ஐந்து நேர தொழுகை துஆக்கள்-Fivetimes Prayer Duas

ஐந்து நேர தொழுகை துஆக்கள்-Fivetimes Prayer Duas

By Sufi Manzil 0 Comment April 14, 2011

Print Friendly, PDF & Email


பஜ்ரு(ஸுப்ஹு)உடைய துஆ:

اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلي االِ سَيِّدِنَا مُحَمَّدٍ وَّ بَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّ اجْعَلْ صَبَاحَنَا هذَاصَبَاحًا مُبَارَكاً مِنَ الْخَيْرِقَرِيْبًاوَّعَنِ اشَّرِّبَعِيْدًا لاَّخَاسِأً وَلاَ خَاسِرًا وَّلامَحْرُوْمًا. اَللّهُمَّ اجْعَلْ اَوَّلَ يَوْمِنَا هذَالَنَاصَلَاحًاوَّاَوْسَطَهُ فَلَاحًاوَّااخِرَهُ نَجَاحًاوَّرَبَاحًا. اَللّهُمَّ صَبِّحْنَا مِنْكَ صَبَاحَ الرِّضَآءِ وَاكْفِنَا شَرَّمَافِي الْقَضَآءِ وَلاَتُعَذِّبْنَابِالْجَرَائِمِيَاكَرِيْمُ يَارَحِيْمُ. اَللّهُمَّ اخْعَلْ صَبَاحَنَاصَبَاحَ الصَّالٍحِيْنَ وَمَسَآءَنَامَسَآءَالذَّاكِرِيْنَ وَقُلُوْبَنَا قُلُوْبَ الْخَاشِعِيْنَ. وَاَبْدَانَنَااَبْدَانَاالْمُطِيْعِيْنَ. وَاَعْمَالَنَااَعْمَال الْمُتَّقٍيْنَ. وَاَسِنَتَنَا اَلْسِنَةَالذَّاكِرِيْنَ. وَنَبِّهْنَا عَنْ نَوْمَةِالْغَافٍلِيْنَ وَشَارِكْنَافِيْ دُعَاءِالصَّالِحِيْنَ. وَارْزُقْنَاالْجَنَّةَ يَارَبَّ الْعَالَمِيْنَ. وَصَلَّي اللّهُ وَسَلَّمَ عَلي سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاالِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ. وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعلَمِيْنَ.

பொருள்:இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய வமிசத்தார் மீதும் ஸலவாத்தும் சலாமும் அருள்வாயாக! இறைவனே! இந்தக் காலை நேரத்தை எங்களுக்கு பரக்கத்துள்ள காலைநேரமாக ஆக்கிஅருள்வாயாக! நன்மையில் சமீபத்ததாகவும், ;தீமையை விட்டு தூரமானதாகவும், தீங்கற்றதாகவும் நஷ்டமற்றதாகவும்,

நிர்ப்பயனற்றதாகவும்(எங்களுக்கு அதை)ஆக்கி வைப்பாயாக! இறைவனே எங்களுக்கு இன்றைய தினத்தின் ஆரம்பத்தை இணக்கமானதாகவும் மத்தியத்தை வெற்றியாகவும் இறுதியை விசிராந்தியாகவும் சௌக்கியமானதாகவும் ஆக்கி வைப்பாயாக! இறைவனே உன்னிடமிருந்து எங்களுடைய காலை நேரத்தை திருப்தியான காலை நேரமாக்கி வைப்பாயாக! கடந்'து போன காரியங்களின் தீங்கை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக! குற்றங்களைக் கொண்டு எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக! ஏ சிறப்பு மிக்கவனே! அருள் மிகுந்தவனே! இறைவனே! எங்களுக்கு இக்காலை நேரத்தை உத்தமர்களுடைய காலை நேரமாக்கியருள்வாயாக! மாலை நேரத்தை எங்களுக்கு தியானிப்பவர்களின் மாலை நேரமாக்கியருள்வாயாக! இன்னும் எங்கள் இருதயங்களை அச்சமுள்ள ஹிருதயங்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் சரீரங்களை  வழிப்பட்டவர்களின் சரீரங்களாக ஆக்கி வைப்பாயாக! எங்கள் அனுஷ்டானங்களை பயபக்தியுடையவர்களின் அனுஷ்டானங்களாக்கி வைப்பாயாக! எங்களுடைய நாவுகளை தியானிப்பவர்களின் நாவுகளாக ஆக்கி வைப்பாயாக! மறதியாளர்களின் தூக்கத்தை விட்டும் எங்களை எழுப்பி வைப்பாயாக! உத்தமர்களுடைய பிரார்த்தனையில் எங்களையும் சேர்த்து வைப்பாயாக! இன்னும் ஏ சர்வலோகங்களின் இரட்சகனே சுவர்க்கத்தை எங்களுக்கு சாதனமாக்கித் தருவாயாக! அல்லாஹ்வுடைய சலாத்தும் சலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களின் வமிசத்தினர் மீதும், அவர்களின் தோழர்கள் அனைவர் மீதும் உண்டாகட்டும். சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும். (ஆமீன்)

