தஞ்சாவூரில் 8ஆம் ஆண்டு கந்தூரி விழா

Print Friendly, PDF & Email

தஞ்சாவூர் ஹிஸ்புல்லாஹ் சபை, ஸூபி மன்ஸில் நடத்தும் மீலாதுந் நபி விழா மற்றும் புனித கந்தூரி விழா இன்ஷாஅல்லாஹ் வருகிற 17-04-2014 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் 9 சிராஜுத்தீன் நகர், கீழவாசல், தஞ்சாவூரில் அமைந்திருக்கும் ஸூபி மன்ஸிலில் வைத்து நடைபெறவுள்ளது.

மீலாதுன் நபி விழாவுடன் இமாமுல் ஆரிபீன் சுல்தானுல் வாயிழீன் அஷ்ஷாஹ் முஹம்மது அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் ஹைதராபாத், அன்னாரது கலீபா அல் ஆரிபுபில்லாஹ் அல்முஹிப்பிர் ரஸூல் அஷ்ஷெய்குல் காமில் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் காயல்பட்டினம், அன்னாரது கலீபா செய்யிது ஸாதாத் செய்யிது முஹம்மது ஜலாலுத்தீன் பூக்கோயா தங்கள் ஹஸனி, ஸூபி காதிரி ரிழ்வானுல்லாஹி தஆலா அஜ்மஈன் ஆகியோர்களது நினைவுதின கந்தூரி வைபவம் நடைபெறவுள்ளது.;

இவ்விழாவினை தமிழ்நாடு அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் உலமா சபை தலைர் அல்ஹாஜ் S.M.H. முஹம்மது அலி சைபுத்தீன் ஆலிம் ஸூபியில் காதிரிய்யில் காஹிரிய்யி ஸல்லமஹுல்லாஹு வமத்தலில்லாஹில் ஆலி அவர்கள் நடத்தி தரவள்ளார்கள்.

மாலை 5 மணியளவில் மார்க்க சொற்பொழிவும், மக்ரிப் தொழுகைக்குப் பின் திக்ரு மஜ்லிஸும் நடைபெற்று துஆவிற்குப் பின் நோச்சை வழங்கப்பட்டு விழா இனிதே நிறைவுறும்.

உங்கள் காணிக்கைகளை அனுப்ப வேண்டிய முகவரி

மௌலவி அப்துர் ரஸ்ஸாக்,
ஸூபி மன்ஸில்,
9 சிராஜுத்தீன் நகர், கீழவாசல்,
தஞ்சாவூர்