அஷ்ஷெய்க் அஷ்ஷாஹ் பஹாவுத்தீன் அல் காதிரி
By Sufi Manzil
தொகுப்பு: Maadhihur Rasool. From facebook…
…
Hazrat #Bahauddin #Ansari #Qadri #Shuttari (Rahamatullah Alaih)
Daulatabad, Aurangabad District,
Maharashtra, India.
அஷ்ஷாஹ் பஹாவுத்தீன் அல் காதிரி (கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்)
(மறைவு 1516-01-16, ஹிஜ்ரி 921 துல்ஹஜ், பிறை 11)
….
ஹழ்ரத் பஹாஉத்தீன் இப்னு இப்றாஹீம் இப்னு அதாஅல்லாஹ் அல் அன்ஸாரி ஜுனைதி அல் காதிரி வல் ஷத்தாரி அவர்களுடைய மஸார் ஷரீப் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் அவ்ரங்காபாத் நகரத்திலிருந்து சுமார் 27km தொலைவில் உள்ள தவ்லத்தாபாத் கோட்டைக்கு அண்மையில் அமையப்பெற்றுள்ளது.
அவர்கள் ‘கலந்தரே ஹக்’, ‘லங்கோட் பந்த் பாபா’, ‘குத்வதுஸ் ஸாலிக்கீன்’, ‘நூருல் ஆரிபீன்’, ‘மின்ஹாஜுல் ஆபிதீன் பில் ஹிந்த்’, ‘றஈஸ் உலூம் ஸுன்னஹ்’ போன்ற சிறப்புப்பெயர்களால் அழைக்கப்படுகின்றார்கள்.
ஹழ்ரத் அதாஉல்லாஹ் அன்ஸாரி என்பாருடைய மகனான ஹழ்ரத் இப்றாஹீம் என்பவர்களுக்கு மகனாக இந்தியாவின் ஹர்யானா மாநிலத்தில் ஜிந்த் என்ற சிறு நகரத்தில் இவர்கள் பிறந்திருக்கிறார்கள். அன்ஸாரி என்பது இவர்களுடைய தந்தை வழி குடும்பப்பெயராகும். சிர்ஹிந்தின் புறநகர்ப் பகுதியில், ஜுனைத் என்ற கிராமம் இருந்தது, இந்த இடத்தைச் சேர்ந்தவர்களாதலால் ஜுனைதி என்ற பெயரும் சேர்ந்துகொண்டது.
காதிரீ, ஷத்தாரி இவர்கள் சார்ந்திருந்த தரீக்காக்கள் ஆகும்.
அவர்கள் ஆரம்பக் கல்வியினை ஜுனைத் என்ற கிராமத்தில் கடின முயற்சியுடனும் ஆர்வத்துடனும் பெற்றார்கள். அதேபோல் மார்க்கக்கல்வியையும் கற்றார்கள்.
ஹழ்ரத் அவர்கள் அறபு மொழி மற்றும் இஸ்லாமிய மார்க்கக்கல்விகளை தமது பிறந்தகத்திலுள்ள அறிஞர்களிடம் மிகுந்த ஆர்வத்துடனும் கற்று முடித்தார்கள். அரபு மொழி, மார்க்க சட்டம், அகீதா போன்ற அத்தனை அறிவுகளிலும் மிகுந்த புலமை பெற்றார்கள். அவர்களுடைய கல்வி நிலை மிகவும் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. அதேவேளை ஷத்தாரீ ஸூபீகளின் மஜ்லிஸ்களிலும் அதிகம் கலந்துகொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள்.
இவர்கள் பிறந்த ஆண்டு தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் கி.பி.15ம் நூற்றாண்டில் (ஹிஜ்ரி 9ம் நூற்றாண்டில்) இவர்கள் ஹரியான அல்லது பஞ்சாப் சிர்ஹிந்த் பகுதியில் பிறந்திருக்கிறார்கள். கி.பி.1516 (ஹிஜ்ரி921)ல் மஹா ராஷ்ட்ரா- தவ்லத்தாபாத்தில் மறைந்தார்கள்.
முகலாய வம்ச ஆட்சியின் முதலாமவர் பாபர், ஹிந்துஸ்தானுக்கு படையெடுத்து வருவதற்கு முன்னர் (கி.பி.1526இற்கு முன்னர்), லோடி வம்ச மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் (1451- 1526) இவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
லோடி மன்னர்களின் ஆட்சிப்பகுதியுள் தற்போதைய பஞ்சாப், ஹர்யானா (டெல்லி), உத்தர பிரதேஷ் (ஆக்ரா, லக்னோ, ராய் பரேய்லி, அலஹாபாத்), ஹிமாச்சல் பிரதேஷ், உத்தர கண்ட், பீஹார் ஆகிய மாநிலங்கள் உள்ளடங்கியிருந்தன.
