Abubacker Siddique-ஸெய்யிதினா அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு.

Abubacker Siddique-ஸெய்யிதினா அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு.

By Sufi Manzil 0 Comment February 11, 2010

Print Friendly, PDF & Email

Short Hints-Hazrath Abu Bakar Siddique

 

Kuniat Abu-Bakar , Name is Abdullah Laqab Siddiqque and Attique

 

Father's name Usman and kuniat AbuQuhafa

Mother's name Salma

 

In the chain of family after 7 steps the chain joined with Hazrath Muhammed Mustafa 

 

He  was born 2 years and 4 months after Ashab-e-Feel punishment.

 

He  was the first to accept Islam on the hands of Hazrath Muhammed Mustafa  and his whole family including parents and children were also embraced Islam.

 

He  was the most honorable after Ambia Alehe-mussalam

 

His  Fazail are also present in the Holy Quran.

 

He  give all his  money to Jaish-ul-Usra and said that

                

"For my family Allah and his Prophet  are"

        

He  has the honor that in the final days of Prophet  he  was the Imam in the Masjid-e-Nabawi

 

He  was the first Khalifa of the Muslims.

After 2 years 3 months and 9 days of Khilafat he  passed to Rafiq-e- Aala at the age of 63.

 

His  grave mubarak is on the side of Hazrath Muhammed Mustafa.

Short History- HAZRAT ABU BAKR SIDDIQUE (Radi Allah Unhu)


EARLY LIFE

Sayyiduna Abu Bakr (radi Allahu anhu's) real name was Abdullah, and he was given the title of "As Siddique" or"Testifier to the Truth." His father, 'Uthman, was known as Abu Quhafah and his mother, Salma, was known as Ummul Khair. He was two and a half years younger than Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam).

He was the first among the Sahaba to accept Islam. He accompanied Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam) during the Hijrah to Madinatul Munawwarah. Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) was a merchant. He freed many slaves, including Sayyiduna Bilal (radi Allahu anhu) and Sayyiduna Umayyah bin Qahaf (radi Allahu anhu). He participated in all the battles in which Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam) had to fight the Kuffar.

Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) loved his faith more than anything else. At the Battle of Badr, his son, Sayyiduna Abdur Rahman (radi Allahu anhu), was fighting on the side of the Kuffar. After accepting Islam, Sayyiduna Abdur Rahman (radi Allahu anhu) said to his father, "O Father, at Badr, you were twice under my sword, but my love for you held my hand back." To this, Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) replied, "Son, if I had you only once under my sword, you would have been no more." He was so uncompromising in his faith.

At the time of the Battle of Tabuk, he donated all his wealth to the war effort, and when Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam) asked him, "What have you left for your family,?" he replied, "Allah and His Rasool (sallal laahu alaihi wasallam)."


AS A CALIPH

After his election as the Caliph, Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) addressed the Muslims with these words:

"O People! I have been chosen by you as your leader, although I am no better than any of you. If I do any wrong, set me right. Listen, truth is honesty and untruth is dishonesty. The weak among you are the powerful in my eyes, as long as I do not give them their dues. The powerful among you are weak in my eyes, as long as I do not take away from them what is due to others.

"Listen carefully, if people give up striving for the Cause of Almighty Allah, He will send down disgrace upon them. If people become evil-doers, Almighty Allah will send down calamities upon them.

"Obey me as long as I obey Allah and His Rasul (sallal laahu alaihi wasallam). If I disobey Allah and His Rasul (sallal laahu alaihi wasallam), you are free to disobey me."

Such was the first Caliph of Islam. Indeed, the world would be a better place to live in, if we had leaders like Sayyiduna Abu Bakr (radi Allahu anhu).

Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) now sent Sayyiduna Usamah (radi Allahu anhu) on the expedition to Syria to fight the Romans, even though he had to attend to all the internal problems of the Islamic State.

The news that Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam) had passed away, made some new Muslims think that the Islamic State would crumble and they refused to pay the Zakaah. These new Muslims could not yet get used to their faith and its requirements until then. Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) declared, "By Allah! Even if a single thread is due from a man, he must give it. If he refuses, I will declare war against him."


RENEGADES AND IMPOSTERS

Some others became imposters and renegades. Tulaiha, Musailimah, Maalik bin Nuwairah, Aswad Ansi and a woman named Sajah claimed that they were prophets and caused a great deal of confusion. Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) was quick to take action against these imposters.

