எங்கே நபியோ நானும் …
By Sufi Manzil
எங்கே நபியோ நானும்
அங்கே நபியோடு
உறவாட அருள் புரிவாயே
அல்லாஹு யா அல்லாஹு (2)
மா மதினா நன் நபிகள்
வாழும் நன் நகராம்
மானிலத்தின் நற் சுவனம்
என்றும் பொன் நகராம் (2)
மதினா சென்று சிலக் காலம்
மன்னர் நபிகளின் சன்னிதானம்
மகிழ்வாய் நாளும் வாழ்வதற்கு
அருள்வாய் அல்லாஹு! (2)
(எங்கே நபியோ…)
மஹ்ஷரிலே மானிட ரெல்லாம்
தவிக்கையிலே
மாநபிகள் லிவாவுல்
ஹம்தின் நிழலினிலே
காப்போன் உந்தன் அணைப்பினிலே
கருணை நபிகளின் அருகினிலே
அடியேன் பாவியும் ஒதுங்கிடவே
அருள்வாய் அல்லாஹு (2)
(எங்கே நபியோ…)
அடிமையாம் சுவனம் செல்ல
அருள் புரிவாய்
அண்ணல் நபி அரங்கினிலே
எனக்கோர்ப் பணித் தருவாய்!(2)
சீமான் உந்தன் அருகினிலே
சுந்தர நபிகளின் ஹித்மத்திலே
அழியாக் காலம் இருப்பதற்கு
அருள்வாய் அல்லாஹு!
(எங்கே நபியோ…)
(நிறைவு)