பிலாலி ஷாஹ்வின் முன்னாள் முரீது மனம் திறக்கிறார்!

பிலாலி ஷாஹ்வின் முன்னாள் முரீது மனம் திறக்கிறார்!

By Sufi Manzil 0 Comment August 6, 2012

1.அஸ்ஸலாமு அலைக்கும்

எனதருமை சகோதர் அவர்களே நீங்கள் நூரிஷா  தரீகாவை பற்றி கூறியது உண்மையான விஷயம் தான் நான் அந்த தரீகாவில்  பிலாலிஷா என்பவரிடம் பைய்யத் பெற்று  இருபத்தி ஒரு  வருடம் இருந்தேன் சுன்னத் ஜமாஅத் மாநாடு தஞ்சாவூரில் நடை பெற்றபோது இவர்களை பற்றிய உண்மைகளை ஹழ்ரத் வஜுஹு நகி அவர்கள் துண்டு பிரசாரம் செய்தார்கள் அத்தருணத்தில் நான் ஒரு முடிவுக்கு வந்தேன் இந்த சில்சிலாவை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று நம் உயிரினும் மேலான காத்தமுன் நபியீன் இமாமுல் அன்பியா ரஹ்மத்துல் ஆலமீன் செய்யதினா முஹம்மது முஸ்தபா  ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களை   குஷ்தாகி பண்ணிய இந்த கயவர்களை ஏற்று நடக்கும் யாராக இருந்தாலும் முனாபிகுகள் தான்.

மேலும் எனுடைய வியாபார ரீதியாக நண்பராக இருந்த ஹழ்ரத் கௌஷி ஷா ஹைதராபாதி அவர்களின் பேரனார்  முஸப்பர்  குரைஷி என்னுடைய வியாபார ரீதியாக நண்பர் என்பதால் அவர் மேல் எனக்கு நல்ல மரியாதை ஒரு சமயம் நானும் என் நண்பர்  முஸப்பர்  குரைஷி அவர்களும் சேர்ந்து மற்றொரு நண்பாறன வஹாபி கொள்கையுடையவரிடம் முனாஜிற செய்து பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் கருணை பார்வையால் அந்த வஹாபி நண்பர் சுன்னியத்து உடைய கொள்கை பக்கம் திரும்பி இன்று என்னுடைய பீர் பாயாக இருக்கிறார்.

மேலும் அந்த ஹைதரபாத்தி நண்பர்  முஸப்பர்  குரைஷி என் சில்சிலா பற்றி கேட்டார் நான் இந்த நூரிஷா வை பற்றி சொல்லி நான் நூரிஷாவுடைய கலிபாவாகிய ஜுஹூரி ஷா, ஜுஹூரி ஷா வுடைய கலிபாவாகிய இந்த பிலாலி ஷா விடம் பைய்யத் பெற்று இருக்கிறேன் என்று என் நண்பர்  முஸப்பர்  குரைஷி அவரிடம் சொன்னேன் அதுவரை அமைதியாக இருந்த என் நண்பர்  முஸப்பர்  குரைஷி கோப பட்டு நீ உடனே இந்த சில் சிலாவை விட்டு மாறி ஒரு நல்ல பீரை தேர்த்ந்து எடுத்து கொள் என்றார் மேலும் அவர் எனக்கு இந்த விசயத்தை சொல்வதால் எந்த ஆதாயமும் கிடையாது நான் உன்னுடன் நல்ல நண்பனாக மற்றும் நல்ல வியாபாரியாக இருக்கிறேன் ஆனால் இது ஈமான் சம்பத்தப்பட்ட விஷயம் அதுனாலே உனக்கு இந்த உண்மையை சொல்கிறேன் என்று என் நண்பர்  முஸப்பர்  குரைஷி  சொன்னார். அன்றைய தினம் ஒரு உண்மையையும் அவர் சொன்னார் இந்த  முஸப்பர்  குரைஷி அவர்கள் ஹழ்ரத் கௌஷி ஷா வின் மகள் வீட்டு பேரன் என்ற உண்மையயை சொல்லி இந்த தேவபந்திகளின் சாக்கடை கொள்கைகளை தெளிவாக எடுத்து சொன்னார்.

