ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி ஸுபி காதிரி
By Sufi Manzil
குத்புஸ் ஸமான் , சிராஜுல் இஸ்லாம்,ஸெய்யிதுல் அஸ்பியா,ஸுல்தானுஸ் ஸுபிய்யா,ஷஹீன்ஸாயே ஆரிபீன்,ஸுல்தானுல்முஹக்கிகீன், ஹழ்ரத் காழீ ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி ஸுபி காதிரி
தகப்பனார் :
புஹாரா நகரின் ஆட்சியாளரான ஹழ்ரத் ஸய்யித் ஷாஹ் பரீத்துதீன் பரீத் புஹாரி அவர்கள்.தமது மூதாதையரை பின்பற்றி ஆட்சிபீடம் துறந்து ஸுபிய்யாக்களின் பாதையைத் தேர்ந்தெடுத்தார்கள்.
தாயார் :
இமாமுல் ஹதீத் பில் ஹிந்த் , குத்புல் இர்ஷாத் இமாம் ஷாஹ் வலியுல்லாஹ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி
அவர்களது அருமை மகளார்
ஹழ்ரத் ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபதி ஸுபி காதிரி அவர்கள் ஹிஜ்ரி 1149 ஆம் ஆண்டு (1737 ஆம் ஆண்டு ) பிறந்தார்கள் .அன்னாரது தகப்பனார் ஹழ்ரத் ஷாஹ் பரீத் அவர்கள்.அன்னாரது புனித வம்சாவழி அண்ணல் நபி அவர்களது திருப்பெயர் ஸெய்யிதினா இமாம் ஹுசைன் அவர்களிடம் சென்று சேருகின்றது என்று மவ்லானா ஸெய்யித் முஹைதீன் காதிரி ஹாதி அவர்கள் எழுதியுள்ளார்கள் .
அன்னாரது பிறப்பு,ஆரம்ப கால கல்வி , மற்றும் ஆன்மீக பயிற்சி புகார நகரில் நிகழ்ந்தது .ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி அவர்கள் ஹழ்ரத் ஸெய்யித் ஷாஹ் குலாம் ஹுசைன் அவர்களிடம் அருள்மறை குர்ஆனை மனனம் செய்து, கிராத் ஏ சபாவிழும் தேர்ச்சி பெற்றார்கள்.
பராம்பரிய இஸ்லாமிய கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர் , தமது தகப்பனார் ஷெய்கு ஷாஹ் பரீத் அவர்களிடம் பைஅத் என்னும் ஞானதீட்சை பெற்று , அல்லாஹ்வை தவிர மற்றவற்றை துறந்தார்கள் .அன்னாரது தகப்பனார் அவர்கள் தமது தமயனாருக்கு கிலாஃபத் பட்டமும் நல்கினார்கள்.அன்னாரது ஞான தேட்டங்கள் அதிகரிக்கவே ,அன்னாரது தகப்பனார் ஷெய்கு ஷாஹ் பரீத் அவர்கள் ‘எம்மிடம் உள்ளவை அனைத்தும் உமக்கு கற்று கொடுத்தாகி விட்டது. மேலும் ஞான தேட்டங்கள் இருந்தால் ஆன்மீக ஞானவான்களை நோக்கிச் செல்லுங்கள் ‘ என்று கூறினர்.
ஞான தேட்டங்களை தேடி ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி ஸுபி காதிரி அவர்கள் உலகெங்கும் பயணம் மேற்கொண்டனர் .அன்னார் எகிப்து ,யேமென் ,மக்கா முகர்ரமா, மதீனா முனவ்வரா சென்று பல்வேறு மஷாயிகுமார்களிடம் கிலாபத் பெற்றனர்.
ஹைதராபாதில் உள்ள மக்கா மஸ்ஜிதின் முன்னாள் கதீப் மவ்லானா அப்துல்லாஹ் கார்மோஷி சாஹிப் அவர்கள் , தமது மாணவ பருவத்தில் எகிப்தில் உள்ள ஜாமியா அல் அஸ்கர் பல்கலைக்கழகத்தில் ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி அவர்களால் தசவ்வுப் குறித்து எழுதப்பட்ட நூலை வாசித்து பயன் பெற்றதாக கூறினார்கள் .
அதேபோல் ஞான தேட்டத்தின் காரணமாக இந்தியா வந்த ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி ஸுபி காதிரி அவர்கள் மாலிகுல் உலமா ஹழ்ரத் மவ்லானா அப்துல் அலீ அவர்களை சந்தித்து ஆன்மீக பயிற்சியிலும் , முஜாஹதாவிலும் ஈடுபட்டனர்.
