Pookkoya Thangal-அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் ஸூபி பூக்கோயா தங்கள் ஹஸனி ரலியல்லாஹு அன்ஹு.
By Sufi Manzil
அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் ஸூபி பூக்கோயா தங்கள் ஹஸனி ரலியல்லாஹு அன்ஹு.
ஷெய்குனா அஷ்ஷாஹ் ஷெய்கப்துல் காதிர் ஸூபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கலீபாவாக- காதிரிய்யா ஆலிய்யா தரீகாவின் 41வது குருமகானாக இவர்கள் வருகிறார்கள்.
பிறப்பு:-
இவர்களின் பாட்டனார் அஷ்ஷெய்கு அஸ்ஸெய்யிது அபூஸாலிஹ் தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக இலங்கையுடன் மார்க்கத் தொடர்பு கொண்டிருந்தார்கள். காதிரிய்யா, ரிபாயிய்யா தரீகாக்களில் ஷெய்காக விளங்கினார்கள். இவர்களின் மகனார் அஷ்ஷெய்கு குத்புத்தீன் முத்துக்கோயா தங்கள் அவர்களை 1914ல் இலங்கைக்கு அழைத்துச் சென்றார்கள் இவர்களுக்கும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் வமிசவழியில் வந்த ஏ.ஐ.பாத்திமா பீவி அவர்களுக்கும் 1932 ஜனவரி 6ம் நாள் சிரேஷ்ட புதல்வராக இந்தியா, அந்துருத் தீவில் பிறந்தார்கள்.( இவர்களின் தந்தை அஷ்ஷெய்கு குத்புத்தீன் முத்துக்கோயா தங்கள் சுமார் 55 வருடம் இலங்கையில் மார்க்க சேவையாற்றிவிட்டு 1968ல் தாயகம் திரும்பி, அங்கேயே மறைந்து நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.)
கல்வி:-
தமது தாயரிடமே குர்ஆனை கற்றார்கள். ஆரம்பக் கல்வியை தமது ஊரிலேயே கற்றுத் தேர்ந்தர்கள். மார்க்க கல்வியை காயல்பட்டணத்தில் மஹ்லறா அரபிக் கல்லூhயிpல் 1949 ம் வருடம் கற்று அதற்கான சான்றிதழை எம்.கே. முஹ்யித்தீன் தம்பி ஆலிம் முப்தி அவர்களிடம் பெற்றார்கள். காயல்பட்டணத்திலேயே தமிழையும் கற்றுக் கொண்டார்கள். பின்னர் வேலூர் பாக்கியாத் அரபிக் கல்லூhயிpல் ஓராண்டு கற்று அதற்குரிய சான்றிதழை பெற்றார்கள். 1949ம் வருடம் முதன்முதலாக தம் தந்தையுடன் இலங்கை சென்றார்கள்.
பைஅத்தும் கிலாபத்தும்:-
காயல்பட்டணம் மஹ்லறாவில் ஓதிக் கொண்டிருக்கும்போதே ஷெய்கு நாயகம் ஸூபி ஹஜ்ரத் காஹிரி அவர்களிடம் 1952 ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பைஅத் பெற்றுக் கொண்டார்கள்.
ஷெய்குனா ஸூபி ஹஜ்ரத் அவர்கள் உள்பள்ளியில் ஜும்ஆவிற்கு முன்பு அரபி அல்லாத மொழியில் பயான் செய்வதை எதிர்தார்கள். இதனால் மக்களின் இபாதத்திற்கு இடையூறு ஏற்படும் என்று சொன்னார்கள். இது சம்பந்தமாக காயல்பட்டணத்தில் விவாதம் நடந்த போது மற்றவர்களோடு ஷெய்கு நாயகமவர்களுக்கு மிக்க உறுதுணையாக நின்றவர்கள் பூக்கோயா தங்கள் அவர்கள்.
1975(ஹிஜ்ரி 1417)ம் ஆண்டு ஷெய்கு நாயகமவர்களிடமிருந்து கிலாபத் பெற்றார்கள். ஷெய்கு நாயகமவர்கள் மறையும் வரை தம்மிடம் பைஅத்து கேட்டு வருபவர்களிடம், ஷெய்கு நாயகமவர்களிடமே அனுப்பி வைப்பார்கள். சிலருக்கு 'ஷெய்கு நாயகமவர்களுக்கு பதிலாக பைஅத்து அளிக்கிறேன்' என்று நிய்யத் செய்தவர்களாக பைஅத் கொடுத்திருக்கிறார்கள்.
