மனதை அடக்குவது எப்படி?

மனதை அடக்குவது எப்படி?

By Sufi Manzil 0 Comment June 22, 2012

Print Friendly, PDF & Email

கேள்வி: மனதை அடக்குவது எப்படி?

பதில்: மனதனாது குரங்கு போன்று அங்குமிங்கும் அலைபாயும். மனம் இவ்வாறு அலைபாய்வதற்கு மனதில் தோன்றும் எண்ணங்களே மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. இந்த எண்ணங்கள் எங்கிருந்து தோன்றுகின்றன?  என்பதை அறிவது மிகவும் முக்கியமாகும். அதை அறிந்தால்தான் – எண்ணங்களை கட்டுப்படுத்தி அது தோன்றவிடாமல் பண்ணினால்தான் மனதை அடக்க இயலும். இதைக் குறித்து, 'ஞானப் பிரகாசம் அல்லது நூருல் இர்பான்' எனும் நூலில் அதன் ஆசிரியர் அல்ஆரிபு பில்லாஹ் அஷ்ஷெய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம் ஸாஹிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ' நமக்கு உண்டாகும் எண்ணங்கள் யாவும், நாபியென்ற தொப்புளிலிருந்தே பிறக்கின்றன. அந்த நாபிஸ்தானத்தை வெட்டவெளியாய் பார்த்துப் பழகி வர வேண்டும். அப்படிப் பார்க்கும் போது, சங்கற்பம் என்னும் எண்ணங்கள் எல்லாம் உதித்த இடத்திலேயே ஒடுங்கும். எப்படியென்றால்? சென்னை பட்டணமென்று மனம் நினைக்க ஆரம்பித்தவுடனே (செ) என்னும் அச்சரம் நாபியிலிருந்து புறப்படும்ளூ அதை நாபியிலிருந்து வெளிவரவிடாமல் உள்முகமாய் அந்த நாபிஸ்தானத்தை ஆகாய ரூபமாய்ப் பார்த்த பாது (செ) என்னும் அச்சரம் உதித்த இடத்திலேயே ஒடுங்கும். முதலச்சரம் ஒடுங்குவதினால் அதன் பிறகு வரும் விஷயங்களெல்லாம் ஒடுங்கிவிடுமென்பதில் சந்தேகமில்லை. ஹக் அல்ஹம்துலில்லாஹ்.' என்கிறார்கள்.