 

லுஹ்ருடைய துஆ:

اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّبَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّاكْتُبْ لِكُلِّ وَاحِد مِنَّا بَرآءَةً مِّنَالنَّارِ. وَاَمَانًا مِّنَ الْعَذَابِ وَخَلَاصًا مِّنَ الْحِسَابِ. وَجَوَازًاعَلَ الصِّرَاطِ وَنَصِيْبًا مِّنَ الْجَنَّةِ وَاْلفَوْزَ بِالْجَنَّةِ وَنَجَاتًا مِنَ النَّارِ. وَالْعَفْوَ عِنْدَالْحِسَابِ. اَللّهُمَّ اَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْاُمُوْرِ كُلِّهَا وَاَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْاخِرَةِ تَوَفَّنَا مُسْلِمِيْنَ وَاَلْحِقْنَا بِالصَّالِحِيْنَ. وَصَلَّي اللّهُ عَلي خَيْرِ خَلْقِه سَيِّدِنَا مُحَمَّدٍ وَّاالِهِ وَصَحْبِهِ اَجْمَعِيْنَ.

 

பொருள்: இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத்; ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  மீதும் அவர்களுடைய வமிசத்தார் மீதும் ஸலவாத்தும் பரக்கத்தும் ஸலாமும் அருள் புரிவாயாக! இறைவனே எங்களில் ஒவ்வொருவர் (அனைவர்)க்காகவும் நரகத்தை விட்டும் விமோசனத்தை (ஏட்டில்) எழுதி அருள் புரிவாயாக! இன்னும் வேதனையை விட்டும் அமைதியையும் கணக்கு வழக்கை விட்டு நிம்மதியையும் பாலத்தின் மீதுமு கடக்கலையும் சுவர்க்கத்திலிருந்து நற்பாக்கியத்தையும் சுவர்;க்கத்தில் ஜெயத்தையும் (நரக) நெருப்பிலிலிருந்து விமோசனத்தையும் கணக்கு பார்ப்பதில் மன்னிப்பையும் அருள் புரிவாயாக! இறைவனே, எல்லாக் காரியங்களிலும் அதன் முடிவை எங்களுக்கு அழகானதாய் (நன்மையாய்) செய்தருள்வாயாக! உலக தொல்லையிலும் மறுமையின் வேதனையிலும் எங்களுக்கு (நலவான) நற்கூலியருள்வாயாக! எங்களை முஸ்லிமாகவே மரணிக்கச் செய்வாயாக! எங்களை உத்தமர்களுடன் சேர்த்து வைப்பாயாக! அல்லாஹ்வுடை ஸலவாத்தும் அவனுடைய சிருஷ்டிகளில் சிரேஷ்டமானவரான எங்கள் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவருடைய வமிசத்தினர், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக! (ஆமீன்)

அஸ்ருடைய துஆ:

اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّبَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّ انَّا نَسْئَلُكَ سَلاَمَةً فِي الدِّيْنِ وَالدُّنْيَا وَعَافِيَةٍ فِي الْجَسَدِ وَزِيَادَةً فِي الْعِلْمِ وَالْهُدي وَبَرَكَةً فِي الّرِزْقِ وَصِحَّةً فِي الْعَقْلِ وَتَوْبَةً قَبْلَ الْمَوْتِ وَرَاحَةً عِنْدَالْمَوْتِ وَمَغْفِرَةً بَعْدَالْمَوْتِ يَاسَامِعَ كُلِّ صَوْتٍ هَوِّنْ عَلَيْنَا سَكْرَاتِ الْمَوْتِ. رَبَّنَا لاَتُزِغْ قُلُوْبَنَا بَعْدَاِذْهَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً,اٍنَّكَ اَنْتَ الْوَهَّابُ,  وَصَلَّي اللّهُ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّ االِه وَصَحْبِه اَجْمَعِيْنَ وَالْحَمْدُللّهِ رَبِّ الْعلَمِيْنَ.