பஹ்லுல் கான் லோடி (ஆட்சிக்காலம்: 1451-1489), சிக்கந்தர் லோடி (ஆட்சிக்காலம்: 1589-1517), இப்றாஹீம் லோடி (ஆட்சிக்காலம்: கி.பி.1517-1526) ஆகியோர் ஆப்கானிலிருந்து வந்த லோடி மன்னர்களாகும்.
ஹழ்ரத் பஹாஉத்தீன் அவர்கள் மக்கா நகருக்கு புனித யாத்திரை சென்றிருந்த சமயம் அங்கு காதிரிய்யாவின் ஸ்தாபகர் கெளதுல் அஃழம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (குத்திஸ ஸிர்ரஹு) அவர்களுடைய தலைமுறையில் தோன்றிய திருப்பேரர் ஹழ்ரத் ‘அஸ்ஸெய்யிதுஸ்ஸாதாத்’ ‘அபுல் அப்பாஸ்’ அஹ்மத் அல் ஜீலானி அல் காதிரீ அல் ஹலபீ. (மறைவு: கி.பி. 1449) அவர்களைச்சந்தித்தார்கள். செய்யிதுஸ் சாதாத் அஹ்மத் அவர்கள் ஹழ்ரத் பஹாஉத்தீன் அவர்களுக்கு பைஅத்தும் கிலாபத்தும் வழங்கினார்கள்.
அதன்படி, காதிரிய்யா தரீக்கா ஞானவழி சில்சிலாவை இந்தியாவுக்கு அறிமுகம் செய்தவர்களுள் ஹழ்ரத் பஹாஉத்தீன் அன்ஸாரி அவர்களும் ஒருவர் என வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
After being made a Caliph [khalifa] of the Qadiriyyah Tariqah, he returned back to India. Despite his desire for obscurity, his contemporaries recognised his greatness. The renowned Chishti master, Gesu-Daraz Bande-Nawaz Khwaja Sayyid Muhammad al-Husaini of Gulbarga, reportedly praised him as “A great Majzub!”
காதிரிய்யா தரீகாவின் கலீஃபாவாக ஆக்கப்பட்ட பிறகு, அவர்கள் இந்தியா திரும்பினர். பனா எனும் தெளிவற்ற நிலையில் இருக்கவே அவர்கள் விரும்பியபோதிலும், அவர்களுடைய சமகாலத்தவர்கள் அவர்களது மகத்துவத்தை கண்டுணர்ந்தனர். குல்பர்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற சிஷ்தி ஞானகுரு, கேசு-தராஸ் பந்தே-நவாஸ் குவாஜா சயீத் முஹம்மது அல்-ஹுசைனி, ஹழ்ரத் பஹா உத்தீனை “ஒரு சிறந்த மஜ்துப்” என்று புகழ்ந்ததாக கூறப்படுகிறது.
He was one of the earliest Qādirī Sufis who settled in Mandu during the time of Ġiyāṯ al-Dīn Ḫaljī (r. 873/1469 – 906/1500).
ஹழ்ரத் அவர்கள், கியாஸுத்தீன் ஷாஹ் கில்ஜி (1469-1500) (Second Sultan of the Khilji dynasty of Malwa) உடைய ஆட்சிக்காலத்தில் (தற்போதைய மத்திய பிரதேஷ் மாநிலத்தில்) Mandav மாண்டு என்ற ஊரில் குடியேறிய காதிரிய்யா தரீக்காவுடைய முதல் ஷெய்ஹு ஹழ்ரத் ஆவார்கள்.
ஷரீஆ, தரீக்காவுடைய ஞானங்களில் ஆழ்ந்த அறிவைப்பெற்றிருந்த ஹழ்ரத் அவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தார்கள். “ரிசலா-ஏ-ஷத்தாரியா” என்ற அவர்களது படைப்பு மிகவும் பிரசித்திபெற்றது.
