Taiyamum -தயம்மும்
By Sufi Manzil
தயம்மும்
ஒளுச் செய்வதற்காக தூய தண்ணீர் அறவே கிடைக்காதிருந்தால் அல்லது கிடைத்த நீரினால் ஒளுச் செய்யும்போது குடிப்பதற்குத் தண்ணீரின்றி தவிக்கும் நிலை ஏற்படுமென்றிருந்தால் அல்லது தண்ணீர் உளுவின் உறுப்புகளில் படக்கூடாது என்று தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் தடை விதித்திருந்தால், உளுச் செய்வதற்குப் பதிலாகப் புழுதி படிந்த தூய மண்ணை நாடி, அம்மண்ணைக் கீழ்கண்ட முறைப்படி முகம், கைகள் ஆகியவற்றில் பூசுவதற்குத் 'தயம்மும்' என்று பெயர்.
தயம்முமின் பர்ளுகள்-4
1. விரல்கள் விரித்து வைக்கப்பட்ட நிலையிலுள்ள இரு முன்னங்கைகளின் உட்புறத்தால்,புழுதி படிந்த மண்ணை பதித்து எடுத்தல்.
2. இவ்வாறு மண்ணை எடுக்கும்போது, தொழுகையை ஆகுமாக்கக் கோருவதாக மனதால் எண்ணுதல்.
(குறிப்பு: சுன்னத் தொழுகைக்கென மட்டும் என்று 'நிய்யத்' செய்து விட்டுச் செய்த தயம்முமால் பர்ளு தொழுவது கூடாது)
3. கைகளில் பதித்து எடுத்த மண்ணைக் கொண்டு முகத்தைத் தடவுதல்.
4. மீண்டும் ஒருமுறைப் பதித்து எடுத்த மண்ணைக் கொண்டு வலது கையையும், ஒடது கையையும் தடவுதல் ஆகியவையாகும்.
தயம்முமின் ஷரத்துகள்-4
1. தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது' என்ற நம்பிக்கை ஏற்பட்டபின் தயம்மும் செய்தல்.
2.தயம்முமிற்கான மண், ஏற்கனவே தயம்முமிற்கெனப் பயன்படுத்தப் படாததாகவும் கலப்பற்ற தூய்மைய உடையதாகவும் புழுதி படிந்தததாகவும் அமைந்திருத்தல்.
3. உடலில் நஜீஸ் எதுவும் பட்டிருந்தால், அது தயம்முமிற்கு முன்னரே அகற்றப்பட வேண்டும்.
4. ஒளுச் செய்வதற்குத் தடையான சூழல் (தண்ணீர் கிடைக்காமை அல்லது கிடைத்த தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நோய், காயம் போன்றவை ஏற்பட்டிருத்தல்) உண்டாயிருத்தல் ஆகியவையாகும்.
தயம்முவை முறிப்பவை.
ஒளுவை முறிக்கும் செயல்கள் தயம்முமை முறித்துவிடும். அத்துடன் 'தயம்மும்' செய்தபின் தண்ணீர் கிடைத்துவிடுதல் அல்லது தயம்மும் செய்தபின், 'தண்ணீரைப் பயன்படுத்தலாம்' என்று மருத்துவர் அனுமதி வழங்குதல் ஆகிய காரணங்களால் தயம்மும் முறிந்து விடும்.