ஜாமிஉல் அஸ்ஹர் பள்ளி பற்றி வெளிவந்த மார்க்க பிரசுரம்
By Sufi Manzil
சிந்தித்துச் செயலாற்றுங்கள்
அவுலியாக்கள், அறிஞர்கள், புலவர் பெரமக்கள் ஆகியோர் தோன்றி மறைந்ததும், அகிலமெங்கும் புகழோங்கி நின்றதுமான காயல்பட்டணத்தில் வாழும் முஸ்லீம் பெருங்குடி மக்களே!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆண்டவனின் படைப்புகளுக்கெல்லாம் மனிதனே மேலானவன் என்பதற்கு அவனால் அளிக்கப்பட்ட பகுத்தறிவு ஒன்றே காரணமாகும். அந்த அறிவை கொண்டுதான் நல்லது, கெட்டது, உண்மை, பொய் என்பவற்றை எல்லாம் மனிதனால் அறிய முடிகிறது.
அப்படிப்பட்ட நல்ல அறிவை நல்வழியில் பயன்படுத்துகிறவனே மனிதருள் சிறப்புடையவன். ஆகவே, ஆண்டவனின் திருவசனங்களாகிய திருகுர்ஆனில் கூறப்பட்டுள்ள சில சில கருத்துக்களையும், நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய ஹதீதுகளிலிருந்து சிலவற்றையும், அறிவிற் சிறந்த அல்லா மக்களால் அளிக்கப்பட்ட மார்க்கத் தீர்ப்பையும் இதன் கீழ் எடுத்துக்கூறி உண்மை எது என்பதை தெரிந்து நடக்க உங்கள் மேலான சிந்தனைக்கு இந்தச் செய்தியை அளிக்கின்றோம்.
1. அல்லாஹ்வின்; கயிற்றை எல்லோரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள். உங்களுக்குள் பிரிவினையை உண்டாக்க வேண்டாம். ஆண்டவன் உங்களுக்கு இட்ட பாக்கியத்தைச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பகைவர்களாக இருந்தீர்கள், ஆண்டவன் உங்கள் மனதில் அன்பை உண்டாக்கினான். அவன் கிருபையினால் நீங்கள் சகோதரர்களானீர்கள். (குர்ஆன்)
2. 'ஆண்டவன் உங்களுடைய வெளித்தோற்றங்களையும், பொருள்களையும் பார்க்க மாட்டான். ஆனால், உங்களுடைய செய்கைகளையும், உள்ளங்களையுமே கவனிக்கிறான்.' (ஹதீது)
3. முஃமீன்களில் இரு கூட்டத்தார் சண்டை இடுவதாய் இருந்தால், அவர்களுக்குள் சமாதானம் உண்டாகும்படிச் செய்யுங்கள். அவர்களில் எவர்கள் மற்றவர்களுக்கு அனியாயம் செய்தார்களோ, ஆண்டவனின் கட்டளைக்கு தலைசாய்க்கும்வரை அவர்களுடன் நீங்கள் சண்டை செய்யுங்கள். (குர்ஆன்)
4. 'ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும், ஜின்களிலும் ஷைத்தான்கைள பகைவர்களாக ஆக்கி இருக்கின்றோம். அவர்களிற் சிலர், மற்றும் சிலரை மிரட்டுவதற்காக மேற்பூச்சான விஷயங்களை அறிவிக்கின்றார்கள். (தவறானதும், பொய்யானதுமான செய்திகளை ஒருவர் மற்றவர்களுக்குச் சொல்லிக் கொள்வார்கள்.' (குர்ஆன்)
5. 'பாபச் செயல்களை விட்டு விலகி சன்மார்க்கத்தில் ஒழுக வேண்டும் என்பதற்காகவே, தரித்திரம், நோய் முதலியவற்றாலும், வெற்றி, விருத்தி முதலியவற்றாலும் இறைவன் மனிதனைச் சோதிக்கின்றான். அவற்றின் மூலம் அவன் திருந்தாவிடில் திடீரென அவன் தண்டிக்கப்படுவான். (குர்ஆன்)
