மஜ்ஹர் ரப்பானி கிப்லா ஹழ்ரத் மறைவு
By Sufi Manzil
கதீபுல் ஹிந்த் ஸெய்யிது ஸாதாத் மௌலவி மஜ்ஹர் ரப்பானி கிப்லா ஹழ்ரத் அவர்கள் 21-3-2014 வெள்ளிக்கிழமை வபாத்தாகி விட்டார்கள். தப்லீக் ஜமாஅத் கியாஹே? என்ற நூலை எழுதியவர்கள். பல்லாயிரக்கணக்கான முரீதீன்களைப் பெற்றவர்கள். மாபெரும் கராமத் உடையவர்கள். அன்னாரின் மகாமைப் பற்றி சிறு குறிப்பு:
மாநாட்டில் கண்ட காட்சி
(குளம் ஜமால் முஹம்மத்> காயல்பட்டணம்.)
தமிழ்நாடு சுன்னத் வல் ஜமாஅத் இரண்டாவது மாநாடு தரணி போற்றும் பெரும் மாநாடாக நடந்து முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ். வஹ்ஹாபிகளின் வயிற்றில் பெரும்புளியை கரைத்தது முஹிப்புர் ரஸூல் (நபிகளாரின் நேசர்)களுக்கு புனிதமாகி விட்டது.
மேன்மைக்குரிய ஷைகுநாயகம் சையத் மஜ்ஹர் ரப்பானி ஹஜ்ரத் கிப்லா மத்தலில்லாஹுல் ஆலி அவர்கள் தலைமை தாங்கியது பெரும் சிறப்பு. அம்மாநாட்டில் நான் கண்டு மெய்மறந்த மறக்க முடியாத காட்சி இது.
மாநாட்டின் முதல்நான் இரவு கடைசி பேச்சாளராக வருகை தந்து பேசிய மௌலானா கௌஸர் ரப்பானி ஹழ்ரத் அவர்கள்> நாம் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களை நேரில் பார்க்கவில்லை. ஆனால் இதோ இருக்கிறார்களே இவர்களை (மஜ்ஹர் ரப்பானி ஹஜ்ரத் கிப்லா மத்தலில்லாஹுல் ஆலி) முஹ்யித்தீனாகப் பார்க்கிறோம் என்று ஷைகவர்களை சைகைக் காட்டிப் பேசியபோது அவர்களின் முகம் மாறி விட்டது. எவ்வாறு எனில்> முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களாகவே மாறிவிட்டது. சுப்ஹானல்லாஹ். என்ன ஆச்சரியம். ரலியல்லாஹு அன்ஹு.
இப்பாவிக்கு முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி மிகவும் பூரித்துப் போனேன். ஏற்கனவே நான் முஹ்யித்தீன் ஆண்டகை அவர்களைப் பார்த்திருக்கிறேன். அதனால் இதை உறுதியாகக் கண்டு கொண்டேன். எனக்கு உர்து மொழியும் தெரியாது. இருந்தும் மௌலானா கௌஸர் ரப்பானி கிப்லா அவர்கள் பேசிய முறை> சைகை மூலம் அவர்கள் பேசியதை புரிந்து கொண்டேன்.
முதல்நாள் மாநாடு முடிந்ததும் என்னுடன் வந்திருந்த ஜனாப் மீரா சாஹிப் காக்கா அவர்களும் நான் கண்டவாறே கண்டதாகவும்> மேலும் ஷைகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி> காஜா முஈனுத்தீன் சிஷ்தீ ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரைக் கண்டதாகவும் சொன்னார்கள். அதுமுதல் மாநாடு முடியும் வரை ஷைகு நாயகம் அவர்களின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
இப்பெரும் பாக்கியத்தைத் தந்த வல்ல இறைவனுக்கும்> அதற்கு உதவிய மாநாட்டுக் குழுவினருக்கும் மற்றும் அன்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அல்லாஹ் அவர்களுக்கு ஈருலக பாக்கியங்களையும் தந்தருள்வானாக. ஆமீன்.
நன்றி: அஹ்லெ சுன்னத் மாத இதழ் அக்டோபர் 1996