ஹழ்ரத் அவர்களுடைய காலப்பகுதியில் வட இந்திய பிராந்தியங்களில் காதிரிய்யா, நக்ஷபந்திய்யா தரீக்காக்கள் வெகுவாக பிரபலமடைந்திருக்கவில்லை. சிஷ்திய்யா, ஸுஹ்ரவர்திய்யா தரீக்காக்களின் உச்சம் சற்று தணிந்திருந்த காலகட்டம். ஹழ்ரத் அப்துல்லாஹ் ஷத்தார் அவர்களினால் ஷத்தாரிய்யா தரீக்கா, கி.பி.1442 இல் மத்திய பிரதேஷில் மல்வா பிராந்தியத்தில் மாண்டு என்கின்ற ஊரில் அறிமுகப்படுத்தப்பட்டு வேகமாக பிரபலமாகிக்கொண்டிருந்த காலகட்டம். அப்போது சுல்தான் மஹ்மூத் கில்ஜீயும் (கி.பி.1436-1469) அவரது மகன் கியாதுத்தீன் கில்ஜீயும் (கி.பி.1469-1500) மால்வாவில் Chittor கோட்டையை முற்றுகையிட்டு வெற்றிகொண்ட நேரம். அதன் பின்னர் Malwa Sulatanate இவர்களால் நிறுவப்பட்டது.
அதையடுத்து வந்த முகலாய மன்னர் ஹுமாயுன் (ஆட்சிக்காலம்: கி.பி 1530-1556), அக்பர் ஆகியோர் காலத்தில் ஷத்தாரிய்யா தரீக்கா, ஆட்சியாளர்களில் தாக்கத்தை செலுத்தும் அளவு உச்சம் தொட்டது.
ஹழ்ரத் ஸிஹாபுத்தீன் சுஹ்ரவர்தி (குத்திஸ ஸிர்ருஹு) அவர்களின் 5ம் தலைமுறைப்பேரரான ஹழ்ரத் ‘ஸிராஜுத்தீன்’ அப்துல்லாஹ் ஷத்தார் (குத்திஸ ஸிர்ருஹு) அவர்கள் ஷத்தாரிய்யா தரீக்காவினை நிறுவியவர்கள்.
இவர்கள் 15ம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் குராஸானிலிருந்து இந்தியாவின் மத்தியப்பிரதேஷ் (Dhar district)இல் மண்டு பகுதிக்கு வந்து இத்தரீக்காவினை பரப்பினார்கள். (கி.பி.1472 இல் மரணித்த இவர்கள் மாண்டவிலுள்ள ஒரு கோட்டையின் அண்மையில் நல்லடக்கமாகியுள்ளார்கள்.)
மத்திய பிரதேஷில் முஹம்மது கவ்ஸ் குவாலியரி (மறைவு: கி.ப்.1563), பாதுஷா ஷாஹுல் ஹமீத் மாணிக்கப்பூரி நாகூரீ (கி.பி.1490-1585) ஆகிய பெரும்ஞான மகான்களைத்தந்த ஷத்தாரிய்யா தரீக்காவுடைய முந்தைய கலீபாக்களுடன் ஹழ்ரத் அவர்களுக்கு நெருங்கிய தொடர்பு காணப்பட்டது.
Next, he travelled to Ahmadabad, where he was initiated into the Šaṭṭāriyya Sufi order and became a disciple of Šayḫ Buḍḍhan sometime during the reign of Sulṭān Sikandar Lodī (r. 894/1489-923/1517); the Sufi biographer ‘Abd al-Ḥaqq Muḥaddiṯ describes him as “a Qādirī, but a Šaṭṭārī in outlook (mašrab)” (see Dihlawī 2005, p. 394; Rizvi 1994, p. 73)
மண்டுவிலிருந்து பின்னர் குஜ்ராத் மாநிலத்தில் அஹ்மதாபாத் நகருக்கு சென்ற போது ஷத்தாரிய்யா தரீக்காவினைச்சார்ந்த கலீபாக்களுள் ஒருவரான ஷெய்ஹ் புத்தான் (Šayḫ Buḍḍhan) அவர்களின் தொடர்பும் ஹழ்ரத் பஹாஉத்தீன் அன்ஸாரி அவர்களுக்கு கிடைத்தது.
(ஷத்தாரி வழித்தொடரின் ஸ்தாபகர் அப்துல்லாஹ் ஷத்தாரின் கலீபாக்களுல் ஒருவரான ஹாபிஸ் ஜான்பூரி அவர்களுடைய கலீபா ஷெய்ஹ் புத்தான் என அறியப்படுகிறார்கள்.)
ஸூபி வரலாற்றாசிரியர் அப்துல் ஹக் முஹத்தித் தெஹ்லவி குறிப்பிடுகையில் ஹழ்ரத் அன்ஸாரி அவர்களை ஒரு காதிரியாகவே குறிப்பிடுவதோடு ஷத்தாரி ஞானவழியையும் அனுபவித்தவர்கள் என்கிறார்கள்.
