எம்மை அழைத்திடுங்கள் யா ரஸூலல்லாஹ்
By Zainul Abdeen
எம்மை அழைத்திடுங்கள் யா ரஸூலல்லாஹ்
எம்மை அழைத்திடுங்கள் யா ஹபீபல்லாஹ்
புனிதம் பூக்கும் உங்கள் மாமதீனா நாடி வருவேனே
உவந்தே பாடி உங்கள் பேரன்பை நான் விழைந்தே வருவேனே
சித்தீக்கு நாயகமே மாணலிடம் பரிந்துரைப்பீரே
தங்கள் மகளான அன்னை ஆயிஷாவின் இல்லம் வருவேனே
திங்கள் நபி நாதரின் திரு பூமுகம் நான் காண வருவேனே
வீரம் செறிந்தோரே நபிகள் தோழரே உயர் சிங்கமே உமரே
விரைந்தே நானுமங்கு ஏகி நபிகள் எழில் முகம் காணவே
வள்ளல் பெருமானிடமே பாவி எமக்கு பரிந்துரை செய்வீரே
அண்ணல் மஹ்மூதரே
என் நெஞ்சம் ஆளும் காத்தமுந் நபியே
அருள் தவழ்ந்தாடும் உங்கள்
சாந்த வதனம் பார்ப்பதுமென்னளோ
கண்ணலே காதலாய் யான்
காண வேண்டும் அழைத்திடுவீர்களே