அப்ஜத் கணக்கு பற்றிய விபரம்-Abjad Calculation
By Sufi Manzil
கேள்வி: அப்ஜத் கணக்கை கண்டு பிடித்தவர் யார்? அது எந்தக் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது?
பதில்: அப்ஜத், ஹுவ்வஸ், ஹுத்தி, கலிமன், ஷங்மஸ், குர்ஷித் இவர்கள் அறுவரும் அரசர்கள். இவர்கள்தான் முதன் முதலில் அரபு நூறு;களின் மூலகர்த்தாக்கள், அமைப்பாளர்கள். அதனால் இக்கணக்கு அவர்கள் பெயராலேயே வழங்கப்படுகிறது.
இமாம் மஸ்வூது என்பவர் 'தாரீக்' என்னும் நூலில் கூறுகிறார். அப்ஜத்' என்பவர் ஹிஜாஸிலுள்ள ஒரு அரசர் ஹுவ்வஸும், ஹுத்தியும் தாயிப் பகுதியிலுள்ள ஒரு அரசர்கள். கலிமன், ஸங்மஸ், குர்ஷித் என்போர் மிஸ்ர் நாட்டு மன்னர்கள். இவர்கள் அனைவரும் அல்ஆரிபா அரபுகளில் முராமிர் இப்னு சமர்வா என்பவரின் குடும்பத்தினராகும். அவர்கள் பிள்ளைகள் ஒவ்வொருவரும் அப்ஜத் என்ற பெயரையே வைக்கப்பட்டனர்.
இதனை இமாம் சுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது 'அஜாயிபுல் லுஙத்' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். இவற்றின் பொருள் குறித்து கருத்து வேறுபாடுகள் உண்டு.
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்:
அபாஜத்: என்றால் மறதியின் காரணமாக தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் விலக்கலைப் புறக்கணித்து மரத்தின் கனியை உண்ண ஜத்த-முயன்றார்கள்.
ஹுவ்வஸ்: (விலக்கப்பட்ட கனியை உண்டதால்) விண்ணிலிருந்து மண்ணிற்கு இறக்கப்பட்டார்கள்.
ஹுத்தி: தௌபாவால் குற்றம் நீக்கப்(மன்னிக்க)பட்டது.
கலிமன்: மரத்திலிருந்து கனியைப் புசித்தார்கள். நாயன் அவர்களுக்கு தௌபாவைக் கொண்டு அருள் புரிந்தான்.
ஸங்பஸ்: சுவனத்திலிருந்து இறைவன் அவர்களை வெளியேற்றினான்.
கர்ஷத்: குற்றத்திலிருந்தார்கள்: தண்டனையிலிருந்து ஈடேற்றம் பெற்றார்கள்.
'நீங்கள் அப்ஜத்(எண்ணின்) பொருளை எடுங்கள். அதில் அநேக வியத்தகு விசயங்கள் இருக்கின்றன' என்பது நபி மொழி.
அலிப்: அல்லாஹ்வின் அத்தாட்சி
பாஉ: பஹ்ஜத்துல்லாஹ்-இறைவனின் பேரழகு
ஜீம்: மஜ்துல்லாஹ்-அல்லாஹ்வின் தூய்மை
ஹா: ஹாவிய்யா-கொடிய நரகம்.
வாவு: வைல் -நரக ஓடை
ஸாவு: ஸாவிய்யா பின் நார் – நரகத்தின் ஒரு மூலை
இவ்வாறு தப்சீருத் தத்கீர்' எனும் நூல் கூறுகிறது.
ஆதாரம் மஹாழிரத்துல் அவாயில் பக்கம் 26,27.
நன்றி: வஸீலா 1-8-87