அலையாடும் கடலின் ஓரம்…
By Sufi Manzil
அலையாடும் கடலின் ஓரம்
அரசாளும் நாகூர் மீரான்
என் தலை மீதில் உங்கள் பாதம்
தாங்கேனோ ஷாஹ் மீரான்!
எஜமான்! எம்மான்!
பெருமான்! கோமான்!
வெள்ளிக் கதவைத் தள்ளிக் கொண்டு
உள்ளே வருவேன் (2)
என் வள்ளல் உங்கள் உள்ளம் உருகப்
பிள்ளை அழுவேன் (2)
நான் காணிக்கைத் தந்திட நிதியில்லை
உங்கள் கால்களை விட்டால் கதியில்லை
காதிர் ஒலி எனக்கும்
காட்டும் வழி –ஐய்யா(2)
வெள்ளிக் கிழமை வாரந்தோறும்
வருகின்றேன் (2) – என்
வேதனை மூச்சைப் புயலாய்
அங்கு விடுகின்றேன்
கொள்ளை இன்பம் தருவீர்
ரென்று நம்புகிறேன்
ஒரு குறிக்கோள் உண்டு நிறை
வேறாமல் வெம்புகிறேன் (2)
நான் கவலைச் சேற்றில் கிடக்கின்றேன்
நீர் கைக் கொடுப்பீரென இருக்கின்றேன்
காதிர்; ஒலி எனக்கும்
காட்டும் வழி –ஐய்யா(2)
இரக்கம் கொள்ள வேண்டும்
அடியேன் கண்ணீர் வடித்தேன் (2)
எத்தனை நாளைக்கு இப்படியே
நான் கல்லாய் இருப்பேன்
கருணைக் கடலே கவிதை யென்னும்
சொல்லாய்த் தொடுப்பேன்
உங்கள் கல்புக் கனியை நிச்சயமாக
கையால் எடுப்பேன்!(2)
அதில் எனக்கும் உண்டு பாக்கியம்
இந்த அடிமை உங்கள் பைத்தியம்
காதிர் ஒலி எனக்கும்
காட்டும் வழி- ஐய்யா (2)
(வெள்ளிக் கதவை…)
(நிறைவு)