ஸித்ரத்துல் முன்தஹா
By Zainul Abdeen
ஸித்ரத்துல் முன்தஹா குர்ஸீக்கும், ஏழாம் வானத்துக்கும் இடையில் இருக்கிறது. இதன் மத்தியில் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தங்குமிடம் உள்ளது. விதவிதமான தஸ்பீஹுகளும், தஹ்மீதுகளும், தர்ஜீஉகளும் உள்ளது. ஆச்சரியகரமான தன்மையுள்ளது . ஆன்மாக்களும், இருதயங்களும் இவற்றில் பரவசம் அடைகின்றன. இம்மை, மறுமை ஆகிய இரு உலகங்களுக்கும் உள்ள எல்லையாக இது அமைந்திருக்கிறது. ஆன்மாக்கள் யாவும் இங்கு வந்து முடிவடைந்து விடுவதால், இதற்கு முன்தஹா என்ற பெயர் வந்தது. புவியிலிலுள்ள நல்லோர்களின் செயல்கள் இது வரை ஏறுகின்றன. இதன் அருகில் தான் ஷரீஅத்தின் கட்டளைகள் இறங்குகின்றன. இங்கு தான் நபி ஸல்லல்லாஹு அலலஹி வஸல்லம் அவர்கள் வித்ரு தொழுகையில், வானவர்களுக்கு இமாமத் செய்தார்கள். *தஃப்ஸீர் தைஸீரில்* இமாம் ஜஃபர் ஸாதிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ” பைத்துல் முகத்தஸில் நபிமார்களுக்கும், ஸித்ரத்துல் முன்தஹாவில் மலக்குகளுக்கும் நபி ஸல்லல்லாஹு அலலஹி வஸல்லம் அவர்கள் இமாமத்து செய்ததால், புவியோர்கள் மற்றும் வானவர்கள் ஆகிய இரு வகையினரினும் நபி ஸல்லல்லாஹு அலலஹி வஸல்லம் அவர்களே சிறந்தவர்கள் என்பது வெளியாயிற்று. ” என்று கூறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி: இறையியலில் சூஃபி பயணம் முகநூல் பதிவு.