அரபியின் அழகிய பாவமன்னிப்பு துஆ பைத்.
By Sufi Manzil
முஹம்மதிப்னு அப்துல்லாஹில் உத்பி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், ‘செய்யிதினா ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமிக்க கபுறு ஷரீபின் அருகாமையில் ஒரு அரபி வந்ததார். அங்கு அழுது புரண்டார். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனிதமிகு கபுறு ஷரீபில் தன் முகத்தை புரட்டி எடுத்;தார். பின்பு எழுந்து நின்று, ‘அஸ்ஸலாமு அலைக்கும் யாரஸூலல்லாஹ்! என ஸலாம் சொன்னபின் இதன் கீழுள்ள குர்ஆன் ஆயத்துக்களையும், பைத்துக்களையும் ஓதிய பின், யா ரஸூலல்லாஹ்! என்னுடைய பாவங்களுக்கு தங்களைக் கொண்டு மன்றாடி அல்லாஹ்விடம் பொறுப்புத் தேடியவனாக இதோ நிற்கிறேன் என சொல்லிவிட்டு வாகனத்தில் ஏறி சென்று விட்டார். இதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் எனக்கு உறக்கம் வந்தது. அதில் என நான் அருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கனவில் கண்டேன். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்பாவே! என்னை அழைத்து இப்போது சென்ற அரபியை சந்தித்து அவருடைய பாவத்தை அல்லாஹ் மன்னித்து விட்டான் என அவருக்கு நல்லாசி கூறும் என்றார்கள் என அறிவிக்கிறார்கள். ஆகவே நமது பாவங்கள் மன்னிப்பதற்கும் நமது நாட்டங்கள் நிறைவேறுவதற்கும் இதை ஓதுவது அவசியம்.
وَلَوْ اَنَّهُمْ اِذْظَلَمُوْ اَنْفُسَهُمْ جَاءُكَ فَاسْتَغْفِرُو اللهَ وَاسْتَغْفِرَ لَهُمُ الَّرسُوْلَ لَوَجَدَ وااللهَ تَوَّابًا رَّحِيْمًا ٭
நபியே! தமது ஆத்மாக்களுக்கு அநீதம் இழைத்துக் கொண்டவர்கள் பாவமன்னிப்பு வேண்டி உங்களிடம் வருவார்களாயின், அவர்களுக்காக நீங்களும் பாவம் பொறுத்தருள வேண்டினால் அல்லாஹ்வை பாவமன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் காண்பீர்கள். -(அல்-குர்ஆன்)
يَا خَيْرَ مَنْ دُفِنَتْ بِالْقَاعِ اَعْظُمُهُ ، فَطَابَ مِنْ كِيْبِهِنَّ الْقَاعُ وَالْاَكَمُ
உறுப்புகள் பூமியினுள் அடக்கப்பட்டவர்களில் மிக ஏற்றமானவர்களே! அவர்களின் உறுப்புகளின் வாசத்தினால் காடு, மேடு வாசம் கமழுகிறது.
نَفْسِي الْفِدَاءٌ لِقَبْرٍ اَنْتَ سَاكِنُهُ ، فِيْهِ الْعَفَافُ وَفِيْهِ الْجُوْدُ وَالْكَرَمُ
தாங்கள் குடியிருந்து வரும் கபுறு ஷரீபுக்கு என்னுடைய நப்ஸு-ஆன்மா குர்பான் அர்ப்பணமாகட்டும். அதில் பத்தினித் தனம், கொடை, ஈகை இருக்கிறது.
اَنْتَ الشَّفِيْعُ الَّذِيْ تُرْجٰى شَفَاعَتُهُ ، عَلىَ الصِّرَاطِ اِذَامَازَلَّتِ الْقَدَمُ
ஸிராத்துல் முஸ்தகீம் பாலம் கடக்கின்ற போது கால் சறுகினால் தங்களின் மன்றாட்டத்தை ஆதரவு வைக்கப்படுமே அத்தகைய ஷபீஆக – மன்றாட்டம் செய்கிறவர்களாக இருக்கிறீர்கள்.
وَصَاحِبَاكَ فَلَا اَنسَاهُمَا اَبَدً ، مِنِّى السَّلاَمُ عَلَيْكُمْ مَّاجَرَي الْقَلَمُ
தங்களது இரு தோழர்களை (செய்யிதினா அபூபக்கர், செய்யி;தினா உமர் ரலியல்லாஹு அன்ஹுமா) ஒருபோதும் மறக்க மாட்டேன். கலம், – பேனா எழுதும் காலமெல்லாம் எனது ஸலாம் உண்டாவதாக!
لَوْلَاكَ مَاخُلِقَتْ شَمْسٌ وَلَا قَمَرُ ، وَلَا نُجُوْمٌ وَلاَ لَوْحٌ وَلَا قَلَمُ
நீங்கள் இல்லையாயின் சூரியன், சந்திரன், நட்சத்திரம், லவ்ஹு, கலம், ஏதும் உண்டாகியிருக்காது.
صَلّٰى عَلَيْكَ اِ لٰهِى الدَّهْرَ اَجْمَعَهُ ، فَاَنْتَ اَكْرَمُ مَنْ دَانَتْ لَهُ الْاُمَمُ ٭
அல்லாஹ் எக்காலமும் உங்கள் மீது ஸலவாத்து-கருணை அருள்வானாக! உம்மத்துமார்களிடம் சிறப்பும், கீர்த்தியும் பெற்றவர்களில் தாங்கள் மாபெரும் மரியாதைக்குரித்தானவர்கள்.