மனித வாழ்விற்கு இன்றியமையாத முக்கிய துஆக்கள்-Important Duas of Human life

மனித வாழ்விற்கு இன்றியமையாத முக்கிய துஆக்கள்-Important Duas of Human life

By Sufi Manzil 0 Comment August 2, 2011

காலை,மாலை நேரங்களில் ஓத வேண்டிய துஆ:

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

1. பொருள்: அல்லாஹுத் தஆலாவின் பதிபூரணமான கலிமாக்களின் பொருட்டால் அவன் அவன் படைத்தவற்றின் தீங்குகளை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

இதனைக் காலையிலும் மாலையிலும் மும்மூன்று தடவை ஓதி வந்தால் எல்லாத் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களின் தீங்குகளை விட்டும, துன்பம் தரும் மிருகங்களின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் ஓதிக் கொள்வது நல்லது.

ஒரு மனிதர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து, யாரஸூலல்லாஹ் கடந்த இரவு ஒரு தேள் என்னை கொட்டி விட்டது என்று கூறினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நீ மாலை நேரத்தில் அஊது பி கலிமாத்தித் தாமாத்தி மின் ஷர்ரி மாகலக்க’ என்று ஓதிக் கொண்டிருந்தால் உனக்கு அது எவ்வித இடையூறும் செய்யாது என்று கூறினார்கள்.
ஆதாரம்: மிஷ்காத்.

بِسْمِ اللهِ الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْاَرْضِ وَلاَ فِي السَّمَآءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ ٭

2. பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரைக் கொண்டு ஆரம்பிக்கிறேன். அவன் எத்தகையவன் என்றால், அவனுடைய திருப் பெயருடன் பூமியிலுவும் வானத்திலும் உள்ள எப்பொருளும் எந்த இடையூறும் செய்யாது. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், முற்றும் அறிந்தவன்.

இதனைக் காலையிலும் மாலையிலும் மும்மூன்று தடவை ஓதிக் கொள்ள வேண்டும். அவ்வாறு ஓதி வந்தால் அல்லாஹு தஆலா அவரை துன்பங்கள், இடையூறுகள் அனைத்தையும் விட்டும் பாதுகாத்திடுவான். – நபிமொழி.

اَعُوْذُ باِ للهِ السَّمِيْعِ الْعَلِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ٭

3. பொருள்: செவியுறுவோனும் முற்றும் அறிந்தவனுமாகிய அல்லாஹுத்தஆலாவைக் கொண்டு சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.-நபிமொழி.

இதனைக் காலையிலும் மாலையிலும் மும்மூன்று தடவை ஓதியபின், சூரத்துல் ஹஷ்ரின் கடைசியிலுள்ள மூன்று ஆயத்துக்களை ஓதிக் கொள்ள வேண்டும்.

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ٭ هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ ٭ هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ٭

மேற்கூறப்பட்ட படி இஸ்மு மற்றும் ஆயத்துக்களை  ஸுபுஹு நேரத்தில் ஓதிக் கொள்பவருக்காக எழுபதினாயிரம் மலக்குகள் சாட்டப்படுகின்றனர். அவர்கள் அவருக்காக அன்று மாலை வரை துஆ செய்து கொண்டிருக்கின்றனர். அன்று பகலில் அவர் இறந்து விட்டால் ஷஹீதுடைய அந்தஸ்துள்ளவராக மரணமடைகிறார். அவ்வாறே மாலையில் இதைன ஓதிக் கொண்டால் அதே அந்தஸ்து கிடைக்கிறது’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியுள்ளர்கள். நூல்: மிஷ்காத்.

4. கீழ்காணும் துஆக்களில் ஒன்றை  காலை மாலை இரு நேரங்களிலும் ஓதிக் கொள்ள வேண்டும்.

اَللَّهُمَّ بِكَ اَصْبَحْنَا وَبِكَ اَمْسَيْنَا وَبِكَ نَحْيٰى وَبِكَ نَمُوْتُ وَاِلَيْكَ النُّشُوْرُ

பொருள்: யாஅல்லாஹ் நாங்கள் உன் உதவியைக் கொண்டே இந்தக் காலைநேரத்தில் இருக்கிறோம். உன் உதவியைக் கொண்டே மாலை நேரத்திலும் இருக்கிறோம். இன்னும் உன் உதவியைக் கொண்டே உயிர் வாழ்கிறோம். உன் உதவியைக் கொண்டே மரணமடைவோம். இன்னும் எழுப்புதலும் உன் பக்கமேயாகும்.

اَصْبَحْنَا وَاَصْبَحَ الْمُلْكُ لِلَّهِ وَالْحَمْدُ لِلهِ لاَشَرِيْكَ لَهُ لَآ اِلٰهَ اٍلاَّ هُوَ وَاِلَيْهِ النُّشُوْرُ

பொருள்: இக்காலை நேரத்தில் நாங்களும் மற்றும் ஆட்சி அனைத்தும் அல்லாஹ்வுக்கே ஆகிவிட்டோம். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவனுக்கு யாதோர் இணையும் இல்லை. வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. எழுப்பப்படுதல் அவன் பக்கமேயாகும்.

رَضِيْنَا بِاللهِ رَبًّا وَّبِالْاِسْلاَمِ دِيْنًا وَّبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَبِيًّا

5. பொருள்: நாங்கள் அல்லாஹ்வை ரப்பு என்பதாகவும், இஸ்லாத்தை தீன் என்பதாகவும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபி என்பதாகவும் ஏற்று திருப்தி கொண்டோம்.
இதைக் காலையிலும், மாலையிலும் மும்மூன்று தடவை ஓதி வருவதால் கியாமத்து நாளில் அவரைப் பற்றி திருப்தி கொள்வதும், அவரை மகிழ்ச்சி அடையச் செய்வதும் அல்லாஹ்வின் பொறுப்பாகும்.-நபிமொழி.

سُبْحَانَ اللهِ وَبِحَمْدِه سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

6. பொருள்: அல்லாஹ்வை நான் பரிசுத்தப்படுத்துகிறேன். அவனுடைய புகழைக் கொண்டு மகத்துவம் மிக்க அல்லாஹ் மகாப் பரிசுத்தமானவன்.

இதைக் காலையிலும் மாலையிலும் மிக அதிகமான அளவு ஓதிக் கொள்ள வேண்டும்.

வீட்டினுள் நுழையும்போதும், வீட்டை விட்டு வெளியாகும் போதும் ஓதும் துஆக்கள்.