 

பொருள்: இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய வமிசத்தார் மீதும் ஸலவாத்தும் பரக்கத்தும் ஸலாமும் அருள் புரிவாயாக! இறைவனே! நிச்சயமதாக நாங்கள் உன்னிடம் சன்மார்க்கத்திலும் உலக விசயத்திலும் சேமமானதையே கேட்டுக் கொள்கிறோம். இன்னும் சரீரத்தின் சௌக்கியத்தையும் கல்வியில் அபிவிருத்தியையும் புத்தியில் இணக்கமானதையும் மரணத்திற்கு முன் மன்னிப்பையும் மரணத்தின்போது சுக சௌக்கியத்தையும் மரணித்த பிறகு பாப மன்னிப்பையும் அருள்புரிவாயாக! சகலவித சப்தங்களையும் கேட்பவனே! மரணத்துடைய கஷ்டங்களை விட்டும் நிவர்த்திச் செய்வாயாக! எங்கள் இறைவனே! எங்களுக்கு (இஸ்லாம்) சன்மார்க்கம் அளித்தருளிய பின், எங்கள் ஹிருதயங்களைப் பேதகபடுத்தி விடாதே! உன்னிடமிருந்து எங்களுக்குப் பேரருளைத் தந்தருள்வாயாக! நிச்சயமாக நீயே பேரருள் புரிபவனாக இருக்கின்றாய். மேலும் அல்லாஹ் உடைய சலவாத்தும்  ஸலாமும் எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய வமிசத்தார் மீதும், அவருடைய தோழர்கள் மீதும் உண்டாவதாக!சகல புகழுரையும் சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தானதாகும்.

மக்ரிபுடைய துஆ

 

اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّبَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّ اِنَّا اَمْسَيْنَا مِنْكَ فِي نِعْمَةٍ وَّعَافِيَةٍ وَّسِتْرٍ فَاَتِمَّ نِعْمَتَكَ عَلَيْنَا وَعَافِيَتّكَ وَسِتْرَكَ فِي الدِّيْنِ وَالدُّنْيَا وَالْاخِرَةِ اٍنَّكَ عَلي كُلِّ شَيْئٍ قَدِيْرٌ, وَبِلْاِجَابَةِ جَدِيْرٌ, نِعْمَ الْمَوْلي وَنِعْمَ النَّصِيْرُ, اَللّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ(7Times) اَللّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ سَالِمِيْنَ وَاَذْخِلْنَا الْجَنَّةَ بِسَلاَمٍ اامِنِيْنَ وَقِنَا رَبَّنَا شَرَّ الظَّالِمِيْنَ, فَانْصُرْنَا عَلي الْقَوْمِ الْكَافِرِيْنَ, اِلهَنَا وَارْزُقْنَا النَّظْرَ اِلي لِقَآءِ وَجْهِكَ الْكَرِيْمِ. مَعَ لِقَآءِ سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَّي اللّهُ عَلَيْهِ وَ سَلَّمَ اَجْمَعِيْنَ وَالْحَمْدُللّهِ رَبِّ الْعلَمِيْنَ. وَصَلَّي اللّهُ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّ االِه وَصَحْبِه اَجْمَعِيْنَ وَالْحَمْدُللّهِ رَبِّ الْعلَمِيْنَ.

 