Sayyiduna Khalid bin Walid (radi Allahu anhu) was sent to deal with Tulaiha who fled to Syria and later became a Muslim. Maalik bin Nuwarah was killed. Sayyiduna Ikramah (radi Allahu anhu) and Sayyiduna Surahbil (radi Allahu anhu) were sent to take action against Musailimah, but they were defeated. Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) sent Sayyiduna Khalid bin Walid (radi Allahu anhu) to tackle the notorious Musailamah who married Sajah. In the fight that followed, Sayyiduna Wahshi (radi Allahu anhu) killed Musailamah. Musailamah and Aswad Ansi also claimed to be prophets while Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam) was alive. Aswad was killed by the Muslims of Yemen.

Sayyiduna Abu Bakr (radi Allahu anhu's) swift and bold steps saved the Islamic State from the serious danger of chaos and confusion. He could now attend to other urgent problems.


ERA OF CONQUESTS

During his Khilaafat, Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) had to take action against the Iranian Empire. The Emperor of Iran, Khusrou Parvez, was killed by his son, Shirooya, and the whole empire fell into chaos and disorder. Hurmuz, the Persian governor of Iraq, was very hostile to the Arabs and he was also cruel to the Muslims living in that area.

Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) sent Sayyiduna Muthamia (radi Allahu anhu) to take action against the Iranians in Iraq. His forces were not enough and Sayyiduna Khalid bin Walid (radi Allahu anhu) was then sent with reinforcements. The Muslim army captured vast areas of the Iranian Empire in several battles.

Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) then turned his attention to the Romans who were causing trouble in the North-West frontier. Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) sent 4 separate armies under Sayyiduna Ubaidah bin Jarrah, Sayyiduna Amr Ibnul As, Sayyiduna Yazid bin Abu Sufyaan and Sayyiduna Surahbil bin Hasnal (radi Allahu anhumul ajma'in) to deal with the Roman power.

The four armies joined into one unit to face the Romans more effectively. The Romans had amassed 150 000 soldiers, but the total Muslim army was only 24 000. Reinforcements were requested. Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) asked Sayyiduna Khalid bin Walid (radi Allahu anhu) to take charge of the Iraqi front and Sayyiduna Muthanna (radi Allahu anhu) to rush to the Syrian front to help fight the huge Roman army. The armies met in Yarmuk after Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) passed away. In this battle, the Romans were totally defeated.


PASSES AWAY

Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) fell ill at this time and passed away on the 21st of Jamadi-ul-Aakhir 13 A.H. (22 August 634). His rule lasted 2 years and 3 months. He was 63 years old.

One of the many contributions of Sayyiduna Abu Bakr (radi Allahu anhu) was the collection and compilation of the Holy Koran.


PERSONAL LIFE

He lived a very simple, pious and upright life. He was a true servant of Almighty Allah and a meticulous follower of Sayyiduna Rasulullah (sallal laahu alaihi wasallam).

He wore ordinary clothes and his meals were very simple. He attended to house-hold work and would go out at night and seek the poor and destitute. Humility and modesty were the keynotes of his character. He felt embarrassed when people showered praises on him or showed him immense respect. He often fasted during the day and spent the whole night in Salaah and meditation. He was a great orator and a master of genealogy (one who can trace a person's family line). In personal life, he was a Saint. He used all his powers to promote the interest of Islam and the good of people.

 

ஸெய்யிதினா அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு.
     

இவர்களின் தந்தை பெயர் உதுமான் அபூகுஹாஃபா. அன்னை பெயர் உம்முல் கைர் ஸல்மா. இவர்களின் குடும்பமும் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் குடும்பமும் 10வது தலைமுறையில் ஒன்று சேர்கிறது. அப்துல் கஃபா என்று ஆரம்பத்தில் அழைக்கப்பட்ட இவர்கள்ஈ இஸ்லாத்தை தழுவியதும் 'அப்துல்லாஹ்' என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அழைக்கப்பட்டார்கள்.

நீண்ட மெல்லிய உருவினனராயிருந்த இவர்கள் துவக்கத்தில் 40000 திர்ஹங்களைப் பெற்றிருந்த பெரும் வணிகராய் திகழ்ந்தார்கள்;. நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்னை கதீஜா நாயகி அவர்களை திருமணம் முடித்தபின் இருந்து வந்த வீட்டினருகே இவர்களின் கடை இருந்தது. எனவே இருவருக்கும் நட்பு ஏற்பட வாய்ப்பாயிற்று.

