தப்லிகில் என்ன குறை ?
By Sufi Manzil
த்ப்லிகில் என்ன குறை ?
அவர்கள் தொழுகைக்கு தான் அழைக்கிறார்கள் தக்க பதில் ஆதாரத்துடன்
Abdul Kather abdul_kather30@yahoo.in 13-10-2009
தங்களுடைய கேள்வி வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் இருந்தது. உங்கள் அறியாமையைக் கண்டு ஆச்சரியப்பட்டோம். எங்களுடைய வெ; தளத்தை முழுமையாகப் பார்த்தாலே உங்கள் கேள்விக்குப் பதில் கிடைத்திருக்கும். தப்லீக் ஜமாத்தினர்கள் எழுதிய நூற்களிலிருந்தே அவர்களின் பேமாசமான கருத்துக்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளதை தாங்கள் பார்ப்பீர்கள்.
தப்லீக் ஜமாஅத்தின் ஸ்தபாகரான மௌலவி இல்யாஸே சத்தியம் செய்து சொல்கிறார், 'ளஹீருல் ஹஸன்! மக்கள் இதை தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் சத்தியம் செய்து சொல்கிறேன் இத ஒரு போதும் தொழுகைக்கு அழைக்கும் இயக்கம் அல்ல…'
நூல்: தீனி தஃவத் பக்கம் 105.
தப்லீக் ஜமாத்தில் ஈடுபடுபவர்கள் கூட மக்களை அழைக்கும் போது சறிது நேரம் பயானுக்கு வாருங்கள், கஸ்து,ஜோடு, இஜ்திமாவுக்கு வாருங்கள் என்றுதான் அழைக்கிறார்களே தவிர தொழுகைக்கு வாருங்கள் என்று கூப்பிடுவதாகத் தெரியவில்லை.
தொழுகைக்கு அழைப்பதற்கென்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த வழி முறையான அதான் (பாங்கு) இருக்கும்போது, புதியதாக இந்த பெயரில் இயக்கம் தேவைதானா? இதற்குத்தான் 'தப்லீக்' என்பதா?
உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக! ஆமீன்!