வீட்டினுள் நுழையும்போது வீட்டினருக்கு முதலில் ஸலாம் கூறி பின்பு இந்த துஆவை ஓத வேண்டும்.
اَللّٰهُمَّ اٍنِّيْ اَسْئَلُكَ خَيْرَ الْمَوْلَجِ وَخَيْرَ الْمَخْرَجِ ، بِسْمِ اللهِ وَلَجْنَا وَبِسْمِ اللهِ خَرَجْنَا ، وَعَلَى اللهِ رَبِّنَا تَوَكَّلْنَا

பொருள்: யா அல்லாஹ் (இவ்வீட்டினுள்) நுழைவதில் நன்மையையும், (இதிலிருந்து)வெளியாவதில் நன்மையையும் என்’னிடம் நான் கேட்கிறேன். அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு நாங்கள் நுழைந்தோம். அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டே நாங்கள் வெளியானோம். எங்கள் இரட்சகனான அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்தோம்.

தூங்கும் போது ஓதும் துஆக்கள்:
بِاسْمِكَ رَبِّى وَضَعْتُ جَنْبِىْ وَبِكَ ، اَرْفَعُهُ اِنْ اَمْسَكْتَ نَفْسِىْ فَاغْفِرْ لَهَا وَاِنْ اَرْسَلْتَهَا فَاحْفَظْهَا بِمَا تَحْفَظُ بِهِ عِبَادَكَ الصَّالِحِيْنَ ٭

பொருள்: என்னுடைய இரட்சகனே! உன்னுடைய திருநாமதர்தைக் கொண்டு என் விலாப்புறத்தை (உடலை நான் படுக்கையில்) வைத்தேன். உன் உதவியைக் கொண்டே அதனை நான் உயர்த்துவேன் (எழுந்திருப்பேன்).   என் உயிரை நீ தடுத்துக் கொண்டால், (என்னை மரணமடையச் செய்தால்) அதை நீ மன்னிப்பாயாக. அதை நீ விட்டு விட்டால் (உயிர் வாழச் செய்தால்) உன்னுடைய நல்லடியார்களை நீ காப்பாற்றுகின்ற முறையில் அதையும் நீ காத்தருள்வாயாக!

பிறகு வலப்புறமாக படுத்து வலக்ரைகயை தலையணையாக னை;னத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.

بِسْمِ اللهِ وَضَعْتُ جَنْبِىْ اَللّٰهُمَّ اغْفِرْلِىْ ذَنْبِىْ وَاخْسَأْ شَيْطَانِيْ وَفُكَّ رِهَانِىْ وَثَقِّلْ مِيْزَانِيْ وَاجْعَلْنِىْ فِى النَّدِىِّ الْاَعْلٰى ٭

பொருள்: அல்லாஹ்லவின் திருநாமத்தைக் கொண்டு என் உடலை படுக்கையில் வைத்தேன். யா அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பாயாக! என்னுடைய ஷைத்தானை இழிவடையச் செய்வாயாக! என் பிடரியை (நரக நெருப்பை விட்டு) விடுதலை செய்திடுவாயாக! என்னுடைய மீஜான் (நன்மையின்) எடையை கனமாக்கி வைப்பாயாக! உயர்வான தோழர்களின் கூட்டத்தில் என்னை ஆக்கி வைப்பாயாக!

இதன் பிறகு மூன்று தடவை பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

اَللّٰهُمَّ قِنِيْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ عِبَادَكَ

பொருள்: யா அல்லாஹ் உன் அடியார்களை எழுப்பும் நாளில் உன் வேதனையை விட்டும் என்னைக் காத்தருள்வாயாக!

பிறகு பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

بِسْمِكَ رَبِّىْ فَاغْفِرْلِىْ ذَنْبِىْ

பொருள்: என் இரட்சகனே! உன் திருநாமத்தால் நான் தூங்கச் செல்கிறேன். என் பாவத்தை மன்னித்திடுவாயாக!

அல்லது பின்வரும் துஆவை ஓதலாம்.

بِسْمِكَ وَضَعْتُ جَنْبِيْ فَاغْفِرْلِىْ

பொருள்: உன் திருநாமத்தால் உடலை கீழே வைத்துப் படுத்தேன். என்னை மன்னித்திடுவாயாக!

பிறகு இந்த துஆவை ஓத வேண்டும்.

اَللّٰهُمَّ بِاسْمِكَ اَمُوْتُ وَاَحْيٰى

பொருள்: யா அல்லாஹ் உன் திருநாமத்தால் நான் மரணிக்கிறேன், உயிர் வாழ்கிறேன்.

பிறகு ஸுப்ஹானல்லாஹ் 33, அல்ஹம்துலில்லாஹ் 33, அல்லாஹு அக்பர் 34 தடவை ஓதிக் கொள்ள வேண்டும்.

பிறகு குல்ஹுவல்லாஹு அஹது, பலக், நாஸ் ஆகிய மூன்று ஸூராக்களையும் ஓதி இரு கைகளையும் விரித்து அதில் ஊதி தலையிலிருந்து ஆரம்பித்து உடல் முழுவதும் முடிந்த அளவுக்குத் தடவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு மூன்று தடவை செய்ய வேண்டும்.

பிறகு படுக்கையில் அமர்ந்து ஆயத்துல் குர்ஜி ஓத வேண்டும்.  இன்னும் பின்வரும் துஆவையும் ஓதிக் கொள்ள வேண்டும்.

اَلْحَمْدُ لِلّٰهِ الَّذِيْ اَطْعَمَنَا وَسَقَانَا وَكَفَانَا وَآوَانَا ، فَكَمْ مِمَّنْ لاَكَافٍىَ لَهُ وَلاَمُؤْوِىَ

பொருள்: அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அவன் எத்தகையவன் என்றால், அவனே எங்களுக்கு உணவளித்தான். தண்ணீhர் புகட்டினான். அவனே எங்களுக்கு போதுமானவனாக ஆனான். எங்களை படுக்கையில் ஒதுங்கச் செய்தான். எத்தனையோ பேர் தேவை பூர்த்தியானவர்களாகவும், ஒதுங்குமிடம் இல்லாதவர்களாகவும் உள்ளனர்.

தூங்கும்போது கனவு கண்டால்:

தூங்கும்போது எவரேனும் நல்ல கனவு கண்டு விழித்தெழுந்தால், அவர் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லட்டும். அக்கனவையும் பிறரிடம் – அவரை விரும்புகின்ற நல்லடியாரிடம் சொல்லவும்.

எவரேனும் கெட்ட கனவு கண்டால், தன் இடப்புறத்தில் மூன்று முறை துப்பி விட்டு அல்லது ஊதி விட்டு அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று மூன்று தடவை ஓதிக் கொள்ளவும். அதனை யாரிடமும் சொல்லாமல் இருந்து கொள்ளவும். பிறகு விலாப்புறத்தை திருப்பி மறுபுறம் படுத்துக் கொள்ளவும். அல்லது எழுந்து தொழவும்.

