ஓதிப் பார்ப்பது, உணவுப் பதார்த்தங்களை முன் வைத்து ஓதுவது, தாயத்து போடுவது, தண்ணீர் ஓதி முகத்தில் தெளிப்பதுக்குரிய ஆதாரங்கள்!!
By Sufi Manzil
கேள்வி: முஸ்லிம்கள் ஓதிப் பார்ப்பது, தாயத்து போடுவது போன்ற செயல்களை செய்கிறார்களே! இதற்கு ஆதாரம் இருக்கிறதா?
பதில்: நம்மில் எவருக்கேனும் தலைவலி, காய்ச்சல், மனப் பயம், கண் திருஷ்டி போன்ற நோய்கள் ஏதேனும் ஏற்பட்டால் ஒரு ஆலிமிடமோ, ஷெய்கிடமோ, சாலிஹான மனிதரிடமோ சென்று ஓதி பார்ப்பதன் மூலம் சுகம் கிடைக்கும் என்று ஓதிப் பார்க்கிறோம். இவ்வாறு நாம் செய்வதற்குரிய ஆதாரத்தைப் பார்க்கலாம்.
ஓதிப் பார்ப்பதற்குரிய ஆதாரம்:
رأيت أثر ضربة في ساق سلمة فقلت ما هذه؟ قال: أصابتني يوم خيبر فقال الناس أصيب سلمة فأتى بي رسول الله صلى الله عليه وسلم فنفث في ثلاث نفاثات فما اشتكيتها حتى الساعة
‘நான், ஹழ்ரத் ஸல்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களது கெண்டைக்கால் பகுதியில் காயத்தின் அடையாளமொன்றைக் கண்டு இது எப்படி ஏற்பட்டதென்று கேட்டபோது, இது கைபர் யுத்த களத்தில் வைத்து ஏற்பட்டதென்று கூறினார். பின்னர் இதுபற்றி பலரும் பலவிதமாகப் பேசியபோது நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வரப்பட்டு, நபியவர்கள் மூன்று முறை ஓதி ஊதினர். அதன்பின் இதுவரை அக்காயத்தினால் நான் பாதிக்கப்படவில்லை’ என்று பதிலளித்தனர்.
அறிவிப்பாளர்: யஸீத் இப்னு அபீ உபைத் ரலியல்லாஹு அன்ஹு.
நூல்: புஹாரி, கிதாபுல் மகாஸி, பாபு கஸ்வத்தி கைபர், அபூதாவுத், கிதாபுத் திப்பு, பாகம் 4 பக்கம் 219.
عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم نان اذا اشتما يقرأ في نفسه بالمعوذات وينفث فلما اشتد وجعه كنت أقرأ عليه وامسح عليه بيده رجاء بركتها
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியாதியுற்றால், அவர்கள் சூறத்துல் ஃபலக் மற்றும் சூறத்துன் நாஸ் ஆகிய இரு ஸூராக்களையும் ஓதி தமக்குத் தாமே ஊதிக் கொள்வார்கள். வேதனை அதிகமாக இருந்தால் நான் ஓதி அவர்களது கரத்தில் ஊதுவேன். அதனை அவர்கள் அருளை நாடி தன் மீது தடவிக் கொள்வார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: புஹாரி ஃபழாயிலுல் குர்ஆன், பாபுல் முஅவ்விதத்தைன், முஸ்லிம், பாபு ருகிய்யத்தில் மரீழி ஃபில் முஅவ்விதாத்தி வந்நஃப்ஸ்.
தண்ணீர் ஓதி அடித்தல்:
أن رسول الله عليه وسلم دخل على ثابت بن قيس قال احمد: وهو مريض فقال اكشف البأس رب الناس. عن ثابت بن قيس بن شماس ثم أخذ ترابا من بطحان فخعله في قدح ثم نقث عليه بماء وصب عليه
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் தாபித் இப்னு கைஸ் ரலியல்லாஹு அன்ஹுவின் நலம் விசாரிக்கச் சென்றிருந்தனர். அப்போது, அனைவரையும் பரிபாலிக்கும் ரட்சகனே! நோயை குணப்படுத்துவாயாக! என்று பிரார்த்தித்தனர். பின்னர் மதீனரிலுள்ள பர்ஹானா என்னுமிடத்திலிருந்து சிறிது மண்ணை எடுத்து ஒரு பாத்திரத்திலிட்டு அதில் தண்ணீரையும் கலந்து ஓதி ஊதிய பின் நோயாளியின் மீது ஊற்றினர் நபிகளார்.
அறிவிப்பாளர்: அஹ்மத் இப்னு ஸாலிஹ் ரலியல்லாஹு அன்ஹு.
நூல்: அபூதாவூத், கிதாபுத் திப்பு, பாபுர்ருகா பாகம் 4 பக்கம் 214. இப்னு மாஜா, பாபுல் ஹும்மா மின் ஃபைஹிஜஹன்னம்.
