ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம்

ஹழ்ரத் யூசுப் அலைஹிஸ்ஸலாம்

By Sufi Manzil 0 Comment March 19, 2015

نَحْنُ نَقُصُّ عَلَيْكَ أَحْسَنَ الْقَصَصِ بِمَا أَوْحَيْنَا إِلَيْكَ هَٰذَا الْقُرْآنَ وَإِن كُنتَ مِن قَبْلِهِ لَمِنَ الْغَافِلِينَ

 (நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதும் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். – அல்-குர்ஆன் 12:3

இவ்வாறு அல்லாஹ்  ஸூரா யூசுபில் தனது வார்த்தையிலேயே அழகான வரலாறு என்று கூறுகிறான்.

நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள் அவரது மூத்த மனைவி “ரய்யா”வின் குழந்தைகள் 10 பேர். இரண்டாவது மனைவி “ராஹிலா’வின் வாயிலாக பிறந்த குழந்தைகள் இரண்டு.  அதில் மூத்தவர் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இரண்டாவது புன்யாமின் இந்த புன்யாமின் பிறக்கும் தருவாயில் ராஹில் என்ற அம்மையார் இறந்து விடுகிறார்கள்.

தாயை இழந்த தன்னுடைய இரு மகன்கள் மீது நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பாசத்தை அதிகமாக காட்ட ஆரம்பித்தார்கள்.

நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம்அவர்களது அழகை பற்றி அல்லாஹுவின் தூதர் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்  அழகு என்ற அந்த தோற்றத்தை அல்லாஹ்  இரு பாதியாக  பிரித்து அதில் ஒன்றை நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும்  மற்றும் ஒன்றைத்தான் நாம் இவ்வுலகில் அழகு என்று எதனை கூறுகிறோமோ அதன் அனைத்திற்கும் அல்லாஹ் பங்கிட்டு  வழங்கியதாக.’

நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது தந்தை அவர்கள் மீதும்  அவரது தம்பியின் மீது அதிக நேசம் வைத்திருப்பதை கண்ட அவர்களது மூத்த சகோதரர்கள் 10 பேர் அவர்களை வெறுக்க ஆரம்பித்தார்கள் அதனை கண்ட யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மேலும் அதிகமாக இவ்விருவரையும் நேசிக்க  தொடங்கிவிட்டார்கள். ஏன்என்றால் நாமும் இவரை பராமரிக்காவிட்டால் பெரிய இன்னல்களுக்குள் ஆட்பட்டுவிடுவார்கள்  என்று அஞ்சினார்கள்.

நபி யாகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நேசிக்க காரணம் அந்த குழந்தைகள் தனது தாயில்லாமல்  கஷ்டபடுவதால் அந்த குழந்தைகள் மீது அதிக நேசமாக இருந்தார்கள்.

அவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தன்  தந்தையிடம்,

إِذْ قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ كَوْكَبًا وَالشَّمْسَ وَالْقَمَرَ رَأَيْتُهُمْ لِي سَاجِدِينَ

யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் – (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது. – அல்குர்ஆன் 12:4   என்று கூறினார்கள்.

அப்பொழுது நபி யாகூப்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள்

قَالَ يَا بُنَيَّ لَا تَقْصُصْ رُؤْيَاكَ عَلَىٰ إِخْوَتِكَ فَيَكِيدُوا لَكَ كَيْدًا ۖ إِنَّ الشَّيْطَانَ لِلْإِنسَانِ عَدُوٌّ مُّبِينٌ

 “என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான். – அல்குர்ஆன் 12:5 என்று கூறினார்கள்.

இந்த சம்பவத்தில் இருந்து மேலும் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு நேசம் அதிகமாகி விட்டது. எந்நேரமும் நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருப்பதையே  விரும்பினார். இதனை கண்ட மற்ற பத்து சகோதர்களுக்கு மேலும் வெறுப்பு அதிகமாகிவிட்டது. நாளுக்கு நாள் நம் தந்தை அவர்கள் மீதே அன்பு  காட்டுகிறார்கள் என்று மேலும் அவர்கள் இணைந்து ஒரு சதி திட்டம் தீட்டினார்கள். அதனை அல்லாஹ்  தனது குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

إِذْ قَالُوا لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِي ضَلَالٍ مُّبِينٍ

12:8. (யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்: “யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் – நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),

اقْتُلُوا يُوسُفَ أَوِ اطْرَحُوهُ أَرْضًا يَخْلُ لَكُمْ وَجْهُ أَبِيكُمْ وَتَكُونُوا مِن بَعْدِهِ قَوْمًا صَالِحِينَ

12:9. “யூஸுஃபை” கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள்; (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்” என்றும் கூறியபொழுது,

قَالَ قَائِلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوا يُوسُفَ وَأَلْقُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْضُ السَّيَّارَةِ إِن كُنتُمْ فَاعِلِينَ

12:10. அவர்களில் ஒருவர்: “நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் – அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்” என்று கூறினார்.

قَالُوا يَا أَبَانَا مَا لَكَ لَا تَأْمَنَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُ لَنَاصِحُونَ

12:11. (பிறகு தம் தந்தையிடம் வந்து,) “எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.

أَرْسِلْهُ مَعَنَا غَدًا يَرْتَعْ وَيَلْعَبْ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

12:12. “நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம்” என்று கூறினார்கள்.

قَالَ إِنِّي لَيَحْزُنُنِي أَن تَذْهَبُوا بِهِ وَأَخَافُ أَن يَأْكُلَهُ الذِّئْبُ وَأَنتُمْ عَنْهُ غَافِلُونَ

12:13. (அதற்கு யஃகூப்,) “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது; மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்” என்று கூறினார்.

قَالُوا لَئِنْ أَكَلَهُ الذِّئْبُ وَنَحْنُ عُصْبَةٌ إِنَّا إِذًا لَّخَاسِرُونَ

12:14. (அதற்கு) அவர்கள் “நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்“ என்று கூறினார்கள்.

فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ ۚ وَأَوْحَيْنَا إِلَيْهِ لَتُنَبِّئَنَّهُم بِأَمْرِهِمْ هَٰذَا وَهُمْ لَا يَشْعُرُونَ

12:15. (இவ்வாறாக) அவர்கள் அவரை அழைத்துச் சென்று ஆழமான கிணற்றில் தள்ளிவிட ஒன்று சேர்த்து முடிவு செய்த போது, “நீர் அவர்களின் இச்செயலைப்பற்றி அவர்களுக்கு (ஒரு காலத்தில்) உணர்த்துவீர். அது சமயம் அவர்கள் உம்மை அறிந்து கொள்ள மாட்டார்கள்” என்று நாம் யூஸுஃபுக்கு வஹீ அறிவித்தோம்.

وَجَاءُوا أَبَاهُمْ عِشَاءً يَبْكُونَ

12:16. இன்னும், அவர்கள் (அன்று) பொழுது சாய்ந்ததும் தங்களுடைய தந்தையாரிடம் அழுது கொண்டே வந்தார்கள்.

قَالُوا يَا أَبَانَا إِنَّا ذَهَبْنَا نَسْتَبِقُ وَتَرَكْنَا يُوسُفَ عِندَ مَتَاعِنَا فَأَكَلَهُ الذِّئْبُ ۖ وَمَا أَنتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صَادِقِينَ

12:17. “எங்கள் தந்தையே! நாங்கள் யூஸுஃபை எங்களுடைய சாமான்களிடத்தில் விட்டுவிட்டு, ஓடி(யாடி விளையாடிக் கொண்டே வெகுதூரம்) சென்று விட்டோம்; அப்போது ஓநாய் அவரை(ப் பிடித்துத்) தின்று விட்டது – ஆனால் நாங்கள் உண்மையே சொன்ன போதிலும், நீங்கள் எங்களை நம்பவே மாட்டீர்கள்!” என்று கூறினார்கள்.

وَجَاءُوا عَلَىٰ قَمِيصِهِ بِدَمٍ كَذِبٍ ۚ قَالَ بَلْ سَوَّلَتْ لَكُمْ أَنفُسُكُمْ أَمْرًا ۖ فَصَبْرٌ جَمِيلٌ ۖ وَاللَّهُ الْمُسْتَعَانُ عَلَىٰ مَا تَصِفُونَ

12:18. (மேலும், தங்கள் கூற்றை மெய்ப்பிக்க) யூஸுஃபுடைய சட்டையில் பொய்யான இரத்தத்தைத் தடவிக்கொண்டு வந்திருந்தார்கள்; “இல்லை, உங்கள் மனம் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அழகாகக் காண்பித்துவிட்டது; எனவே (எனக்கு இந்நிலையில் அழகிய) பொறுமையை மேற்கொள்வதே நலமாக இருக்கும்;மேலும், நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று கூறினார்.

وَجَاءَتْ سَيَّارَةٌ فَأَرْسَلُوا وَارِدَهُمْ فَأَدْلَىٰ دَلْوَهُ ۖ قَالَ يَا بُشْرَىٰ هَٰذَا غُلَامٌ ۚ وَأَسَرُّوهُ بِضَاعَةً ۚ وَاللَّهُ عَلِيمٌ بِمَا يَعْمَلُونَ

12:19. பின்னர் (அக்கிணற்றருகே) ஒரு பயணக்கூட்டம் வந்தது; அவர்களில் தண்ணீர் கொண்டு வருபவரை(த் தண்ணீருக்காக அக்கூட்டத்தினர்) அனுப்பினார்கள். அவர் தம் வாளியை(க் கிணற்றில்) விட்டார். “நற்செய்தி! இதோ ஓர் (அழகிய) சிறுவன்!” என்று கூறினார் – (யூஸுஃபை தூக்கியெடுத்து) அவரை ஒரு வியாபாரப் பொருளாக(க் கருதி) மறைத்து வைத்துக் கொண்டார்கள்; அவர்கள் செய்ததை எல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.

وَشَرَوْهُ بِثَمَنٍ بَخْسٍ دَرَاهِمَ مَعْدُودَةٍ وَكَانُوا فِيهِ مِنَ الزَّاهِدِينَ

12:20. (இதற்குள் அவருடைய சகோதரர்கள் ஓடிவந்து) அவரை அவர்கள் (விரல்விட்டு) எண்ணக்கூடிய சில வெள்ளிக் காசுகளுக்கு அற்பமான கிரயத்திற்கு விற்றுவிட்டார்கள். அவர் விஷயத்தில் அவர்கள் பற்றற்றவர்களாக இருந்தார்கள்.

وَقَالَ الَّذِي اشْتَرَاهُ مِن مِّصْرَ لِامْرَأَتِهِ أَكْرِمِي مَثْوَاهُ عَسَىٰ أَن يَنفَعَنَا أَوْ نَتَّخِذَهُ وَلَدًا ۚ وَكَذَٰلِكَ مَكَّنَّا لِيُوسُفَ فِي الْأَرْضِ وَلِنُعَلِّمَهُ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ ۚ وَاللَّهُ غَالِبٌ عَلَىٰ أَمْرِهِ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ

12:21. (யூஸுஃபை) மிஸ்ரு நாட்டில் வாங்கியவர் தம் மனைவியை நோக்கி, “இவர் (நம்மிடம்) தங்குவதை சங்கையாக வைத்துக்கொள்; ஒருவேளை இவர் நமக்கு (மிக்க) நன்மையைக் கொண்டு வரலாம்; அல்லது இவரை நாம் (நம் சுவீகார) புத்திரனாக ஆக்கிக் கொள்ளலாம்” என்று கூறினார். இவ்வாறு நாம் யூஸுஃபுக்குப் பூமியிலே (தக்க) வசதியளித்தோம்; இன்னும் நாம் அவருக்குக் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக் கொடுத்தோம்; அல்லாஹ் தன் காரியத்தில் வெற்றியாளனாக இருக்கிறான் – ஆனால் மக்களில் பெரும்பாலோர் (இதனை) அறிந்து கொள்ள மாட்டார்கள்.

وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا ۚ وَكَذَٰلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ

12:22. அவர் தம் வாலிபத்தை அடைந்ததும், அவருக்கு நாம் ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம். இவ்வாறே நன்மை செய்வோருக்கு நாம் நற்கூலி வழங்குகிறோம்.

மேலும் ஒரு முறை ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களது தோழர்களும் உரையாடி கொண்டிருக்கும் வேலையில் ஒரு சகாபி அல்லாஹுவின் தூதரே உலகத்தில் மிகவும் சங்கையானவர் யார் என்று வினா தொடுத்தனர்

அதற்கு நமது நாயகம் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் சங்கையானவருடைய மகனுடைய சங்கையானவருடைய மகனுடைய சங்கையானவருடைய மகன் என்று பதில் கூறினார்கள். இது சகாபக்களுக்கு புரியவில்லை.

அதற்கு நமது நாயகம் முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

இபுராஹீமுடைய மகன் இஸ்ஹாக், இஸ்ஹாக்குடைய மகன் யாகூப், யாகூபுடைய மகன் யூசுப்  என்று.

ஏன் ஏன்றால் அல்லாஹ்  எந்த ஒரு நபிக்கும் நான்கு தலைமுறையாக நபித்துவத்தை கொடுத்ததில்லை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை தவிர யாருக்கும்  கொடுக்கவில்லை.

நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த வீட்டிலேயே வாழ்கிறார் . நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் வாழ்ந்து வந்த அந்த வீட்டில் அவரது எஜமானனின்  மனைவி அந்த பெண்ணின் பெயர் ஜுலைகா என்று மார்க்க அறிஞர்களால் அழைக்கபடுகிறது.

وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَن نَّفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ ۚ قَالَ مَعَاذَ اللَّهِ ۖ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ ۖ إِنَّهُ لَا يُفْلِحُ الظَّالِمُونَ

அவர் எந்தப் பெண்ணின் வீட்டில் இருந்தாரோ, அவள் அவர்மீது விருப்பங்கொண்டு, கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு (தன் விருப்பதிற்கு இணங்குமாறு) “வாரும்” என்று அழைத்தாள் – (அதற்கு அவர் மறுத்து,) “அல்லாஹ் (இத்தீய செயலிலிருந்து) என்னைக் காத்தருள்வானாக; நிச்சயமாக (உன் கணவர்) என் எஜமானர், என் இடத்தை அழகாக (கண்ணியமாக) வைத்திருக்கிறார் – அநியாயம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள்” என்று சொன்னார்.

وَلَقَدْ هَمَّتْ بِهِ ۖ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ بُرْهَانَ رَبِّهِ ۚ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ ۚ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ

12:24. ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள்; அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார்; இவ்வாறு நாம் அவரைவிட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் – ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.

وَاسْتَبَقَا الْبَابَ وَقَدَّتْ قَمِيصَهُ مِن دُبُرٍ وَأَلْفَيَا سَيِّدَهَا لَدَى الْبَابِ ۚ قَالَتْ مَا جَزَاءُ مَنْ أَرَادَ بِأَهْلِكَ سُوءًا إِلَّا أَن يُسْجَنَ أَوْ عَذَابٌ أَلِيمٌ

12:25. (யூஸுஃப் அவளை விட்டும் தப்பி ஓட முயன்று) ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள வாசலின் பக்கம் ஓடினார்கள்; அவள் அவருடைய சட்டையைப் பின்புறத்தில் கிழித்து விட்டாள்; அப்போது அவளுடைய கணவரை வாசல் பக்கம் இருவரும் கண்டனர். உடன் (தன் குற்றத்தை மறைக்க) “உம் மனைவிக்குத் தீங்கிழைக்க நாடிய இவருக்குச் சிறையிலிடப்படுவதோ அல்லது நோவினை தரும் வேதனையைத் தருவதோ அன்றி வேறு என்ன தண்டனை இருக்கமுடியும்?” என்று கேட்டாள்.

قَالَ هِيَ رَاوَدَتْنِي عَن نَّفْسِي ۚ وَشَهِدَ شَاهِدٌ مِّنْ أَهْلِهَا إِن كَانَ قَمِيصُهُ قُدَّ مِن قُبُلٍ فَصَدَقَتْ وَهُوَ مِنَ الْكَاذِبِينَ

12:26. (இதை மறுத்து யூஸுஃப்;) “இவள் தான் என்னை வற்புறுத்தித் தன்னிடம் அழைத்தாள்” என்று கூறினார்; (இதற்கிடையில்) அவள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாட்சி(யாகப் பின்வருமாறு) கூறினார்: “இவருடைய சட்டை முன்புறத்தில் கிழிந்திருந்தால், அவள் உண்மை சொல்கிறாள்; இவர் பொய்யராவார்.

وَإِن كَانَ قَمِيصُهُ قُدَّ مِن دُبُرٍ فَكَذَبَتْ وَهُوَ مِنَ الصَّادِقِينَ

12:27. “ஆனால் இவருடைய சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்தால், அவள் பொய் சொல்லுகிறாள்; அவர் உண்மையாளர்களில் உள்ளவர்.”

فَلَمَّا رَأَىٰ قَمِيصَهُ قُدَّ مِن دُبُرٍ قَالَ إِنَّهُ مِن كَيْدِكُنَّ ۖ إِنَّ كَيْدَكُنَّ عَظِيمٌ

12:28. (யூஸுஃபுடைய) சட்டை பின்புறமாகக் கிழிந்திருந்ததை அவர் கண்டபோது, நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் – நிச்சயமாக உங்களுடைய சதி மகத்தானதே!

