வஹ்ஹாபிகளின் குறுக்கு கேள்விக்கு நறுக் பதில்!
By Zainul Abdeen
ஆக்கம்: ஜெஸ்முத்தீன்
கேள்வி:
தர்ஹாக்களில் அடங்கி இருப்பவர்கள் நல்லோர்கள்,வலிமார்கள்னு நீங்க எப்படி சாட்சி சொல்றீங்க ?
அது அல்லாஹ்வுக்கும் அவருக்கும் மட்டுமே தெரிந்த மறைவான விஷயமாயிற்றேன்னு வியாக்கியான கேள்வி கேட்குறாங்க வஹ்ஹாபிகள்.
பதில்:
சரிதான் …
அப்ப அந்த வலிமார்களை நான் வணங்குறேனா ..
கண்ணியப் படுத்துகிறேனாங்ற ரகசியம் எனக்கும் அல்லாஹ்வுக்கும் மட்டுமே தெரிந்த மறைவான விஷயம்தானே!
அப்ப அதுல மட்டும் மூக்க நுழைச்சு அது வணக்கம், நீங்க செய்வது ஷிர்க்னு அவதூறு ஏன்டா சொல்றீங்கனு கேட்டா,
அதுக்கு ஒழுங்கான பதில காணோம் !
ரொம்ப கேட்டா
நீங்க அதுக்கு பூ வைக்கிறீங்கனு சொல்றானுக…
நான் என் மனைவிக்கும்தான் பூ வைக்கிறேன்
பத்தி, சாம்பிராணி போடுறீங்கனு சொல்றானுக..
வீடு, கடை போன்ற நாம் விரும்பும் இடங்களை வாசனையாய் வைத்திருப்பது என்ன தப்புனு தெரியல.
அங்க போய் அழுகிறீங்கனு சொல்றாங்க
எனக்கு கஷ்டமா இருந்தா பார்க், பீச், என் வீடுனு பல இடங்கள்ல கூடத்தான் நான் அழுதிருக்கேன் …இது ஒரு குத்தமாடா ?
கை ஏந்துறீங்கனு சொல்றானுக
அல்லாஹு அக்பர்னுதான கை ஏந்துறோம் அவ்லியா அக்பர்னா கை ஏந்துறோம்..
அதுவும் இல்லாம கை ஏந்துபவர் முன்னாடி யார் இருந்தாலும் அவர் அல்லாஹ்வா ?
அப்ப தர்மம் கேட்குறவன் நம் முன்னாடி கை ஏந்துனா நாம அவனுக்கு அல்லாஹ்வா ?
ஏன்தான் இப்படி வணக்கத்தையும், கண்ணியத்தையும் போட்டு குழப்பிக்கிறாங்கனு தெரியல..
இப்ப சொல்றேன் கேட்டுக்குங்க.
நீங்கள் ஆயிரம் கோடி கொடுத்தாலும் எந்த அவ்லியாவையும் அல்லாஹ் என எந்த சுன்னத்வல்ஜமாஅத் ஆட்களும் சொல்ல மாட்டார்கள்.
நீங்களா சொல்லிட்டு திரியுங்க.