ஒரு சந்தர்ப்பதில், 'நான் காயல்பட்டணத்திலிருக்கும் போது, எமது ஷெய்கு நாயகம் ஸூபி ஹஜ்ரத் அவர்களுக்குப் பின்னால் எவ்வாறு ஒரு தாயக்குப் பின்னால் அவளது குழந்தை இணை பிரியாது செல்லுமோ அவ்வாறு நானும் செல்வேன்' என்று கூறினார்கள்.
ஷெய்கு நாயகம் அவர்களின் அழைப்பிற்கிணங்கி மட்டக்களப்பு, ஏறாவூர்,காத்தான்குடி,பாலமுனை,கல்முனை,அட்டாளச்சேனை,அக்கறைப்பற்று ஆகிய கிராமங்களுக்கு சென்று தமது தரீகாவைச் சார்ந்தவர்களிடம் தங்கள் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். 'எனக்குப் பிறகு தங்கள் அவர்களே வருவார்கள். என்னை ஆதரித்ததை விட அவர்களை சிறப்பாக ஆதரிக்க வேண்டும். காரணம் அவர்கள் ஒரு ஸெய்யிது என்றும் வேண்டிக் கொண்டார்கள்.
ஸூபி மன்ஜில்களும், மத்ரஸாக்களும் நிறுவுதல்:-
தமது ஞானகுரு அவர்களிடமிருந்து தான் பெற்ற ஞான விளக்கங்களை மக்களுக்கு விளக்கினார்கள். வருடந்தோறும் கிழக்கிலங்கையில் அக்கறைப்பற்றிலேயே தங்கி ரமலான் முழுவதையும் அங்கேயே கழித்து மக்களும் மார்க்கத்தில் ஷரீஅத்தையும், ஞானத்தையும் போதித்து வந்தார்கள். ரமலான் பிறை 24 அன்று மட்டும் தமது ஷெய்கு நாயகமவர்களின் கந்தூரிக்காக கொழும்பு வந்து செல்வார்கள்.
அக்கறைப் பற்றிலும், கல்முனையிலும் ஸூபி மன்ஜில்கள் மற்றும் கல்முனையில் சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் மத்ரஸா நிறுவப் படுவதற்கு அயராது உழைத்தார்கள். மேலும் ஏறாவூர் சதாம ஹுஸைன் பள்ளிக்கு மாதந்தோறும் தேவைப்படும் பணத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
இந்தியா கேரளா பீமா பள்ளியில் அமைந்துள்ள ஸூபி மன்ஜிலுக்குச் சென்று அங்கும் தரீகா பணியை கவனித்து வந்தார்கள்.
பண்புகள்:-
எல்லோரிடமும் அன்புடன் பழகும் பண்பு நிறைந்தவர்கள். குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக விறையாடும் சுபாவமும் அவர்களுக்குண்டு. மிகவும் இரக்க குணமுடையவர்கள். தமது முரீதீன்களிடத்தில் மிகவும் அன்னியோன்யமாக பழகி அவர்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பார்கள்.
நேர்மையின் பிறப்பிடமாக திகழ்ந்தார்கள். தம்மைக் காண வருவோர்க்கு பண்டங்கள், தேனீர் கொடுத்து உபசரிப்பார்கள். எதையும் நேரிடையாக சொல்வார்கள். உள்ளொன்றும் புறமொன்றும் வைத்து பேசும் பழக்கமுடையவர்களில்லை.
நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பார்கள். விஷக்கடிக்கும் வைத்தியம் செய்வார்கள். வஞ்சனை, சூனியம் போன்றவற்றால் துயருரும் மக்களுக்கு அவர்களின் துயர் நீக்க அதற்குரிய வேலைகளை செய்து கொடுப்பார்கள். அதற்காக பணம் பேசிக் கொள்வது கிடையாது. அக்கறைப் பற்று, ஏறாவூர் ஸூபி மன்ஜில்களில் விஷக்கடி நீங்குவதற்காக கல்லை ஓதி வைத்துள்ளார்கள்.
இவர்கள் பல முறை ஹஜ் செய்துள்ளார்கள்.
குடும்ப வாழ்வு:-
இவர்கள் ஜொஹ்ரா பீவி என்ற பெண்மணியை விவாகம் செய்திருந்தார்கள். இந்த தம்பதிகளுக்கு நான்கு ஆண்மக்கள் பிறந்தார்கள். அவர்களின் பெயர்கள் முஹம்மது ஆரிப், முஹம்மது ஹஸன்,முஹம்மது பாக்கர் கோயா மற்றும் முஹம்மது ஸைபுத்தீன் ஆகிNயுhர் ஆவார்கள். முதல் மனைவின் மறைவிற்குப்பின் அவர்களது அக்காள் ஸபிய்யாஅம்மாளை மணமுடித்தார்கள்.இவர்கள் இன்னும் ஜீவியத்துடன் உள்ளார்கள்.
