ரமலான் முபாரக்!-Ramadan Mubarak!
By Sufi Manzil
புனித ரமலான் பிறந்து விட்டது. அமல்கள் அதிகம் செய்து நன்மைகள் பெற்று, பாவங்களை கரித்து ஈடேற்றம் பெற ஓர் அரிய வாய்ப்பு. அதிகமதிகம் அமல்கள் செய்யுங்கள். துஆ கேளுங்கள். எங்களையும் மறந்து விடாதீர்கள்.
இமாமுனா கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்கள் இஹ்யா எனும் அற்புத கிதாபில் நோன்பை மூன்று வகையாக பிரித்திருக்கிறார்கள்.
1. சாதாரண மக்கள் பிடிக்கும் நோன்பு.- இவர்கள் பசித்து இருந்து, தீய செயல்களில் ஈடுபடாமல் ஷரீயத்திற்கு கட்டுப்பட்டு அதன்படி நோன்பு நோற்பார்கள்.
2. குறிப்பானவர்கள் நோற்கும் நோன்பு: இவர்கள் நோற்கும் நோன்பு சாதாரண மக்கள் நோற்கும் நோன்பை விட மேலானது. சாதாரண மக்கள் நோற்கும் நோன்பு நோற்பதோடு தீய செயல்கள் செய்யாமலும், பேசாமாலும், தீய எண்ணங்கள் கூட மனதில் வராமலும் பார்த்துக் கொள்வார்கள். அவ்வாறு நடந்தால் அந்த நோன்பை களாச் செய்வார்கள்.
3. குறிப்பிலும் குறிப்பானவர்கள் நோற்கும் நோன்பு: இவர்கள் சாதாரண மக்கள் நோற்கும் நோன்பை நோற்று அத்துடன் எப்போதும் அல்லாஹ்வின் நினைப்பிலேயே மூழ்கி இருப்பார்கள். கொஞ்சமாவது அந்த நினைப்பை விட்டும் போய்விட்டால் தாம் பிடித்த நோன்பை நோன்பாக கருத மாட்டார்கள். அதை களாச் செய்வார்கள். இதுதான் அவ்லியாக்களின் நோன்பாகும்.
நோன்பு காலத்தில் நாம் அல்லாஹ்வின் நினைவிலேவயே மூழ்கி இருப்பதற்கு வல்ல இனைறவன் அருள்பாலிபாபனாக! நோன்பில் எப்போதும் ஸலவாத்து ஓதிக் கொண்டிருங்கள். அதிலேயே எல்லாம் அடங்கி இருக்கிறது. ஹக் அல்ஹம்துலில்லாஹ்!