தூங்கும்போது பயந்து திடுக்கிட்டெழுந்தால்:

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّآمَّةِ مِنْ غَضَبِهِ وَعِقَابِهِ وَشَرِّ عِباَدِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَاَنْ يَّحْضُرُوْنِ٭

பொருள்: பரிபூரணமான அல்லாஹ்வின் திருக்கலிமாவின் பொருட்டால் அவனுடைய கோபத்தை விட்டும் தண்டனையை விட்டும், அவனுடைய அடியார்களின் தீமையை விட்டும், ஷைத்தான்களின் ஊசாட்டங்களை விட்டும், அவை என்னிடத்தில் வருவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய பேசத் தெரிந்த குழந்தைகட்கு இதனைப் பாடமாக்கி ஓதச் செய்வார்கள். பேசத் தெரியாத சிறு குழந்தைகட்கு இதனை ஒரு தாளில் எழுதி அவர்களுடைய கழுத்தினில் தொங்க விடுவார்கள்.

சாப்பிடும் போது ஓத வேண்டிய துஆக்கள்:

உயர்தரமான, இனிமையான உணவுகளை சாப்பிட ஆரம்பித்தால்

بِسْمِ اللهِ وَعَلٰى بَرَكَةِ اللهِ

பொருள்: அல்லாஹ்வின் திரு நாமத்தைக் கொண்டு, அல்லாஹ்வின் பரக்கத்தின் மீது (இவ்வுணவை நான் சாப்பிடுகிறேன்)

சாப்பிட்டு முடிந்த பின் பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

اَلْحَمْدُ لِلهِ الَّذِىْ هُوَ اَشْبَعَنَا وَاَرْوَانَا وَاَنْعَمَ عَلَيْنَا

பொருள்: அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், அவன் எத்தகையவன் என்றால் எங்களுக்கு வயிற்றை நிரப்பி, தாகத்தை தீர்த்தான். இன்னும் எங்களுக்கு பர்கியமளித்து கருணை செய்தான்.

சாப்பிடும்போது பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்து விட்டால்,

بِسْمِ اللهِ اَوَّلَهُ وَاٰخِرَهُ

பொருள்: இதன் துவகத்கத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப் பெயரால் (சாப்பிடுகிறேன்)

உணவு சாப்பிடும் போது பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَاَطْعِمْنَا خَيْرًا مِّنْهُ

பொருள்: யாஅல்லாஹ்! இதில் எங்களுக்கு பரக்கத்துச் செய்வாயாக! இதை விடச் சிறந்ததை எங்களுக்கு உணவாக அளிப்பாயாக!

பால் குடித்தால் பன்வரும் துஆவை ஓத வேண்டும்.
اَللّٰهُمَّ بَارِكْ لَنَا فِيْهِ وَزِدْنَا مِنْهُ

பொருள்: யா அல்லாஹ்! இதில் எங்களுக்கு பரக்கத்துச் செய்வாயாக! இன்னும் இதிலிருந்து அதிகத்தை எங்களுக்கு வழங்குவாயாக!

சாப்பிட்டு முடிந்தபின் ஓதும் துஆக்கள்:

اَلْحَمْدُ لِلهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ غَيْرَ مَكْفِىٍّ وَّلاَمُوَدَّعٍ وَّلاَمُسْتَغْنً عَنْهُ رَبَّنَا

பொருள்: அதிகமான, இனிமையான, அதில் பறக்கத்துச் செய்யப்பட்டிருக்கும்படியான, போதுமாக்கப்படாத, இதோடு விடை கொடுக்கப்பட்டாத, அதை விட்டும் தேவையறப்படாத (அதாவது அதன் பக்கம் தேவையுள்ள) புகழாக புகழனைத்தும் அல்லாஹ்வேக்கே உரியன. எங்கள் இரட்சகனே! (இதனை ஏற்றுக் கொள்வாயாக) அல்லது

اَلْحَمْدُ لِلهِ الَّذِىْ اَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلَنَا مِنَ الْمُسْلِمِيْنَ

பொருள்: எங்களுக்கு உணவளித்து, தண்ணீர் புகட்டி, எங்களை முஸ்லிம்களில் உள்ளவர்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

உணவளிப்பவருக்காக ஓதும் துஆ:

اَللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيْمَا رَزَقْتَهُمْ فَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

பொருள்: யா அல்லாஹ் இவர்களுக்கு நீ அளித்தவற்றில் இவர்களுக்கு நீ பரக்கத்துச் செய்வாயாக! இன்னும் இவர்களுக்கு மன்னிப்பளித்து கிருபை செய்வாயாக! அல்லது

اَللّٰهُمَّ اَطْعِمْ مَنْ اَطْعَمَنِىْ وَىسْقِ مَنْ سَقَانِىْ

பொருள்: யா அல்லாஹ்! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்கு நீர் புகட்டியவருக்கு நீ நீர்புகட்டுவாயாக!

புதிய ஆடையை அணியும்போது:

اَللّٰهُمَّ لَكَ الْحَمْدُ ، اَنْتَ كَسَوْتَنِيْهِ ، اَسْئَلُكَ خَيْرَهُ وَخَيْرَمَا صُنِعَ لَهُ ، وَاَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّمَا صُنِعَ لَهُ         

பொருள்: யா அல்லாஹ்! புகழனைத்தும் உனக்கே சொந்தம். நீயே இதனை என்கு அணிவித்தாய். இதனுடைய நன்மையையும், இது எதற்காகச் செய்யப்பட்டதோ அதனுடைய நன்மையையும் உன்னிடத்தில் நான் வேண்டுகிறேன். இதனுடைய தீமையைவிட்டும், இது எதற்காக செய்யப்பட்டதோ அதனுடைய தீமையை விட்டும் உன்னிடத்தில் நான் பாதுகாப்பு தேடுகிறேன். அல்லது

اَلْحَمْدُ لِلهِ الَّذِىْ كَسَانِيْ مَآ اُوَارِيْ بِهِ عَوْرَتِىْ وَاَتَجَمَّلُ بِهِ فِىْ حَيَاتِىْ

பொருள்: என்னுடைய மர்மஸ்தானத்தை எதைக் கொண்டு நான் மறைக்கின்றேனோ, என் வாழ்வில் எதைக் கொண்டு நான் அழகுப் படுத்திக் கொள்கிவேனோ அத்தகைய ஒன்றை எனக்கு அணிவித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.!

மற்றவர்கள் புத்தாடை அணிந்திருப்பதைக் கண்டால்:

تُبْلِىْ وَيُخْلِفُ اللهُ

பொருள்: இது பழையதாகிக் கிழிந்து விடும். அல்லாஹ் (உங்களுக்கு மற்றொன்றைப்) பதிலாகத் தருவானாக!