பொருள்: இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய வமிசத்தார் மீதும் ஸலவாத்தும் பரக்கத்தும் ஸலாமும் அருள் புரிவாயாக! இறைவனே! நாங்கள் உன்னிடமிருந்து பாக்கியத்தையும் சேமத்தையும், பாதுகாப்பையும் பெற்று மாலை நேரத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். எனவே, எங்கள் மீது உன்னுடைய பாக்கியத்தையும் சேமத்தையும் உன்னுடைய பாதுகாப்பையும் பரிபூரணமாக்கி அருள்வாயாக! சன்மார்க்கத்திலும் உலக விசயத்திலும் மறுமையிலும் எங்களுக்கு (அதனை) அருள்வாயாக! நிச்சயமாக நீ சகல விசயங்களின் மீதும் மகா சக்தியுடையவனாக இருக்கின்றாய்., பதில் அளிப்பதில் துரிதமானவனாக இருக்கின்றாய். எஜமானரில் நீயே நல்லவன், உதவி புரிபவரில் நீயே நல்லவன். இறைவனே எங்களை நரக தீயிலிருந்து காப்பாற்றுவாயாக(7முறை) இறைவனே நாங்கள் சேமமடைந்தவர்களாக எங்களை நரகத்திலிருந்து காப்பாயாக! எங்களi அமைதியாகவும் சேமமாகவும் சுவர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வாகயாக. எங்கள் இரட்சகனே இன்னும் எங்களைக் கொடுமைக்காரர்களின் தீங்கை விட்டும் காப்பாயாக! காபிரான (தீய) கூட்டத்தார் விசயத்திலும் எங்களுக்கு உதவி செய்வாயாக!எங்களுக்கு உன்னுடைய சிற்பபான திருமுக சந்திப்பின் போது நன்கு தரிசிசக்க பாக்கியம் அருள்வாயாக! எங்கள் தலைவரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸவ்வம் அவர்களுடைய சந்திப்பு பாக்கியமும் அருள்வாயாக! புகழ் உரை அனைத்தும் சர்வலோக ரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரியதாகும். (ஆமீன்).

இஷாவுடைய துஆ:

اَللّهُمَّ صَلِّ عَلي سَيِّدِنَا مُحَمَّد وَّعَلي االِ سَيِّدِنَا مُحَمَّد وَّبَارِكْ وَسَلِّمْ. اَللّهُمَّ احْفَظْنَا فِي ظُلْمَةِ اللَّيْلِ كَمَا حَفِظْتَنَا يَارَبَّنَا فِي ضَوْءِالنَّهَارِهِ وَاصْرِفْ عَنَّا بَلاَءَ اللَّيْلِ كَمَاصَرَفْتَ عَنَّا بَلآءَالنَّهَارِ, وَاحْشُرْنَا مَعَ الْاَبْرَارِ. وَاجْعَلْ مُنْقَلَبَنَا اِلي دَارِالْقَرَارِ, وَنَجِّنَامِنَ النَّارِ وَاعْفُ عَنَّاالْاَوْزَارَ يَاغَفَّارُ, اَللّهُمَّ احْفَظْنَا يَافَيَّاضُ مِنْ جَمِيْعِ الْبَلَايَا وَالْاَعْدَاءِ وَالْاَمْرَاضِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ.

 

 

பொருள்: இறைவனே! எங்கள் தலைவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய வமிசத்தார் மீதும் ஸலவாத்தும் பரக்கத்தும் ஸலாமும் அருள் புரிவாயாக! இறைவனே! எங்கள் இரட்சகனே! எங்களை நீ பகல் நேரப் பிரகாசத்தில் காப்பாற்றியருளியதைப் போலவே (இந்த) இரவின் இருட்டிலிருந்தும் எங்களை காப்பாற்றி அருள்வாயாக! இன்னும் நீ எங்களை பகல் நேரத்து சங்கடங்கலை விட்டும் தடுத்துக் கொண்டது போலவே இரவ நேரத்தின் சங்கடங்களை விட்டும் தடுத்துக் கொள்வாயாக! இன்னும் எங்களை நல்லோர்களுடன் (சேர்த்து) எழுப்புவாயாக! நிரந்தரமான (சுவர்க்க) விடுதியிலே எங்கள் உறைவிடத்தை ஆக்கி வைப்பாயாக. நரகத் தீயை விட்டும் எங்களை காப்பாயாக! கஷ்டங்களை எங்களைவ pட்டும் போக்குவாயாக! ஏ பாவங்களை மன்னிப்பவனே! மாபெரும் கொடையாளியே! ஏ இறைவனே, எங்களை சகல விதமான சங்கடங்களை விட்டும் விரோதிகளை விட்டும் நொய் நொடிகளை விட்டும் காப்பாற்றி அருள்வாயாக!  அருள் புரிபவர்களிலெல்லாம் மகா அருள் புரிபவனே! எங்களுக்கு அருள்வாயாக! அல்லாஹ்வுடைய ஸலவாத்து எங்கள் தலைவரும் சிருஷ்டிகளில் சிரேஷ்டமானவருமான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவரது சந்ததியார் மீதும், அவரது தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாகுக! புகழுரை அனதை;தும் சர்வலோக இரட்கனான அல்லாஹ்வுக்கே உரியதாகும்.