(see Dihlawī 2005, p. 394; Rizvi 1994, p. 73).
It seems that there had been an atmosphere of interest in Indian culture and literature in the Sufi circle of Šayḫ Buḍḍhan, since besides Anṣārī, the circle included other disciples such as Šayḫ Rizq Allāh Muštāqī “Rajan” (d. 989/1581), the author of several Hindi maṯnavī poems.
ஷத்தாரிய்யாக்கள் ஸூபிஸ சிந்தனையுடன் யோகா தியான நுட்பங்களையும் அதனோடு இணைத்தவர்கள். இப்படியான 25 விதமான யோகா முறைமைகளை ஹழ்ரத் பஹாஉத்தீன் இப்னு இப்றாஹீம் அன்ஸாரி அல் காதிரி அவர்கள் தமது றிஸாலா ஏ ஷத்தாரிய்யாவில் குறிப்பிட்டுள்ளார்கள்.
(Source: Impact of the Naqshbandi silsilah on Indian muslims, By Shamsul Hasan)
Anṣārī is mentioned in the Gulzār-i abrār of Muḥammad Ġawṯī Manḍawī (d. 1022/1613), a biography of Sufis, but he is neither included in the account of Šaṭṭārī mašāyiḫ (masters) nor as an adherent of Šayḫ Buḍḍhan; rather, he is considered as a disciple of Šayḫ Muḥammad ‘Ārif (Manḍawī 2006, pp. 284-290, 208, 359).
ஹழ்ரத் முஹம்மது கவ்ஸி மான்டவி (d கி.பி.1613) அவர்கள் எழுதிய ‘குல்ஸார் ஏ அப்றார்’ என்ற ஸூபிகளின் வாழ்கை வரலாற்றை குறிப்பிடும் நூலில் ஹழ்ரத் பஹாஉத்தீன் அன்ஸாரி அவர்கள் பற்றி குறிப்பிடுகையில், ஹழ்ரத் அவர்கள் ஷத்தாரிய்யா தரீக்காவின் மஸாயிஹ்மார்கள் பட்டியலிலோ ஷெய்ஹ் புத்தான் அவர்களின் மாணவர் என்பதாகவோ குறிப்பிடவில்லை. மாறாக ஷெய்ஹ் முஹம்மத் ஆரிப் ஷத்தாரி என்பவர்களது சீடர் என கருதப்படுவதாக குறிப்பிடுகிறார்கள். (Manḍawī 2006, pp. 284-290, 208, 359).
There is scant information available on the outward events of Anṣārī’s life, though he was well known for his expertise in meditation on the Arabic names of God.
ஹழ்ரத் பஹாஉத்தீன் அன்சாரி அவர்களின் வாழ்க்கையின் வெளிப்புற நிகழ்வுகள் குறித்து மிகக் குறைவான தகவல்கள் கிடைக்கின்றன, இருப்பினும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருநாமங்களைக்கொண்டு தியானிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்களாக திகழ்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய றிஸாலா ஏ ஷத்தாரிய்யா நூல் இதனை வெளிப்படுத்துகின்றது.
One Sufi biographer only mentions Anṣārī in a section about his well-known disciple, Mīr Sayyid Ibrāhīm Īrajī (d. 953/ 1546-47), for whom he compiled the Risāla-yi šaṭṭāriyya (Badaḫšī 1997, p. 1146).
ஹழ்ரத் பஹாஉத்தீன் அன்சாரி அவர்களுடைய பிரசித்திபெற்ற சீடர் செய்யித் இப்றாஹீம் இரஜி (மறைவு: 1547) என்பவர்களுக்காக றிஸாலா ஏ ஷத்தாரிய்யா என்ற நூலை தொகுத்து கையளித்தார்கள் என்பதாக சில வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். (Badaḫšī 1997, p. 1146).
Unlike other Sufi teachers of this lineage, such as Šāh ‘Abd Allāh Šaṭṭārī (d. 890/1485), who dedicated his Laṭā’if to Sulṭān Ġiyāṯ al-Dīn Ḫaljī, and Šāh Muḥammad Ġawṯ (d. 970/1563), who helped Bābur in his conquest of Gwaliyar (Nizami 1950, pp. 69-70), Anṣārī did not establish any associations with courtly figures of his time.