6. 'நயவஞ்சகர்களில் (முனாபிக்குகளில்) மரித்தவர்களுக்காக நபியே! நீர் தொழ வேண்டாம், இறைஞ்சவும் வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய ரசூலுக்கும் மாற்றம் செய்யாதவர்கள். (குர்ஆன்)
7. முஸ்லிம்கள் அனைவரம் ஒரே மனிதனுக்குச் சாமானமாய் இருக்கிறார்கள். அம்மனிதனுடைய கண்ணில் நோவுண்டாயின், அவனுடைய சரீரம் முழுவதிலுமே நோவுண்டானது போலிருக்கும்.' (ஹதீது)
8. 'பாப காரியங்களைச் செய்கிறவனுக்கு அவன் விரும்புவதை ஆண்டவன் கொடுக்கிறானே என்ற நீங்கள் நினைக்க வேண்டாம். அவ்வடிமையைத் தண்டிப்பதற்காகவே இறைவன் அவ்வாறு செய்கிறான். (ஹதீது)
9. முஸ்லிம்களுக்கிடையே பிளவையுண்டாக்கக் கருதி நயவஞ்சகர்கள் (முனாபிக்குகள்) மஸ்ஜித் ழிறார் என்ற ஒரு புதிய பள்ளியைக் கட்டினார்கள். நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தபூக் சண்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்திலே அந்த நயவஞ்சகர்கள் நாங்கள் கட்டிய பள்ளிக்குத் தொழ வரவேண்டுமென நபியவர்களை அழைத்தார்கள். சண்டைக்குச் சென்று திரும்பி வந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனச் சொல்லி, நபியவர்கள் சென்று விட்டார்கள்.
சண்டை முடிந்து திரும்பி வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலெ 'முஸ்லிம்களுள் பிளவையுண்டாக்க வேண்டும், அவர்களுக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்பதற்காகவே, அந்த மஸ்ஜித் ழிறார் என்ற பள்ளி, நயவஞ்சகர்களால் கட்டப்பட்டிருக்கிறது. நன்மையைக் கருதியே அப்பள்ளியை நாங்கள் கட்டினோம் என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்.
நபியே! நீர் அங்கு செல்ல வேண்டாம். ஆரம்பத்திலே உள்ள பள்ளிதான் நீர் தொழவும், தொழவைக்கவும் தகுதியானது' என்று நபியவர்களுக்கு அல்லாஹ் அறிவித்தான். பிறகு நபிகள் திலகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கட்டளைப்படி மஸ்ஜிதுல் ழிறார் என்ற அந்தப் பள்ளி நெருப்புக்கிரையாக்கப்பட்டது. (இந்த சம்பவம் திருகுர்ஆன் ஸுஜ்வு 9 ஆயத்து 107, 108, 110 லும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சரித்திரத்திலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது)
பகுத்தறிவு பெற்ற உலமாக்களே!
அல்லாஹ்வையும், அவனின் திருத்தூதரையும் உண்மையாகவே ஒப்புக் கொண்ட நல்லடியார்களே! இம்மாதம் 26ஆம் தேதி (26-9-58) வெள்ளிக்கிழமையன்று மக்களுக்குள் நிரந்தரப் பிளவையுண்டாக்கும் ஒரு சின்னமாக ஜாமிஉல் அஸ்ஹர் என்ற பெயரால், ஒரு புதுப்பள்ளியை துவக்கப் போகிறார்கள்.
