லைலத்துல் கத்ர்

லைலத்துல் கத்ர்

By Sufi Manzil 0 Comment December 21, 2014

லைலத்துல் கத்ரு இன்ன இரவுதான் என்பதில் ஏராளமான கருத்து வேறுபாடுகள் கூறப்பட்டுள்ளன. அது ஆண்டில் ஒரு இரவு என்றும், பராஅத் இரவு என்றும், ரமலானில் ஓர் இரவென்றும், ரமலானுடைய 27ஆவது இரவு என்றும் பல கருத்துக்கள் கூறப்பட்டுள்ளன. இவற்றில் நம்பிக்கையான சொல் ரமலானில் இருபதுக்கு மேல் ஒற்றைப்படையாக வரும் நாட்களில் உள்ள இரவுகளில் ஒரு இரவு என்பதுதான்.

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ      ۝ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ      ۝لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ       ۝ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ       ۝سَلَامٌ هِيَ حَتَّىٰ مَطْلَعِ الْفَجْرِ      ۝

ரமளான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறப்பானதாக அமைந்துள்ளது. மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது.(அல்குர்ஆன் 97:1-5)

லைலதுல் கத்ரின் அறிகுறி

ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது:

உபை பின் கஅப்  (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் “ஆண்டு முழுவதும் இரவில் நின்று வணங்கியவர் லைலத்துல் கத்ர் இரவை அடைந்து கொள்வார்” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறி வருவதாகச் சொல்லப்பட்டது. அதற்கு உபை (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள், “எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன்மீது சத்தியமாக! அது (லைலத்துல் கத்ர்) ரமளானில்தான் உள்ளது (இவ்வாறு சத்தியம் செய்தபோது அன்னார் “அல்லாஹ் நாடினால்” என்று கூறாமல் உறுதியாகவே குறிப்பிட்டார்கள்) அல்லாஹ்வின் மீதாணையாக! அது எந்த இரவு என்பதை நான் அறிவேன்; அந்த இரவில் நின்றுவணங்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அது ரமளானில் இருபத்தி ஏழாம் இரவேயாகும். அ(துலைலத்துல் கத்ர் என்ப)தற்கு அடையாளம், அந்த இரவை அடுத்து வரும் காலைப் பொழுதில் சூரியன் வெண்ணிறத்தில் ஒளியிழந்து (மங்கலாக) உதிக்கும்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 1397, பாகம்6

உபாதா இப்னு ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
இறைத்தூதர்  நவின்றார்கள், லைலதுல் கத்ரின் அடையாளம் ஒளிவீசும் நிலவுள்ள இரவைப் போன்று தெளிந்த பிரகாசமான அமைதியான இரவு. அதில் சூடோ குளிரோ இருக்காது. உதயக்காலைவரை எரி நட்சத்திரங்கள் எறியப்படுவதில்லை. மேலும், அதன் அறிகுறி அன்றைய காலைச் சூரியன் சந்திரனைப் போன்று ஜுவாலையின்றிக் நேராகக் கிளம்பும். அன்றைய தினச் சூரியனுடன் ஷைத்தானும் கிளம்ப அனுமதி இல்லை.
(இமாம் அஹ்மத், மஜ்மஃ அஸ்ஸவாயிது,பாகம் – 04, பக்கம் – 75)

லைலத்துல் கத்ரு இரவுக்கு சில அடையாளங்கள் ஹதீதுகளில் கூறப்பட்டுள்ளன. அவை: அன்றைய இரவில் நட்சத்திரம் எரிந்துத விழாது. நாய் குரைக்காது. சூடும் குளிர்ச்சியும் இல்லாமல் மிதமான தன்மையாக இருக்கும். அன்று சூரியன் உதிக்கும்போது சுடர் அதிகமின்றி பிறையைப் போல் இருக்கும். மேலும் ஷைத்தான் வெளியில் வரமாட்டான் என்றும் கூறப்பட்டுள்ளது. – மஙானி

லைலத்துல் கத்ரு எந்த நாள்?

ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலதுல்கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

லைலத்துல் கத்ரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில்நீங்கள் தேடுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)நூல்: புகாரி 2017, 2020

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் மக்களிடம்வந்தார்கள். அப்போது இரண்டு மனிதர்கள் வழக்காடிக் கொண்டிருந்தனர். அதை நான்மறந்து விட்டேன். எனவே அதை 27, 29, 25 ஆகிய நாட்களில் தேடுங்கள் என்றுநபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலியல்லாஹு அன்ஹா)நூல்: புகாரி 49, 2023, 6049

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் லைலதுல் கத்ருஇரவைப் பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். “லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாகஇருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்” என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي مِجْلَزٍ، وَعِكْرِمَةَ، قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ هِيَ فِي الْعَشْرِ، هِيَ فِي تِسْعٍ يَمْضِينَ أَوْ فِي سَبْعٍ يَبْقَيْنَ ‏”‏‏.‏ يَعْنِي لَيْلَةَ الْقَدْرِ‏.‏ قَالَ عَبْدُ الْوَهَّابِ عَنْ أَيُّوبَ‏.‏ وَعَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ الْتَمِسُوا فِي أَرْبَعٍ وَعِشْرِينَ‏.‏

என்று இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்”
“லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!”
என இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.

“இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!” என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்.- புகாரிபாகம் 2, அத்தியாயம் 32, எண் 2022

“ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.”அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: அஹ்மத் (15466)

அப்துல்லாஹ் பின் உமர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் (தமது கனவில் ரமளானின்) இருபத்தேழாவது இரவில்லைலத்துல்கத்ர்இரவு இருப்பதாகக் கண்டார். அப்போது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், “ரமளானின் இறுதிப்பத்து இரவுகளில் (ஒன்று என்பதில்) உங்கள் கனவுகள் ஒன்றுபட்டிருப்பதைக் காண்கிறேன். எனவே, ரமளானின் இறுதிப்பத்தில் ஒற்றைப்படையான இரவுகளில் (ஒன்றில்) அதைத் தேடிக்கொள்ளுங்கள்!” என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் 2162, பாகம்6

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, “அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படைஇரவான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லதுஇருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்” என்று சொல்லிவிட்டு, “யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: அஹ்மத் (20700)

மேற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல்கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக்காட்டுகிறது.