ஷத்தாரி ஞானவழித்தொடரின் ஷெய்ஹ்மார்களான ஹழ்ரத் அப்துல்லாஹ் ஷத்தார் (d. 1472) அவர்கள் ஸுல்தான் கியாதுத்தீன் கில்ஜீக்கு நுட்பமான ஆலோசனைகள் வழங்கியதுபோன்றும், ஹழ்ரத் முஹம்மத் கவ்ஸ் (d. 970/1563) அவர்கள் குவாலியரை பாபர் வெல்வதற்கு (1526) உதவியது போன்றும் ஹழ்ரத் அன்ஸாரி அவர்கள் தம்முடைய காலத்தில் ஆட்சியதிகாரப்புள்ளிகளுடன் எதுவித தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை.
He did, however, earn considerable fame because of his prominent treatise, Risāla-yi šaṭṭāriyya. There are many extant manuscripts of this treatise.
எவ்வாறாயினும், ஹழ்ரத் அவர்களுடைய நூலான ரிசலா-எ ஷத்தாரியாவின் காரணமாக அவர்களுடைய புகழ் பரவியது.
Anṣārī is also the author of a treatise on prayers entitled Tuḥfat al-aḏkār (Munzawī 1363 š./1984, vol. 3, p. 1334) and a biography of the founder of the Qādirī order, ‘Abd al-Qādir Jīlānī (d. 561/1166, Baghdad), under the title Anīs al-Qādiriyya (Qasimlu 1385/2006, pp. 68-69).
His tomb is just outside the Daulatabad fort.
‘துஹ்பதுல் அத்கார்’ என்ற திக்ருகள் பற்றிய நூலும் (Munzawī 1363 š./1984, vol. 3, p. 1334),
’அனீஸ் அல் காதிரிய்யா’ என்ற காதிரிய்யாவின் ஸ்தாபகர் அப்துல் காதிர் ஜீலானி (d.1166) அவர்களைப் பற்றிய நூலும் (Qasimlu 1385/2006, pp. 68-69) ஹழ்ரத் அவர்கள் எழுதியதாகும்.
Risāla-yi šaṭṭāriyya is one of the earliest Sufi works to incorporate practices from the Indian yoga tradition.
ஹழ்ரத் அவர்களுடைய ‘ரிஸாலா ஏ ஷத்தாரிய்யா’, ஸுபிஸ திக்ர் முறைமைகளுடன் இந்திய யோகா நுட்பங்களையும் இணைத்துக்கொண்ட ஆரம்பகால சூஃபி படைப்புகளில் ஒன்றாகும்.
This was accomplished by adopting Indic verbal formulas (mantras) used in meditation, such as the Sanskrit syllables aum and hūm, and assimilating them to the Sufi category of ḏikr (literally, “recollection,” plural aḏkār), the recitation or invocation of Arabic prayers and names of God.
The text may have been written in Anṣārī’s old age at the beginning of the sixteenth century while he was attending Šayḫ Buḍḍhan’s Sufi gatherings.
16ம் நூற்றான்டின் தொடக்கத்தில் ஹழ்ரத் பஹாஉத்தீன் அன்ஸாரி அவர்களுடைய இறுதி காலப்பகுதியில் ஷெய்ஹ் புத்தான் (ஷத்தாரி) அவர்களுடைய சூபி ஒன்றுகூடல்களில் கலந்துகொண்டதன் விளைவாக இந்த படைப்பை அவர்கள் எழுதியிருக்கக்கூடும்.
According to its author, the treatise contains certain secrets for the benefit of both elite and common seekers, and for both the truthful and the liar.
Additionally, it is also designed for aspirants who have been unable to find a real spiritual teacher and instead aim to achieve spiritual advancement without the personal guidance of a master (Risāla-yi šaṭṭāriyya, Ms. Lahore, Punjab University Library, Sherani 4901/1889, f. 130a).
437 / 5000
நூலாசிரியரின் கூற்றுப்படி, இந்நூல் சிறந்தவர்கள் மற்றும் பொதுவான தேடலுடையவர்களின் நலனுக்காகவும், உண்மையாளர்கள் மற்றும் பொய்யர்களுக்காகவும் சில ரகசியங்களையும் செய்திகளையும் கொண்டுள்ளது.
மேலும், ஒரு உண்மையான ஆன்மீக குருவைக்கண்டுபிடிக்க முடியாத ஆர்வலர்களுக்காகவும் ஓர் குருவின் தனிப்பட்ட வழிகாட்டுதல் இல்லாமல் ஆன்மீக முன்னேற்றத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டவர்களுக்காவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.