இறைநேசர்கள் மௌத்தாக மாட்டார்கள். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போவார்கள் என்றதற்கு விளக்கம் தருக:
By Sufi Manzil
கேள்வி: இறைநேசர்கள் மௌத்தாக மாட்டார்கள். ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு போவார்கள் என்றதற்கு விளக்கம் தருக:
பதில்: ரூஹுல் குத்ஸி என்ற ஆத்மாவிற்கு 'ஹயாத் என்ற ஜீவன்' சரீரமாயிருக்கிறது. அந்த ஹயாத்திற்கு ஸ்தூல சரீரம் போர்த்தும் சரீரம் சட்டை போலிருக்கிறது. அது உச்சி தொடுத்து உள்ளங்கால் மட்டிலும் உண்டாயிருக்கிறது. 'ஹயாத்து ரூஹுல் குத்ஸிக்கு ஏவலாளாக இருக்கும். 'ரூஹுல் குத்ஸியின் கிரியாஸ்தலமானது இரண்டு விழிகளுக்கும் 'நடுவான' கொலு மேடையாயிருக்கும். அது ஜோதிமயமானது. அப்போதுதான் ஓட்டமாட்டமாயிருக்கும். அந்தக் கொலுவை விட்டும் நிஜஸ்தானமான 'குத்ரத்து' புஷ்பத்தில் 'ரூஹுல் குத்ஸி'யைப் போய் தரிசித்தால் சரீரம் விழுந்து போகும். அந்தக் 'குத்ஸியானது' சதாவும் அழியாமல் நிற்கும். அதுதான் 'மஹ்ஷரிலும்' அந்தக் குத்ஸி ரப்பாயிருந்து கேள்வி கேட்கும். அழிந்த 'ஹயாத்து' கைகட்டி நின்று சேவிக்கும். மௌத்துக்கு முன் 'குத்ஸி'யை அறிந்து அதனுடன் பழகி வந்தால் 'குத்ஸி' சொல்லும், என்னை அறிந்து என் மயமானபடியால் உன்னை நான் என்ன கேட்பது? உனக்கு கேள்வி இல்லையென்று சொல்லும். அப்போது இவன் நித்திய சுகத்தைப் பெறுவான்.
மௌத்துக்கு' முன் தானென்ற 'குத்ஸியை' அறியாமலும் பழகாமலிருந்த மூடருக்கு 'காலன்' வந்து முடிகின போது, உடலிலே ஓடிக் கொண்டிருகு;கும் ஆத்மா கண்ணின் நிதானத்தில் வரும்ளூ அப்போது இரண்டு கண்களும் ஆகாயத்தைப் பார்க்கும்ளூ அந்தப் பார்வையை உலகத்தார் 'இஸ்றாயிலுடைய பார்வை' என்றும் 'மிஃராஜ் பார்வை' என்றும் சொல்வார்கள். உண்மையில் அதுதான் பிண்டத்திலிருந்த 'ஹயாத்து' தன் 'அரசனான குத்ஸியை' அண்டத்தில் வந்து சந்தித்ததாகவிருக்கும். இவன் ஏற்கனவே அவைகளை அறிந்திருந்தால் அவனிடம் பிரயாண விடைபெறாமல் வராது. அறியாதபடியாலே இவன் யாரோவென்று உதறிவிட்டு வருகிற பார்வையாயிருக்கும். அவ்விதம் சிரசில் ஏறிய 'ஹயாத்து தன்னெஜமானனான குத்ஸி'யின் சமூகத்திற் சென்று தன் உத்தியோக அதிகாரங்களை ஒப்புக் கொடுக்கும். உடனே 'குத்ஸி' தன் ரப்பிடம் போய் இரண்டறக் கலந்து கொள்ளும். உத்தியோகத்தை ஒப்புக் கொடுக்காத 'ஹயாத்து' மூலத்தில் வந்து பதுங்கிக் கொள்ளும். இதற்கு 'ரூஹானி' என்று சொல்லப்படும். இது துக்க வடிவமாய் கஷ்டமடைந்து அழிவைப் பெறும்.
ஆனால் உன்னுடைய தாயின் கற்பறையில் உன் 'ஹயாத்துடைய ஆலம்' உன் தகப்பன் மூளையாயிருந்தது. அந்த மூளையிலொரு ஒளி உண்டாயிருந்தது. உன்னுடைய வெளிப்பார்வை அந்த ஒளியின் ஜோதியைக் கொண்டாயிருக்கிறது.அந்த ஒளி வஸ்துக்களடங்களையும் அடைய வளைந்து அவைகளை இன்னது இன்னது என்று விபரித்தறிந்து கொள்கிறது. மௌத்திற்குப் பின்னால் சகலதையும் செவியினால் கேட்டும், ஜவாபு சொல்ல குத்ரத்தில்லாமல் குருடாகவும் ஊமையாகவும் ஆகிவிட்டது. ஏனென்றால் அவன் மூச்சு ஒடுங்கி விட்டது. குத்ரத்தும், உசும்புதலும் ரூஹுக்கல்லாமல் ஹயாத்திற்கில்லை. ஹயாத்திற்கு நாட்டமே தவிர யாதொன்றும் கிடையாது. ஆகையால், (மூளை) ஒளிவு விளையும் தானம்ளூ என்கிலும் ரூஹை இழந்திருப்பதால் மௌத்துக்குப் பின்னாலே சடலங்கள் பனாவாகிப் போகிறது.
இனி ரூஹுல் குத்ஸியானது இரு விழிகளுக்கும் நடுவான கொலுவிலிருக்கும். காமிலான ஷெய்குவின் சூரத்தை அந்த இடத்தில் முஷாஹதா செய்து வந்தால் அந்த நாட்டத்தில் வந்து வெளியாகும். அப்போது ஹயாத்து அந்த சூரத்திலுண்டாயிருக்கும். இந்தப்படிக்குத் தரிசித்து வந்தால் சடலம் பனாவாகாது. ஏனென்றால் ரூஹுல் குத்ஸி எக்காலமும் பனாவாகாது. அப்படிப் போல ஹயாத்தும் பனாவாகாது. இந்த ரூஹையும் ஹயாத்தையும் உடையவர்கள் 'கப்ரிலும்' ஹயாத்தாக இருப்பார்கள். அவர் சடலம் துனியாவிலிருந்த மாதிரியாகத்தானிருக்கும். அவர்கள் நாடினால் பூமியில் வருகிறதும், போகிறதுமாக இருப்பார்கள். அவரை மண் தின்னாது. மற்றும் யாதொன்றும் அணுகாது.துன்யாவில் அவர் மூச்சுக்கொப்புளுக்குக் கீழாலே நின்றும் உச்சியளவில் நடக்கும். கப்ரில் உச்சியில் நின்றும் கொப்புளுக்குக் கீழாலே நடக்கும். இவர் மௌத்தானவரில்லை. இதற்காக வேண்டித்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
'அலா, யின்ன, அவ்லியா, அல்லாஹி, லாயமூதூன, பல், யன்கலிபூன, மின்தாறின், யிலாதாறின்'
என்று திருவுளமானார்கள். இறைநேசர்கள் மௌத்தாகார்கள். எனினும் ஒரு வீட்டை விட்டும் ஒரு வீட்டளவில் போவார்கள் என்றதாயிருக்கும்.
-ஞானப் பிரகாசம் அல்லது நூருல் இர்பான்.