லைலதுல் கத்ர் 27வது இரவு என்பதற்குரிய ஆதாரங்கள்:

லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு), நூல்: அபூதாவூத் (1178)

லைலத்துல் கத்ரு பற்றி கூறப்பட்டுள்ள ‘இன்னா அன்ஜல்னாஹ்சூராவில் லைலத்துல் கத்ரு என்ற வார்த்தை மூன்று தடவை கூறப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையில் ஒன்பது எழுத்துக்கள் வீதம் மூன்று தடவைக்கு 27 எழுத்துக்கள் ஆகின்றன. ஆகவே இருபத்தியேழாம் இரவுதான் லைலத்துல் கத்ரு என்று சிலர் கூறியுள்ளனர். இவ்வாறு சில காரியங்களில் இமாம்களில் சிலர் எழுத்துக்களின் எண்ணிக்கைக்குத் தோதாக விஷயங்களை கூறியிருப்பது அறிவுக்குப் பொருத்தமாகவும் அமைந்துள்ளது.–மஙானி

கஸ்ஸாலி இமாம் சொன்ன உபகராம்

இமாம் ஙஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் மற்றும் இமாம்கள் சிலரும் ரமலானின் முதல் பிறை ஞாயிறு அல்லது புதன்கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தொன்பதாம் இரவு என்பதாகவும், முதற்பிறை திங்கட்கிழமையாகயிருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தொன்றாம் இரவென்பதாகவும், செவ்வாய்க் கிழமை அல்லது வெள்ளிக் கிழமையாக இருப்பின் லைலத்துல் கத்ரு இருபத்தேழாம் இரவென்றும், வியாழக்கிழமையாக இருப்பின் இருபத்தைந்தாம் இரவென்றும், சனிக்கிழமையாக இருப்பின் இருபத்தி மூன்றாம் இரவென்றும் கூறியுள்ளார்கள். இந்த கணக்குப்படி நான் பருவமடைந்தது முதல் எனக்கு லைலத்துல் கத்ரு தவறியதே கிடையாது என்று ஷைகு அபுல்ஹஸன் ஜுர்ஜானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். – மஙானி

லைலத்துல் கத்ரின் அமல்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: எவர்நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில்நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு),நூல்: புகாரி 35)

லைலதுல் கத்ரு இரவு பற்றி நீங்கள் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் செவியுற்றதை எனக்குக் கூறுங்கள்! என்று கேட்டேன். அப்போது அபூ ஸயீத்(ரலியல்லாஹு அன்ஹு), ‘நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ரமளானின் முதல் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப்இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) வந்து ‘நீங்கள் தேடக் கூடியது (லைலத்துல் கத்ரு) உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள். உடனே நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நடுப் பத்து நாள்கள் இஃதிகாப் இருந்தார்கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல்(அலைஹிஸ்ஸலாம்) வந்து, ‘நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாள்களிலுள்ளது)’ என்றார்கள்.ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். ‘யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப்பட்டது. நான் மறக்கடிக்கப் பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாள்களில் ஒற்றையான நாளிலுள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்’ என்று இறைத்தூதர்(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.  (அக்காலத்தில்) பள்ளிவாசலின் முகடு பேரீச்ச மட்டைகளால் அமைந்திருந்தது. வானத்தில் (மழைக்கான) எந்த அறிகுறியும் நாங்கள் காணவில்லை. திடீரென மேகம் திரண்டு மழை பொழிந்தது. அப்போது எங்களுக்கு நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் நெற்றி மீதும் மூக்கு மீதும் களிமண், தண்ணீரின் அடையாளத்தை கண்டேன். அவர்கள் கண்ட கனவை மெய்ப்பிப்பதாக இது அமைந்தது’ என்று குறிப்பிட்டார்கள். அறிவிப்பு அபூ ஸலமா ரலியல்லாஹு அன்ஹு புகாரி 813  

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)அவர்கள் இஃதிகாஃப் இருக்க நாடினால் சுபுஹ் தொழுது விட்டுத் தமது இஃதிகாஃப் இருக்குமிடம் சென்று விடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு)நூல்: புகாரி 2041

நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

அறிவிப்பவர்:ஆயிஷா(ரலியல்லாஹு அன்ஹா) நூல்:புகாரி2026

முடிந்த வரை ஸலவாத்தும், இஸ்திக்பாரும், திக்ருகளும், ஓதுங்கள்.

5. லைலத்துல் கத்ரின் துஆ:

ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)அவர்கள் அறிவிக்கிறார்கள்:
‘அல்லாஹ்வின் திருத்தூதரே! லைலத்துல் கத்ர் இரவு எது என்பதை நான் அறிந்தால் அதில் நான் என்ன சொல்ல வேண்டும்?’ என்று நான் கேட்டேன்.
அதற்கு,
اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي

‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபுஅன்னி’
)பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நீ மன்னிக்கக் கூடியவன். மேலும் மன்னிப்பை விரும்பக்கூடியவன் எனவே என்னை மன்னித்து விடுவாயாக!(என்று சொல் என்று கூறினார்கள். (நூற்கள்: அஹ்மது, நஸயி, ஹாக்கிம், இப்னுமாஜா 3850, திர்மிதி 3580)

Add Comment

Your email address will not be published.