يُوسُفُ أَعْرِضْ عَنْ هَٰذَا ۚ وَاسْتَغْفِرِي لِذَنبِكِ ۖ إِنَّكِ كُنتِ مِنَ الْخَاطِئِينَ

12:29. (என்றும்) “யூஸுஃபே! இதனை நீர் இம்மட்டில் விட்டு விடும். (பெண்ணே!) உனது பாவத்திற்காக மன்னிப்புத் தேடிக் கொள்; நிச்சயமாக நீ தவறு செய்தவர்களில் ஒருத்தியாக இருக்கின்றாய்” என்றும் கூறினார்.

இதை பற்றி அல்லாஹுவின் தூதர் நபி முஹம்மத் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள்  மூன்று குழந்தைகளை அல்லாஹ் தொட்டிலில் இருக்கும் பொழுதே பேசவைத்தான். அதில் ஒருவர் மரியமின் மகன் ஈஸா அலைஹி வசல்லம். இரண்டாவது இபுனு ஜுரைஜ் என்றவரை அல்லாஹ் பேசவைத்தான். மூன்றாவதாக நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு சாட்சியாளனாக அல்லாஹ் பேச வைத்தான் என்று.

இந்த விசயம் சிறிது சிறிதாக கசிந்து அந்த பட்டணத்தில் உள்ள பெண்கள் கூறினார்கள், என்ன அமைச்சருடைய மனைவி தனது அடிமையிடம் காதல் கொண்டு தவறாக நடக்க பார்த்திருக்கிறாள் நிச்சயமாக அவள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறாள் என்று ஊர் பெண்கள் பலவாரியாக பேச தொடங்கி  விட்டனர்.

அவார்கள் பேசியவை அனைத்தும் அந்த பெண்மணி அறிந்த பொழுது அனைத்து பட்டின வாசிகளில் உள்ள பெண்கள் அனைவரையும் அழைத்து ஒரு விருந்திற்கு ஏற்பாடு செய்தாள்.  அனைவரும் விருந்து சாப்பிட்டுவிட்டு  அனைவருடைய கைகளிலும் ஒரு பலத்தையும் கத்தியையும் அவள் கொடுத்தாள்.  அவர்கள் அந்த பழத்தை வெட்டும் சமயத்தில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை நீர் அந்த பெண்களுக்குள்  நடந்துவா  என்று கூறினாள். இந்த சூழ்ச்சி அறியாத நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களுக்குள் செல்ல அவரின் அழகை பார்த்த அந்த பெண்கள் அனைவரும் கத்தியால் பலத்தை அறுப்பதற்கு  பதிலாக அவர்களுடைய கையை அறுத்து கொண்டார்கள்.  மேலும் அந்த பெண்மணிகள் கூறினார்கள் இவர் நிச்சயம் ஒரு மனிதாரே இல்லை இவர் ஒரு மலக்காகதான் இருக்க வேண்டும் என்று கூறினார்கள்.

அப்பொழுது அந்த பெண்மணி ஜுலைகா கூறினாள் எவரை பற்றி நீங்கள் என்னை இழிவுபடுத்தி கொண்டிருந்தீர்களோ அந்த அடிமை இவர்தான். ஒரு கணம் பார்த்ததற்கே உங்கள் கைகளை வெட்டி கொண்டீர்கள். நான் இவருடன்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன் எனக்கு எவ்வாறு இருக்கும் என்று பதில் கூறினாள். .மேலும் அவள் கூறினாள் நான்தான் அவரை என் ஆசைக்கு இணங்குமாறு  அழைத்தேன். ஆனால் அவர் மனவுறுதியுடன் நின்றுவிட்டார்.

ஆனால் என்றாவது ஒருநாள் என் ஆசைக்கு அவர் இணங்கவில்லை என்றால் அவர் நிச்சயம் சிறையில் அடைக்கபடுவார் அவர் இழிவானவர்களில் உள்ளவராக மாறிவிடுவார் என்று கூறினாள்.

இதனை கேட்ட  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர் அல்லாஹுவிடம் பிராத்தித்தார் ‘என்னுடைய ரட்சகனே இவர்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறாரோ அதைவிட எனக்கு சிறைச்சாலையே எனக்கு விருப்பமானது.  மேலும் இப்பெண்களின் சூழ்ச்சியில் இருந்து நீ என்னை காப்பாற்றவில்லை என்றால் அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவேனோ என்று நான் அஞ்சுகிறேன் மேலும் அறிவீனர்களில் ஒருவராக நான் ஆகிவிடுவேன் என்று கூறினார்.

فَاسْتَجَابَ لَهُ رَبُّهُ فَصَرَفَ عَنْهُ كَيْدَهُنَّ ۚ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ

12:34. எனவே அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான்; அப்பெண்களுடைய சதியை அவரை விட்டு நீக்கிவிட்டான்; நிச்சயமாக அவன் (யாவற்றையும்) கேட்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.

இந்த சம்பவங்களை அறிந்த அந்நாட்டு அரசன் நம் பெண்களின் இழிவான செயலிலிருந்து அவரை காக்க அவரை சிறையில் அடைத்தான்.  பிறகு சிறிது காலம் அவர் சிறை வாசம் அனுபவித்தார். சிறையில் இருக்கும் வேளையில் அல்லாஹுவின் ஆற்றலை மக்களுக்கு  எடுத்துரைத்து  இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்து கொண்டும் இருந்தார்.

இவ்வேளையில் அங்கு உள்ள சிறைவாசிகள் இருவர் கனவு கண்டார்கள் அதில் ஒருவர் நான் திராட்சை பலங்களில் இருந்து மதுரசம்  பிழிவதை போல் கனவு கண்டேன் என்று கூறினார் மேலும் மற்றொருவர் நான் என் தலையில் ரொட்டியை சுமந்து கொண்டு போகும் பொழுது பறவைகள் அதை கொத்தி தின்பதை போல் கனவு கண்டேன் என்று கூறினார் இவ்வாறு கூறிவிட்டு அவ்விருவரும் நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லவராக மேலும் அறிவுஜீவியாகவே காண்கிறோம் ஆதலால் எங்களுக்கு இதன் விளக்கத்தை எங்களுக்கு கூறும் என்று கூறினார்கள்.