ஆடையைக் கழற்றும் போது :

ஆடைகளைக் கழற்றும்போது ஜின்கள், ஷைத்தான்களுக்கு திரையாக இருப்பது பிஸ்மில்லாஹ் என்டபதாகும். என்று ஒரு ஹதீதில் கூறப்பட்டுள்ளது. எனவே ஆடையைக் களையும் போது பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும.

உடலுறவின் போது ஓதும் துஆ:

உடலுறவு கொள்ள ஆரம்பிக்கும்போது பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

بِسْمِ اللهِ اَللّٰهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَارَزَقْتَنَا

பொருள்: அல்லாஹ்வின் திருநாமத்தைக் கொண்டு துவங்குகிறேன். யாஅல்லாஹ்! எங்களை ஷைத்தானை விட்டும் விலக்கி வைப்பாயாக! எங்களை விட்டும் ஷைத்தானை விலக்கி வைப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கிய குழந்தைகளை விட்டும் ஷைத்தானை விலக்கி வைப்பாயாக!!

விந்து வெளியாகும் நேரத்தில் ஓதும் துஆ:

اَللّٰهُمَّ لَا تَجْعَلْ لِلشَّيْطَانِ فِيْمَا رَزَقْتَنِىْ نَصِيْبًا

பொருள்: யா அல்லாஹ்! எங்களுக்குக் கொடுத்தவற்றில் ஷைத்தானுக்கு எந்தப் பங்கையும் நீ ஆக்கி விடாதே!

குழந்தைக்கு பாதுகாப்பு தேடும் துஆ:

குழந்தைக்கு கண் திருஷ்டி, துன்பங்கள், இடர்கள் ஆகியவை ஏற்படாமல் பாதுகாப்புப் பெறுவதற்காக பின்வரும் பாதுகாப்பு துஆவை எழுதி குழந்தையின் கழுத்தில் போட்டு விட வேண்டும்.

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّآمَّةِ مِنْ شَرِّ كُلِّ شَيْطَانِ وَّهَامَّةٍ وَّمِنْ شَرِّ كُلِّ عَيْنٍ لَّامَّةٍ

பொருள்: அல்லாஹு தஆலாவின் பரிபூரணமான கலிமாக்களைக் கொண்டு ஷைத்தான்கள், விஷ ஜந்துக்கள் அனைத்தின் தீஞ்கை விட்டும், தீமை தரும்படியான கண் திருஷ்டியை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன்.

பிரயாணத்தில் ஓதும் துஆக்கள்:

எவரேனும் பிரயாணம் செய்ய நாடினால் பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

اَللّٰهُمَّ بِكَ اَصُوْلُ وَبِكَ اَحُوْلُ وَبِكَ اَسِيْرُ

பொருள்: யா அல்லாஹ்! உன் உதவியைக் கொண்டே நான் எதிரிகளைத் தாக்குவேன். உன் உதவியைக் கொண்டே காரியங்களை ஒழுங்குபடுத்துகிறேன். உன் உதவியைக் கொண்டே நான் புறப்படுகிறேன்.

ஏதேனும் ஒரு இடத்தில் எதிரியின் பயம் அல்லது வேறு ஏதேனம் பயம் ஏற்பட்டால் ‘லிஈலாஃபி குறைஷின்’ என்ற ஸூராவை ஓதிக் கொள்ள வேண்டும்.

வாகனத்தில் கால் வைத்தவுடன் பிஸ்மில்லாஹ் என்று முதலில் கூற வே;ணடும். வாகனத்தில் அமர்ந்த பின் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறி பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

سُبْحَايَ الَّذِىْ سَخَّرَ لَنَا هٰذَا وَمَاكُنَّا لَهُ مُقْرِنِيْنَ ٭ وَاِنَّآ اِلٰى رَبِّنَا لَمُنْقَلِبُوْنَ ٭

பொருள்: நாங்கள் இதற்குச் சக்தியுள்ளவர்களாக இல்லாத நிலையில் இ(ந்த வாகனத்)தை எங்களுக்கு வசப்படுத்தித் தந்த ஒருவன் மகாத்தூய்மையானவன். மேலும் நிச்சயமாக நாங்கள் எங்கள் இரட்சகனின் பால் திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம்.

பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று மூன்று தடவையும், அல்லாஹு அக்பர் என்று ஒரு தடவையும், லாஅலாஹ இல்லல்லாஹ் என்று ஒரு தடவையும் கூற வேண்டும்.

கடல் பிரயாணத்தின் போது ஓதும் துஆக்கள்:

கடல் பிரயாணத்தின் போது கடலில் மூழ்கிவிடாமல் பாதுகாப்பாகச் செல்வதற்கு கப்பலில் ஏறுவதற்கு முன் பின்வரும் இரண்டு ஆயத்துக்களை ஓதிக் கொள்ள வேண்டும்.

بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا ۚ إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ٭ وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ وَالْأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ وَالسَّمَاوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ ۚ سُبْحَانَهُ وَتَعَالَىٰ عَمَّا يُشْرِكُونَ٭ 

கவலை, துன்பம் ஏற்படுகின்ற நேரத்தில்:

எவரேனும்  ஓருவருக்கு கவலலைஈ துன்பம், அல்லது ஏதேனுமொரு முக்கிய பிரச்சனை ஏற்டடுகின்ற நேரத்தில் பின்வரும் துஆவை கேட்க வேண்டும்.

لَآ اِلٰهَ اِلَّا اللهُ الْعَظِيْمُ الْحَلِيْمُ ، لَآ اِلٰهَ اِلَّا اللهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ لَآ اِلٰهَ اِلَّا اللهُ رَبُّ السَّمٰوٰتِ وَ الْاَضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ ٭

பொருள்: மகத்துவம் மிக்கவனும், சாந்தமுள்ளவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மகத்தான அர்ஷுடைய இரட்சகனாகிய அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. வானங்கள், பூமி ஆகியவற்றின் இரட்சகனும், சங்கைக்குரிய அர்ஷின் இரட்சகனுமான அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை.

கீழ்வரும் துஆக்களை அதிகம் ஓதிக் கொள்ள வேண்டும்.

يَاحَيُّ يَاقَيُّمُ بِرَحْمَتِكَ اَسْتَغِيْثُ

பொருள்: நித்திய ஜீவனானவனே! என்றும் நிலைத்திருப்பவனே! உன்னருளைக் கொண்டே நான் (உன்னிடம்) இரட்சிப்புத் தேடுகிறேன்.

لَآ اِلٰهَ اِلَّااَنْتَ سُبْحَانَكَ اِنِّىْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

பொருள்: வணக்கத்திற்குரியவன் உன்னைன்றி வேறு எந்த தெய்வமுமில்லை. நீ மகாப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் உள்ளவனாக ஆகிவிட்டேன்.

