ஸில்ஸிலா என்றால் என்ன?

ஸில்ஸிலா என்றால் என்ன?

By Sufi Manzil 0 Comment January 16, 2012

Q: ஸில்ஸிலா என்றால் என்ன? அதற்குரிய விளக்கம் தருக

Abdul Kather <abdul_kather30@yahoo.in>

அன்புடையீர்!                                                                                                                                                                                                                                              07-12-2009

அஸ்ஸலாமு அலைக்கும்.

தாங்கள் ஸில்ஸிலா என்பது பற்றி விளக்கம் கேட்டிருந்தீர்கள். ஸில்ஸிலா என்பது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் தொட்டு தற்போதுள்ள ஷெய்குமார்கள் வரையுள்ள ஞானவழித் தொடரைக் குறிக்கும்.

தற்போதுள்ள ஷெய்கு தமக்கு முன்னாடியுள்ள ஷெய்குவிடம் கிலாபத் எனும் குருபீடம் பெற்று அந்த ஷெய்கு தமக்கு முன்னாடியுள்ள ஷெய்குவிடம் கிலாபத் பெற்று அப்படியே இறுதியாக  நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வரை சென்று அல்லாஹ் அளவில் கொண்டு முடிகிறது. இவ்வாறே அவர்களிடமிருந்து கிடைக்கும் 'பைஜும்' ஆகும். ஷெய்குமார்கள் தாங்கள் பெற்ற கிலாபத்தை தகுதியுள்ளவர்களுக்கு கொடுத்து தங்கள் ஸில்ஸிலா தொடர வழி வகை செய்யவும் செய்யலாம் அல்லது தகுதியுள்ளவர்கள் கிடைக்காவிடின் அதை அப்படியே விட்டும்விடலாம். அது அந்த ஷெய்குமார்களின் விருப்பத்தைப் பொறுத்தது. கிலாபத் பெற்ற ஷெய்குமார்கள் மக்களை பரிபக்குவப்படுத்திட முரீது எனும் பைஅத் கொடுத்து அவர்களை விலாயத் பெற வைத்து அல்லாஹ் அளவில் பனாவாக்கி ஜெயம் பெற வைப்பது ஷெய்குமார்களின் சேவையாகயிருக்கிறது. எனவே ஒருவன் ஜெயம் பெறுவதற்கு கண்டிப்பாக ஷெய்குமார்களின் தேவை அவசியமாகிறது. சிறு வயதிலேயே விலாயத்தை அடையப்பெற்றிருந்தும் செய்யிதினா கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஒரு ஷெய்கு தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த முரீதுகள் தங்கள் ஷெய்கு சொன்னபிரகாரம் செயல்பட்டால் ஜெயம் பெறுவது நிச்சயம். ஏனெனில் காமிலான ஷெய்குமார்களின் ஒவ்வொரு சொல்லும் அல்லாஹ், ரஸூலுடைய சொல்லை ஒத்ததாக இருக்கிறது. இந்த ஷெய்குமார்கள்தான் தம் சீடர்களை அல்லாஹ் அளவில் சேர்த்து வைக்கக் கூடியவர்களாயிருக்கிறார்கள். ஒரு முரீதிற்கு எந்தவகை ஞானம், பதவியுயர்வு, கிடைக்கும் படித்தரம் ஆகியவை தமது ஷெய்குமார்கள் மூலமாகவே கிடைக்கிறது. அந்த ஷெய்குமார்களுக்கு அவர்களின் ஷெய்கு மூலமாகவும் அப்படியே இறுதியில் அல்லாஹ் மூலமாகவும் கிடைக்கிறது. ஆகவே ஒரு ஷெய்கை கைப்பிடித்தவன் தன் ஷெய்கிடம் மிகவும் மரியாதையோடும், கண்ணியத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். ஷெய்கிடம் மரியாதைக் குறைவாகவோ, கண்ணியக் குறைவாகவோ நடப்பது அவனின் ஈமானை பாதித்துவிடும். ஒருவன் ஷெய்கை எதிர்ப்பதால் அவனுடைய பைஅத் முறிந்துவிடுகிறது. அவனுக்கும் அவன் ஷெய்குக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடும்-அதாவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களுடன் கொண்ட நேரடித் தொடர்பு அறுந்துவிடும். ஒரு ஷெய்கால் வெறுத்து ஒதுக்கப்பட்டவனை வேறு எந்த ஷெய்காலும் முன்னேற்றப்பாதைக்கு கொண்டு செல்ல முடியாது.

