வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ்
By Zainul Abdeen
வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – நீங்கள் வருகை தாருங்கள்
வருகை தாருங்கள் வள்ளல் யாரஸூலல்லாஹ் – நீங்கள் வருகை தாருங்கள்
ஏங்கும் காதல் நெஞ்சம் மகிழ ஏழை எங்கள் கனவில் தாங்கள்
1. மன்னவரே மண்ணில் தாங்கள் பிறந்ததினாலே இந்த
மண்ணினமே விண்ணை விஞ்சும் பெருமை பெற்றதே
தண்Pரும் தன்னுடைய தாகம் தீர்க்கவே – என்றும்
தாவி வர தக்க துணை தாங்களல்லவோ (வருகை தாருங்கள்)
2. ஏற்றமிக்க தங்கள் பார்வை பட்டுவிட்டாலே – கொடும்
எரி நெருப்பும் குளிர்ந்து பனியைப் போல உருகுமே
காற்றுக்கே மூச்சு திணறல் நேரிடும் என்றால் – அந்த
காற்றுக்கே மூச்சு திணறல் நேரிடும் என்றால் – அங்கே
கை கொடுக்கும் சுவாசக் காற்று தாங்களல்லவோ (வருகை தாருங்கள்)
3. மெத்த புகழ் தங்கள் பாதம் முத்த கிடைத்தால் – எந்தன்
மெய் சிலிர்த்து பேரின்பம் பொங்கி வழியுமே
சத்தியத்தின் உறைவிடமாய் ஒளிரும் தங்களின்
சத்தியத்தின் உறைவிடமாய் ஒளிரும் தங்களின் -உயர்
ஸலவாத்தால் என்னுடைய இதயம் துடிக்குதே (வருகை தாருங்கள்)
4. உம்மி நபியே உங்கள் பெயரை உச்சரித்தாலே – ஊறும்
உமிழ் நீரில் எந்தன் வாயும் ஒழு செய்யுதே
செம்பவழ ஹுருல்ஈன்கள் சிட்டுகள் பாடும்
செம்பவழ ஹுருல்ஈன்கள் சிட்டுகள் பாடும்
சிந்தனை போல் தங்கள் நாமம் செவியில் பாயுதே(வருகை தாருங்கள்)
5. கண்ணொளியை வழங்கும் தங்கள் நாமம் ஓதியே- இரு
கண்களிலும் தடவும் விரல்கள் குளிர்ச்சியூட்டுதே
கண்ணியம் சேர் தங்கள் மேனி கமழ செய்திடும்
கண்ணியம் சேர் தங்கள் மேனி கமழ செய்திடும் – உயர்
கஸ்தூரி வாசம் நுகர மூக்கும் ஏங்குதே (வருகை தாருங்கள்)