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلَّا بِا للهِ

பொருள்: எந்தத் திரும்புதலும் எந்த சக்தியும் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டே தவிர இல்லை.

தனி மனிதனை அல்லது கூட்டத்தை பயந்த நேரத்தில்:

اَللّٰهُمَّ اكْفِنَا هُ بِمَاشِئْتَ

பொருள்: யாஅல்லாஹ்! நீ நாடிய விதத்தில் இந்த மனிதனை விட்டும் எங்களுக்கு நீ போதுமாகி விடுவாயாக! (இவனை விட்டும் எம்மை காத்தருள்வாயாக)

ஒரு கூட்டத்தினரின் தீங்கை பயப்படும் போது:

اَللّٰهُمَّ اِنَّا نَعُوْذُ بِكَ اَنْ يَّفْرُطَ عَلَيْنَا اَحَدٌ مِّنْهُمْ اَوْ اَنْ يَّطْغٰى

பொருள்: யாஅல்லாஹ்! அவர்களிலிருந்து எவரும் எங்களின் மீது வரம்பு மீறுவதை விட்டும் அநியாயம் செய்வதை விட்டும் உன்னிடம் நிச்சயமாக நாங்கள் பாதுகாப்பு தேடுகிறோம்.

காட்டில் பேய் பிசாசு பயம் ஏற்பட்டால்….:

எவரேனும் ஒருவருக்கு காட்டில் அல்லது பாழடைந்த இடத்தில் பேய், பிசாசுடைய பயம் ஏற்பட்டால் முதலில் சப்தமிட்டு பாங்கு சொல்ல வேண்டும். பிறகு ஆயத்துல் குர்ஸியை சப்தமிட்டு ஓதிக் கொள்ள வேண்டும்.

திடுக்கம் ஏற்படும்போது:

اَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّآمَّاتِ مِنْ غَضَبِهِ وَشَرِّ عِبَادِهِ وَمِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَاَنْ يَّحْضُرُوْنِ

பொருள்: அல்லாஹ்வின் பரிபூரணமான கலிமாக்களைக் கொண்டு அவனுடைய கோபத்தை விட்டும், அவனுடைய அடியார்களின் தீங்கை விட்டும், ஷைத்தான்களின் ஊசாட்டத்தை விட்டும், அவை என்னிடம் குடிகொள்வதை விட்டும் நான் பாதுகாப்பு தேடுகிறேன்.

தோல்வி ஏற்படுகின்ற நேரத்தில்…

حَسْبِىَ اللهُ وَنِعْمَ الْوَكِيْلُ

பொருள்: அல்லாஹ் எனக்குப் போதுமானவன். பொறுப்பு ஏற்பவ(னான அவ)ன் மிக நல்லவன்.

ஒரு காரியம் சிரமமாகும்போது:

اَللّٰهُمَّ لَاسَهْلَ اِلَّا مَاجَعَلْتَهُ سَهْلًا ، وَّاَنْتَ تَجْعَلُ الْحَزْنَ سَهْلًا اِذَا سِئْتَ

பொருள்: யா அல்லாஹ்! நீ எதனை இலேசாக்கி வைத்தாயோ அதனைத் தவிர வேறெதுவும் இலேசு கிடையாது. நீ நாடினால், நீயே கவலையை இலேசாக ஆக்கி விடுவாய்.

இடி, மின்னல் ஏற்படும் போது:

اَللّٰهُمَّ لَا تَقْتُلْنَا بِغَضَبِكَ وَلاَ تُهْلِكْنَا بِعَذَابِكَ وَعَافِنَا قَبْلَ ذَالِكَ

பொருள்: யா அல்லாஹ்! உன் கோபத்தைக் கொண்டு எங்களை நீ அழித்து விடாதே! உன் தண்டனையின் மூலம் எங்களை நாசப்படுத்தி விடாதே! அதற்கு முன்னதாக எங்களை நீ மன்னித்தருள்வாயாக!

அதன்பின் கீழே உள்ள துஆவை ஓத வேண்டும்.

سُبْحَانَ الَّذِىْ يُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلٰئِكَةُ مِنْ خِيْفَتِهِ

பொருள்: இடியாகிறது அவனுடைய புகழைக் கொண்டும் மலக்குகள் அவனுடைய பயத்தைக் கொண்டும் தஸபீஹ் செய்கின்ற ஒருவன் மகாத் தூயவன்.

புயலும், வெள்ளமும் ஏற்படும்போது:

புயல் வீசும்போது அதனை முன்னோக்கி மண்டியிட்டு உட்கார்ந்து, இருகைகளையும் முழங்கால்களின் மீது வைத்துக் கொண்டு பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

اَللّٰهُمَّ اجْعَلْهَا رِيَاحًا وَّلَا تَجْعَلْهَا رِيْحًا ، اَللّٰهُمَّ اجْعَلْهَا رَحْمَةً وَّلاَ تَجْعَلْهَا عَذَابًا                   

பொருள்: யா அல்லாஹ்! இதனை பலன் தரும் காற்றாக ஆக்கியருள்வாயாக! இதனை அழிவுக்குரிய காற்றாக ஆக்காதிருப்பாயாக! யா அல்லாஹ்! இதனை ரஹ்மத்தாக ஆக்கிவிடுவாயாக! இதனை தண்டனையாக ஆக்காதிருப்hயாக!

சேவல் கூவும்போது…, கழுதை, நாய் கத்தும் போது…

اَللّٰهُمَّ اِنِّىْ اَسْئَلُكَ مِنْ فَضْلِكَ

பொருள்: யாஅல்லாஹ்! உன் கருணையை நான் உன்னிடம் வே;டுகிறேன்.

சந்திரனைப் பார்க்கும் போது:

اَعُوْذُ بِاللهِ مِنْ شَرِّ هٰذَا الْغَاسِقِ

பொருள்: மறையக் கூடிய (சந்திரனாகிய) இதன் தீமையை விட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்.

லைலத்துல் கத்ரு இரவில் ஓதும் துஆ:

اَللّٰهُمَّ اِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّىْ

பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிக்கிறவன், மன்னிப்பை நீ விரும்புகிறாய். ஆகையால், நீ என்னை மன்னித்தருள்வாயாக!

கண்ணாடியைப் பார்க்கும் போது:

اَللّٰهُمَّ اَنْتَ حَسَّنْتَ خَلْقِىْ فَحَسِّنْ خُلُقِىْ

பொருள்: யா அல்லாஹ்! நீயே உருவத்தை அழகாக்கி வைத்தாய், எனவே என் குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!