இந்நிலையில், தரீகாவின் பெயரைச் சொல்லி வஹ்ஹாபியக் கருத்துக்களை பரப்புவதற்கும், புகழுக்காகவும், பிறரால் போற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் போலி தரீக்காக்களின் பெயரில் ஷெய்குமார்கள்(?) தற்போது உலா வரத் துவங்கியுள்ளனர். இதைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் தவறான பாதையில் செல்வதை தடுத்திட வேண்டியது நம் சுன்னத்-வல்-ஜமாஅத்தினர்களின் கடமையாகயிருக்கிறது.

மக்கா, மதீனா உலமாக்களாலும், ஏனைய உலமாக்களாலும் காபிர் என்று தீர்ப்பளிக்கப்பட்ட வஹ்ஹாபிகளான ரஷPத் அஹ்மது கங்கோஹி, அஷ;ரப் அலி தானவி போன்றோரை ஷெய்குகளாகவும் மற்றும் இப்னு தைமிய்யா, அப்துல் வஹ்ஹாப் நஜ்தி போன்றவர்களை மகான் என்றும், தங்கள் வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொண்ட சிலரை ஷெய்குகளாகவும் கொண்ட போலி தரீகாக்கள் உதாரணமாக நூரி ஷhஹ் தரீகா, ஆரணி பாவாவின் ரஷPதியா தரீகாக்கள் மற்றும் சில்சிலா தொடர்பற்ற தரீகாக்கள் பக்கம் மக்கள் சென்று வழிதவறிடாமல் தடுத்திட வேண்டியதிருக்கிறது. இக்காலகட்டத்தில் காமிலான ஷெய்குமார்கள் கிடைப்பது அரிதாகயிருக்கிறது.

எனவே ஷெய்குமார்கள் தங்களுக்கு தந்திட்ட ஸில்ஸிலாக்களை வெளியில் காட்டுவதும்-உண்மை தரீகாக்களை இனம் காட்டுவதும் தடுக்கப்பட்டதல்ல, மாறாக ஆகுமானதாகயிருக்கிறது. இது மார்க்க அறிஞர்களின் கூற்றாகும்.

 குறிப்பு: இதேபோல் 'நஸபு' என்கின்ற வமிசாவழி தொடர்பு பட்டியலும் உள்ளது. இது ஒருவரின் குடும்ப வமிசாவழித் தொடரைக் குறிப்பதாகும். ஒருவரின் தந்தை வழியே இத்தொடர் செல்கின்றது. இதில் தொடர் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் வரை செல்கின்ற தொடரைப் பெற்றிருப்பவர்கள் ஸெய்யிதுமார்கள்(ஸாதாத்துக்கள்) என்றும், ஸெய்யிதினா அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வரை தொடரைப் பெற்றிருக்கின்றவர்கள் 'பக்ரி' வமிசத்தினர் என்றும், ஸெய்யிதினா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்வரை தொடரைப் பெற்றிருப்பவர்கள் 'பாரூகி' வமிசத்தினர் என்றும் அழைக்கப்படுகின்றனர். இதேபோன்று பல வமிசத் தொடர்களைப் பெற்றிருப்பவர்கள் உள்ளனர். இதில் மிகச் சிறப்புமிக்கவர்கள் 'ஸெய்யிதுமார்கள்' ஆவார்கள்.