இதை கேட்ட நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அல்லாஹ்  எனக்கு அருளிய இந்த அறிவிலிருந்து நான் இதன் விளக்கத்தை உங்களுக்கு கூறுகிறேன் . என்று கூறி யார் மதுரசம் பிழிவதை போல் கனவு கண்டாயோ நீ மிக விரைவில் விடுதலையாகி உன்னுடைய முதலாளிக்கு மதுரசம் பிழிவாய் மற்றொருவன் சிலுவையில் அறையப்பட்டு இறப்பான்.  இறந்தபின் அவனின் உடலை பறவைகள் கொத்தி  தின்னும். இதுவே உங்களுடைய கனவின் விளக்கம் என்று கூறினார் .

மேலும்  விடுதலையாக  இருக்கும் அந்த சிறை தோழரிடம் நீர் வெளியில் சென்றவுடன்  என்னை பற்றி நாட்டின் மன்னனிடம் எடுத்துக்கூறும் என்று கோரிக்கை விடுத்தார் ஆனால் அவன் விடுதலை ஆனவுடன் ஷைத்தான் அவனை மறக்க செய்துவிட்டான் ஆதலால்  மேலும் சில காலம் அவர் சிறையில் இருக்க நேரிட்டது

பிறகு சிறிது காலம் சென்ற பிறகு அந்நாட்டு மன்னன் ஓர்  கனவு கண்டான் அதில் நல்ல கொளுத்த பசுக்களையும் மெலிந்த பசுக்களையும் மேய்வதை கண்டேன் அதில் ஏழு பசுமையான கதிர்களும் ஏழு காய்ந்த கதிர்களையும் நான் கண்டேன் . என் பிரதானிகளே நீங்கள் கனவுகளுக்கு விளக்கம் தரகூடியவராக இருந்தால்  இந்த கனவிற்கு விளக்கம் கொடுங்கள் என்று அந்த மன்னன் கேட்டான்

அதற்கு அந்த பிரதானிகள் இது பொய்யான கனவு அதற்கு விளக்கம் கொடுக்க நான் அறிந்திருக்க வில்லை என்று கூறினார்கள். இந்த சம்பவத்தை அறிந்த சிறையில் இருந்து விடுதலையான மனிதர் யூசுபை நினைவு கூர்ந்து அவர் மன்னரிடம் நான் இந்த கனவிற்கு விடை கூறுகிறேன்.

ஆனால் என்னை நீங்கள் சிறைகூடத்திற்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறினார். அவ்வாரே  அவரை அழைத்து செல்ல அங்கு நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் யுசுபே உண்மையாளரே. எனக்கு மேலும் ஒரு  கனவிற்கு விளக்கம் தேவை என்று கூறினார்.

நபி யூசுப் அலைஹி வசல்லம் என்ன கனவு என்று கேட்க ஏழு கொளுத்த பசுவையும் மெலிந்த ஏழு பசுவையும் மேலும் பசுமையான ஏழு கதிரையும்  காய்ந்த ஏழு கதிரையும் கனவில் கண்டால் அதன் பொருள் என்ன என்று கேட்டார்.

அதனை கேட்ட  நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் முதல் ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வதை போல் செய்வீர்கள் அதில் உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு மீதம் உள்ள பொருட்களை சேமித்து கொள்ளுங்கள். அதன் பிறகு கடுமையான பஞ்சம் ஏற்படும். அதில் உணவிற்கே கஷ்டம் வரும். அப்பொழுது சேமித்தவற்றில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

பிறகு ஒரு ஆண்டு வரும்.  அதில் மழை பொழிந்துகொண்டே இருக்கும். அப்பொழுது அனைவரும் பழரசங்கள் பிழிந்தவர்களாக  இருப்பார்கள் என்று விளக்கம் கொடுத்தார்கள் ,,

இவ்வாறே விளக்கத்தை அரசனிடம் கொண்டு சென்றார்கள். இந்த விளக்கத்தை கேட்ட அரசர் இவ்விளக்கம் கொடுத்தவரை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினான். இதனை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் கூறவந்த அந்த தூதுவனிடம்

وَقَالَ الْمَلِكُ ائْتُونِي بِهِ ۖ فَلَمَّا جَاءَهُ الرَّسُولُ قَالَ ارْجِعْ إِلَىٰ رَبِّكَ فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللَّاتِي قَطَّعْنَ أَيْدِيَهُنَّ ۚ إِنَّ رَبِّي بِكَيْدِهِنَّ عَلِيمٌ

12:50. (“இவ்விவரம் அரசருக்கு அறிவிக்கப்பட்டதும்) அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று அரசர் கூறினார்; (அவருடைய) தூதர் யூஸுஃபிடம் வந்தபோது அவர், “நீர் உம் எஜமானரிடம் திரும்பிச் சென்று, “தம் கைகளை வெட்டிக்கொண்ட பெண்களின் உண்மை நிலை என்ன?” என்று அவரிடம் கேளும். நிச்சயமாக என் இறைவன் அப்பெண்களின் சதியை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்” என்று கூறினார்.

قَالَ مَا خَطْبُكُنَّ إِذْ رَاوَدتُّنَّ يُوسُفَ عَن نَّفْسِهِ ۚ قُلْنَ حَاشَ لِلَّهِ مَا عَلِمْنَا عَلَيْهِ مِن سُوءٍ ۚ قَالَتِ امْرَأَتُ الْعَزِيزِ الْآنَ حَصْحَصَ الْحَقُّ أَنَا رَاوَدتُّهُ عَن نَّفْسِهِ وَإِنَّهُ لَمِنَ الصَّادِقِينَ

12:51. (இவ்விவரம் அறிந்த அரசர் அப் பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்தபோது உங்களுக்கு நேர்ந்தது என்ன?” என்று கேட்டார்; (அதற்கு) அப் பெண்கள், “அல்லாஹ் எங்களை காப்பானாக! நாங்கள் அவரிடத்தில் யாதொரு கெடுதியையும் அறியவில்லை” என்று கூறினார்கள்; அஜீஸுடைய மனைவி, “இப்பொழுது (எல்லோருக்கும்) உண்மை வெளிப்பட்டு விட்டது. நான் தான் இவரை என் விருப்பத்திற்கு இணங்குமாறு வற்புறுத்தினேன். நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் உள்ளவர்” என்று கூறினாள்.

