ஜனாஸாவைக் கொண்டு வீட்டு முற்றத்தில் பாத்திஹா, பைத்துகள் ஓதலாமா?
By Sufi Manzil
ஜனாஸாவைக் கொண்டு வீட்டு முற்றத்தில் பாத்திஹா, பைத்துகள் ஓதலாமா?
பதில்: தாரளமாக ஓதலாம். மையித்திற்காக எந்த நேரத்திலும் துஆ கேட்பதற்கும் திக்று, கத்முல் குர்ஆன் ஓதி அதன் தவாபை மைய்யித்திற்கு சேர்த்;து வைப்பதற்கு ஷரீஅத்தில் அனுமதி உண்டு. அமீறுல் முஃமினீன் உமர் பாரூக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஜனாஸாவை(குளிப்பாட்டிய பின்) கட்டிலில் வைத்து ஜனாஸாவை தூக்கும் முன் ஸஹாபாக்கள் சூழ நின்று அன்னாரைப் புகழ்ந்தனர். அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சூழ நின்றவர்களைத் தாண்டி ஜனாஸாவின் அருகில் வந்து நின்று அமீறுல் முஃமினீன் அவர்களைப் புகழ்ந்து பாராட்டியபின் அவர்களுக்காக துஆவும் செய்தார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா
நூல்: முஸ்லிம் பாகம்7,பக்கம் 11
நன்றி: ஹலாவத்துல் ஈமான்.