காது இரையும் போது…

எவருக்கேனும் காதில் இரைச்சல் ஏற்பட்டால் அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நினைவு கூர்ந்து, அன்னாரின் மீது ஸலவாததுச் சொல்லிக் கொள்ளவும். பிறகு பின்வரும் வாசகத்தைக் கூறவும்.

ذَكَرَاللهُ بِخَيْرٍ مَّنْ ذَكَرَنِىْ

பொருள்: என்னை நிறைவு கூர்ந்தவரை அல்லாஹ் நன்மையைக் கொண்டு நினைவு கூர்வானாக!

முஸ்லிம் ஒருவர் சிரிக்க கண்டால்:

اَضْحَكَ اللهُ سِنَّكَ

பொருள்: அல்லாஹுத்தஆலா உன்னை (என்றும்) சிரித்துக் கொண்டிருசக்கச் செய்வானாக!

கொடுத்தக் கடனைப் பெறும்போது:

اَوْفَيْتَنِىْ اَوْفَى اللهُ بِكَ
பொருள்: எனக்கு நீ நிறைவேற்றினாய். அல்லாஹ் உனக்கு (தன் அருளை) நறைவாக்கித் தருவானாக!

தான் விரும்புகிற பொருளை காணும்போது

اَلْحَمْدُ لِلهِ الَّذِىْ بِنِعْمَتِهِ تَتِمُّ الصَّالِحَاتُ

பொருள்: புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன. அவன் எத்தகையவன் என்றால், அவனுடைய பாக்கியத்தைக் கொண்டே நற்செய்கள் பரிபூரணம் பெறுகின்றன.

விரும்பத்தகாதவற்றைப் பார்க்கும்போது…

اَلْحَمْدُ لِلهِ عَلٰى كُلِّ حَالٍ

பொருள்: எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வுக்கே புகழ்; அனைத்தும்.

கடன்  தொல்லை ஏற்பட்டபோது

اَللّٰهُمَّ اكْفِنِىْ بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ وَاَغْنِنيْ بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ

பொருள்: யா அல்லாஹ் உன்னுடைய ஹலாலானதைக் கொண்டு ஹராமை விட்டும் என்னைத் தடுத்திடுவாயாக! உன் கருணையைக் கொண்டு உன் அல்லாதவற்றை விட்டும் என்னைத் தேவையற்றவனாக்கி  வைத்திடுவாயாக!

மன ஊசலாட்டங்கள் நீங்க…
 
எவரேனும் ஒருவருக்கு மன ஊசாட்டங்கள் ஏற்பட்டால் அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடி,

اَعُوْدُ بِاللهِ مِنَ الشَّنْطَانِ الرَّجِيْمِ

என்று ஓதிக் கொள்ளவும். முடிந்த  அளவு ஊசாட்டம் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்ள முயற்சிக்கவும்.

அல்லது பின்வரும் வாசகத்தை ஓதிக் கொள்ளவும்.

اٰمَنْتُ بِاللهِ وَرُسُلِه

பொருள்: நான் அல்லாஹ்வை கொண்டும் அவனுடைய தூதரைக் கொண்டும் ஈமான் கொண்டேன்.
 
தீய பேச்சு நீங்க:

ஹஜ்ரத் ஹுதைபா ரலியல்லாஹு அன்;ஹு அவர்கள் அறிவிப்பதாவது, ‘ நான் என்னுடைய நாவின் கூர்மையை (தீய பேச்சை) ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டேன். அதற்கு அவர்கள், ‘பாவமன்னிப்பு தேடுவதை நீர் ஏன் விட்டுவிட்டீர்? நிச்சயமாக நான் ஒவ்வொரு நாளும் 100 தடவை பாவமன்னிப்பு தேடுகிறேன்’ என்று கூறினார்கள்.

கோபம் தணிய:

எவருக்காவது கோபம் ஏற்பட்டால் ‘அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்’; என்று சொல்லவும். கோபம் தணிந்து விடும் என்று ஒரு ஹதீதில் கூறப்பட்டுள்ளது.

கடைத் தெருவவில் செல்லும்போது:

எவரேனும் கடைத் தெருவிற்கு செல்லும்போது பின்வரும் கலிமாவை ஓதினால், அவருக்கு அல்லாஹு தஆலா பத்து இலட்சம் நன்மைகளை எழுதி, பத்து இலட்சம் பாவங்களை அழிதது, பத்து இலட்சம் பதவிகளை உயர்த்துகிறான். சொர்க்கத்தில் அவருக்காக ஒரு மாளிகையை கட்டுவான்’ என ஒரு  ஹதீதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

لَا لِلٰهَ اِلَّا اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِىْ وَيُمِيْتُ وَهُوَ حُىٌّ لَّا يَمُوْتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ

பொருள்: வணக்கத்திறகுரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதோர் இணையுமில்லை. அவனுக்கே ஆட்சியனைத்தும். அவனுக்கே புகழனைத்தும். அவனே (எல்லாப் பொருட்களுக்கும்) உயிர்க் கொடுக்கிறான். அவனே (எல்லாப் பொருட்களையும்) மரணிக்கச் செய்கிறான். அவன் என்றும் உயிருள்ளவன். அவன் மரணமடையவே மாட்டான். நன்மையனைத்தும் அவன் வசமே. அவன் எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி பெற்றவன்.

துன்பப்படுவோரைக் கண்டால்….

துன்பத்தில் பீடிக்கப்பட்டுள்ள மனிதரைக் காணும்போது மெதுவாக பின்வரும் துஆவை ஓதிக் கொள்ள வேண்டும்.

اَلْحَمْدُ لِلهِ الَّذِىْ عَافَانِىْ مِمَّا ابْتَلَاكَ بِه وَفَضَّلَنِىْ عَلٰى كَثِيْرٍ مِّمَّنْ خَلَقَ تَفْضِيْلًا

பொருள்: உன்னை அல்லாஹுதஆலா எதைக் கொண்டு சோதித்துள்ளானோ அதை விட்டும் எனக்கு சுகமளித்து, அவன் படைத்தவற்றில் அதிகமானவற்றை விட என்னை மிகச் சிறப்பாக்கி வைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

இவ்வாறு இந்த துஆவை ஓதிக் கொள்ளும் போது, வாழ்வில் அவருக்கு அத்துன்பம் ஏற்படாது என ஒரு ஹதீதில் அருளப்பட்டுள்ளது.

பொருள் காணமாமல் போனால்:

ஏதேனும் ஒரு பொருள் காணாமல் போனால் அல்லது அடிமை, மிருகம் ஓடிப் போய்விட்டால் பின்வரும் துஆவை ஓத வேண்டும்.

