தொழுவதை பாதியில் நிறுத்தி விட்டு மிண்டும் வந்து தொழலாமா?

தொழுவதை பாதியில் நிறுத்தி விட்டு மிண்டும் வந்து தொழலாமா?

By Sufi Manzil 0 Comment August 19, 2011

 misbah rahman misbahrahman.s@gmail.com

Aug 19, 2011 at 11:41 AM

கேள்வி::தக்பீர் கட்டி தொழுது கொண்டு இருக்கும் போது தவிர்க்க முடியாத நேரத்தில் காரணத்தில் தொழுவதை பாதியில்  நிறுத்தி விட்டு மிண்டும் வந்து தொலுவலமா?

பதில்:தொழுகையை நிறுத்திவிட்டால் அது பாத்திலாகிவிடும். திருப்பி மீண்டும் தொழுகையை முழுவதும் தொழ வேண்டும். தொழும்போது ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழைத்தால் மட்டும் அதற்கு பதில் சொல்வது கட்டாயக் கடமை. அவர்கள் சொன்னதை செய்துவிட்டு மீண்டும் எந்த இடத்தில் தொழுகையை நிறுத்திவிட்டு சென்றீர்களோ அந்த இடத்திலிருந்து மீதித் தொழுகையை தொழுதால் போதும். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைக்கு அடிபணிவது இபாதத்தாக இருக்கிறது.

அதேசமயம் நபிலான வணக்கங்களில் தாய், தந்தையர் தொழும்போது அழைத்தால் அவர்களின் அழைப்பிற்கு பதில் கொடுப்பது வாஜிபாகும். அந்த தொழுகையை விட்டுவிட்டதால் அதை மீண்டும் முழுவதும் தொழ வேண்டும்.