வஹ்ஹாபியத்தின் எதிர்ப்பு:-
வஹ்ஹாபியத்தின் அடி வேறான தப்லீக் ஜமாஅத், தேவ்பந்தி, ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற இயக்கங்களைச் சார்ந்தவர்களுடன் கடுமையாக நடந்து கொண்டார்கள். தமது ஷெய்கு நாயகமவர்களின் சகவாசத்தில் சுமார் 17 ஆண்டுகள் கழித்துள்ளார்கள். எனவே அவர்களைப் போல் இவர்களும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வாழ்ந்தார்கள். வஹ்ஹாபிகள் எந்தப் புnhர்வையில் வந்தாலும் அவர்களை இனம்கண்டு வெறுத்து விடுவார்கள். அவர்களிடம் எவ்விதத் தொடர்பும் வைக்க வேண்டாமென்றும் தடுத்துவிடுவார்கள்.
ஞானத்தில் தன்ஸீஹை விட்டுவிட்டு தஷ்பீஹை மட்டும் பிடித்துக் கொண்டு கண்டதையெல்லாம் அல்லாஹ் என்று சொல்லி மக்களை வழிகெடுத்துக் கொண்டிருந்தவர்களையும் இவர்'கள் இனம் காட்டத் தவறவில்லை.
13-2-2000 ம் அண்டு கொழும்பு தெமட்டக் கொடை வீதியிலுள்ள ஒய்.எம்.ஏ மண்டபத்தில் வைத்து தாதா பீர் ஷெய்குனா ஹைதராபாத் ஸூபி ஹஜ்ரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுதிய அல்ஹகீகா' என்னும் அற்புதமான ஞான நூலை இவர்கள் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார்கள்.
தமது ஷெய்கு நாயகம் அவர்கள் விட்ட பணியை திறம்பட செவ்வனே நடத்தி மக்களை நேர்வழியில் செலுத்த அல்லும்பகலும் பாடுபட்டார்கள். இறுதியாக, அட்டாளச்சேனை ஸூபி மன்ஜிலில் வெள்ளி ஆயிலம் என்றழைக்கப்பட்ட அஹ்மது மீரான் ஸூபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவத்தில் தமது சக கலீபாவான சைபுத்தீன் ஹஜ்ரத் அவர்களோடு கலந்து கொண்டார்கள்.
தங்கள் அவர்கள் இலங்கையை விட்டு இறுதியாக செல்லும்முன் மௌலானா மெனலவி எஸ்.எம்.எச். முஹம்மதலி சைபுத்தீன் ஸூபி காதிரி ரஹ்மானி பாகவி ஹஜ்ரத் அவர்களை அக்கறைப் பற்று, அட்டாளச் சேனை, காத்தான்குடி, கல்முனை, சாய்;ந்த மருது, பாலமுனை, ஏறாவூர், கல்ஹின்ன, மடவள, மாத்தளை இன்னும் பல குக்கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்தார்கள். அவர்கள் இலங்கையில் தங்குவதற்காக விசா எடுக்கும் பொறுப்பையும் உரியவர்களிடம் ஏற்பாடு செய்தார்கள்.
2000ம் வருடம் ஹஜ் செல்ல ஏற்பாடாகி அதற்குரிய விசாவும் அவர்கள் பாஸ்போர்ட்டில் அடித்தாகிவிட்டது. ஆனால் அவர்கள் சைபுத்தீன் ஹஜ்த் அவர்களை ஹஜ்ஜிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டார்கள். ஹஜ்ஜிலிருந்து வந்த அவர்களுடன் இவர்களும் சேர்ந்து இந்தியா புறப்பட்டு சென்றார்கள். பின் தமதூருக்கு சென்று இலங்கை செல்வதற்காக ஊரிலிருந்து திரும்பி வந்து பீமா பள்ளிக்குச் சென்று விட்டு காயல்பட்டணம், கீழக்கரையில் திருமணத்தில் கலந்து கொண்டவிட்டு திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்கள்.
பின் பீமா பள்ளி சென்று அங்கிருந்து புதுக்குறிச்சி என்னும் ஊரிலுள்ள ஜனாப் ஜபருல்லாஹ்கான் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 29 (ஹிஜ்ரி 1421, ரபீயுல் ஆகிர் பிறை 26) அன்று இரவு 12 மணியளவில் அங்கிருக்கும் போதுதான் தங்கள்வாப்பா அவர்கள் இவ்வுலகை விட்டும் மறைந்தார்கள். அன்னாரின் ஜனாஸா தொழுகையை அவர்களின் மகனார் மௌலவி சைபுத்தீன் அவர்கள் நடத்தினார்கள்.அன்னாரின் பொன்னுடல் பீமா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.