வித்ர் தொழுகை எத்தனை ரகத்துகள் எப்படி தொழ வேண்டும்?
By Sufi Manzil
கேள்வி: அஸ்ஸலாமு அழைக்கும். வித்ர் தொழுகை எத்தனை ரகத்துகள்? எப்படி தொழ வேண்டும்? மூன்றும் தொடர்ச்சியாக தொழவேண்டும அல்லது இரண்டு 10 ஒன்றாக தொழ வேண்டுமா?
mohideen hameedhulla hameedhulla@gmail.com
Sun, Aug 21, 2011 at 9:08 PM
பதில்:
இரவு நேரத்தின் இறுதித் தொழுகைiயாக உங்களின் வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள்- புகாரி, முஸ்லிம்.
வித்ரு என்பதின் பொருள் ஒற்றைப்படையானது என்பதாகும். இஷா தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து அதிகாலைப் பொழுது உதயமாகும்வரை வித்ரு தொழுது கொள்ளலாம். வித்ரு ஷாபி மத்ஹப் படி ஸுன்னத்தும், ஹனபி மத்ஹப் படி வாஜிபுமாகும். ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஓன்பது, பதினொன்று ஒன்று ஒற்றைப்படையாக தொழ வேண்டும். ஷாபி மத்ஹபில் வித்ரின் குறைந்த அளவு ஒரு ரக்அத் ஆகும். அதிக அளவு 11 ரக்அத் ஆகும். வித்ரை இரண்டு ரக்அத் ஒரு ஸலாமாகவும், ஒரு ரக்அத் மற்றொரு ஸலாமாகவும் தொழ வேண்டும்.
மூன்று ரக்அத் தொழும்போது முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ஸூராவும் இரண்டாவது ரக்அத்தில் குல்யாஅய்யுஹல் காபிரூன் ஸூராவும், முன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹது, பலக், நாஸ் ஸூராக்களையும் ஓதுவது ஸுன்னத்தாகும்.
வித்ரை மூன்றை விட அதிகமாக தொழும்போது கடைசி ரக்அத்தில் ஒரு அத்தஹிய்யாத்தும் அதற்கு பின்னுள்ள ரக்அத்தில் ஒரு அத்தஹிய்யாத்தும் ஆக இரு அத்தஹிய்யாத் மட்டுமே ஓதிட வேண்டும். இரண்டு அத்தஹிய்யாத்தை விட அதிகப்படுத்தினால் தொழுகை முறிந்து விடும்.
ஹனபி மத்ஹபில் மூன்று ரக்அத்துகளையும் சேர்த்து தொழ வேண்டும். மூன்றாவது ரக்அத்தில் குனூத் ஓத வேண்டும்.
ஸஹாபாப் பெருமக்களில் ஹஜ்ரத் அபூபக்கர், ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் இஷா தொழுதபின் உடனே வித்ரையும் தொழுது விடுவார்கள். ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் உறங்கி எழுந்து, பிறகு வித்ரைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். இந்த விபரத்தை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவியேற்றதும் 'அபூபக்கர் பேணுதல் உடையவர். உமர் தன்னம்பிக்கை உடையவர் என இரு செயல்களையும் புகழ்ந்துரைத்தனர்.-பைஹகி.