அபூதாலிப் நரகவாதியா?

அபூதாலிப் நரகவாதியா?

By Sufi Manzil 2 Comments March 19, 2015

கேள்வி: அபூதாலிப் அவர்கள் நரகவாதி என்று இப்னு தைமிய்யா போன்றோர் கூறுகின்றனரே! இதற்கு பதில் என்ன?

பதில்: மௌலவி அல்ஹாபிழ் எப்.எம்.இப்றாஹீம் ரப்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வஸீலா என்றால் என்ன?’ என்ற நூலிலிருந்து…

அபூதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மார்க்க அறிஞர்கள் பல்வேறு வகையான கருத்துக்களை கூறுகின்றனர். எனினும் அபூதாலிப் அவர்கள் நிச்சயமாக முனாபிக்கில்லை. காரணம் மக்கத்துக் குறைஷிகள் பெருமானாருக்கு சொல்லொண்ணாத் துயரங்களைத் தந்தபோதெல்லாம் அபூதாலிபவர்கள் நபியவர்களை அரணாக நின்று பாதுகாத்தவர்கள். அவர்களுக்காக பெருமானார் பிரார்த்தனையும் புரிந்தததாக இப்னு தைமிய்யாவே ஒப்புக் கொள்கிறார்.

இன்னும் தப்ஸீர் ரூஹுல் பயானில் அபூதாலிபவர்கள் மரணித்தப் பின்னர் அவர்களை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரிலிருந்து உயிர் பெற்றெழச் செய்து அவர்களுக்குக் கலிமாச் சொல்லிக் கொடுத்தார்கள் என்றும், ஷைகு அப்துல் ஹக் முகத்திஸ் திஹ்லவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களின் மதாரிஜுன் நுபுவ்வத் என்னும் நூலில், அபூதாலிபவர்களின் மரணம் ஈமானோடு தான் நிகழ்ந்ததென்று உறுதிப்படுத்துகின்றனர். மேலும் தைமிய்யா ஒரு ஹதீஸை சுட்டிக் காண்பிக்கின்றார். அதாவது:

அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு முறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், அபூதாலிப் தங்களுக்குப் பல ஒத்தாசைகள் செய்திருக்கிறார். பல சந்தர்ப்பங்களில் எதிரிகளின் தாக்குதல்களிலிருந்துத் தங்களை காப்பாற்றியுள்ளார். எனவே தாங்கள் அவருக்கு ஏதாவது உபகாரம் புரிந்தீர்களா? என்று வினவியதற்கு திருநபியவர்கள், ஆம். இப்பொழுது அவர் நரகத்தின் ஓரத்தில் இருக்கிறார். நான் அல்லாஹ்விடம் மன்றாடி(ஷபாஃஅத் செய்து) இதனைச் செய்யவில்லையாயின் அவர் நரகத்தின் அடித்தட்டில் இருந்திருப்பார் என்ற ஹதீஸை அபூதாலிபின் குப்ருக்குச் சான்றாக வைக்கிறார் தைமிய்யா.

ஆனால் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ள வார்த்தையில் ‘அபூதாலிபவர்கள் நரகத்தின் மேல்  ஓரத்தில் இருக்கிறார்’ என்பதாக நபியவர்களைக் கொண்டு கூறப்பட்டுள்ள வாக்கியம் மிக மிக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஏனெனில் நபியவர்கள் ‘நரகத்தின் மேல்’ என்பதற்கு நரகம் ஏழு தட்டுக்களை கொண்டதாக இருப்பதால், ‘மேல்’ என்னும் பதத்திற்கு நரகத்தின் முதல்தட்டு என்றும், ‘ஓரத்தில் இருக்கிறார்’ என்னும் பதத்திற்கு நரகத்தின் அருகாமை என்பதாகவும் பொருள் கொள்ள வேண்டும். அதாவது, அபூதாலிபவர்கள் நரகத்துடைய முதல் தட்டின் அருகில் இருந்து கொண்டிருக்கிறார் என்பது மேற்கண்ட ஹதீஸின் கருத்தாகும். ஆதலால் அபூதாலிபிடம் ஈமான் இருக்கிறது. எனினும் அது பூரணத்துவம் பெற்றதாயில்லையாகையால், நரகத்தின் முதல் தட்டுடைய அருகாமையில் இருக்கின்றார் என்பதாகப் பொருள் கொள்ள வேண்டும். அதை விடுத்து, அபூதாலிபவர்கள் காபிராகவோ, முனாபிக்காகவோ இருந்தாரெனத் தைமிய்யாக் கூறுவது சுத்த அபத்தமான ஒன்றாகும்.

