இணையதளத்தைப் பற்றி…

இணையதளத்தைப் பற்றி…

By Sufi Manzil 0 Comment June 30, 2015

Print Friendly, PDF & Email

அன்புள்ள வாசகப் பெருமக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இந்தியாவில் குறிப்பாக தென்னகத்திலும், இலங்கையிலும் மற்றும் இதர நாடுகளிலும் தேவ்பந்தி, தப்லீக் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, காதியாணி போன்ற வழிகெட்ட இயக்கங்கள் தோன்றி அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையினை சிதைக்கும் நோக்கோடு மக்களை வழிகெடுத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்த சமயத்தில் இந்த வழிகேட்டினை மக்கள் மத்தியில் தெளிவாக, தைரியமாக எடுத்துச் சொல்ல மார்க்க அறிஞர்கள் தயங்கியபோது,

வட இந்தியாவிலும், உருது பேசும் மக்களிடமும் இந்த கூட்டத்தார் குறிப்பாக தப்லீக் ஜமாத்தார் வழிகெட்டவர்கள், இவர்களின் கொள்கைகள் வழிகேடானவை. எனவே மக்கள் இதில் சேரக்கூடாது என்று அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டியவர்கள்,

அமீரே சுன்னத், அல்-முஹிப்பிர் ரஸூல் அஹ்மத் ரிழா கான் பாஜில் பரேலவி அஃலா ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஹுஸ் அவர்கள் என்றால் மிகையாகாது.

அவர்களைப் போல் தென்னிந்தியா, இலங்கை, கேரளம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் இந்த கூட்டத்தார் குறிப்பாக தப்லீக் ஜமாத்தார் வழிகெட்டவர்கள், இவர்களின் கொள்கைகள் வழிகேடானவை. எனவே மக்கள் இதில் சேரக்கூடாது என்று அவர்களின் உண்மை முகத்தை தோலுரித்து, மிகத் தைரியமாக, தனி ஓர் ஆளாய் நின்று மக்களுக்கு எடுத்துச் சொன்னவர்கள்,

ஷெய்குநாயகம் அல்-ஆரிபுபில்லாஹ், அல்முஹிப்புர் ரஸூல் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஸித்தீகி காதிரி, காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களே!

இதற்காக அவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள் ஏராளம். செய்த தியாகங்கள் ஏராளம். அவர்களை மிரட்டியும், கொலை செய்யவும் முயற்சித்தனர் இந்த வழிகேடர்கள்.

அதையெல்லாம் கண்டு அஞ்சாமல்,  அல்லாஹ்விற்காகவும் அவனது ரஸூலுக்காகவும் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளை இத்தரணியில் ஆணித்தரமாக ஊன்றச் செய்த பெருமை விலாயத்தின் உச்சமாகத் திகழ்ந்த எங்கள் ஷெய்கு நாயகம் அவர்களையே சாரும்.

தம்மைப் பற்றி யாரும் குறை சொன்னால் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனால் நமது நாயகத்தைப் பற்றி சிறிதளவேனும் யாராவது குறை சொன்னால் அவர்களின் முகம் கோபத்தால் சிவந்து அதற்கு உடனுக்குடன் நேருக்குநேர் ஆணித்தரமாக பதிலுரைப்பார்கள்.

இதில் சொந்த பந்தம் என்றோ, தெரிந்தவர் தெரியாதவர் என்றோ, ஏழை பணக்காரன் என்றோ பாகுபாடு அவர்கள் பார்த்ததில்லை. ஹக் ஒன்றே அவர்கள் முன் தெரியும். அதையே தெளிவாக எடுத்துரைத்தார்கள்.

அந்த இறைமகான் காயல்பட்டினம் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் வழியில்,

சுன்னத் வல் ஜமாஅத்திற்கு மாறுபட்ட வஹ்ஹாபிய இயக்கங்கள், ஜமாஅத்தே இஸ்லாமி, காதியாணி, ஷியா,  தேவ்பந்தி, தப்லீக் ஜமாஅத், நூரிஷாஹ் தரீகத் போன்ற பல்வேறு வழிகெட்ட தரீகாக்கள், தவ்ஹீத் ஜமாஅத்(கள்), அஹ்லெ குர்ஆன், ஸலபி, ரஊப் மௌலவியின் குப்ரான விளக்கங்கள் போன்ற பல்வேறு வழிகெட்ட இயக்கங்களை மக்கள் மத்தியில் இனம் காட்டி அதின்பால் மக்கள் சென்று மோசம் போகாமல் தடுத்திடவும்,

உண்மை கொள்கையான அஹ்லெ சுன்னத் வல் ஜமாஅத்தின் கொள்கைகளை மிகத் தெளிவாக விளக்கி அதன்படி மக்களை வழிநடத்திச் செல்வதும்,

இறைமகான்கள் போதித்த ஞானங்களை சரியாக விளங்கிக் கொள்ளாமல் அறைகுறை மதியோடு விளக்கம் சொல்லும் போலிகளிடமிருந்து மக்களை காத்து, வஹ்தத்துல் உஜூது என்னும் சித்தாந்தத்தை தெளிவாக, சரியாக போதிப்பதும் இந்த இணையதளத்தின் நோக்கமாகும்.

