Ubaidullah Ahrar-காஜா உபைதுல்லா அஹ்ரார் ரலியல்லாஹு அன்ஹு.

Ubaidullah Ahrar-காஜா உபைதுல்லா அஹ்ரார் ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment February 11, 2010

காஜா உபைதுல்லா அஹ்ரார் ரலியல்லாஹு அன்ஹு.

ஹிஜ்ரி 806 (கி.பி.1404 மார்ச்-ஏப்ரலில்) ரமலானில் பிறந்தார்கள். தெருக்களில் பொதுமக்களோடு திரிந்து அவர்களை இறைவனின் பக்கம் அழைத்தார்கள். 'ஒருவன் ஷரீஅத்தில் விலக்கப்பட்டு;ள்ளவற்றை வாயால் கூறுவதைக் கூட தவிர்த்து நடக்கும் நிலையைப் பெறுவாராயின் அவன் ஷரீஅத்தைப் பின்பற்றுபவனேயாவான்.  இதன்பின் ஒரு பொய்யைச் சொல்லக் கூடிய எண்ணத்தைத் தன்னுடைய இதயத்திலிருந்து நீக்கி வாழ்வானாயின் அவன் தரீகத்தின் வழி செல்பவனுயாவான். இவ்வித நிலையை அடைந்த பின் தன்னுடைய இதயத்திலோ, வாயிலே ஒரு பொய்கூடத் தோன்றாத வாழ்வானாயின் அவன் 'ஹகீகத்' எனும் படித்தரத்தை அடைந்தவனேயாவான்' என்று கூறினார்கள்.

சுல்தான் அஹ்மதுக்கும் அவருடைய சகோதரர் ஷெய்கு மிர்ஸாவுக்கும் இடையே ஏற்படவிருந்த பேர் இவர்கள் தலையீட்டினாலேயே தவிர்க்கப்பட்டது. இவர்தான் ஷெய்கு மிர்ஸாவி;ன் மகனுக்கு பாபர் என்று பெயரிடுமாறு கூறினார்.

இவர் ஹிஜ்ரி 895 (கி.பி.1491)ல் மறைந்தார். அப்போது பாபருக்கு 7 வயது. பாபருடைய கனவில் இவர் ஹிஜ்ரி 906 (கி.பி.1500-1501)ல் ஓரிரவு தோன்ளி ஸமர்கந்த்தை வெற்றி கொள்வார் என்று நன்மாராயம் கூறிவிட்டு மறைந்ததாகவும், கி.பி. 1528 ல் பாபர் கடும் நோய் வாய்பட்டிருக்கும்போது இவர் எழுதிய 'வலீதிய்யா ரிஸாலா'வை ஓதியதன் காரணமாகவே நலம் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.