அடுத்து தைமிய்யாவின் இரண்டாவது ஹதீஸைக் கவனிப்போம்:

அபூஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றனர். ஒருமுறை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சிறிய தந்தை அபூதாலிபைப் பற்றி கூறப்பட்டது. அப்பொழுது நபியவர்கள் மறுமையில் எனது சிபாரிசு அபூதாலிபுக்கு நல்ல பலனை அளிக்குமென்று நம்புகிறேன். நெருப்பின் மேல் பகுதியில் அவரை நியமிக்கப்படும். அவரின் இரு கரண்டைக் கால்களை நெருப்பு மூடி நிற்கும். இதனால் அவரது மூளை உருகி வடிந்து கொண்டிருக்கும். நரகவாதிகளில் அபூதாலிப் ஒருவர் மட்டும்தான் நெருப்பிலான இரு மிதியடிகள் அணிந்திருப்பார். அதிலிருந்து வெப்பம் மூளை வரையிலும் மேலே சென்று மூளையை உருகச் செய்து கொண்டிருக்கும்’ என்ற இந்த ஹதீஸை அபூதாலிபவர்களின் குப்ருக்கு இரண்டாவது சான்றாக கொண்டு வருகிறார் தைமிய்யா. இனி இதன் விளக்கமாகிறது:

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்கூறப்பட்ட இரு ஹதீஸுகளுடைய  எந்த வாhத்தையிலும் அபூதாலிபவர்கள் நரகவாதியென்றோ, நகரத்திலிருக்கிறார் என்றோ கூறப்படவில்லை.

மாறாக நரகத்தின் அருகாமையிலும், நெரப்பிலான இரு மிதியடிகளையும் அணிந்துள்ளார் என்று மட்டும் கூறப்பட்டுள்ளதை வாசகர்கள் கவனத்தில் கொள்வது அவசியம். பின்னும் மறுமையில் அபூதாலிபின் நிலை மேற்கண்ட வண்ணமிருக்கும். ஆயினும் எனது சிபாரிசு அபூதாலிபை அந்நிலையிலிருந்தும் விடுவித்துவிடுமென நபியவர்கள் கூறுகின்றனர்.

எனெனில் முந்திய ஹதீஸில் அபூதாலிபவர்கள் நகரத்தின் மேல் தட்டின் அருகாமையிலிருக்கிறார் என்னும் வாக்கியம் இரண்டாவது ஹதீஸிலும் சுட்டிக் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்பின் அபூதாலிபவர்களின் நிலை நபியவர்கள் ஷபாஅத்து செய்யுமுன் வரை மேற்கண்ட வண்ணமாயிருக்கும். ஆயினும் எனது சிபாரிசு நல்ல பலகை அபூதாலிபுக்கு கொடுத்து, மேற்கண்ட அத்துன்பமும் அவரை விட்டுப் பரிபூரணமாக நீங்கி விடுமென்று நபியவர்கள் இஷாரா செய்கின்றார்கள்.