இவ்வூரிலே பிறந்து, இவ்வூரிலே வளர்ந்து, இவ்வூர் நிலைகளைத் தெரிந்து நன்கறிந்து ஆண்டவனுக்கும் அவனுடைய ரசூலுக்கும் வழிப்பட்டு அணுவளவும் பிசகின்றி வாழ்ந்து அல்லாஹ்வின் திருலிகாவை அடைந்தவரும், யாருடைய விருப்பையும், வெறுப்பையும், பொருட்படுத்தாமல் நேர்மையைக் கடைபிடிதது மக்கள் உள்ளங்களிலே நல்லாரெனப் பள்ளிகொண்டவருமான ஆலிமுல் காமில் ஹாஜுல் ஹறமைனிஷ்ஷரீபைன், நஹ்வி முஹம்மது இஸ்மாயீல் முப்தி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களாலும், அல்ஆலிமுல் பாஸில் ஹாஜுல் ஹறமைன் ஹாபிஸுல் (குர்ஆன்) முஹ்யித்தீன் தம்பி முப்தி (முதர்ரிஸ், மஹ்ழறத்துல் காதிரிய்யா) அவர்களாலும், அல் ஆலிமுல் முப்தி ஹிஸ்புல்லாஹ் சபைத் தலைவர் அஷ்ஷெய்குல் காமில் சின்ன அ.க. செய்கப்துல் காதிறு சூபி (நூரீ) அவர்களாலும், மற்றும் இதனடியில் கண்ட மதிப்புக்குரிய உலமாக்களாலும் காயல்பட்டணத்தில் ஏக காலத்தில் இரண்டு ஜும்ஆக்கள் நடத்துவது ஷாபிஇய்யீ மதுஹபின் படி முற்றிலும் மாற்றமானதும், விலக்கப்பட்டதுமாகும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
ஆகவே, சகல காரியங்களிலும் கலந்துறவாடும் இவ்வூர் மக்களிற் சிலர் இறைவணக்கத்தில் மாத்திரம் பிரிந்து கொள்ள எவ்வித சூழ்நிலைகளும் இல்லாத நிலையில் இவ்வாறு பிரிந்து ஜும்ஆத் தொழுவது ஒருக்காலும் கூடாதென்ற உலமாக்களின் நல்ல தீர்ப்பை இங்குள்ள பெரும்பான்மை மக்கள் அசைக்க முடியாத உறுதிபாட்டுடன் ஒப்புக் கொண்டு ஒழுகிவருகின்றார்கள்.
நல்லடியார்களாகிய எல்லோரும் அந்தப்படியே ஒப்புக் கொண்டு ஒழுக வேண்டுமென்றும் புதிய பள்ளியில் நடைபெறும் ஜும்ஆத் தொழுகைக்கு செல்வது கூடாதென்றும் இதன் மூலம் அறிவவித்துக் கொள்கிறோம்.
ஆகாதென்று தீர்ப்பளித்த அல்லாமாக்களின் பெயர்கள்:-
1. அல்-ஆலிமுல் காமில் ஹாஜுல் ஹறமைனிஷஷரீபைன் நஹ்வி முஹம்மதிஸ்மாயில் முப்தி (ரஹிமஹுல்லாஹு ) அவர்கள்
2. அல் ஆலிமுல் பாஸில், ஹாஜுல் ஹறமைன், ஹாபிஸுன் குர்ஆன், முஹிய்யித்தீன் தம்பி முப்தி அவர்கள்.
3. அல் ஆலிமுல் முப்தி, ஹிஸ்புல்லாஹ் சபைத் தலைவர், அஷ்ஷெய்குல் காமில் சின்ன அ.க. செய்கப்துல் காதிறு சூபி (நூரீ)
4. அல் ஆலிமுல் பாஸில், பாளையம் ஹபீபு முகம்மது அவர்கள்
5. சென்னை கவர்ண்மென்ட் காஜி, மவுலவி, அல்ஹாஜ் முகம்மது ஹபீபுல்லா சாகிபு அவர்கள்
6. சென்னை மவுலவி அபுல் பரகாத்
7. சென்னை அல் ஆலிமுல் முப்தி சுல்தான் அஹ்மது சாகிபு அவர்கள்
8. அல் ஆலிமுல் பாஸில் ஹாஜி முஹம்மது முஸலியார் (மலபாரீ) அவர்கள்