எளிய,இனிய இயல்பு பெற்ற இவர்கள் வம்சாவளியைப் பற்றியும், கனவுகளுக்குப் பொருள் கூறுவது பற்றியும் சிறந்த அறிவு பெற்றிருந்தனர். குறைஷிகளிடையே ஏற்பட்ட பிணக்குகளை தீர்த்து வைப்பவர்களும் இவர்கNளு! வணிகம், சமூக விஷயங்கள் பற்றி ஆலோசனை கலப்பதற்காக இவர்கள் வீட்டிற்கு மக்கள் அடிக்கடி வந்துபோய் கொண்டிருப்பர். இவர்கள் தங்கள் வாழ்நாளில் ளரு நாளும் சிலை வணக்கம் செய்ததில்லை.

நடமாடும் பிரேதத்தை எவரும் காண விரும்பின் அபூபக்கரை காணட்டும் என்ற நாயகத்தின் திருவாக்கு இவர்களின் தன்மையை எடுத்துக் காட்டுவதாகவுள்ளது. வயது வற்தவர்களில் முதலில் இஸ்லாத்தை தழுவியவர்கள் இவர்களே! 'எல்லோருடைய ஈமானை ஒரு தட்டிலும் அபூபக்கருடைய ஈமானை மறுதட்டிலும் வைத்து நிறுக்கப்படின், அபூபக்கர் அவர்களின் தட்டே கனத்து நிற்கும்' என்றார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

இஸ்லாத்திற்காக இவர்கள் பட்ட துன்பங்கள், துயரங்கள், அடி, உதைகள் கொஞ்சநஞ்சமன்று. அபூபக்கரின் செல்வம் போன்று வேறு எவரின் செல்வமும் எனக்குப் பயன்படவில்லை. எல்வோருடைய கடனையும் தீர்த்து விட்டேன். ஆனால் அபூபக்கருக்கு மட்டும் நான் கடன்பட்டுள்ளேன். அதற்கு பிரதியை அல்லாஹ் மறுமையில் வழங்குவான்' என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றபோது தம்முடன் இவர்களைத்தான் அழைத்துச் சென்றார்கள். தௌர் குகையில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன், இவர்கள் இருந்ததைப் பற்றி இறைவன் திருமறையில் 'ஃதானிஃத்னைன்'(இருவரில் ஒருவர்) என்று சிறப்புடன் கூறியுள்ளான். மதீனா புறப்பட்டபோது எஞ்சியிருந்த 5000 திர்ஹங்களை தங்களுடன் எடுத்துச் சென்றார்கள். இப்பொழுது மதீனா பள்ளிவாயில் இருக்கும் இடம் இவர்கள் பணத்தில்தான் வாங்கப்பட்டது.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தம் மகள் கன்னிப் பெண் ஆயிஷாவை மணமுடித்து வைத்தார்கள். எனNவு 'கன்னியின் தந்தை' எனப் பொருள்படும் 'அபூபக்கர்' என்று அழைக்கப்பட்டார்கள். நாகயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடத்திய அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்டார்கள். தபூக் படையெடுப்பிற்காகத் தங்கள் உடைமைகள் அனைத்தையும் நிதியாக வழங்கினார்கள். உம் குடும்பத்தினருக்காக ஏதேனும் விட்டு வந்தீரா? என்று ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்க, 'அல்லாஹ்வையும் அவனது ரஸூலையுமே வைத்து விட்டு வந்துள்ளேன்' என்றார்கள்.

ஹிஜ்ரி 9ம் ஆண்டில்  ஹஜ்ஜுக்கு செல்பவர்களுக்கு தலைவராக-'அமீருல் ஹஜ்ஜாக' இவர்களைத்தான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நியமித்தர்கள். இவரே முதல் 'அமீருல் ஹஜ்' ஆவார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயுற்ற போது 17 முறை இமாமாக தொழ வைத்துள்ளனர்.