اَللّٰهُمَّ رَآدَّالضَّآلَّةِ وَهَادِىَ الضَّلاَ لَةِ اَنْتَ تَهْدِىْ مِنَ الضَّلَالَةِ ، اُرْدُدْ عَلَىَّ ضَالَّتِىْ بِقُدْرَتِكَ وَسُلْطَانِكَ فَاِنَّهَا مِنْ عَطَآءِكَ وَفَضْلِكَ

பொருள்: யா அல்லாஹ்! தவறிப் போனதைத் திருப்பித்  தருபவனே! வழிகேட்டை விட்டும் நேர்வழி காட்டுபவனே! நீயே வழி வழிகேட்டை விட்டும் நேர்வழி காட்டுகிறாய். என்னுடைய தவறிய பொருளை உன்னுடைய ஆற்றலின் பொருட்டாலும் உன் அதிகாரத்தின் பொருட்;டாலும் எனக்குத் திருப்பித் தந்திடுவாயாக! ஏனெனில், நிச்சயமாக அப்பொருள் உன் கொடையினாலும் உன் கருணையினாலும் கிடைக்கப் பெற்றதாகும்.

ஜோஸியம் பார்த்ததின் பரிகாரம்

اَللّٰهُمَّ لَاخَيْرَ اِلاَّ خَيْرُكَ ، وَلاَ طَيْرَ اِلَاّ طَيْرُكَ ، وَلَآ اِلٰهَ غَيْرُكَ

பொருள்: யா அல்லாஹ்! உன்னுடைய நன்மையைத் தவிர வேறு எந்த நன்மையும் கிடையாது. உன்னுடைய சகுணத்தைத் தவிர வேறு எந்த சகுணமும் கிடையாது. உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறு யாரும் இல்லை.

கண் திருஷ்டி நீங்க:

بِسْمِ اللهِ ، اَللّٰهُمَّ اذْهَبْ حَرَّهَا وَبَرْدَهَا وَوَصَبَهَا

பொருள்: அல்லாஹ்வின் திருப்பெயரால்.. யா அல்லாஹ்! இதனுடைய உஷ்ணத்தையும் இதனுடைய குளிர்ச்சியையும் இதனுடைய வேதனையையும் போக்கிவிடுவாயாக!

பிறகு பின்வருமாறு கூற வேண்டும்.

قُمْ بِاِذْنِ اللهِ

பொருள்: அல்லாஹ்வின் அனுமதி கொண்டு எழுந்து செல்வாயாக!

பேய் பிசாசு பிடித்தால்:

எவருக்கேனும் ஜின், ஷைத்தான் கோளாறு ஏற்பட்டால் அவரை முன்னால் உட்கார வைத்துக் கொண்டு பின்வரும் பதினோரு ஆயத்துக்களையும் மூன்று சூராக்களையும் ஓதி ஊத வேண்டும்.

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ٭الرَّحْمَٰنِ الرَّحِيمِ٭مَالِكِ يَوْمِ الدِّينِ٭إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ٭اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ٭صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ٭٭
الم٭ ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ٭ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ٭ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ٭ أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُون٭

اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ٭

لِّلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ ۖ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ ۗ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ٭آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِن رَّبِّهِ وَالْمُؤْمِنُونَ ۚ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّن رُّسُلِهِ ۚ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا ۖ غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ٭لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ ۗ رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ٭

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ ۚ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ٭

إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ يَطْلُبُهُ حَثِيثًا وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ بِأَمْرِهِ ۗ أَلَا لَهُ الْخَلْقُ وَالْأَمْرُ ۗ تَبَارَكَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ٭
فَتَعَالَى اللَّهُ الْمَلِكُ الْحَقُّ ۖ لَا إِلَٰهَ إِلَّا هُوَ رَبُّ الْعَرْشِ الْكَرِيمِ٭وَمَن يَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ لَا بُرْهَانَ لَهُ بِهِ فَإِنَّمَا حِسَابُهُ عِندَ رَبِّهِ ۚ إِنَّهُ لَا يُفْلِحُ الْكَافِرُونَ٭وَقُل رَّبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنتَ خَيْرُ الرَّاحِمِينَ٭

وَالصَّافَّاتِ صَفًّا٭فَالزَّاجِرَاتِ زَجْرًا٭فَالتَّالِيَاتِ ذِكْرًا٭إِنَّ إِلَٰهَكُمْ لَوَاحِدٌ٭رَّبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ٭إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ٭وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ مَّارِدٍ٭لَّا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ الْأَعْلَىٰ وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ٭دُحُورًا ۖ وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ٭إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ٭ فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ خَلْقًا أَم مَّنْ خَلَقْنَا ۚ إِنَّا خَلَقْنَاهُم مِّن طِينٍ لَّازِبٍ٭

هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَالِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ ۖ هُوَ الرَّحْمَٰنُ الرَّحِيمُ٭هُوَ اللَّهُ الَّذِي لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْمَلِكُ الْقُدُّوسُ السَّلَامُ الْمُؤْمِنُ الْمُهَيْمِنُ الْعَزِيزُ الْجَبَّارُ الْمُتَكَبِّرُ ۚ سُبْحَانَ اللَّهِ عَمَّا يُشْرِكُونَ٭هُوَ اللَّهُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ ۖ لَهُ الْأَسْمَاءُ الْحُسْنَىٰ ۚ يُسَبِّحُ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ ۖ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ٭

وَأَنَّهُ تَعَالَىٰ جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا٭وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا٭

قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ٭اللَّهُ الصَّمَدُ٭لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ٭وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ٭
قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ٭مِن شَرِّ مَا خَلَقَ٭وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ٭وَمِن شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ٭وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ٭
قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ٭مَلِكِ النَّاسِ٭إِلَٰهِ النَّاسِ٭مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ٭الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ٭ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ٭

விஷக்கடிக்கு:

ஒருவருக்கு பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துகள் கடித்துவிட்டால் ஏழு தடவை ஸூரத்துல் பாத்திஹாவை ஓதி அவர் மீது ஊத வேண்டும்.

இன்னும் தண்ணீரையும், உப்பையும் சேர்த்து கடித்த இடத்தில் வைத்து தேய்க்க வேண்டும். உடனே காபிரூன், பலக், நாஸ் ஸூராக்களை ஓதி ஊத வேண்டும்.

அல்லது பின் வரும் துஆவை ஓதி ஊதலாம்.

شَجَّةٌ قَرَنِيَّةٌ مِلْحَةُ بَحْرٍ بِسْمِ اللهِ

பொதுவாக ஓதப்படும் துஆக்கள்:

اَللّٰمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ وَالْمَغْرَمِ وَالْمَأثَمِ اَللّٰهُمَّ اِنِّىْ اَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ النَّارِ وَفِتْنَةِ النَّارِ وَفِتْنَةِ الْقُبْرِ وَعَذَابِ الْقَبْرِ وَشَرِّ فِتْنَةِ الْغِنٰى وَشَرِّ فِتْنَةِ الْفَقْرِ وَمِنْ شَرِّ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ، اَللّٰهُمَّ اَغْسِلْ خَطَايَاىَ بِمَآءِ الثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّ قَلْبِىْ مِنَ الْخَطَايَا كَمَا يَنَقَّ الثَّوْبُ الْاَبْيَضُ مِنَ الدَّنَسِ وَبَاعِدْ بَيْنِىْ وَبَيْنَ خَطَايَاىَ كَمَابَاعَدْتَّ بَيْنَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ.

