முஹம்மது அப்துல் கரீம் ஹஜ்ரத் அவர்களின் கேள்வி-பதில்கள்

முஹம்மது அப்துல் கரீம் ஹஜ்ரத் அவர்களின் கேள்வி-பதில்கள்

By Sufi Manzil 0 Comment December 4, 2011

உலகத்தில் குர்ஆனை ஓதுவது நன்மை மிகுந்ததா? ஸலவாத்து ஓதுவது நன்மை மிகுந்ததா?

பதில்: ஒரே எடையுள்ள இரண்டு வஸ்துவைப் பார்த்து எவ்வாறு ஒன்றைவிட ஒன்றைக் கூடுதலாகச் சொல்ல முடியாதோ அதைப் போலத்தான் இதற்கும் ஜவாபாகும். ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள்: 'நான் உங்கள் மீது முஹப்பத்து வைக்க நாடினால் நீங்கள் குர்ஆனை மிகுதமாய் ஓதுங்கள். அல்லாஹுத்தஆலா உங்கள் மீது முஹப்பத் வைக்க நாடினால் ஸலவாத்தை மிகுதமாக ஓதுங்கள். அல்லாஹ்வைப் புகழ்வது எனக்குப் பிரியம். என்னைப் புகழ்வது அல்லாஹ்வுக்குப் பிரியம்.

கேள்வி: ஈமான் கொண்டுள்ள முஃமின் தனக்கு ஈமானைக் கொடுக்கும்படி துஆ கேட்கலாமா?

பதில்: அவ்வாறு கேட்பது தெரியாத்தனமாகும். ஏனெனில் கர்ப்பம் உண்டாயிருக்கும் பெண் தனக்கு கெர்ப்பத்தை தரவேண்டும் என்று கேட்பதற்கு ஒப்பாகும். ஆனால் முடிவுவரை தரிப்படுத்தும்படி கேட்கலாம்.

கேள்வி: அல்லாஹுத்தஆலாவை அவர் என்று பன்மையாக சொல்லலாமா?

பதில்: சொல்லக் கூடாது. ஏனெனில் உலகத்தில் காணப்பட்ட வஸ்த்துக்கள் எல்லாம் பலவித அனாசிர்களால் உண்டாக்கப்பட்டிருப்பது போலில்லாமல் அல்லாஹுத்தஆலா தன்னைக் கொண்டே நிலைபாடான தனியவனாகவிருப்பதால் அவரென்ற பன்மையை உபயோகிக்க வழியில்லை.

கேள்வி: ஈத் என்ற பெருநாள் தொழுகையில் வழக்கத்திற்கு மேல் ஆறு தக்பீர் கூடுதலாகயிருப்பது எதற்காக?

பதில்: ஈத் என்ற வார்த்தைக்கு மீளுவதென்று பொருளாகும். மீளுவதென்பது அஹதியத்தளவில் மீளுவதாகும். இன்சான் அஹதிய்யத் என்ற மர்தபாவில் இருந்து ஆறுவிதமான மகாமத்துக்களை பொதிந்தவனாக வெளியாகி இருப்பதால் இவ்வாறு மகாமத்துக்களையும் பனா செய்து விட்டதற்கு அடையாளமாக அத்தொழுகையில் ஆறு தக்பீர்களை சேர்க்கப்பட்டிருக்கிறது.

கேள்வி: அல்லாஹுத்தஆலாவின் அஸ்மாக்களில் கோபாமுடையவனென்ற அஸ்மாவும் ஒன்றாகி இருக்க இன்சானுக்கு அதை ஹராமாக்கியதன் தாத்பரியம் என்ன?

பதில்: அல்லாஹுத்தஆலாவுடைய சிபத்துகளில் மிகுதத்தை இன்சானுக்குக் கொடுக்கப்பட்டிருந்தாலும் கோபம் என்ற சிபத்தானது வேறு எவருக்கும் பாத்தியமில்லாமல் ஆண்டவனுக்கு மட்டும் சொந்தமானதாகயிருக்கும். எதுபோலெனில் ஒருவன் ஹயாத்துடனிருந்து தன் பொன்சாதியை தலாக்கு சொல்லாமலிருக்கும் காலமட்டும் அவன் சம்பந்தப்பட்ட போதிலும் அவளில் வேறு எவருக்கும் பாத்தியதையில்லாமல் அவனுக்கு மட்டில் சொந்தமாக்கப்பட்டிருப்பது போலாகும்.