அல்லாஹ் ரஸூலுக்கு மாறுபட்ட எந்தவிதக் கொள்கைக்காரர்களாக இருந்தாலும் சரி அல்லது அது எந்த இயக்கமானாலும் சரி அல்லது

தரீகா என்ற பெயரில் வந்தாலும் சரி அல்லது ஷெய்குமார்கள் என்ற போர்வையில் வந்தாலும் சரி

அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவு கண்டாலோ , குறைவு கண்டவர்களை ஆதரித்தாலோ, சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கு மாறுபாடாக வழிகேடாக இருந்தால் அவர்களை, மக்கள் மத்தியில் நாங்கள் இனம் காட்டியிருக்கிறோம்; காட்டிக் கொண்டிருப்போம்.

யாரையும் வீணாக நாங்கள் குற்றம் சுமத்தவில்லை. அவர்கள் வழிகெட்டவர்கள் என்பதற்குரிய ஆதாரங்களை மிகத் தெளிவாக எடுத்து காட்டியிருக்கிறோம். அதில் மறுப்பு இருப்பின் தெரிவிக்கலாம்.

இந்த அடிப்படையில் இந்த இணையதளத்தில் புத்தகங்கள், கட்டுரைகள், மார்க்க சட்டங்கள், ஒளராதுகள், திக்ருகள், மௌலிதுகள், புகழ்ப்பாக்கள், கஸீதாக்கள், துஆக்கள், நிலைப்படங்கள், ஒலி, ஒளிப் பதிவுகள் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

ஷெய்கு நாயகத்தின் வரலாறு மற்றும் அன்னாருடன் தொடர்புடைய அனைத்தையும் இதில் முடிந்தவரை பதிவு செய்திருக்கிறோம். எங்கள் கவனத்திற்குள் வராத ஷெய்குநாயகத்தின் தொடர்புள்ள விசயங்கள் இருப்பின், எங்களுக்குத் தெரியப்படுத்தினால், அதையும் இதில் இணைத்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

அல்லாஹ் நமது ஷெய்குநாயகத்தின் துஆ பரக்கத்தால் நம் நாட்ட தேட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றி தந்தருள்வானாக. ஆமீன்.

–    நிர்வாகிகள்,
www.sufimanzil.org

ABOUT US

It was a period when the Aeviant sects like Deobandi, Tablighi Jamaath, Jamith e Islami, Quadiyani were tryuing  hard to destroy the Aqeedah of Ahle Sunnath Wal Jamath, the true Islamic principle it will be not an exaggeration if we say that when the Ulamas were hesitating to fight against it and to tell the truth to the people in Tamil Nadu (South India), Kerala, Srilanka and some other countries Sheik Al Muhibbir Rasool, As Sah Sheik Abdul Quadir Aalim Sufi Siddiqi, Quadiri Kahiri Qaddasallahu Sirrahul Azeez, he alone stood against mainly towards Tablighi Jamath. He explained completely the poisonous Aqeeda of it and uncovered the true face of them to the Ahlus Sunnah wal Jamath people  like Al Muhibbir Rasool, Ameer e Sunnath Ahamed Raza Khan Aala Hazrath Bazil Barelvi Radiyallahu Anhu and

For this mission, he had undergone lots of tough situations and hardships. Even some threatened him to death and even tried to kill him without fearing them, he, His Holiness who went to the top of Vilayath made the Ahlus Sunnah wal Jamath Principle, very strong in this soil for the love of Allah and his Habeeb Muhammad Sallallahu alaihi wa sallam.

He didn’t care the criticism about him. But if this criticism came against Prophet Muhammad Sallallahu alaihi wa sallam, He didn’t tolerate that. He always spoke the truth and fought with them.

By following the way of our Shaik, Kayalpatnam Sufi Hazrath Qadhhasallahu sirrahul Azeez…

To make the Sunnath wal Jamath masses aware of the deviant sects like Tableeghi Jamath so called Thowheed Jamaths, Jamaith e Islami, Ahle-Quran and Fake Thareekas like Noorisha, Fake Sufi like Kathaankudy Rawoof Misbahi’s Explanations containing Kufr and some other groups and to save them from falling in their preys

And Explain them the principles of Sunnath Wal Jamaath, the true sect which goes to the paradise,

And to Explain the Holy wisdom being taught by sufi saints to the people to save them from Fake Sufis, to Explain the Divine principle of Wahdahtul Vujood is the desire of ours.

Let it be any sect or  group which comes against Allah and his Habeeb, Let it be in the name of Thareeka or Sheikh,

If it degrades the maqam of Habeeb Sallallahu Alaihi Wa Sallam an atom level, or it accepts or supports people like them in any level, we will show their true face to the people as we always to.

we won’t criticize anybody without proper evidence. We have shown them with proofs only. If anybody differ with that or oppose that, they can inform us, so that we can clarify them the truth from ourside .

In this base, we have provided Books, Articles, Awliya’s Histories, Shariah’s Laws, Owradhs, Dhikrs, Praise Poems, Quaseedhas, Duas, Photos, Audios and Videos in our website.

We have provided the history of our Sheik Sufi Hazrath Kahiri Qadhha sallahu Sirrahul Aziz  and things related to him to the best of our knowledge,. If we have left any of them, please let us know to add to this history.

May Allah bless us and fulfil our Haajaths for the sake of our Holy Sheikh. Aameen.

-Administrator
www.sufimanzil.org