மேலும் அவர் பாட்டனார் சில்சிலாவில் அவர்  இணைந்துதிருக்கவில்லை ஆனால் ஒரு சுன்னியாக இறுக்கிறார் இவருடைய தாய் மாமன் தான் இந்த சில்சிலா எ கௌசியாவுடைய சஜ்ஜாதே நாசின் ஏன் இந்த விளக்கத்தை சொல்கிறேன் என்றால் இந்த கௌசி ஷா சில் சிலா காரர்கள் தேவ்பந்திகளை அடையாளம் காட்டுவதால் இவர்களும் சுன்னியாக இருக்கலாமே என்று எனக்கு ஒரு நம்பிக்கை இருக்குகிறது ஆகவே சற்று நன்கு ஆராய்ந்தால் உண்மையான தெளிவு கிடைக்கலாம் நான் இந்த மாதிரி சொல்வதால் என்னை இவர்களுடைய அபிமானி என்று கருதிவிடாதீர் நான் இந்த நூரிய தரீகாவை தலை முழுகி மூன்று வருடம் ஆகிவிட்டது மேலும் சர்கார் கரீபுன் நவாஸ் அவர்களின் பரம்பரையில் உதித்த கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் குலவழி தோன்றல் ஆலே ரசூல் செய்யது அஹமது பஷீர் ஹுசைனி சிஸ்தியுள் காதிரி பந்தா நவாஸி (மதனி டிரஸ்ட்) அவர்களிடம் பைய்யத் பெற்றுவிட்டு ஒரு உண்மையான சுன்னத் ஜமாஅத் கொள்கையில் நடக்றேன் என்னுடைய சில்சிலா குல் பர்காவில் துயில் கொள்ளும் சற்குரு நாதர் காஜா காஜக்ஹன் காஜா பந்தா நவாஸ் ஜெசுதராஸ் செய்யது முஹம்மது ஹசன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சில்சிலா ஏ ஹுசைனிய ஆகும். மேலும் என் இறுதி மூச்சு இந்த சத்திய கொள்கையோடு பிரிய தாங்கள் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் துஆ செய்யுங்கள்.

மேலும் இந்த நூரிஷா தன்னுடைய மதர்ஷா அடிக்கல் நாட்டுவிழாவில் தேவ்பந்தி உலாமாவான காரி தையூப் என்பவனை அழைத்து அடிக்கல் நாட்டினார் இத்தருணத்தில் கௌஷி ஷா உயிருடன் இருந்தார் கௌஷி ஷா வின் பீர் ஷா கமாலுல்லாஹ் மச்சிலி வாலே அவர்களும் உயிருடன் இருந்தார்கள் மேலும் ஹழ்ரத் கௌஷி ஷா நூரிஷா விடம் உன் பிள்ளையை வைத்து இந்த அடிக்கல் நாட்டும் விழாவை செய்து இருந்தால் நான் சந்தோஷ பட்டு இருப்பேன் அனால் குஷ்தாகி ரசூல் கொள்கைவுடைய ஒருவனை அழைத்து இந்த கேவலமான செயலை இந்த நூரிஷா செய்ததால் ஹழ்ரத் கௌஷி ஷா தன் பீர்   ஷா கமாலுல்லாஹ் மச்சிலி வாலே அவர்களின் கைய்யபம் ஒப்புதல் பெற்ற ஒரு மடலோடு இணைத்து இந்த நூரிஷா வுடைய கிலாபத்தை (சல்ப்) திரும்ப பெற்றுவிட்டதாக அறிக்கை விடுத்தார்கள் இந்த கடிதங்கள் இன்றும் ஹழ்ரத் கௌஷி ஷா வுடைய நூரிஷா வை பற்றி எழுதிய புத்தகங்களில் இடம் பெற்று உள்ளன என்று என் நண்பர்  முஸப்பர்  குரைஷி கூறியுள்ளார் மேலும் இந்த கௌஷி ஷா அவர்கள் இமாமே ஆலம் ஹழ்ரத் அபு ஹனிபா வம்சம் என்று சொல்ல படுகிறது தங்களுக்கு ஏதாவது தகவல் தேவை என்றால் நானோ அல்லது நீங்களோ இப்பொழுது இருக்கும் இந்த சில்சிலா ஏ கௌஷியாவுடைய சஜ்ஜ தே நாசின்னிடம் (கௌசாவி ஷா) பெற்று கொள்ளலாம் மேலும் நீங்கள் கூறியது போல் அவர்களுடய சிஜ்ராவில் இந்த செய்யத் அஹமது பரேல்ளுடைய பெயர் நிரூபணம் ஆகிவிட்டால் இந்த மொத்த சில்சிலாவும் வலிகேடர்களே என்று உறுதி கொள்வேன்

தங்களுடைய தொடர்பு நம்பர் கிடைத்தால் மிகவும் நலமாக இருக்கும்

இப்படிக்கு

A.K. முஹம்மது ஸுபைர் ஹுசைனி

Chennai 600108.

2. அஸ்ஸலாமு அலைக்கும்

அல்ஹம்து லில்லாஹ் தங்களுடைய சேவையை எல்லாம் வல்ல அல்லாஹ் வெற்றி ஆக்கிதருவானாக

நான் இந்த போலி தரீகவை பற்றி ஒரு இணையதலத்தை உருவாக்கி இவர்கள் கயவர்தனத்தை வெளிச்சம் போட்டு காட்ட நினைத்து இருந்தேன் ஆனால் தங்களுடைய இணையதளத்தை பார்த்த பிறகு இந்த நல்ல பணியை தாங்கள் செய்திவிட்டீர்கள் அல்ஹம்துலில்லாஹ் அசத்தியம் அழியும் சத்தியம் வெல்லும் அதன் முதல் கட்ட முயற்சி தான் உங்களுடைய சேவை மேலும் நான் தங்களுக்கும் அனுப்பிய ஈமெயில் 3 ஆகஸ்ட் 2012 தேதியில் சில் சிலா கௌசியா பற்றி கூறி இருந்தேன் அது விசயமாக தாங்கள் நன்கு ஆலோசிக்க வேண்டும் மேலும் சில் சிலா கௌசியா சிஜ்ஜிராவையும் இந்த போலி தரீகா நூரிஷாவுடைய சிஜ்ஜிராவையும் ஒப்பிட்டு பாருங்கள் ஏன் என்றால் இவர்கள் கண்டிப்பாக குழப்பம் செய்யகூடியவர்கள்