கேள்வி: பாங்கு சொல்பவர்களுக்கு சுவர்க்கம் வாஜிபென்று பிக்ஹு கிதாபுகளில் வந்திருக்கிறதே அவ்வாறாயின் ஒரு மனிதன் பாங்கு மட்டும் சொல்லிக் கொண்டிருந்தால் போதுமானதாகயிருக்க ஏன் தொழுக வேண்டும்.?

பதில்: பாங்கு சொல்பவர்களுக்கு சொர்க்க லோகம் வாஜிபென்று வந்திருப்பது உண்மையே. ஆனால் அவர்கள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு ஒன்று கூறுகிறேன். அதாவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இரு கண்களும் விளங்காத ஓர் மனிதரை பாங்கு சொல்வதற்காக நியமித்திருந்தார்கள். அவர்களை நியமித்திருப்பதின் இரகசியத்தை அறிவதற்காக ஸெய்யிதினா அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓரிரவு தஹஜ்ஜத்தின் வக்தில் பள்ளிவாசலுக்கு சென்று பாங்கு சொல்பவரைக் கண்டவுடன் அவரைக் காணாதவர்கள் போல் இப்'பள்ளிவாசலுக்கு ஒரு கண்களும் குருடாக இருப்பவரைப் பாங்கு சொல்வதற்கு நியமித்திருப்பதால் இதுவரை பஜ்ரின் வக்துக்கு பாங்கு சொல்லாமலிருக்கிறார். சூரியன் வெளியாக வேண்டிய நேரம் சமீபத்து விட்டதே எனக் கூறிக் கொண்டு அன்னவர்களை நெருங்கி பாங்கு சொல்லுங்கள் என்று கூற, அதற்கு அவர்கள் ஏன் தாங்கள் வீணாக கூச்சல் போடுகிறீர்கள்? பாங்கு சொல்வதற்குரிய வக்தை நன்றாக நான் அறிவேனென்று கூறக் கேட்டு அவர்கள்உங்களுக்கு கண் தெரியாமலிருப்பதாலல்லவா நேரம் விளங்கவில்லை எனக் கூறினர்கள். எனக்கு வெளித்தோற்ற கண் விளங்காதிருந்தாலும் அர்ஷில் பாங்கு சொல்லப்படும் சப்தம் எனது கல்புக்கு கேட்டபின் பாங்கு சொல்வதுதான் எனக்கு விளங்கிய நேரமாகும் என்று கூறினார்கள். இத்தன்மையை அடைந்தவர்களுக்குத் தன் சொர்க்கமே தவிர மற்றவர்களுக்கு இல்லை என்பதால் இத்தகுதியை அடைவதற்கு கட்டாயம் தொழுதே ஆக வேண்டும். மேலும் தொழுகையானது அப்தியத்தி;பன் தன்மையை வெளிப்படுத்திக் காட்டக்கூடிய ஓர் சாட்சியைப் போல் இருப்பதால் எவன் தொழுகவில்லையோ அவன் செய்கையில் தன்னை ரப்பென்று தாவாச் செய்கிறான் என்றே

கேள்வி: இறந்தவர்களை கபுரில் மலக்குகள் கேள்வி கேட்பது அரபி பாஷையைக் கொண்டு என்பதாகச் சொல்கிறார்களே! அரபி தெரியாதவர்களைக் கேட்டால் அவர்கள் எவ்வாறு பதிலுரைப்பார்கள்?

பதில்: இறந்த பிறகு சேரக்கூடிய இடமானது 'பர்ஜக்' நடு உலகமாக இருப்பதால் அவ்வுலகக் காரியாதிகள் இவ்வுலகுக்கு மாற்றமாக இருக்கிறது. பூத உட லுடன் தோன்றக் கூடியவை சூட்சம உடலுடன் காணப்படும். அவ்விடத்திய விஷயங்களெல்லாம் ரூஹுடன் சம்பந்தமாக இருக்கும். மானிடர்களுக்குரிய ரூஹுகள் அனைத்தும் ஒன்றாக இருப்பதால்; ரூஹின் பாஷையாகிய சுரியானிப் பாஷையிலேயே கேட்கப்படுமாதலால் இதனை விளங்காத ரூஹுகள் ஒன்றுமில்லை. ஆனால் அரபியில் சொல்வதைப் போலில்லாமல் ஒரே வார்த்தையில் சகல கேள்விகளும் பொதிந்ததாக கேட்கப்படும். அதாவது மலக்குகள் 'மராஜ்ஹு' என்று கேட்டவுடன் கேள்விக்கு பதிலுரைக்க தத்துவம் பெற்ற முஃமின் 'மராத் அஜிர்ஹு' என்ற பதிலைச் சொல்லுவான். இயலாதவன் கதி அதோகதியாகிவிடும்.