள் தரீகத்தை சார்ந்தவர்கள் இல்லை தரீகத்தின் போர்வையில் வந்த வழிகெட்ட தப்லீக்வாதிகள் என்பது நமக்கு இவர்களுடைய செயல்பாடுகளிலிருந்து நமக்கு தெரிய வருகின்றது. உலகத்திலுள்ள எல்லா தரீகாகளும் ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை குறைத்து இழிவாக பேசிய இந்த தப்லீக் உலமாக்களை வழிகெட்டவர்கள் என்று பத்வா கொடுத்திருக்கின்றார்கள். அப்படியிருக்க ரசூல் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை அவர்களின் கண்ணியத்தை குறைத்து பேசி, எழுதி வைத்து விட்டு சென்ற அஷ்ரப் அலி தானவி. ரஷீத் அஹ்மத் கன்கோஹி, இஸ்மாயில் தெஹ்லவி, இல்யாஸ் காந்தலவி போன்றவர்களை சரியானவர்கள் என்றும் வலியுல்லாஹ் என்றும் கூறுகின்றார்கள் நூரிஷாஹ்வினர். நாம் நம்முடைய மனதில் தோன்றுவதை இதில் எழுதவில்லை. நூரிஷாஹ் தரீகதினர் பேசிய பேச்சுக்களில் இருந்தும் மற்றும் அவர்கள் வெளியிட்ட புத்தகங்களில் இருந்தும் நாம் காட்டுகின்றோம். நாம் ஆதாரங்களை எல்லாம் வைத்து தான் இருக்கின்றோம். அதனை வைத்துதான் நாம் எழுதுகின்றோம்.
உண்மையே பொய்யாகுகின்றவனும், பொய்யே உண்மைபடுத்துகின்றவனும் உண்மை தரீகாவினரை சார்ந்தவர்களாக இருக்க முடியாது.

ஷைகு என்று சொல்லிக்கொண்டு வருபவர்களிடம் இவைகள் இருக்கின்றதா என்று நாம் கவனிக்க வேண்டும்

1 . உங்களது ஊருக்குள்ளே ஷைகு என்று சொல்லிக்கொண்டு வருபவர் முதலில் அவர் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையே சர்ந்தவர்தானா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

2 . மேலும் அவர் ஆஷிகே ரசூலாகவும் இருக்கின்றாரா மற்றும் அவர் தன்னை போன்ற ஷைகுமார்களையும், அதன் வழிவந்த ஒலிமார்களையும் குறை காணாதவராகவும் இருக்க வேண்டும்.

3 . தன்னுடைய காலத்திலே வாழக்கூடிய சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களையும், ஷைகுமார்களையும் நேசிக்க கூடியவராக இருக்க வேண்டும்.

4 . அந்த ஷைகையும் அவருடைய தரீகாவையும் அவர் வாழ கூடிய காலத்தில் வாழுகின்ற மற்ற தரீகாவுடைய ஷைகுமார்களும், உலமாக்களும் சரி என்று ஏற்று இருக்க வேண்டும்.

5 .வழிகெட்ட வஹ்ஹாபிகளுக்கும், தப்லீக்காரர்களுக்கும் ஆதரவாக செயல் படகூடாது அப்படி அவர் தப்லீக்கின் வழிகெட்ட உலமாக்களை புகழ்ந்து கூறுவதாக இருந்தால் பசுத்தோல் போர்த்திய புலி என்பது போல தரீகா வேஷம் போர்த்திய போலி ஷைகு என்பதையும் நாம் தெரிந்திருக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மை இந்த வழிகெட்ட வஹ்ஹாபிய தப்லீக் மூடர்களை விட்டு காப்பாற்றி , நமது இறுதி மூச்சு வரை அல்லாஹ்வையும் அவனது ஹபீபும் உயிருக்கு மேலான அருமை நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை நேசித்து அவர்களை கனவிலும் நினைவிலும் தரிசித்து அவர்களுடைய பிரதிநிதிகளாகிய ஒலிமார்களையும் நேசித்து அவர்கள் சென்ற வழியிலே செல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் உதவுவானாக! ஆமீன்.

தொகுப்பு: எம்.எம். அஹ்மது