மேலும் இந்த போலி சில் சிலாவை தொடர்ந்து சில் சிலா ஏ ஆமிரிய என்று ஒரு வழிகேட்டு கூட்டம் சென்னை ராயபேட்டையில் இயங்கி வருகிறது இந்த சில் சிலா ஏ ஆமிரியா நூரிஷாவின் பிரதான கலிபவாகிய உமர் ஆமிர் கலிமிஷா என்பவரால் துவக்கப்பட்டது.

இவர்கள் இவர்களுடைய பெரும்பாலான முரீதுகள் வேலூர் ஆம்பூர் குடியாத்தம் ஆந்திரா மற்றும் பெங்களூர் ஆகிய ஊர்களில் அதிகமாக உளார்கள்  இவர்கள் மூன்று மாதத்துக்கு ஒரு முறை அல்லாஹு அல்லாஹ் என்ற திகிர் மஜிலிஸ் நடத்தி வருகிறார்கள்

இந்த திகிர் மஜிலிஸ் 24 மணிநேரமும் தொடர்ந்து நடக்கும் ஆரம்பத்தில் இதை ஒரு நல்ல அமல் என்று நினைத்து இருந்தேன் ஆனால் பிறகு தான் இவர்களின் அந்தரங்கம் தெரிந்தது  இவர்களுடைய முரீதுகள் சுமார் 500 நபர்கள் கூடுவார்கள் இவர்கள் கூடும்போது காணிக்கைகள் கொண்டுவருவார்கள் இந்த காணிக்கை ஒரு பெரிய தொகையாக சேரும் எனக்கு அப்பொழுதான் புரிந்தது இவர்கள் அல்லாஹுவை திகிர் செய்வதர்காக இந்த அமலை துவங்கவில்லை என்றும் இவர்கள் பையை நிறைக்க போட்ட சதி திட்டம் என்று புரியவந்தது பல சுன்னியத்து நண்பர்களின் அகீதாவை நாசம் பண்ணிகொன்ன்டு இருக்கிறார்கள்.

இந்த கலிமிஷா அஹ்லே பைத் என்று கூறுகிறார் அனால் இவர் அஹ்லே பைத் கிடையாது இது சம்பந்தமான ஆதாரங்களும் வேறு ஒரு நபரிடம் உள்ளது இந்த சில் சிலா ஏ ஆமிரியாவின் வேடிக்கை என்ன வென்றால் நூரிஷாவுக்கும் கலிமிஷாவுக்கும் பேச்சு வார்த்தை கிடையாது உலகத்தில் எந்த முரீதாவது பீரிடம் சண்டைபோடுவார்கள? புனிதமான இந்த தரீகத் பாதை மக்களுக்கு நல்வலிகாட்டதனே இவர்கள் குடும்ப சண்டையை காட்டி தன் பீரிடம் தொடர்பை துண்டித்து கொண்டார்கள் நூரிஷவின் மூத்த மகன் ஆரிபுதீன் இன்றும் சென்னைக்கு வந்தால் இந்த கலிமிஷா வீட்டு படி மிதிப்பது இல்லை இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த நூரி சில் சிலா வே பொய்யானது ஆனால் இவர்களுகுல்லையே ஒத்துமை கிடையாது.

இந்த நூரிஷா கலிபாக்கள் ஒருதகொருத்தர் புறம் பேசி திரிகரார்கள் இந்த கலிமிஷாவுடைய மூத்த மகன் ரஜாவுள்ளவிடம் தேவபந்திகளை மற்றும் சங்கை மிகு ஆல ஹழ்ரத் கிபுலாவை பத்தி கேட்டோம் அதற்ககு நான் தேவபந்தியும் கிடையாது பரேல்வியும் கிடையாது என்று ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்று சொல்கிறார் அபொழுது இவர் யார் என்று எங்களுக்கு புரிந்தது இந்த மாதிரி பல குப்பைகள் இவர்கள் வரலாறில் வளிந்து கிடைக்கிறது இதே போல் சிங்கப்பூரில் ரபிக் ஷா என்று அழைக்கப்படும் நூரிஷஆவின் கலிபா இருக்கிறார் இவரும் அதே நிலைதான் ஆகவே தங்கள் இந்த கட்டூரையை முடிந்தால் உங்கள் இணையத்தளத்தில் போடுங்கள்

இப்படிக்கு உங்கள் நண்பர்
A .K . முஹம்மது ஸுபைர் ஹுசைனி
சென்னை 600108

MOHAMED ZUBAIR HUSSAINI kbnzubair@gmail.com
date: Sat, Aug 4, 2012 at 7:58 PM