ஞானத்தின் திறவுகோல்…

ஞானத்தின் திறவுகோல்…

By Sufi Manzil 0 Comment June 24, 2015

ஞானத்தின் திறவுகோல்

       நாயகம் அல்லவா – நபி(2)

கானத்தின் நான் அதைக்

       கொஞ்சம் இங்கு சொல்லவா!

பள்ளிச் சென்று படித்த தில்லை

       பாடம் ஏதும் கேட்டதில்லை

சொல்லித் தரும் தகுதி இந்த

       துன்யாவில் எவர்க்கு மில்லை

அல்லாஹ்வே ஆசிரியன்

       அனைத்துமே ஆச்சரியம்

சொன்னதெல்லாம் நீதிகளே

       சத்தியத்தின் சேதிகளே!

வானமதைப் பார்த் திருந்தார்

       வள்ளல் நபி சிந்தித்தார்

கான மலைக் கடல் அலையைக்

       கண்டிறையைப் புகழ்ந்திட்டார்

இறைவன் சொல்லித் தந்தான்

       ஏந்தல் நபி அள்ளிக் கொண்டார்

சொன்ன தெல்லாம் நீதிகளே

       சத்தியத்தின் சேதிகளே!

ஹீரா யெனும் மலைக் குகையே

       இள நிலைப் பள்ளிக் கூடம்

சீரான வஹீ மூலம்

       சிந்தனையாய் பலப் பாடம்

ஜிப்ரீல் ஏந்தி வந்தார்

சாந்த நபி எழுதிக் கொண்டார்

சொன்னதெல்லாம் நீதிகளே

       சத்தியத்தின் சேதிகளே!

கலிமா தொழுகை நோன்பு

       ஜகாத்து ஹஜ்ஜுடனே

பழுது ஏதுமில்லா

       பண்பான வாழ்க்கை முறை

வகுப்புகள் நடந்தனவே

       வாஞ்சை நபி தொடர்ந்தனரே

சொன்ன தெல்லாம் நீதிகளே

சத்தியத்தின் சேதிகளே!

பொருளியல் அரசியலில்

       புதுமை விஞ்ஞான மதில்

அருளியல் இல்லறத்தில்

       ஆன்மீக வழிமுறையில்

எத்துறையும் கற்றிருந்தார்

       ஏகன் அருள் பெற்றுயர்ந்தார்

சொன்னதெல்லாம் நீதிகளே

       சத்தியத்தின் சேதிகளே!

பண்பான நபி பெருமான்

       பல்கலைக் கழக மன்றோ

அன்பான மாணவராய்

       அவர் வழி உம்மத் தன்றே

தேர்வினிலே வென்றிடுவோம்

       தீன் வழியில் நின்றிடுவோம்

சொன்;னதெல்லாம் நீதிகளே!

       சத்தியத்தின் சேதிகளே! (2)

(ஞானத்தின்…)

(நிறைவு)

Add Comment

Your email address will not be published. Required fields are marked *