பொருள்: யா அல்லாஹ்! நிச்சயமாக நான் இயலாமை, சோம்பல், கோழைத்தனம், தள்ளாத வயோதிகம், கடன், பாவம், அனைத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்;புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் நரகத்தின் வேதனை, நரகத்தின் குழப்பம், கப்ரின் குழப்பம், கப்ரின் வேதனை, செல்வத்தால் ஏற்படும் குழப்பத்தின் தீமை, வறுமையால் வரும் குழப்பத்தின் தீமை, பெரும் பொய்யனான தஜ்ஜாலின் தீமை ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். யாஅல்லாஹ்! என்னுடைய தவறுகளை குளிர்ந்த தண்ணீரைக் கொண்டும், பனிக்கட்டியைக் கொண்டும் கழுவிவிடுவாயாக! வெள்ளைத் துணி அழுக்கை விட்டும் சுத்தப்படுத்துவதுபோல் தவறுகளை விட்டும் என் இதயத்தை நீ சுத்தப்படுத்துவாயாக! கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையே நீண்ட தொலைவை நீ ஏற்படுத்தியிருப்பது போல், எனக்கும் என் தவறுகளுக்கும் இடையே நீண்ட தூரத்தை ஆக்கியருள்வாயாக!

اَللّٰهُمَّ اِنَّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْهَرَمِ ، وَاَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ ،

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் இயலாமை, சோம்பல், கோழைத்தனம், தள்ளாத வயோதிகம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இன்னும் வாழ்வின் குழப்பம், மரணத்தின் குழப்பம் ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

اَللّٰهُمَّ اِنَّىْ اَعُوْذُ بِكَ بِعِزَّتِكَ ، لَآ اِلٰهَ اِلَّآ اَنْتَ ، اَنْ تُضِلَّنِى ، اَنْتَ الْحَىُّ الَّذِىْ لاَيَمُوْتُ وَالْجِنُّ وَالْاِنْسُ يَمُوْتُوْنَ .

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னுடைய கண்ணியத்தைக் கொண்டு உன்னையன்றி வணக்கத்திற்குரியவன் வேறு எந்த நாயனுமில்லை என்று கூறி, என்னை நீ வழி கெடுப்பதை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்றும் மரணிக்காத நித்திய ஜீவன். ஜின்களும், மனிதர்களும் மரணிப்பவர்கள்.

اَللّٰهُمَّ اِنَّىْ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَاعَمِلْتُ وَمِنْ شَرِّ مَالَمْ اَعْمَلْ

யாஅல்லாஹ்! நான் செய்திட்ட செயலின் தீங்கை விட்டும், நான் (இதுவரை) செய்யாத செயலின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

اَللّٰهُمَّ اِنَّىْ اَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَاعَلِمْتُ وَمِنْ شَرِّ مَالَمْ اَعْلَمْ

யாஅல்லாஹ்! நான் அறிந்திட்ட செயலின் தீங்கை விட்டும், நான் (இதுவரை) அறியாத செயலின் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

اَللّٰهُمَّ اِنَّىْ اَعُوْذُ بِكَ مِنَ الْفَقْرِ وَالْفَاقَةِ وَالذِّلَّةِ وَاَعُوْذُ بِكَ مِنْ اَنْ اَظْلِمَ اَوْ اُظْلَمَ

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் வறுமை, சிரமம், கேவலம், ஆகியவற்றை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன். இன்னும் நான் அநியாயம் செய்வதை விட்டும், அநியாயம் செய்யப்படுவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

اَللّٰهُمَّ رَبَّنَا اٰتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّفِى الْاٰخِرَةِ حَسَنَةً وَّقِنَا عَذَابَ النَّارِ

யாஅல்லாஹ்! எங்களுக்கு இவ்வுலகில் அழகிய வாழ்வையும் மறுமையில் அழகிய வாழ்வையும் தந்து, நரக நெருப்பை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக!

اَللّٰهُمَّ اَغْفِرْلِىْ خَطِيْئَتِىْ وَجَهْلِلى وَاِسْرَانِىْ فِىْ اَمْرِىْ وَمَااَنْتَ اَعْلَمُ بِه مِنِّىْ

யாஅல்லாஹ்! என்னுடைய தவறுதலையும், என் அறியாமையையும், என்னுடைய காரியத்தில் நான் வரம்பு மீறியதையும், என்னிலிருந்து எதை நீ மிகவும் அறிந்திருக்கிறாயோ அக்குற்றத்தையும் எனக்கு மன்னித்தருள்வாயாக!

اَللّٰهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلٰى طَاعَتِكَ

யாஅல்லாஹ்! இதயங்களை திருப்புகிறவனே! எங்களுடைய இதயங்களை உன்னுடைய வழிப்பாட்டின் பக்கம் திருப்புவாயாக!

اَللّٰهُمَّ اهْدِنِىْ وَسَدِّدْنِىْ

யாஅல்லாஹ்! என்னை நேரான வழியில் நடத்தாட்டி வைப்பாயாக! இன்னும் என்னை (அதில்) நிலைப்படுத்தி வைப்பாயாக!

اَللّٰهُمَّ اِنِّىْ اَسْئَلُكَ الْهِدَايَةَ وَالسِّدَادَ

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான் உன்னிடத்தில் நேர்வழியையும், போதுமென்ற தன்மையையும் வேண்டுகிறேன்.

اَللّٰهُمَّ اغْفِرْلِىْ وَارْحَمْنِىْ وَعَافِنِيْ وَارْزُقْنِىْ وَاهْدِنِىْ

யாஅல்லாஹ்! என்னை மன்னித்து எனக்கு அருள் புரிந்து, எனக்கு சுகமளித்து, எனக்கு உணவளித்து, என்னை நேர்வழியில் நடத்தாட்டுவாயாக!

اَسْأَلُ اللهَ الْعَافِيَةَ فِى الدُّنْيَا وَالْاٰخِرَةِ

இம்மையிலும் மறுமையிலும் நற்சுகத்தை அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்.

اَللّٰهُمَّ اِنِّىْ اَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَة

யாஅல்லாஹ்! நிச்சயமாக நான், உன்னிடத்தில் மன்னிப்பையும், நற்சுகத்தையும் வேண்டுகிறேன்.