காரணம், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முந்திய ஹதீஸில் அபூதாலிபவர்களுக்காக வேண்டி நான் இறைவனிடம் ஷபாஅத்துச் செய்துள்ளேன் என்றும், இரண்டாது ஹதழுஸில் மறுமையில் மீண்டும் நான் அவருக்காக ஷபாஅத் செய்வேன் என்றும் அதன் காரணமாக அவருக்கு அது நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் கூறியுள்ளதால நல்ல பலனாகிறது நரக கஷ்டத்தை விட்டு முழுமையாக நீங்குவதாகையால் திருநபியவர்கள் இவ்விதம் சொன்னார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் நபியவர்கள் மீது கொஞ்சமும் பிரியமோ, பற்றுதலோ இல்லாத அபூலஹப் நபியவர்கள் பிறந்தச் செய்தியினைக் கேட்ட சந்தோஷத்திற்காக அச்செய்தி கொண்டு வந்த அடிமைப் பெண்ணைத் தன் கலிமா விரலைச் சுட்டிக் காண்பித்து, அடிமைத்தளையிலிருந்து விடுதலை செய்த ஒரே காரணத்திற்காக, அவன் எந்தத் திங்களன்று விடுதலை செய்தானோ, அந்த ஒவ்வொரு திங்களன்றும் அவனது நரக வேதனை எளிதாக்கப்படுவதுடன், அவன் சுட்டிக் காட்டிய பெருவிரலிலிருந்து பால் போன்ற (பால் என்றும் கூறப்படுகின்றது) ஒரு திரவம் வெளிப்பட்டு அது அவனுக்கு உணவாக அளிக்கப்படுகின்றது.

பின்னும் அபூலஹப் தன் சந்ததியில் ஒரு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது என்பதற்காகச் சந்தோஷமுற்று அவ்வடிமையை விடுதலை செய்தானேயன்றி பிறந்துள்ளது அல்லாஹ்வின் ரஸூல்தான் என்பதற்காக அடைந்த சந்தோஷமல்ல. இல்லையில்லை. பிறந்துள்ளது அல்லாஹ்வுடைய ரஸூல்தான் என்பதைத் தெரிந்துதான் அடிமையை விடுதலை செய்தானெனக் கூறப்பட்டால், பிற்காலத்தில் நபியவர்கள் தங்களின் நுபுவ்வத்தை நபித்துவத்தைப் பிரகடனப்படுத்தியபோது அவன் அதனை ஏன் எதிர்க்க வேண்டும்? மறுக்க வேண்டும்? என்னும் சங்கடமான கேள்விகளுக்கெல்லாம் பதில் தர வேண்டிய இக்கட்டான நிலை உருவாகும்.

எவ்வாறாயினும் அபூலஹபுக்கு ஒவ்வொரு திங்களன்றும் நரகில் அவனது வேதனை லேசாக்கப்படுவதும், அவனுக்கு உணவும் வழங்கப்படுவகிறதென்றால், பெருமானாரின் சிறிய தந்தை அபூதாலிபவர்கள் சுமார் எட்டு வயதிலிருந்து தாம் இறக்கும் காலம் வரை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது தனதன்பு அனைத்தையும் பொழிந்து, சீராட்டிப் பாராட்டி, இரவு பகல் பாராது நபியவர்களுக்காகவே, அவர்களின் நலனுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அபூதாலிபவர்கள் நிலை மறுமையில் என்னவாகுமென்பது வெள்ளிடைமலை. இவற்றையெல்லாம் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்காமல் அபூதாலிப் காபிர் என்றோ, முனாபிக் என்றோ, முஷ்ரிக் என்றோ கூறுகின்ற தைமிய்யாவின் போக்கு பெரும் ஆச்சரியத்தை தோற்றுவிக்கின்றது.

மேலும் தைமிய்யா குறிப்பிடுவது Nhல பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காபிர்களுக்காக இறைவனிடம், இறiவா! இவர்களை நேர்வழியின்பால் திருப்புவாயாக! இவர்களுக்கு ணவும் அளித்தருள்வாயாக எனக் கேட்டுள்ள பிரார்த்தனையைக் கவனிக்குங்கால் உலகில் பெருமானார் காபிர்களுக்கெல்லாம் பிரார்த்தித்திருக்கும்போது, இன்னும் மறுமையிலும், காபிர்களுக்கு ஷபாஅத்தும் செய்வார்களெனக் கூறப்பட்டுள்ளபோது பெருமானார் மீது நீங்கா அன்பு கொண்டிருந்த அபூதாலிபவர்களுக்கு மறுமையிலும், இவ்வுலகிலும ஏன் ஷபாஃஅத் செய்ய மாட்டார்கள்? மேலும் பெருமானரவர்கள் அபூதாலிப் அவர்களுக்காக நான் ஷபாஅத்துச் செய்வேன் என்பதாகக் கூறியுள்ளதும் கவனிக்கத் தக்கது.