இவ்வாறு நான் இதனை ஒத்துகொள்ள காரணம் நிச்சயமாக மறைவாக இருந்த சமயத்தில் அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதையும் நிச்சயமாக துரோகிகளின்  சூழ்ச்சிக்கு அல்லாஹ்  வழிகாட்ட மாட்டான் என்பதை அவர் அறிந்து கொள்வதற்காகத்தான் என்று கூறினாள்.

மேலும் நான் யூசுபின் மீது மோகம்கொள்ளவில்லை என்று கூறி என் மனதை நான் தூய்மை படுத்தவில்லை. நிச்சயமாக ரட்சகன் அருள் புரிகின்றவர்களை அன்றி மனிதர்களுடைய மனம் பாவம் செய்ய தூண்டகூடியதாகவே இருக்கிறது நிச்சயமாக எனது ரட்சகன் மிக்க மன்னிப்பவன் மிக்க கிருபையுடையவன் என்று அந்த பெண் சுலைகா கூறினாள்

சிறைச்சாலையில் இருந்த நமது தந்தை நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது அறிவாற்றலை அறிந்த அந்த அரசன் அவரை அழைத்துவாருங்கள் அவரை எனக்கு மட்டும் பிரத்யோகமானவராக அமர்த்தி விடுகிறேன்  என்று கூறினார். அவரை அழைத்து வரப்பட்டு யுசுபிடம் நீர் இன்றிலிருந்து எங்களிடம் பெரும் மதிப்பும் நம்பிக்கையும் உடையவராக ஆகிவிட்டீர் என்று கூறினான்

அதற்கு  நபி யூசுப் அலைஹி வசல்லம் என்னை உங்களது நாட்டின் நிதியமைச்சராக ஆக்கிவிடுங்கள்  என்று கோரினார். அதை பற்றி நன்கறிந்தவன் பாதுகாப்பவன் என்று கூறினார். அரசனும் அந்நாட்டு நிதியமைச்சராக நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களை ஆக்கினான்

பிறகு சிறிது காலத்தில் பஞ்சம் தொடங்கிவிட்டது அனைவரும் நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தார்கள். அப்பொழுது அரசவையில் சேமித்து வைக்கபட்ட பொருள்களை மக்களுக்கு விநியோகம் செய்தார்கள். அவரே கண்ஹானில் இருந்து யூசுபிடம்  அவர்களது சகோதர்கள் வந்தபொழுது நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களை அறிந்து கொண்டார். இவர்கள்தான் நம்முடைய சகோதரர்கள் என்று. ஆனால்  அவர்களுக்கு புலப்படவில்லை இவர்தான் யூசுப் என்று.

இவ்வாறு இருக்க நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் அவர்களுக்கு வேண்டிய தானியங்களை தயார் செய்து அவர்களிடம் கொடுத்து நீங்கள் மறுமுறை வரும்பொழுது உங்கள் தந்தையிடம் இருக்கும் உங்களது சகோதரன் புன்யாமினையும் அழைத்து வாருங்கள் அவ்வாறு நீங்கள் வந்தால் மேலும் உங்களுக்கு தானியங்களை கொடுக்கிறேன் என்று வாக்களித்தார். அவ்வாறு நீங்கள் அழைத்து வரா விட்டால் நீங்கள் என்னை நெருங்க வேண்டாம். என்னிடம் இருந்து எந்த ஒரு பொருளும் தரப்பட மாட்டாது என்று கூறினார்

இதனை கேட்ட அவர்கள் கூறினார்கள் நிச்சயம் அவரை அழைத்துவர நாங்கள் முயற்சிக்கிறோம் என்று கூறிவிட்டு தங்கள் தந்தையிடம் வந்து தந்தையே எங்களுக்கு தானியம் அளப்பது நிறுத்தப்பட்டுவிட்டது நாங்கள் புன்யாமினை அழைத்து சென்று பாதுகாப்புடன் கொண்டுவருவோம் அவருடன் அதிக தானியங்களை நமக்காக வாங்கியும் வருவோம் என்று கூறினார்கள்

அவரது தந்தை நபி யாகூப் அலைஹி  வசல்லம் அவர்கள் கூறினார்கள் இவருடைய சகோதரர் யூசுபின் விசியத்தில் உங்களை நம்பியது போதும் இவரையும் நான் இழக்க தயாராக இல்லை என்று கூறினார் மேலும் பாதுகாப்பதில் அல்லாஹுவே மேலானவன் அவனையே நான் நம்புகிறேன் என்று கூறினார்.

தந்தையே! இனிமேல் நாங்கள் எதை தேடுவோம் நாங்கள் எங்கள் சகோதரன் புன்யாமினை அழைத்து சென்று நம் குடும்பத்திற்கு தேவையான தானியங்களை வாங்கி வருவோம். மேலும் எங்களது சகோதரனை பாதுகாப்புடன் அழைத்தும் வருவோம் என்று கூறினார்கள்.

உங்கள் யாவரையும் ஆபத்து சூழ்ந்த்திருந்தால்  அன்றி இவரை பத்திரமாக திருப்பி கொண்டு வருவோம் என்று அல்லாஹ்வின் புறத்தில் எனக்கு சத்தியம் செய்யும் வரை நான் உங்களுடன் இவரை அனுப்ப மாட்டேன் .என்று கூறிவிட்டார் நபி யாகூப்  அலைஹி வசல்லம்.

