அரைகுறையாக ஓதி மார்க்கம் பேசுவது வழிகேட்டையே கொடுக்கும்…

அரைகுறையாக ஓதி மார்க்கம் பேசுவது வழிகேட்டையே கொடுக்கும்…

By Zainul Abdeen 0 Comment January 28, 2022

Print Friendly, PDF & Email

தப்லீக் ஜமாஅத் வழிகேடர்களை ஆதரிக்கும் நூரிஷாஹ்வின் தரீக்கா வைச் சார்ந்த திருப்பூர் பாபுஸ் ஸலாம் அரபிக் கல்லூரி யின் ஸ்தாபகரும் முதல்வருமான மௌலானா மௌலவி அப்ழலுல் உலமா அல்ஹாஜ் ஜுபைர் அஹ்மத் ஷுஹூதீ ஷாஹ் பைஜி பாகவி ஹஜ்ரத் அவர்களின்
உரையினைக் கேட்டேன்.

தன் உரையிலேயே அவர் தாங்கள் வஹ்ஹாபிகள்தான் என்று உரக்க கூறுகிறார். பன்னீரில் குளிக்க வைத்து நடுவீட்டில் உட்கார வைத்தாலும் பன்றி தன் இடமான சாக்கடையை நோக்கித்தான் செல்லும். அதுபோலத்தான் மார்க்கக் கல்வி படித்த (?) தாகச் சொல்லும் ஜுபைர் அஹ்மத் ஷுஹூதீ ஷாஹ் பைஜி பாகவியும்.

ஞானவான்கள் இறைநேசச் செல்வர்கள், காமிலான ஷைகுமார்கள் மற்றும் சுன்னத் வல் ஜமாஅத் உலமாக்கள் எல்லோரும் தப்லீக் ஜமாஅத் வழிகேடு என்றும் அதன் தலைவர்கள் வழிகேடர்கள் என்றும் கூறிக் கொண்டிருக்க,

இவரும் இவர் குருவும் (19 வருட தப்லீக் சேவை? செய்த ஷைத்தான்) இவரின் அடிவருடிகளும் மட்டும் அதை நல்லது என்றும், அதன் தலைவர்களை வல்லவர்கள் என்றும் சொல்வதற்கு, வஹ்ஹாபிகளின் எச்சையை நக்கித் தின்றதுதான் காரணமாக இருக்க வேண்டும்.

எப்படித்தான் ஓதினாரோ தெரியவில்லை. அரைகுறை சில்சிலாவை வைத்துக் கொண்டே இந்த ஆட்டம் போடும் இந்த ஜுபைர் மௌலவி சுன்னத் வல் ஜமாஅத் தரீகாவாதிகளை குறை சொல்கிறாராம். பாவம் சூரியனைப் பார்த்து நாய் குரைத்துதான் என்ன செய்ய? குரைத்துக் கொண்டே செத்தொழிய வேண்டியதுதான். வேறொன்றும் செய்ய முடியாது.

தலைமைச் செய்த்தான் *அஷ்ரப் அலி தானவி* யை கொண்டாடும் இவர்கள் அவர் ஆயிரம் புத்தகங்கள் எழுதியிருக்கிறார். அதில் ஒருசில புத்தகத்தில் இப்படி தவறாக எழுதியதை வைத்துக் கொண்டு காபிர் என்று சொல்லி விட்டார்கள். அவர் எந்தக் கருத்துக்காக அப்படி சொல்லியிருக்கிறாரோ அதைப் பார்க்கவில்லை, அவரிடம் நேரடியாக விசாரிக்கவில்லை அவரை ‘காபிர்’ என்று பத்வா கொடுத்து விட்டார்கள் என்று ஆற்றாமையால் புலம்பியிருக்கிறார்.

இந்த ஜுபைர் ஆலிம் மார்க்கத்தை ஒழுங்காக ஓதியிருப்பின் இப்படியெல்லாம் பேசியிருக்க மாட்டார்.

கிதாபுஷ் ஷிஃபா வை பார்த்துதான் இருந்திருப்பார். அதன் கருத்துப்படி அஷ்ரப் அலி தானவியின் குப்ர் பேச்சுக்கு அவனை *காபிர்* என்று பத்வா கொடுக்காமல் அவனை கொஞ்சிக் கொண்டா இருப்பார்கள் நன்கு
கற்றறிந்த ஆலிம்கள்?

*பர்ரத் மின் கஸ்வரா*(புலியைக் கண்டு ஓட்டம்) என்ற பத்வாவை படிக்கவில்லை போலும். அதை வாங்கி நன்றாக உற்று பாருங்கள்.

அந்த பத்வாவை வெளியிட்ட மகான் இலட்சக்கணக்கானோரை இஸ்லாத்தை தழுவச் செய்தவர்களும், உலகின் பல்வேறு பகுதியில் இஸ்லாமிய தீபம் ஏற்றியவர்களும், அறிஞர் பெர்னாட்ஷாவை இஸ்லாத்திற்கு அழைத்தவர்களுமான *மீரட் மௌலானா அப்துல் அலீம் சித்தீகி காதிரி* ரஹிமஹுல்லாஹு அவர்கள் அன்றோ.

