உலகிலேயே மிகச் சிறந்த நீர் எது?

உலகிலேயே மிகச் சிறந்த நீர் எது?

By Sufi Manzil 0 Comment February 7, 2012

கேள்வி: உலகிலேயே மிகச் சிறந்த நீர் எது?

பதில்: இந்தக் கேள்விக்கு நீங்கள் எதிர்பார்க்கும் பதில் ஜம்ஜம் தண்ணீர் என்பதைத்தான் என்று நினைக்கிறோம். ஆனால் இஸ்லாமிய அறிஞர்கள், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான கையிலிருந்து பீரிட்ட நீரையே சிறந்தது என கூறுகின்றனர்.

இதுகுறித்து ஹதீது ஷரீபில்,

செய்யிதினா ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்,

'ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்கள் தாகமாக இருந்தார்கள். அப்போது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இருந்தது. பிறகு நாங்கள் அவர்களிடம் சென்று நாங்கள் பருகுவதற்கும், உளு செய்வதற்கும் எங்களிடம் தண்ணீர் இல்லை என முறையிட்டோம். உடனே நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் திருக்கரங்களை அந்த பாத்திரத்திலே வைத்தார்கள். அப்போது அந்த விரல்களுக்கிடையேயிருந்து தண்ணீர் ஊற்று போல் பீறிட்டு ஓடியது. அந்த தண்ணீரைக் கொண்டு நாங்கள் குடித்தோம். இன்னும் ஒளுவும் செய்தோம். ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்? என்று கேட்கப்பட்ட போது, நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தோம்.

நூறு ஆயிரம் பேர் இருந்தாலும் அந்த தண்ணீர் எங்களுக்கு போதுமானதாக இருந்திருக்கும். என்றார்கள்.

நூல்: புகாரி, முஸ்லிம், மிஷ்காத் பக்கம் 532.

மிஷ்காத் கிரந்த விரிவுரையாளர் ஹழ்ரத் முல்லா அலி காரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய கிரந்தமான மிர்காத்திலே இதற்கு விரிவுரை செய்யும் போது,

கண்மணி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விரல்களிலிருந்து பீறிட்ட முபாரக்கான தண்ணீர் ஜம்ஜம் தண்ணீரை விடச் சிறந்தது. ஏனென்றால் புனிதமிகு ஜம்ஜம் நீர் நபி இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாதத்திலிருந்து உதித்தது. ஆனால் இந்த நீர் நம் உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான கை விரல்களிலிருந்து பீறிட்ட தண்ணீராகும். ஜம்ஜம் நீரை விட சிறந்தது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார்கள்.