9. சென்னை ஹாஜி, அல் ஆலிமுல் பாஹிம், செய்யிது ஷாஹ் முகம்மது விகாயதுல்லா சாகிப் காதிரிய்யி அவர்கள்
10. அல் ஆலிமுல் ஹாபிஸ், முஹம்மது மகுதூம் தம்பி அவர்கள்
11. அல் ஆலிமுல் ஹாபிஸ் முஹம்மது சதக்கத்துல்லா அவர்கள்
12. அல் ஆலிமுல் ஹாபிஸ் அல்ஹாஜ் முகம்மது லெப்பை உஸ்தாதுனா அவர்கள்
13. அல் ஆலிம் கோஜா முஹம்மது லெப்பை
14. அல் ஆலிமுல் ஹாபிஸ் நஹ்வி செய்யிது அஹ்மது அவர்கள்
15. அல் ஆலிம் செய்யிது முகம்மது புகாரி
16. அல் ஆலிம் செய்யிது முகம்மது புகாரி (மஹ்ழரிய்யா காதிமுல் கௌம்) அவர்கள்
17. அல் ஆலிமுல் ஹாபிஸ் நஹ்வி முகம்மது இஸ்ஹாக் லெப்பை அவர்கள்
18. அல் ஆலிம், நூ.கு. முகம்மது இஸ்மாயில் அவர்கள்
19. அல் ஆலிமுல் பாஸில், முகிய்யத்தீன் மாமுனா லெப்பை (பாகவி) அவர்கள்
20. அல் ஆலிமுல் ஹாபிஸ், காரீ விளக்கு முகம்மது உமர் அவர்கள்
21. அல் ஆலிமுல் ஹாபிஸ் நஹ்வி செய்கப்துல் காதிர் அவர்கள்
22. அல் ஆலிமுல் ஹாபிஸ் ஹாமிது லெப்பை முப்தி (இப்னு மாதிஹுல் கௌது) அவர்கள்
23. அல்ஹாஜ் முகம்மது மக்கீ ஆலிம் அவர்கள்3
24. அல் ஆலிமுல் பாஸில் மவுலவி முகம்மது நூஹ் கண்ணு (பாகவி) அவர்கள்
25. அல் ஆலிமுல் பாளையம் முகம்மது அபூபக்கர் முகிய்யத்தீன் அப்துல்லா லெப்பை அவர்கள்
26. அல் ஆலிமுல் பாஹிம் செ.வா. சாகுல் ஹமீது அவர்கள்
27. அல் ஆலிமுல் பாஹிம் அப்துல்லாஹிப்னு அபூபக்கர் (முதர்ரிஸ் அல் மத்ரஸத்துல் பஹ்ஜதுல் இப்றாஹீமிய்யா, (காலி இலங்கை) அவர்கள்)
28. அல் பாஸிலுல் பாகவி காலித் மவுலவி (முதர்ரிஸ்ஜாமிஆ மஸ்ஜித் பொன்னானி மலபார்) அவர்கள்
29. அல் ஆலிமுல் பாஸில் முகம்மது நெய்னா (முதர்ரிஸ் மத்ரஸதுர் ரற்மானிய்யா அதிராம்பட்டினம்) அவர்கள்
30. அல் ஆலிமுல் பாஸில் அப்துல் காதிறு முகிய்யத்தீன்னூரி (முதர்ரிஸ்மத்ரஸதுல் காதிரிய்யா நாகூர்) அவர்கள்
31. அல் ஆலிமுல் பாஸில் அபுல் ஹக் முகம்மது அப்துல் பாரீ (கேரள ஜமீயத்துல் உலமா சபை தலைவர் வாளகுளம்)
32. அல் ஆலிமுல் பாஸில் அபூபக்கருல் பர்ஹி ( ஜமியதுல் உலமா கேரளா) அவர்கள்
33. அல் ஆலிமுல் பாஸில் அபுல் பஷீர் முகிய்யத்தீன் குட்டி முதர்ரிஸ் மத்ரஸா இஸ்லாஹுல் உலூம் தானூரி) அவர்கள்
34. அல் ஆலிமுல் பாஸில் அப்துல்காதிர் (ஜற்மதனீ மலபார்) அவர்கள்
35. அல் ஆலிமுல் பாஜில் ஜலீல், காதிமுத்துல்லாப் முகம்மது ஹுஸைன் மத்ஹரீ (கீரனூரி) அவர்கள்
பாவலர் S.S. அப்துல் காதிறு
தல் S.M. இபுறாகீம்
S.A. முகம்மது ஆதம்
M.R. உவைஸ்
V.M.S. அனசுத்தீன்