குத்பிய்யா ஆகும் என்று ஷெய்குனா அவர்களின் பத்வாஅறிக்கை:

குத்பிய்யா ஆகும் என்று ஷெய்குனா அவர்களின் பத்வாஅறிக்கை:

By Sufi Manzil 0 Comment January 22, 2012

Print Friendly, PDF & Email

63 ஹாஸ்பிடல் ரோடு,
கொழும்பு .26/12/70

அன்பிற்குரிய மவ்லவி சைபுத்தீன் ஆலிம் அவர்களுக்கு,

அல்லாஹ் நல்லருள் புரிவானாக . உங்கள் இரு தபால்களும் வந்து பார்த்தேன். இவிடத்தால் எல்லா பிள்ளைகளும் போயிகொண்டேயிருக்கிறார்கள். இன்ஷாஅல்லாஹ் நானும் ஜனவரி கடைசிக்குள் வருகிறேன். எல்லாக் கருமங்களுக்கும் அல்லாஹ் போதுமானவன்.

தற்போது புதுசாக செய்து வருகிற குத்பியா பற்றி நீங்கள் எழுதிய விபரம் அறிந்தேன். அதுபற்றி சிலர் ஆள் சேர்க்கிறதாகவும், ஆதாரமென்னவென்று கேட்கிறதாகவும் எழுதியிருந்தீர்கள். பொதுவாக அவுலியாக்களை கொண்டு வஸீலா தேடுவது என்ன, எல்லா பொருளைக் கொண்டு கூட வசீலா தேடுவதும் ஆகுமானது. குர்ஆனிலும் ஹதீதுகளிலும் நிறைய வந்துள்ளது.

வசீலாயில்லாமல் ஒரு காரியமும் நடக்காது. அல்லாஹ் எல்லாத்தையும் ஸபபுகளை வைத்து ஸபபுகளைக் கொண்டேதான் நடத்துகிறான். வஸீலா… ஸபபுகளை அல்லாஹ்வின் செயல் வெளியாகும்தானம் -வகை என்று நம்பிக் கொண்டு கேள்பதுக்குத்தான் சொல்லப்படும். ஒருகால் செயலை ஸபபு பக்கம் சேர்த்து உதாரணமாக அவுலியாக்களிடத்தில் நீஞ்கள் உதவி செய்யுங்கள் என்று நேரடியாகவே கேட்டால் இதற்கு அவர்களிடத்தில் உதவி தேடுதல் இஸ்திஙாதா. பேர்கள் சொன்ன போதிலும் இதுவும் வசீலாதான். அதாவது அவுலியாக்களை அல்லாவின் உதவி வருகிற வழி என்று நம்பி கொள்கிறது. இதுதான் முஸ்லிம்களுடைய கருத்து. ஏன் அவர்கள் சகல செயல்களும் அல்லாஹ்வுடையது. அவனிலின்றும் சகலமும் உண்டாகிறது என்று நம்பினார்கள். அவர்கள் வாயிலிருந்து செயலை அவுலியா பக்கம் சேர்த்து வைத்தால் இது செயலை வலி பக்கம் சேர்த்தாகும். அதாவது நிஸ்பத்து மஜாஸியாகும். நிஸ்பத்து மஜாஜிதான் என்பதற்கு அவர்கள் முஸ்லிமாக இருப்பது போதியதாக இருக்கும். அவர்கள் பேரில் அவர்கள் நிஸ்பத்து ஹகீகிய்யாகத்தான் சேர்ந்திருக்கிறார்கள். அதாவது அவுலியாக்களை அவர்களே சுயமாக செய்கிறார்கள் என்று நம்பி செயவை அவர்கள் பக்கம் சேர்த்து சொல்கிறார்கள் என்று அவர்கள் பேரில் கெட்ட எண்ணம் வைப்பது கூடாது. கெட்ட எண்ணம் வைப்பது ஹறாமாகும். வஹ்ஹாபிகள் முஸ்லிம்கள் பேரில் கெட்ட எண்ணம் வைத்துக் கொண்டே அல்லது அவர்களுக்கு வசீலா என்றால் என்ன ஷிர்க்கு என்றால் என்ன வென்றும் தெரியாமலே கண்டதையெல்லாம் ஷிர்க்கு என்று இதுபோலவே பித்அத்து என்றால் என்ன வென்றும் தெரியாமல் உளறுகிறார்கள். செயலை நேரடியாக மற்றவர்கள் பக்கம் சேர்த்து வைக்கிற குர்ஆன், ஹதீது மற்றும் பெரியார்களுடைய வார்த்தை, என்ன சகலர்களுடைய பேச்சிலும் கலந்திருக்கிறது.

இப்போது ஓதக் கூடிய இந்த கைபியத்துபடி முன்னோர்களும் ஓதினதாக ஆதாரம்கேள்கிறதும் மடத்தனமேயாகும். ஏனெனன்றால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், சஹாபாக்களும் ஒரு வேலையை செய்யாதிருந்தால் அதனால் அது கூடாதென்று ஆகாது. அவர்கள் செய்த செயல் அதை செய்வது ஆகுமென்பதைத்தான் குறிக்கும்.