பின்னர் , இறை உதிப்பின் காரணமாக தமது தாய் மாமாவான சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி அவர்களை 1217 ஆம் ஆண்டு தில்லியில் சந்தித்தனர்.அன்னார் ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி ஸுபி காதிரி அவர்கள் மீது மிகுந்த அன்பும் , கவனமும் ,ஆழ்ந்த மெஞ்ஞான அருளையும் பொழிந்தார்கள் .
‘மகாலத்தே தரீக்கத் ‘ நூலின் ஆசிரியர் ஹழ்ரத் அப்துர் ரஹீம் ஜியா அவர்கள் சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் அஜீஸ் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி அவர்களுக்கு அன்னார் மீது இருந்த அன்பை வெளிப்படுத்தும் விதம் அன்னார் கூறியதாக எழுதுகின்றார்கள் ,
” எனது உடல் நிலை சீராக இருந்தால் நாம் உம்மை உமது நாட்டை விட்டு இங்கு வர அனுமதித்திருக்க மாட்டோம். மாறாக , நீர் எம்மை உமது நாட்டில் இருந்து அழைத்து இருந்தால் , நாம் நமது ஆன்மீக கவனத்தை உம்மீது செலுத்தி உமது ஆன்மீக தேவையைப் பூர்த்தி செய்திருப்போம் ”
தமது ஆருயிர் ஆன்மீக ஆசான் சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி அவர்களது மேலான ஸுஹ்பத்தில் , ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி ஸுபி காதிரி அவர்கள் எண்ணற்ற ஆன்மீக அருளைப் பெற்றார்கள்.அன்னார் லாஹிர்,பாத்தின் இல்முகளில் எண்ணற்ற அறிவுச் சுரங்கங்களை பெற்றார்கள். பல்வேரு திக்ர்,அத்கார்களில் அவர்களிடமிருந்து ஓதுவதற்கான ஸனதைப் பெற்றார்கள் .தஸவ்வுபின் விலைமதிப்பில்லா செல்வக்குவியல்களையும் ,ஆழமான இல்மையும் ,ஆன்மீக ஞானமும் பெற்றார்கள் .
மூன்றாண்டுகாலம் பயிற்சி எடுத்த பின்னர் சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி அவர்கள் ஷாஹ் இஷ்ஹாக் முஹத்திஸ் திஹ்லவி அவர்களிடம் ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி ஸுபி காதிரி அவர்களுக்கு கிலாபத் நாமா எழுதித் தர பணித்தார்கள். அதன் பின் ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி ஸுபி காதிரி அவர்களுக்கு காதிரிய்யா,நக்ஷபந்தியா தரீக்காவில் கிலாபத் வழங்கி அவர்களை தெக்கன் பகுதி நோக்கி செல்லுமாறு கட்டளை இட்டார்கள் .
சிராஜுல் ஹிந்த் ஷாஹ் அப்துல் முஹத்திஸ் திஹ்லவி ஸுபி காதிரி அவர்கள் வழங்கிய கிலாபத் நாமாவில் ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி ஸுபி காதிரி அவர்களை ” அகூனா அஸ் ஸாலிஹ் அல் முஸ்ததிர் பி ஜிக்ரில்லாஹ் ” என்று புகழ்ந்துள்ளார்கள்.
அதேபோல அன்னாரது ஆசிரியர் ஹழ்ரத் ஸெய்யத் ஷாஹ் குலாம் ஹுசைன் அவர்கள் (ஹழ்ரத் ஸெய்யத் ஷாஹ் அஹ்மதுல்லாஹ் ஷாஹ் ஸுபி அவர்களது கலீபா ) , ஷாஹ் அப்துல் காதிர் முஹத்திஸ் சிக்கந்தராபாதி ஸுபி காதிரி அவர்களை ” அஷ் ஷைகுல் காமில் வன் நஹீருல் பாழில், ஹாவியத்து தஸவ்வுப் ப தரீகத்தி ,மவ்லானா ஷாஹ் அப்துல் காதிர் ஸுபி ” என்று புகழ்கின்றார்கள் .
நுஸ்கத்துல் கவாதிர் நூலாசிரியர் அன்னாரை ” அஷ் ஷெய்கு அல் ஆலிம் அல் பகீஹ் அப்துல் காதிர் ஹனபி அல் ஹைதராபாதி ” என்று குறிப்பிடுகின்றார் .
மகாலத்தே தரீக்கத் நூலாசிரியர் மவுலானா அப்துல் ரஹீம் ஜியா அவர்கள் அன்னாரை ” ஸாஹிபே கமலாத் தே பாத்தின் வ லாஹிர் மவ்லானா ஷாஹ் அப்துல் காதிர் ஸுபி ” என்று குறிப்பிடுகின்றார் .