ஞான முதமே மானிடர்க் கூடி…
By Sufi Manzil
ஞான முதமே மானிடர்க் கூடி
ஞானந் தனிலே மாபுகழ் பாடி
கமலும் ஒலி நாதா
கருணை நபி பேரா!
கலையுறு ஜீலான் பதி மீதே
கவி அபுசாலிஹ் மகவாக
நிலைப் பெற இஸ்லாம்
நெறித் தர வந்த
நீதி முஹிய்யிதீன் நாயகரே!
பொய் புவி இன்பம் மேலெனவே
மொழி விழிந்தோர் மன்னர்தனிலே
மெய் நிலை யோங்க
அமுதுரைத் தந்த
மா முஹிய்யித்தீன் நாயகரே!
தசைமிசை தவமார் ஒலிகளுக்கே
தலையெனத் திகழும் மணி விளக்கே
நிறைவுட னிஸ்லாம்
முறையினில் வாழ்ந்த
திரு முஹிய்யிதீன் நாயகரே!!
அப்துல் காதிரெனும் பேரால்
அற்புத மாற்றிய ஒலி மேரே
இப்புவி தீனோர்
இதயத்தில் இலங்கும்
எழில் முஹிய்யிதீன் நாயகரே!!
பெருவளம் சூழும் பகுதாதிலே
நறுமணம் வீசிடும் அதிபரே
மறுவதிலாக மதி யமுதான
குரு முஹிய்யிதீன் நாயகரே!
(நிறைவு)