அவர்கள் சும்மா ஒன்றும் பத்வா கொடுத்துவிடவில்லை. *அல் இம்தாது* பத்திரிகையில் அஷ்ரப் அலி தானவி *நபித்துவ தாவா* செய்தபோது, அஷ்ரப் அலிக்கு அவகாசம் கொடுத்து அவரை நேரில் சந்திக்க சென்று விசாரித்ததும் அதற்கு அவர் பதில் சொல்லாததால் அதன்பிறகே அவனை காபிர் என்று பத்வா கொடுத்ததும் தெரிந்தும் வஹ்ஹாபிய எச்சைக்கு அடிபணிந்து மறைக்கப் பார்க்கிறீரே! வெட்கமாயில்லை உங்களுக்கு ?

இலட்சம் புத்தகங்கள்தான் எழுதட்டும். கோடி ரக்கத்துதான் தொழட்டுமே. ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை தரக் குறைவாக நினைத்தாலே அவன் காபிர் ஆகி விடுவானே. ஆனால் அஷ்ரப் அலி தானவி இவ்வாறு எழுதி நூல்களாக வெளியிட்டுள்ளானே. அவன் உயிரோடிருக்கும் வரை காபிர் பத்வா அவனை சுற்றி வந்ததே. அதைப் பற்றி அந்த அஷ்ரப் அலியிடம் நேரடியாகவும் கேட்கப்பட்டதே. அவன் அதற்கு கிஞ்சிற்றும் மறுப்பும் தெரிவிக்கவில்லையே. அப்படியிருக்க அவனை முஸ்லிம் என்று எப்படிச் சொல்ல இயலும்?

நபிகளாரை நேசிப்பதுதான் ஈமான். அது அற்றுப் போனால் முஸ்லிம்களின் வட்டத்தை விட்டு அவன் வெளியேறி விடுவான் என்று இமாம்கள் கூறியிருப்பது உமக்குத் தெரியாதோ!

கிதாபுகளை முறையாக ஓதுங்கள் சும்மா ஏசி கார்ல உட்கார்ந்துட்டு கண்டபடி பேசுனா போதாது. அகீதா பற்றிய தெளிவான அறிவும் வேணும். அதுதான் உங்கள் யாரிடமும் இல்லையே!

பல்லாயிரம் வருடங்கள் இறைவனை வணங்கிய ஷைத்தானே காபிராகிப் போனானே. ஏன்? ரஸூல் அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கண்ணியம் கொடுக்காததால்தானே.

அதேபோல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வரும் வஹியை எழுதிக் கொண்டிருக்கும் உயர்ந்த பணியை செய்து கொண்டிருந்த சஹாபி ஒருவர் தனக்கு வஹி வருவதாக சொன்னதால் காபிராகிப் போனதாக சரித்திர சான்றுகள் ஹதீது கிரந்தங்களில் உள்ளதை நீர் படிக்கவில்லை போலும்.

இமாம்கள் எழுதியதை தவறாக கருத்துக் கொண்டு விமர்சிக்கும் உம் போன்ற மடையர்களைப் பின்பற்றும் மக்கள்தான் பாவம்.

அரசியல் கட்சிகள் காசு கொடுத்து கூட்டும் கூட்டத்தை உமக்கு கூடும் கூட்டத்தோடு ஒப்பிட்டு பேசியிருக்கிறீர். அந்தமாதிரி ஈனச் செயல்களில்தான் ஆள் பிடித்து திரிகிறீர்கள். கேவலமா இல்லை.

சித்தீகுல் அக்பர் நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ‘யாஅல்லாஹ் என்னை உன்னை உண்மையாக வணங்கி வழிப்படக்கூடிய சிறிய கூட்டத்தில் சேர்த்து விடு’ என்று கேட்டார்களே. அதுதான் உண்மை. அந்த சிறு கூட்டத்திலே நாங்கள் இருக்க போதும்.

ஈமானை முதலில் சரிப்படுத்திட்டு வாருங்கள் . அதன்பின் வஹ்தத்துல் வுஜூது ஞானம் பேசலாம்.

எங்கள் ஷைகுமார்கள், கற்றறிந்த அறிஞர்கள் எங்களுக்கு ரஸூலின் முஹப்பத்தை ஊட்டி ஈமானின் சுவையை அறிய வைக்கிறார்கள். பின் விலாயத் பதவிக்கு உயர்த்துகிறார்கள். அவர்களே மேன்மையானவர்கள். அவர்கள் வழி நடக்கும் நாங்களே உறுதியாக மேன்மையடைவோம்.

நீர் சார்ந்திருக்கும் நூரிஷாஹ் தரீக்காவை சரி இல்லை என்று பத்வா கொடுத்தவர்களெல்லாம் உம்மை போன்று தப்லீக் ஜமாத்தை ஆதரிக்கும் சாதாரணமான ஆலிம்கள் இல்லை. விலாயத்தில் உயர்ந்த மகாமை அடைந்த அஹ்லே ஸுன்னத் ஜமாத்தை சார்ந்த மகான்கள். நீங்கள் இவர்களால் கொடுக்கப்பட்ட பத்வாவை குறை கண்டீர்களேயானால் நீங்கள் அந்த மகான்களையே குறை கண்டது போலாகும்.

உம் போன்றவர்கள் வழிகெட்டவர்களை மகான்களாக போற்றி கொண்டாடுவதால்தான் ஈமானில் குறைவே உண்டாகின்றது. உம்மை பின்பற்றுபவர்கள் நிலை கைசேதமே அன்றி வேறில்லை.

– அபு முஹம்மது மீரா

Source: facebook 28-1-2022

Add Comment

Your email address will not be published.