இன்னும் ஒரு நபித்தோழரின் மறுமை நிலைப்பற்றி அவரிடம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும்போத, நீர் யாரை அதிகமாக நேசிக்கின்றீரோ அவருடன்தான் மறுமையில் இருப்பீர் எனக் கூற, அத்தோழர் நபியே! நான் தங்களைத்தான் அதிகமதிகம் நேசிக்கின்றேன் எனக் கூறி மறுமையில் தாம் நபியவர்களுடனிருப்பதை உறுதிப்படுத்தினார். அந்தநபித்தோழரின் பெயர் ஸவ்பான் ரலியல்லாஹு அன்ஹு என்பதாகும். இவ்வாறே ஈமானை பற்றி உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பெருமானார் கூறும்போது,

ஒருவர் அவர்  தமது பெற்றோர் பிள்ளை அனைத்து மனிதர்களைக் காண என்னை அதிகமாக நேசிக்காதவரை அவர் முஃமினாக மாட்டார். (புகாரி) என்றும் கூறியுள்ள இவ்விரு ஹதீஸையும் கவனித்தால், எவர் எல்லாவற்றையும் விட பெருமானாரை அதிகமதிகம் நேசிக்கின்றாரோ, அவரே முஃமினென்றும், யாரை அதிகமாக நேசித்தாரோ அவருடன்தான் மறுமையிலிருப்பார் எனக் கூறியுள்ளதால்,

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தம்முயிரை விட ஏன்! உலகிலுள்ள அனைத்துப் பொருட்களைக் காணவும் அதிகம் நேசித்தவர்கள் அபூதாலிபவர்கள். இன்னும் சிற்சில சந்தர்ப்பங்களில் தம்முயிரைக் கூட பணயம் வைத்து எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து நபியவர்களைக் காப்பாற்றியுள்ளனர் என்பது அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸைக் கொண்டு தைமிய்யாவே அபூதாலிபவர்களின் நிலையையும், அவர்தம் நபியின் மீது கொண்டிருந்த நேசத்தையும் உறுதிப்படுத்துவதால் அபூதாலிப் முஃமினா? அல்லது காபிரா? மறுமையில் அவர் யாருடனிருப்பார்கள்? அவர்களின் மறுமைப் பற்றிய முடிவு என்னவாகுமென்பதை தைமிய்யாவின் சீடர்களே நிர்ணயிக்கட்டும்.

குறிப்பு: அபூதாலிப் நாயகம் பற்றி அவர் நரகவாதி என்று தவறான கண்ணோட்டத்தை  நீக்கும் விதமாக மிகுந்த ஆதாரங்களுடன் புனித புகாரி ஷரீப் அபூர்வ துஆ கோர்வையாளரும், ஷாதுலிய்யா தரீகாவின் ஷெய்கும், மக்கா ஷரீஃபின் இமாமுமாகிய மௌலானா ஜெய்னி தஹ்லானி இமாம் அவர்கள் எழுதிய  اَسْنَى الْمَطَالِبْ فِيْ نَجَاةِ اَبِيْ  طَالِبْ  என்ற இந்த நூலைப் படித்து விளங்கிக் கொள்ளுங்கள். வீண் விதண்டாவாதம் செய்யாதீர்கள்.

2 Comments found

User

ABDUL KHADAR

KAALIL MUTHAMIDUTHAL SAMBANDAMANA HADEES GAL ENAKKU VENDUM

Reply
    User

    Sufi Manzil

    நல்லோரை முத்தமிடுதல் என்ற நூலில் அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன. இந்நூல் நமது இணையதளத்தில் பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளது.

    Reply

Add Comment

Your email address will not be published.