அவர்களும் அல்லாஹுவின் புறத்தில் சத்தியமும் செய்துவிட்டார்கள் நாம் உறுதிமொழி எடுத்ததை அல்லாஹ்  சாட்சியாளனாக இருக்கிறான் என்று கூறி அவர்களுடன் அனுப்பி வைத்தார் நபி யாகூப்  அலைஹி வசல்லம் மேலும் அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துவிட்டேன் என்று கூறினார்.

மேலும் நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள். எனது மக்களே நீங்கள் எகிப்து நாட்டினுள் போகும்பொழுது வேறு வேறு  வாசல் வழியாக  உள்ளே நுழையுங்கள் அல்லாஹு தடுத்ததை தவிர வேறு எதையும் நான் உங்களிடம் கூறவில்லை என்று கூறினார்

அவ்வாறே அவர்கள் எகிப்தை அடைந்ததும் அவர்கள் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் புன்யாமினை காண்பித்தார்கள் அவர் புன்யாமினை தனிமையில் சந்தித்து நான் தான் உனது சகோதரன் யூசுப். இந்த செய்தியை நீ அவர்களிடம் கூற வேண்டாம் என்று வாக்குறுதி வாங்கினார். பிறகு அவர்களுக்கு தனித்தனியே தானிய முட்டைகள் வழங்கப்பட்டது.

புன்யாமினின் மூட்டையில் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களின் குவளையை போட்டுவிட்டார் பிறகு சிறிது தூரம் சென்றவுடன் காவலாளிகள் அவர்களை அழைத்து நில்லுங்கள் மந்திரியின் முக்கியமான பொருள் காணாமல்  போய்விட்டது அதனை கண்டுபிடித்து கொடுப்பவருக்கு  ஒரு ஒட்டகம்  நிறையாக தானியம் வழங்குவதாக அரசவையில் அறிவித்துவிட்டார்கள். நீங்கள் தான் கடைசியாக அங்கு வந்தீர்கள் நீங்கள்தான் எடுத்திருக்க கூடும் என்று அந்த காவலாளிகள் கூறினார்கள்.

அதற்கு புன்யாமீன்  சகோதரர்கள் பத்துபெரும் நிச்சயமாக நாங்கள் இந்த நாட்டில் குழப்பம் விளைவிக்க வரவில்லை அவ்வாறு எங்களிடம் அந்த பொருள் இருதால் அவரை நீங்கள் கைது செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள் அவ்வாரே  அவர்களது தானிய மூட்டைகளை சோதித்தார்கள் யாரிடமும் இல்லை இறுதியாக புன்யாமினின் மூட்டையை சோதிக்கையில்  அதில் அந்த குவளையை கண்டதும் அதிர்ச்சியுற்றார்கள்.

பிறகு அந்த காவலாளிகள் நாங்கள் இவரை கைது செய்து அமைச்சரிடம் ஒப்படைக்க போகிறோம் என்று கூறினார்கள் அதற்கு அவர்கள் இவரின் தந்தை மிகவும் பலகீனமானவர் அவரிடம் இவருக்கு எந்த ஆபத்து வர விடமாட்டோம் என்று அல்லாஹுவின் மீது சத்தியம் செய்து கூட்டி வந்தோம்.  ஆனால்  இப்பொழுது எங்களில் யாரேனும் நீங்கள் கைது செய்து இவரை விட்டு விடுங்கள் என்று கோரினார்கள் ஆனால்  அவர்கள் இல்லை அவ்வாறு செய்தால் நாங்கள் அணியாயகாரர்களில் உள்ளவராக மாறிவிடுவோம் ஆதலால் அந்த தவறை நாங்கள் செய்யமாட்டோம் என்று புன்யாமினை அழைத்து சென்று விட்டார்கள்.

அப்பொழுது அந்த பத்து சகோதரர்களும் என்ன செய்வது என்று அறியாமல்  இருந்தார்கள் வேறு வழியில்லை தந்தையிடம் கூறிவிடுவோம் என்று கூறி புறபட்டார்கள் அங்கு தந்தையிடம் கூறியபொழுது அவர் அதனை ஏற்கவில்லை இவ்வாறுதான் நீங்கள் யூசுபை அழைத்து சென்றீர்கள் இப்பொழுது அவன் சகோதரனையும் இவ்வாரே செய்துவிட்டீர்கள்   என்று அழ தொடங்கிவிட்டார்கள் நான் அல்லாஹுவின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கிறேன் அவனே எங்களை சேர்த்து வைக்க போதுமானவன்.

நபி யாகூப்  அலைஹி வசல்லம் அவர்கள் அழுது அழுது அவருடைய பார்வை மங்கிவிட்டது அழுதுகொண்டே இருப்பதை கண்ட அவருடைய பத்து பிள்ளைகளும் தந்தையே நாங்கள் வேண்டுமென்றால் யூசுபை தேடி வருகிறோம் என்று கூறி மீண்டும் மிஸ்ரு நாட்டிற்கு சென்று அங்கு மீண்டும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களிடம் அமைச்சரே எங்களுடைய தந்தை மிகவும் வயதானவராக இருக்கிறார் எங்களுக்கு மேலும் நல்ல தானியங்கள் நீங்கள் கொடுத்தால் அதன் மூலம் எங்கள் தந்தையை நன்கு  கவனித்து கொள்வோம் என்று கூறினார்கள் அப்பொழுது

நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்கள் நீங்கள் உங்கள் சகோதரன் யூசுபை என்ன செய்தீர்கள் என்பது ஞாபகம் உள்ளதா என்று கேட்டார் அப்பொழுது அவருக்கு புலப்பட்டது அப்போ நீங்கள் தான் யூசுபோ என்று கேட்டார்கள். அதற்கு ஆம் நான்தான் யூசுப் இவர்தான் எனது சகோதரன் புன்யாமின் என்று கூறினார். அப்பொழுது அவர்கள் ஆச்சர்யபட்டு  எப்படி நீ மந்திரியானாய் என்று கேட்டார்கள் ஆனால் நமது தந்தை  நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம்அவர்கள்  அல்லாஹ்தான்  தான் நாடியவருக்கு அருளை பொழிகிறான் அவன்தான் என்னை உயர்த்தினான்  என்று கூறினார்கள்

