கலைஞானம் கமழும் காயல் பட்டணம்…
By Sufi Manzil
கலைஞானம் கமழும் காயல் பட்டணம்
கடலோரம் வாழும் தீனின் பெட்டகம்
காமில் ஒலியெனப் பார்ப் புகழ்ந்திடும்
கண்ணின் மணி முத்து வாப்பா ஒலி!(2)
அல்லாஹ்வின் தூதர் நபி
நற்பின் அண்ணல்
கலீபா அபூபக்கர் மரபின் கன்னல்
எழில் சூழும் பூவாறு
நூஹு ஒலிப் பேரர் (2)
கண்ணின் மணி முத்து வாப்பா ஒலி!
எங்கள்! (2)
இராமேஸ்வரம் தன்னில் ஒளி வீசியே
இலங்கிடும் இறை நேசர்
இஸ்மாயீல் ஒலி!
மறையாய்ந்த இவரீந்த மைந்தரானவர்
கண்ணின் மணி முத்து வாப்பா ஒலி!
எங்கள் (2)
வஜீ ஹுத்தீன் ஷெய்கு அவர்
வழிக் காட்டலின்
வனத்துள் இருந்தே ஏழாண்டுகள்
சுஜூதென்னும் சீரிய தவமாற்றினார்
கண்ணின் மணி முத்து வாப்பா ஒலி!
எங்கள்! (2)
கொடிய விலங்குகள் நடுவினிலே
கண்ணுறங்காது கானகத்தின்
பசி மறந்தே
முடிவில்லான் அல்லாஹ்விடம்
கசிந் துருகிய
கண்ணின் மணி முத்துவாப்பா ஒலி!
எங்கள்!(2)
விண் மீனை கைக் கொண்
டழைத்தவுடன்
விளக்கினுள் வைத்து ஒளி ஏற்றினார்
தன் பேரர் ஹாமிது ஆலிம்
பயம் நீக்கினார் (2)
கண்ணின் மணி முத்துவாப்பா ஒலி!
எங்கள்! (2)
(கலை ஞானம்…)