நபிகள நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜம்ரத்துல் அகபாவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கும்போது ஒரு பெண் நோயால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை ஒன்றுடன் நபியவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தாள். அவள் நபியவர்களை நோக்கி, அல்லாஹ்வின் ரஸூலே! இக்குழந்தைதான் எனது குடும்பத்தின் கடைசி குழந்தை. இது நோயால் பாதிக்கப்பட்டு பேசும் சக்தியை இழந்து விட்டுள்ளது என்று கூறவே, அது கேட்ட நபியவர்கள்,…
ائتوني بشئ من ماء فأتيي بماء فغسل يديه ومضمض فاه ثم أعطاها فقال: اسقيه منه وصبي عليه منه واستشفى الله له
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வருமாறு சொல்ல, தண்ணீர் கொண்டு வரப்பட்டது. பின்னர் நபியவர்கள் அதில் தமது முபாரக்கான இரு கைகளையும் கழுவிய பின் வாயையும் அதனுள் கொப்பளித்து அத்தண்ணீரை அப்பெண்ணிடம் கொடுத்து, அதனை அக்குழந்தைக்கு பருக தந்து பின்னர் அக்குழந்தையின் மீது ஊற்று. அல்லாஹ்வைக் கொண்டு சுகம் பெறும் என்பதாகக் கூறி அனுப்பி வைத்தனர்.
நூல்: இப்னு மாஜா, பாகம் 4 பக்கம் 130.
தாயத்து அணிதல்:
عن عمروبن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا فزع أحد كم فى النوم فليقل: اعوذ بكلمات الله التامات من غضبه وعقابه وشر عباده ومن همزات الشيا طين وان يحضرون فإنها لن تضره. فكان عبدالله بن عمر و يلقنها من بلغ من ولده ومن لم يبلغ منهم كتبها في صك ثم علقها في عنقه
உங்களில் ஒருவர் தூக்கத்தில் திடுக்கிட்டால், ‘அவூது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகழபிஹி வ இஃகாபிஹி வஷர்ரி இபாதிஹி வமின் ஹமஸாத்திஷ் ஷயாத்தீனி வஅன்ய் யஹ்ழுரூன். ஃப இன்னஹா லன் தாழுர்ரஹு’ என்று ஓதிக் கொள்ளுமாறு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். இனி அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், இதனை பருவமடைந்த தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பவராகவும், பருவமடையாத குழந்தைகளுக்கு ஒரு பொருளில் எழுதி அதனை அவர்களின் கழுத்தில் தொங்கவிடுபவராகவும் இருந்தனர்’
அறிவிப்பாளர்: அம்ரு இப்னு ஷுஐப் ரலியல்லாஹு அன்ஹு.
நூல்: திர்மிதி, கிதாபுத் தஅவாத் பாபு மன் அவா இலா ஃபிராஷிஹீ, பாகம் 5 பக்கம் 313. அபூதாவூத், கிதாபுத் திப்பு, பாகம் 4 பக்கம் 218.
பாத்திரத்தில் எழுதிக் கொடுத்தல்:
கர்ப்பிணிப் பெண்களுக்கு பிள்ளைப்பேறு கஷ்டத்திற்குரியதாகி விட்டால், ‘பிஸ்மில்லாஹி லாஇலாஹ இல்லாஹுவல் ஹலீமுல் கரீம். ஸுப்ஹானல்லாஹி ரப்பிஸ் ஸமா வாத்திஸ் ஸப்இ வரப்பில் அர்ஷில் அளீம். கஅன்னஹும் யவ்ம யரௌனஹா லம் யல்பஸு இல்லா அஷிய்யத்தன் அவ் ழுஹாஹா. கஅன்னஹும் யவ்ம யரௌனமா யூஅதூன லம் யல்பஸு இல்லா ஸாஅத்தன் மின் நஹாரின் பலாஃக் ஃபஹல் யுஹ்லகு மில்லல் கௌமுல் ஃபாஸிகூன்’ என்பதை ஒரு பாத்திரத்தில் எழுதி அதனை பருகக் கொடுத்து பின் அத்தண்ணீரைக் கொண்டு முகம் கை போன்றவைளை கழுவிக் கொள்ளட்டும் என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர்.
முஸன்னஃப்: இப்னு அபீ ஷைபா.
நூல்: மகாலாத்துஸ் ஸுன்னிய்யா, பக்கம் 182.
இனி இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தண்ணீர் ஓதிக் கொடுக்கும் போது குர்ஆனின் வசனங்களையும், துஆக்களையும் ஓதுவதற்குப் பதிலாக நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முபாரக்கான திருமுடியைத் தண்ணீரில் முக்கியெடுத்து அதனை அருந்தக் கொடுப்பவர்களாக இருந்தனர்.