சுன்னத் வல் ஜமாத் அறிஞர்களால் மொழி பெயர்க்கப்பட்ட சட்ட நூல்கள் வெளியிடுவீர்களா?
By Sufi Manzil
கேள்வி: நம் சூபிமன்ஜிளில் மகானி போல் சட்ட புத்தகம் உள்ளதா?
( ஷாபி அண்ட் ஹனபி) இது மாதிரி இருந்தால் இன்ஷால்லாஹ் வெளியிடுங்கள் எங்களை போல் உள்ளவர்களுக்கு பயன்படும். ஏனெனில் நிறைய குழப்பங்கள் உள்ள புத்தகங்கள்தான் வெளி வருகிறது.
smk.abdul majeed, s.majeed33@gmail.com
Sat, Aug 13, 2011 at 12:37 PM
பதில்:
தற்போது அரபுத் தமிழ் மற்று மொழிகளில் மார்க்க சட்டங்கள் மற்றும் மார்க்க விசயங்கள் அடங்கிய நூல்கள் நமது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களால் எழுதப்பட்டிருப்பினும், அதை தமிழுக்கு மொழி மாற்றம் செய்யும் போது பல தவறுகள் அதாவது சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாற்றமான கொள்களை அதில் இடைச் சொறுகல் செய்தும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை நீக்கியும், மாற்றியும் மொழிபெயர்த்து வெளியிடுகிறார்கள். லேபிள் சுன்னத் வல் ஜமாஅத் புத்தகம். ஆனால் உள்ளே விஷத்தை வைத்திருக்கிறார்கள். இதில் சமீபத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஷாபி மத்ஹபின் சட்ட நூலான மஙானியும் ஒன்று.
தற்போது இந்த நூல் நமது சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களால் அரபுத் தமிழின் மூலப்பிரதியை எவ்வித மாற்றமும் செய்யாமல் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. முடிந்ததும் இன்ஷாஅல்லாஹ் விரைவில் வெளியிடப்படும். பணி சீக்கிரம் முடிய துஆ செய்ய வேண்டுகிறோம்.