கண்ணின் மணி நாயகமே…
By Sufi Manzil
கண்ணின் மணி நாயகமே
கல்பின் நிறை மாணிக்கமே
எண்ணி எண்ணிப் பாடுகிறேன்
எந்தன் நிலைக் காண்பீரோ!
புனிதம் பூக்கும் மதினா –நகர்
வருவேன் வருவேன் நானே (2)
பூமானே உங்கள் ரவ்லா –வே
தஞ்ச மென நான் விழுவேன்
உங்கள் அருள் வேண்டுமே
எனக்கது போதுமே யென
மன்றாடிக் கரமேந்துவேன்!
(கண்ணின் மணி…)
பாவப் பிழைகள் மீதே – தினம்
உலன்றேன் உலன்றேன் நானே (2)
பாசம் பொழியும் நபியே – உம்மை
யல்லால் யாரிடம் போவேன்!(2)
உங்கள் அருள் வேண்டுமே
எனக் கது போதுமே –யென
மன்றாடிக் கரமேந்துவேன்!
(கண்ணின் மணி…)
தீர்ப்பின் நாளில் எந்தன் -கதி
அறியேன் அறியேன் நானே (2)
தங்கள் கொடியின் நிழலில் -இடம்
தருவீர் தருவீர் கோனே(2)
உங்கள் அருள் வேண்டுமே
எனக்கது போதுமே –யென
மன்றாடிக் கரமேந்துவேன்!
(கண்ணின் மணி…)
(நிறைவு)