ஈரான் என்னும் நாட்டிலே…
By Sufi Manzil
ஈரான் என்னும் நாட்டிலே
ஜீலான் என்னும் ஊரிலே
அபுஸாலிஹ் ஃபாத்திமாவின்
அருமந்த மைந்தரே
மஹ்பூபே சுப்ஹானி
மஃசூக்கே ரஹ்மானி
கிந்தீலே நூரானி – ஷெய்
கப்துல் காதிர் ஜீலானி
لاَ اِلٰهَ اِلَّا اللهُ
தீ னென்னும் பயிரோங்க
மழையாக வந்தீரே
தெளிவான ஞானத்தின்
வேராக வந்தீரே
கலையூட்டும் பஃதாதில்
பதி மீதில் வந்தீரே
காற்றாகப் புகழ் வீசும்
குரு நாதரே ஸலாம்
(மஹ்பூபே…)
தேனாக உரையாடி
தரை மீதிலே யெங்கும்
தௌ ஹீதின் மெஞ்ஞானக்
குல விளக் கேற்றினீர்
தீனுக்கு உயிரீந்த
அற வள்ளலே நெஞ்சில்
தெளிவூட்டும் கௌதெங்கள்
குரு நாதரே ஸலாம்!
(மஹ்பூபே…)
இறைநேசச் செல்வர்களில்
யென்றும் உயர்வாகினார்
இரசூல் முஹம்மதரின்
எனும் வழித் தோன்றினார்
இருளகற்றி ஒளியேற்றி
யென்றும் சுடராக்கினார்
எம் இதயத்தில் மணம் வீசும்
குரு நாதரே ஸலாம்!
(மஹ்பூபே…)
வரையேது மில்லாதக்
கருணாகரன் – அந்த
வல்லோனின் அருளென்ற
றெனும் அமுதூற்றிலே
நிறைவோடு நீராடி
நிலம் மீதிலே முத்தி
நிலைக் கண்ட கௌதெங்கள்
குருநாதரே ஸலாம்!
(மஹ்பூபே..)
(நிறைவு)