பத்ரு போரில் தம் மகனை எதிர்த்துப் போர் செய்ததோடு, அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கண்ணும் கருத்துமாக காத்து நின்றனர்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்து விட்ட போது, ' அவர்கள் மறைந்தார்கள் என்று கூறுபவரின் தலையைத் துண்டிப்பேன்' என்று கர்ஜித்துக் கொண்டிருந்த உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சாந்தப்படுத்தி மக்களுக்கு உண்மையை விளக்கினர்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்கள் மறைவிற்குப் பின் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேட்டுக் கொண்டதற்கிணங்க, மேடைக்குச் சென்ற இவர்கள் நாயகம் அவர்கள் அமர்ந்த படியில் அமராமல் அதற்கடுத்தாற்போல் கீழ்படியில் அமர்ந்தே மக்களிடம் பைஅத் பெற்றனர். 'கலீபத்துர் ரஸூலுல்லாஹ்' என்ற பட்டத்துடன் கலீபா பதவி ஏற்ற அடுத்த நாளே இவர்கள் வணிபத்திற்கு கிளம்பி விட்டனர். தங்கள் கவனம் முழுவதையும் அரசு அலுவல்களில் செலவழிக்கும் பொருட்டு இவர்களுக்கு பொதுக் கருவூலத்'திலிருந்து சம்பளம் வழங்கப்பட்டது. இவர்கள் கலீபாவாக இருந்தது 2 ஆண்டு, 3 மாதம், 11 நாட்கள் (கி.பி.632-634)தான். அச் சமயத்தில் யமன்,யமாமா,உம்மான் ஆகிய நாடுகளிலிருந்தவர்கள 'ஜகாத்' செலுத்த மறுத்த போது மென்மையான இவர்கள் சினம் கொண்டு, 'அவர்கள் கடைசி திர்ஹம் ஜகாத்தில் செலுத்தும் வரை போர் புரிவேன்' என்று சூளுரைத்தனர்.

ஆட்சி ஏறிய 6 மாதத்தில் காலித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நடத்திய போர்களில் மத்திய அரேபியா முழுவதும் அடிபணிந்தது. ரோமானிய படை புறமுதுகிட்டு ஓடியது. நபியென்று வாதாடிய 'துலைஹா' தோற்று இஸ்லாத்தை தழுவினார். மற்றொரு வோலி நபி முஸைலமா வெட்டி வீழ்த்தப்பட்டார். இவருடன் நடந்த போரில் திருக்குர்ஆன் மனனம் எண்ணற்ற ஹாபிழ்கள் ஷஹீதானதால், இவர்கள் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஆலோசனையின் பேரில் திருக் குர்ஆனை ஒன்று சேர்க்கும் பணியை ஜைத் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒப்படைத்து ஒன்று படுத்தினர்.

மிகவும் எளி வாழ்க்கையும்,உயரிய வணக்கமும் இவர்களி;டம் அமைந்திருந்தது. இதனால் இவர்களே ஞான மர்க்கத்தின் முதல் இமாம் என்று கருதப்படுகிறார்கள்.

இவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும்போது, உமா ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கலீபாவாக நியமித்தார்கள். 'அவர்கள் கடுமையானவர்களாயிற்றே' என்று மக்கள் ஐயம் தெரிவித்த போது 'அவரின் இயல்பை நான் அறிவேன். நான் கடுமையாக இருக்கும் போது அவர் என்னை மென்மைபடுத்துவார். நான் மென்மையாக இருக்கும் போது கடுமையாக இருக்குமாறு அறிவுரை பகர்வார்' என்றனர்.

தாம் கலீபாவ இருக்கும்போது சம்பளமாக பெற்ற 6000 திர்ஹம்களையும் தமக்குரிய நிலத்தை விற்று பொது நிதியில் சேர்த்து விடுமாறு இவர்கள் பணித்தார்கள். அச்சமயத்தில் தாம் பெற்றிருந்த ஒரு நீக்ரோ அடிமையையும்,ஓர் ஒட்டகை, ஒண்ணேகால் ரூபாய் மதிப்புடைய துணியையும் உமர் ரலியல்லாஹு அன்ஹீ அவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறினர்.

நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போன்று திங்கட்கிழமை மறைய விரும்பிய இவர்கள் ஹிஜ்ரி 13, ஜமாத்துல் ஆகிர் பிறை 22 திங்கட்கிழமை தமது 63 வது வயதில் மறைந்து ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். இறப்பு வேளையில் தம்மை தவ்ர் குகையில் கடித்த பாம்பின் விஷம் துன்புறுத்தியதாக கூறியதாகவும், அதன் காரணமாகவே இவர்கள் மறைய நேர்ந்ததாகவும் எனவே இவர்கள் ஷஹாதத் என்ற பதவியை அடைந்தவர்கள் என்ற கூற்றும் உள்ளது.