அப்பொழுது அந்த பத்து பெரும் தங்கள் குற்றங்களை ஒத்து கொண்டோம் என்று கூறி அவர்கள் அஞ்சினார்கள் நம்மை யூசுப் பழிவாங்கிவிடுவாரோ  என்று. ஆனால் அவர் தனது சகோதரர்களை பார்த்து இன்று நான் உங்கள் எந்த பழிவாங்களும்  நடத்தபோவதில்லை. அல்லாஹ்  உங்களுடைய பாவத்தை மன்னிப்பான் என்று கூறினார். அப்பொழுது அந்த சகோதரர்கள் அவர்களது தந்தையை பற்றி ஞாபக படுத்தினார்கள். நமது தந்தை உங்கள் இருவரையும் நினைத்து அழுது அழுது அவருடைய கண்பார்வை மங்கிவிட்டது என்று கூறினார்கள்.

இதனை கேட்ட  நபி யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்,

اذْهَبُوا بِقَمِيصِي هَٰذَا فَأَلْقُوهُ عَلَىٰ وَجْهِ أَبِي يَأْتِ بَصِيرًا وَأْتُونِي بِأَهْلِكُمْ أَجْمَعِينَ

12:93. “என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).

அவர்கள் அந்த சட்டையை எடுத்து கொண்டு வந்தபொழுது நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்கள் இது யூசுபின் வாசனை வருகிறது. எங்கே எனது மகன் யூசுப்? என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அந்த சட்டையை முகத்தில் போட்டு ஆம். இது யூசுபின் சட்டைதான் என்று கூறி அவரின் முகத்தில் போர்த்தினார்கள்.

நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இழந்த பார்வை மீண்டும் வந்துவிட்டது. அப்பொழுது தன் பிள்ளைகளை பார்த்து கூறினார்கள்: ‘நான் உங்களிடம் கூறவில்லையா?  அல்லாஹ்  உங்களுக்கு அறிவிக்காததை எனக்கு அறிவிக்கிறான் என்று கூறினார். அதனை கேட்ட அந்த பத்து பிள்ளைகளும் தந்தையே! நாங்கள் தீங்கிழைத்துவிட்டோம். எனக்காக நீங்களும் இரட்சகனிடம் பாவமன்னிப்பு கேளுங்கள் என்று கூறினார்கள். அதற்கு நபி யாகூப் அலைஹி வசல்லம் அவர்களும் என்னுடைய பிள்ளைகளே நிச்சயமாக உங்களுக்காக நானும் பாவ மன்னிப்பு தேடுவேன் என்று கூறினார்.

பிறகு அவர்கள் அனைவரும் நபி யூசுப் அலைஹி வசல்லம் அவர்களது கோட்டைக்கு சென்றார்கள்.

فَلَمَّا دَخَلُوا عَلَىٰ يُوسُفَ آوَىٰ إِلَيْهِ أَبَوَيْهِ وَقَالَ ادْخُلُوا مِصْرَ إِن شَاءَ اللَّهُ آمِنِينَ

12:99. (பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் “அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்” என்றும் கூறினார்.

وَرَفَعَ أَبَوَيْهِ عَلَى الْعَرْشِ وَخَرُّوا لَهُ سُجَّدًا ۖ وَقَالَ يَا أَبَتِ هَٰذَا تَأْوِيلُ رُؤْيَايَ مِن قَبْلُ قَدْ جَعَلَهَا رَبِّي حَقًّا

12:100. இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), “என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்.

அதன்பிறகு சுலைஹா அம்மையாரை ஒரு நாள் நகர்வலம் வரும்போது கண்டு கொண்டார்கள். அல்லாஹ் சுலைஹா அம்மையாருக்கு இளமையை திரும்பக் கொடுத்தான். யூசுப் சுலைஹா ஆகிய இருவரும் இனிதே திருமணம் முடித்து பல குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள்.

தம் மாமனார் யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தங்களுடன் தங்கள் மாளிகையிலேயே வாழ வேண்டும் என்ற சுலைகா அம்மையார் வேண்ட, எனக்கு ஆடம்பர பங்களா வேண்டாம் சிறு குடில் இருந்தால் போதுமானது என்று வேண்ட அவ்விதமே அமைத்துக் கொடுக்கப்பட்டது. அதில் 17 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அதன்பின் தம் அருமை மகன் யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை தம் பிரதிநிதியாய் நியமித்த விட்டு உயிர் நீத்தார்கள். அப்போது இவர்களின் வயது 147.

தம் தந்தையின் விருப்பப்படி பைத்துல் முகத்தஸிற்கு அவர்களின் உடலை அடக்க கொண்டு சென்றபோது அன்னாரின் சகோதரர் ஈசுவும் மறைந்து அங்கு அடக்கம் செய்ய கொண்டு வரப்பட்டார்கள். சகோதரர்கள் இருவரும் அங்கு அடக்கம் செய்யப்பட்டார்கள்.

தம் அறிவுரைக்கிணங்கி ஒரே இறைவழிபாட்டை மக்கள் மேற்கொள்ளாதது கண்டு வெறுப்படைந்த இவர்கள் தமக்கு இறப்பை வேண்ட அல்லாஹ் கி.மு.1792ல் தம்பக்கம் அழைத்துக் கொண்டான். இவர்களின் உடல் நீல நதியின் நடுவிலிருந்த மணல் திட்டில் அடக்கம் செய்யப்பட்டபோதிலும்> பின்னர் இவர்களின் இறுதி உரையின்படி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பனீ இஸ்ரவேலர்களை பாலஸ்தீனுக்கு அழைத்துச் சென்றபோது ஒரு கிழவியின் உதவியால் அதனைக் கண்டுபிடித்து பைத்துல் முகத்தஸில் நல்லடக்கம் செய்தனர்.

Add Comment

Your email address will not be published.